அத்தியாயம் 10

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
75
அத்தியாயம் 10

தான் கண்ட காட்சி பிரம்மையோ என நினைக்கும் போதே பட்டென மூடிய கதவின் சத்தம் நடந்தது நிஜமென உணர்த்த அதிர்ந்து போனாள் லைலா.

'ஐயோ!! என்ன நடக்குது இங்க? என் கனவை கெடுக்கவே இந்த தேனு குறுக்க வர. என்னத்த காட்டி என் மாமாவை மயக்கிருக்காளோ' தனக்குள் புலம்பி தீர்த்த லைலா கொஞ்சமும் யோசிக்காமல் விஷ்ணுவின் அறைக்கதவை தட்ட நிமிடங்கள் கழித்தே லேசாய் திறந்தவன் முகம் கடுகு வெடித்தது போல் சிடுசிடுத்தது.

"என்ன விஷயம்? "

"அ... அது மாமா "

"ம்ச்.. சீக்கிரம் சொல்லிட்டு கிளம்புறியா எனக்கு வேலை இருக்கு "

"நான் தேனுவை தேடி வந்தேன். அவ இங்க வந்தாளா?" நேரடியாக கேட்காமல் சுற்றி வளைக்க, ஒற்றை புருவம் உயர்த்தி லைலாவை அழுத்தமாய் பார்த்தான் விஷ்ணு.

"இல்ல" அடுத்து அவள் பேச வாய்ப்புக் கொடுக்காமல் கதவை மூடிக் கொள்ள நின்று ஒட்டுக் கேட்ட லைலா எவ்வித சத்தமும் கேட்காமல் போனதில், பிரம்மையாக இருக்கும் என்ற முடிவில் அங்கிருந்து சென்று விட காலடி சத்தம் கேட்ட பின்பே நிம்மதி பெருமூச்சை விட்டவளின் செய்கையில் ஒரு நொடி கண்ணை மூடி திறந்தான் விஷ்ணு.

உள்ளுக்குள் மனசாட்சி அவளை வர்ணிக்காமல் இல்லை. 'கொல்லுறாளே' என்ற ரீதியில் கதவில் கரம் பதித்து அவள் முன் நிற்க, பயத்தில் மூடிய கண்களை திறந்தவள் எதிரே நிற்பவன் பார்வையில் உறைந்து போனாள் தேனிசை.

பார்வைகள் சந்திப்பில் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையே மறந்து அவன் விழியில் சிலையாகிய தேனிசை படபடவென இமைகளை சிமிட்டி தன்னை நிலையாக்க முயன்றாள்.

ரொம்ப கடினமே. இவள் சொல்லும் பேச்சை இதயம் கேட்கவில்லை. துடித்த வேகத்தில் மூச்சு விடவும் சிரம பட்ட பேதை "நா... நா.. போகணும். ஐயா தேடுவாரு " தட்டு தடுமாறி வார்த்தைகளை கோர்வையாய் கோர்த்து சொல்லி விட அவள் முகத்தையே ஆராய்ந்தவன் பார்வையில் மட்டும் துளி மாற்றமில்லை.

"அது என்னடி ஐயா? அவ்ளோ பெரிய ஆளா அவரு. ஒழுங்கா முறையா கூப்பிடு" தன் தடித்த விரல்களால் அவள் கன்னத்தினை பற்ற, உதட்டை குவித்து விழித்தவள்

"ஐயோ எல்லாரும் வீட்டுல தான் இருக்காங்க... என்கிட்ட வம்பு பண்ணுறது விட்டுட்டு போய் வந்தவங்கள கவனிங்க. நல்ல விஷேஷம் நடக்குற இடத்துல வீண் பிரச்சனை வேண்டாம்" விபரீதம் புரிந்து சொல்ல விஷ்ணு தான் புரிந்தும் புரியாமலே நின்றான் அவள் முன். வந்ததே இவளுக்காக என்ற போது இவளை கவனிக்காமல் வேற யாரை கவனிக்க வேண்டுமாம்...

"விடுறேன். ஆனா நமக்கு எப்போ கல்யாணம்னு சொல்லிட்டு போ. நானும் உன்னை விடுறேன் "

"அதை ஏன் என்கிட்ட கேட்குறீங்க?"

"ஏய்!!! எப்போ கல்யாணம்னு கட்டிக்க போறவள்கிட்ட தானடி கேட்க முடியும் " குறும்பு மின்னும் அவன் கண்களை பார்க்க மறுத்த தேனிசை

"உங்கள கட்டிக்க போறது லைலா அக்கா. அவங்க தான் " அடுத்து சொல்ல விடாமல் அவள் கன்னத்தினை அழுத்தமாக மீண்டும் பற்றிய விஷ்ணு நூலிழை இடைவெளியில் நெருங்கி நிற்க மூச்சு விடவும் மறந்து போய் விக்கித்து பார்த்தாள் அவனை.

"இந்த விஷ்ணு மதுராந்தகனுக்கு மனைவினா அது நீ தான். நீ இல்லைனா அந்த இடத்துல வேற யாரும் இருக்கு முடியாது" அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி தீர்க்கமாக சொல்லியவன்

"கண்மணி கல்யாணம் வரை இங்கிருப்பேன். உன் பதிலுக்காக காத்திருப்பேன் தேனிசை. பல கனவோட வந்துருக்கேன். அங்க உன்கூட வாழ போறதுக்கு பல கற்பனை கோட்டையை கட்டி வச்சிருக்கேன். என்னை ஏமாத்திறாதடி. நான் உன் முன்னாடி, இந்த வீட்டுல ஒருத்தனா நிற்கல. உன் முன்னை மதுராந்தகனா நிற்கிறேன். ரொம்ப என்னை காக்க வைக்காத தேன் " கண்கள் மூடி அவள் வாசனையில் லையித்து முகம் ஒற்றி சொல்லிட சிலை போல் அசைய மறுத்த தேனிசை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டாள்.

உணர்வுகள் நிறைந்த அவன் வார்த்தைகளை இம்முறை அலட்சியம் செய்யாமல் பதித்துக் கொண்ட தேனிசை "நான் வந்து ரொம்ப நேரமாகுது. ஐயா தேட ஆரம்பிச்சா பிரச்சனையாகிடும். நான் போகணும் ப்ளீஸ் விடுங்க " அழும் நிலையில் கேட்டிட பெண்ணின் முகத்தில் தேடுதல் நடத்திய விஷ்ணு அதில் தனக்கான எவ்வித உணர்வும் இல்லாத ஏமாற்றத்தில் கதவிலிருந்து கையை எடுக்க விட்டால் போதுமென ஓடியே விட்டாள் பேதை.

"என்ன பையை எடுக்க போன பொண்ண இன்னும் காணும்? லைலா "

"மாமா "

" மேல தேனுகிட்ட பையை எடுத்து வர சொன்னேன். அவளுக்கு எங்க இருக்குன்னு தெரியல போல. நீ போய் பாருடா " அவர் சாதாரணமாக சொல்ல இவளுக்கு தான் பக்கென்று ஆனது இதயம்.

'அப்போ அந்த வேலைக்கார நாய் மாமா ரூமுல தான் இருந்திருக்கா' பொங்கி எழுந்த கோவத்தை கட்டுப்படுத்த போராடும் போதே

" ஐயா நீங்க சொன்ன பை இதுவா? " மூச்சிறைக்க அவர் முன் வந்து நின்றாள் தேனிசை.

ஆறுமுகம் கேள்வி ஏதும் கேட்காமல் மஞ்சள் பையை வாங்கியவர் " இது தான்டா" புன்னகையோடு அவர் வேறு வேலையில் மூழ்கிவிட, வேர்வை பூத்த முகத்தை முந்தானையில் துடைத்தப்படி நகர்ந்த தேனிசையை பார்வை எடுக்காமல் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் லைலா.

கூட்டத்தை விட்டு சற்றே விலகி பின் பக்கம் நடக்கும் சமையல் வேலைக்கு உதவ செல்லும் தேனிசையை பின்தொடர்ந்தாள் லைலா.

தேனிசைக்கு லைலா தன்னை பின் தொடர்ந்து வருவது தெரியாது. மேலே விஷ்ணு பேசிய வார்த்தைகளில் தெளிந்த பேதையாய் பதட்டம் குறைத்து வேக நடையில் செல்ல

"ஏய் நில்லு!!!" லைலாவின் அனல் தெறிக்கும் குரலில் அசையாது நின்று விட்டாள்.

"அக்கா!" பயந்த குரலில் நடுங்கியவளின் கையை பிடித்து யாரும் பார்க்கா வண்ணம் அழைத்து சென்றவள் தேனிசை உணரும் முன்னே கன்னத்திலே ஓங்கி பளாரென அறைந்திருந்தாள்.

"அக்காவா? இன்னொரு முறை அக்கான்னு சொன்ன கொன்றுவேன் நாயே. ஒழுங்கா இங்க இருக்குற வரை வேலையை பார்த்தோமா கொடுக்குற சோத்தை திண்ணோமான்னு இருந்துட்டு போகிறது தான் நல்லது. அதை விட்டு வீணா என் மாமாகிட்ட பேசுறது என்ன? அவரை பார்த்தால் கூட உன்னை தொலைச்சிக்கட்டிருவேன். வேலைக்கார எச்சை நாய் நீ. உனக்கு என் மாமா கேட்குதோ? எப்பிடிடி?? அப்படியே அம்மா புத்தி. உன் அம்மா என் அப்பாவை மயக்கி எங்க அம்மா வாழ்க்கையை அழிச்சா. இப்போ நீ!... வெட்கமா இல்லை. ஒழுங்கா கொடுத்த இடத்துலயே இருந்துட்டு ஓடிரு " விரல் நீட்டி எச்சரித்து சென்று விட அப்படியே சரிந்து கூனி குறுகி அமர்ந்தவள் சத்தம் கூட வெளியே வராமல் தேம்பிட, லைலா பேசிய வார்த்தைகளை தேனுவை அழைக்க வந்த மாரி கேட்டு பத்ரகாளியாய் நின்றிருந்தாள்.

"கொழுப்பெடுத்த நாய்க்கு அவ அம்மா மாதிரியே நாக்குல நரம்பே இல்லாமல் எப்படி கொட்டிட்டு போகுது. அவளை போலவே தானே இந்த தேனுக்கும் இந்த வீட்டுல உரிமை இருக்கு. ஏன் விஷ்ணு ஐயா மேல ஆசைப்பட்டா என்னாவாம். முறைப்பையன் இவளுக்கு இல்லாத உரிமையா. லைலாவுக்கு ஒரு முடிவு வர மாட்டேங்குது பகவானே " ஆத்திரம் அடங்காது புலம்பிய மாரி சமாதானம் செய்கிறேன் என்ற பேர்வழியில் தேனுவிடம் மூச்சு வாங்க பேசி அவளை சிரிக்க வைத்து அழைத்து சென்று விட்டார்.

இங்கு சத்தியாவின் பிடிவாதத்தில் அவனருகிலே நின்றவன் கண்கள் என்னவோ அவளை தான் தேடியது. வாய்விட்டு பேச முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, பார்த்தால் போதும் என்ற மனநிலை.

ஆனால் படுவேனா என்பது போல் அன்றைய நாள் முழுவதும் தேனிசை அவன் பார்வையில் படவே இல்லை. நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்து திருமணதேதியும் முடிவாயிற்று.

சத்தியாவின் வார்த்தைக்கு இணங்க ஒரு மாதம் கழித்தே கல்யாணம் என முடிவாகியது. இந்த ஒரு மாதம் அவன் கேட்டதும் கண்மணியிடம் உண்மை சொல்லிடவே. என்னவோ அவளை ஏமாற்றுகிறோம் என்ற குற்றணர்வு அவனிடம். உண்மை சொல்லி அவளின் ஒத்துழைப்போடு இந்த கல்யாணம் நடக்கவேண்டும் என்பவன் அறியவில்லை அதன் விளைவை.

லதா கல்யாண விடயமாய் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தாள் லைலா.

போன் பேசி முடிக்கும் வரை காத்திருக்க, மகளின் வாட்டமான முகத்தை கவனித்தவர் "என்னாச்சு லைலா? ஏதும் பிரச்சனையா?" முகத்தை பார்த்தே ஊகித்த தாயை ஆச்சர்யமாய் பார்த்தவள்

"உங்க கிட்ட ஒரு விஷயம் பத்தி பேசணும் ம்மா!"

"என்ன விஷயம்?"

"அந்த தேனுக்கு ஒரு வழியை பண்ணுங்க. ஏற்கனவே ஒருத்தனுக்கு கட்டிக் கொடுக்க முயற்சி பண்ணீங்க. இன்னும் ஏன் அவளை நம்ப வீட்டுல வச்சிட்டே இருக்கணும். சீக்கிரம் அவளுக்கு ஒரு முடிவு பண்ணுங்கம்மா " என்பவளை கண்கள் இடுங்கி பார்த்தார் லதா.

அவளின் இந்த திடீர் பேச்சுக்கு காரணம் புரியாது "என்னாச்சு லைலா? ஏன் திடிர்னு இப்படி பேசிட்டு இருக்க?" என்பவரிடம் அன்று நடந்த உண்மையை மறைத்து

"இல்லம்மா. தேனுவும் இந்த வீட்டு பொண்ணா தான் வர்றவங்க எல்லாரும் நினைக்கிறாங்க. என் காது பட மாமாவோட சேர்த்து வச்சி அவங்களே ஆறுமுகம் மாமாவுக்கு இல்லாத யோசனையை கொடுத்துருவாங்களோனு பயமா இருக்கு" பீதியானவளின் கையை பற்றி புன்னகைத்த லதா

"அந்த கவலை உனக்கு வேண்டாம் லைலா. அம்மா நான் இருக்கேன்ல. இதுலாம் யோசிக்காம இருப்பேன்னு நினைக்கிறியா என்ன? நான் இதை பார்த்துக்கிறேன். நீ கவலையை விடு. விஷ்ணு உனக்கு தான். அதை யாராலும் மாற்ற முடியாது" திடமாய் சொல்ல தாயின் வார்த்தையில் நிம்மதி பெருமூச்சை விட்டாள் லைலா.

இனி அம்மா பார்த்துப்பாங்க நம்பிக்கையில் அவள் சென்று விட, சில நிமிடங்கள் யோசித்த லதா தன் போனில் யாருக்கோ அழைத்தாள்.

********* ******* **********

ஊரில் ஆள் அரவமற்ற கோவிலில் மன நிம்மதியை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள் தேனிசை. அம்மாவோடு இங்கு வந்து சுத்தம் செய்து கும்பிட்டு போன நினைவுகள் இன்றும் இதமாய் வருடியது கொஞ்சம்.

பெரிய கோவில் இல்லை என்பதால் பெரிய கவனிப்புகளும் இதற்கு இருந்ததில்லை. ஆனாலும் அவ்வப்போது மக்கள் வந்து விட்டு போன அடையாளத்திற்கு பூஜை பொருட்கள் மட்டும் காணப்படும்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விவசாய இடங்கள் என்பதால் நிசப்தமான சூழல் நிலவ, போதுமென எழுந்தவள் ரோட்டில் நடக்கும் போதே பின்னால் வந்து நின்றது விஷ்ணுவின் கார்.

ஒரு வாரமாய் தேனிசையின் கண்ணாமூச்சியில் விஷ்ணுவின் பொறுமை அவன் காட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 10
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Nov 26, 2023
Messages
50
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Mar 6, 2025
Messages
15

யாருக்கு யாரு முடிவு கட்றது அடியே பேயே இரு டி உனக்கு விஷ்ணு கையால் தான் இருக்கு கச்சேரி அவனோட தேனுவையா அடிக்கற 😡😡😡
 
Member
Joined
Nov 16, 2023
Messages
11
லைலா.. பிஞ்சு போன அஞ்சு பைசா மூஞ்சி நீ அவள சொல்றியாக்கும்.. நீ அடிச்சது மட்டும் மதுக்கு தெரியட்டும்டி உனக்கும் உங்கம்மாக்கும் இருக்கு சேதி 😒😒😒
 
Top