அத்தியாயம் 10

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
அத்தியாயம் 10

" எழில் ரொம்ப ஜாக்கிரதையா இரு. உனக்கு சின்னதா எதாவது நடந்தாலும் அப்றம் உன்ன இலா ஹாஸ்பிடல்க்கு தான் அனுப்புவேன் " என்று ருத்ரா உறுதியாக கூற தலையாட்டியவன் இலாவிடம்

" பேபி நா உன்கிட்ட ஆத்மிகானு ஒரு பொண்ணு சொன்னேன்ல. அவளை நீ எங்கையாவது பார்த்துருக்கியா? எனக்கு அந்த பொண்ண பார்த்து பேசியது போல பீல் ஆகுது. நீயும் என் கூட தானே காலேஜ்ல சுத்திட்டு இருந்த உனக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கும் " என்ற எழிலின் மண்டையில் கொட்டிய இலா

" வாய கொறைச்சிட்டு அந்த பொண்ணு போட்டோ இருந்தா காட்டு " என்று இலா கூறவே அவனின் போனில் கொல்லிமலையில் எடுத்த போட்டோவில் ஆத்மிகாவை காட்டினான். ருத்ராவுக்கு அந்த பெண்ணின் முகம் எங்கோ பார்த்தது போல் தோன்ற நினைவு தான் பட்டென வரவில்லை.

இலா உற்று உற்று பார்த்தவள் சட்டென நினைவு வந்தவளாக அந்த நிகழ்வை கூற விழிவிரித்து போனான் எழில்.

இங்கு ஆத்மி ஆள் அரவமற்ற அந்த பாழடைந்த விடுதிக்குள் வேர்த்து விறுவிறுத்து நடந்து இல்லை இல்லை ஓட்டமும் நடையுமாக வழி இருக்கிறதா என தேடி கொண்டிருந்தாள். மூச்சு வாங்கியது அவளுக்கு. அவள் முகம் நன்றாக வெளிறி போய் இருந்தது. ஏதோ பயங்கரமான சத்தம் ஆத்மி பின்னால் கேட்க மிரண்டு போனவள் ஓட்டம் எடுத்தாள் உயிரை கையில் பிடித்து கொண்டு.

அவளின் நேரம் முட்டு சுவரில் மாட்டிக்கொண்டாள். சுற்றி எங்கும் இருட்டுமாய் இருந்தது. அழுகை வேறு பயத்தில் வர எச்சிலை விழுங்கியவளின் எதிரில் எட்டுக்கால் பூச்சி போல். க்ரக் க்ரக் என்ற சத்தம் ஆத்மியை நடுங்க வைத்தது. அந்த உருவம் தரையில் ஊர்ந்து வரவில்லை.

மேல் சுவரில் கீழே தலையை தொங்கவிட்டபடி ஆத்மியை நெருங்கியது. சாக்கடையில் முக்கி எழுந்த மூஞ்சியை அருகில் கண்டு ஆத்மி அலற காமினி குரலில் திடுக்கிட்டு எழுந்தாள் ஆத்மிகா.

உடல் எல்லாம் வேர்வையில் குளித்து இருந்தது.

மூச்சு வாங்க அமர்ந்திருந்தவளுக்கு தண்ணீர் குடுத்த காமினி " ஏண்டி வந்த களைப்புல தூங்குறேன்னு சொல்லிட்டு எதுக்குடி இப்டி அரண்டு கத்துற? என்ன ஆச்சு? " என்றவளிடம் என்ன சொல்வாள்? இது எப்போதும் வந்து தொலைவது தானே. எத்தனை நாள் இந்த ஓட்டம் பயம் என்றவளுக்கு மனம் சோர்வானது.

" இல்லடி ஒரு கெட்ட கனவு. அதான் " என்ற ஆத்மி கூறியதை கேட்டு கோவமானவள்

" சரியா போச்சி போ. அதுக்கு இப்படியா? இரு வரேன் " என்றவள் நேராக சாமி அறை சென்று விபூதியை எடுத்து வந்து ஆத்மிக்கு இட்டவள் அவளை தூங்க சொல்லி விட்டு மருத்துவமனை சென்றாள்.

சிறிது நேரத்துக்கு மேல் எவ்ளோ முயன்றும் ஆத்மியால் தூங்க முடியவில்லை. கண்ணை மூடினால் அந்த உருவம் வர எழுந்து கொண்டாள். உணவு மேசையில் காமினி சமைத்து எடுத்து வைத்ததை கண்டு சிரித்தவள் கொஞ்சம் போட்டு சாப்பிட்டாள்.

அதுவரை காத்திருந்த பவானி ஆத்மி முன் தோன்றினாள். " ஆத்மி போன இடத்துல முனிவர் என்ன சொன்னாரு? " என எதிர்பார்ப்போடு கேட்க பவானியிடம் அங்கு நடந்தவைகளை கூறினாள் ஆத்மி.

" ஆத்மி எனக்கென்னவோ இத விட பெரிய ஆபத்துகள் உனக்கு இருப்பது போல தோன்றுது " என்று சொல்ல வெற்று சிரிப்பை சிரித்தவள்

" நிம்மதியா தூங்க கூட முடியாமா பயந்து சாகுறதுக்கு இப்போவே செத்து போலாம் " என்றவளின் வார்த்தையில் இருக்கும் வலி பவானி உணராமல் இல்லை.

" கவலைப்படாத ஆத்மி. உன்னோட இந்த கஷ்டத்துக்கு ஒரு முடிவு இருக்கும் '' என சொல்ல பவானியை பார்த்த ஆத்மி

" ஆமா உனக்கு என்ன பிரச்சனை ஏன் என் கூட இருக்க " என்றவள் கேட்டதில் அரண்ட பவானி

" முதல்ல உனக்கு இந்த பிரச்சனை எல்லாம் முடியட்டும். அப்றம் உன்கிட்ட சொல்லுறேன் " என சொல்லிவிட சரியென்ற ஆத்மியும் மருத்துவமனை கிளம்பினாள்.

இலா கூறியதில் அதிர்ந்து போன எழில் " என்ன பேபி சொல்ற உனக்கு நல்லா நியாபகம் இருக்கா " என்று கேட்டதில் சிரித்தவள்

" டேய் எனக்கு நல்லாவே நியாபகம் இருக்கு. இவளும் நம்ப பேட்ச் தான். சீனியர் ராக்கிங் பண்ணப்போ உன்ன இந்த பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ண சொன்னாங்க. நீயும் இதான் சான்ஸ்னு அவகிட்ட அழகா ப்ரோபோஸ் பண்ண. அதுக்கு அப்றம் நீ அத பெருசா எடுத்துக்குல ஜாலியா விட்டுட்ட. ரொம்ப அமைதியான பொண்ணு. நீ கூட அவளை சைட் அடிச்சிருக்க "என்று சொல்ல எழிலுக்கு அந்த நிகழ்வு கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தது. ஆனால் ஆத்மி பற்றிய முழுவதும் எழில்க்கு நினைவு வரவில்லை.

இலா கூறியதை கேட்ட ருத்ரா " டேய் எழில் இப்போ தான் எனக்கு நியாபகம் வருது. இந்த பொண்ண ஒருத்தன் ராக்கிங் பன்னான்னு தான் நான் அடி வெளுத்து விட்டேன் " என்று சொல்ல எழிலுக்கு மொத்த சந்தேகமும் தீர்ந்து போனது.

" அப்போ அந்த பொண்ணால
தான் நாம சந்திச்சோம். இல்லனா நீ யாருன்னு கூட எனக்கு தெரிஞ்சிருக்காது " என இலா சொல்ல சிரித்த ருத்ரா " நீ எனக்கு தான்னா அது யாராலும் மாத்த முடியாது " என்று சொல்லியதில் ருத்ராவை காதலோடு பார்க்க எழில் அவனறைக்கு வந்து விட்டான்.

மண்டையில் அடிபட்டு மனநலம் பாதிக்கப்பட்டு மீண்டதில் ஒரு சில விஷயங்கள் எழிலுக்கு நியாபகம் வரவில்லை. அதில் தான் ஆத்மியும்.தற்போதைக்கு யோசனையை ஒதுக்கி வைத்தவன் மருத்துவமனைக்கு கிளம்பினான்.

" டேய் எழில் சாப்ட்டு போ " என்று இலா கத்த நிக்காதவன் " நீ சாவகாசமா ரொமான்ஸ் பன்னு நா ஹோட்டல்ல சாப்ட்டுக்குறேன் " என்று காரை எடுத்து கொண்டு பறந்தான்.

********** ******** **********

எழில் வர சொல்லவே கணபதி ஆரவ்வை அழைக்க அவனின் வீட்டிற்கு சென்றான். வீட்டின் முன் இருந்தவன் உள்ளே நுழைய வில்லை.

" இந்த பய வாசல் பக்கம் வரக்கூடாதுனு சொல்லிட்டான். நம்ப மானஸ்தன் அதுனால எகிறி குதிச்சி பின்னாடி வழியா போவோம் " என்று யோசித்தவன் வீட்டின் பின் புறம் சென்றான். எகிறி குதித்தவன் ஆரவ் அறை இருக்கும் ஜன்னல் பக்கம் தாவி குதித்து ஆரவின் அறைக்குள் நுழைந்தான் கணபதி.

நன்றாக இழுத்து போர்த்தி தூங்கி கொண்டிருந்தான் ஆரவ். கனவில் தாய்கிழவியுடன் டூயட் போல. கணபதி ஆரவ் முகம் இருக்கும் பகுதி கண்டறிந்தவன் மெல்ல நெருங்கி சென்றான். போர்வையை லேசாக இழுக்க மீண்டும் ஆரவ் இழுத்து போர்த்தி கொண்டான்.

மீண்டும் மீண்டும் கணபதி இழுக்க " அட எவன்டா அது கடுப்ப கெளப்பிட்டு " என்று கண்முழித்தவன் முன் கணபதி அவனின் முகத்தை அருகில் காட்ட மிரண்ட ஆரவ் மெத்தையின் மறு பகுதியில் உருண்டு தொப்பென விழுந்தான்.

பயத்தில் " அப்பாலே போ சாத்தானே " என்றதில் கடுப்பான கணபதி " அடேய் சண்டாளா நா சாத்தான் இல்ல கணபதி. உன் உயிர் தோழன் " என்றதும் தான் கண் திறந்த ஆரவ்

" நீ உயிர் தோழன் இல்ல. என் உயிரெடுக்க வந்த தோழன். அதான் உன்ன வாசல் பக்கம் வரக்கூடாதுன்னு சொன்னன்ல அப்றம் என்ன டேஷ்க்குடா வந்த? " என ஆரவ் கோவமாக கேட்க அதை அசட்டை செய்து மெத்தையில் படுத்த கணபதி

" மச்சி எங்களுக்கும் வெ மா சு லாம் இருக்கு. அதான் எகிறி குதிச்சி வந்தேன் " என்று இளித்து காட்ட பல்லை கடித்த ஆரவ்

" ஒழுங்கா என் வீட்ட விட்டு போடா. உங்க கூட வந்தா பேய்க்கு என்ன பலிகொடுத்துருவிங்க " என்றவனை உற்று பார்த்த கணபதி

" அந்த தாய்க்கிழவி கையாள சாரி, தலையால தான் நீ சாகனும்னு முடிவு பண்ணா அது யார் மாத்த முடியும். ஆமா மச்சி அந்த பேய் அன்னைக்கு உன்ன விரட்டும் போது அதோட காம பார்வை உன்மேல பதிஞ்சிருச்சி. இப்போ நாம போய் எழிலுக்கு அதை அழிக்க உதவுல அப்றம் அந்த தாய்க்கிழவிகிட்ட லிப் டு லிப் கிஸ் தான். கொடுத்து வச்சவன் நீ. நான் போறேன் பாய் " என்று வந்த வழியாக குதிக்க போக

இங்கு ஆரவ்க்கு தாய்க்கிழவி லிப் டு லிப் கிஸ்ஸை கொடுப்பது போல் நினைக்கவே ஆரவ்க்கு கொமட்டிட்டு வந்தது.

ஓடி போய் கணபதி கையை பிடித்தவன் " வந்து தொலையுறேன். ஆனா ஒன்னு மச்சி உங்கள கூட வச்சிட்டு சுத்துறதுக்கு என்ன நல்லா கோத்துவிட்டிங்கடா " என ஆரவ் ஆதங்கம் பட சிரித்த கணபதி

" விடு மச்சி. இதுக்குலாம் வருத்தப்பட்டா எப்டி. இன்னும் நீ பார்க்க வேண்டியது நெறைய இருக்கு " என்றவன் அரண்டு பார்த்த ஆரவையும் இழுத்து கொண்டு எழில் மருத்துவமனைக்கு வந்தனர்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 10
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Mar 6, 2025
Messages
31

அய்யோ ஆர்வ நீ ரொம்ப பாவம் டா 😂😂😂
 
Member
Joined
Nov 26, 2023
Messages
47
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top