- Joined
- Nov 10, 2023
- Messages
- 67
- Thread Author
- #1
அத்தியாயம் 10
முக்கியமான கிளைண்ட் மீட்டிங் நடந்துக் கொண்டிருக்கிறது. திரையில் ப்ரெசென்டேஷன் காட்டி ஒருவர் திட்டத்தை விவரித்துக் கொண்டிருக்க இறுதியுரை கொடுக்க வேண்டியவனோ வேறு ஒரு நினைவில் மூழ்கிருந்தான் வேந்தன்.
" வேந்தா.. வேந்தா " மாணிக்கம் அழைத்தும் தன்னிலை மீளாதவனை கூர்ந்து கவனித்தவர் தன் பணியாளருக்கு கண்ணைக் காட்ட அவரே முடித்தும் வைத்தார் வேந்தனுக்கு பதிலாக.
திட்டத்தில் திருப்தி கொண்டவர்கள் தங்கள் விருப்பத்தை சொல்லி கை குலுக்கிவிட்டு சென்று விட, மற்றவர்களை கண் பார்வையில் அனுப்பி வைத்த பெரியவர் பேரன் அருகில் இருக்கையை இழுத்து அமர்ந்தார்.
" டேய்... டேய் வேந்தா " இரண்டாம் முறை கணீர் குரலில் கத்தவே விழித்தவன் சுற்றி யாரும் இல்லை என்பதை கவனித்தவனாய்
" தாத்தா கிளைண்ட் எங்க? எல்லாரும் எங்க? மீட்டிங் என்னாச்சு? " மூச்சு விடாமல் கேட்பவன் முன் தண்ணீர் பாட்டிலை வைத்தவர்
" என்னாச்சு? " நிதானமாய் கேட்டதில் மீண்டும் முகம் மாறியவன் காரணத்தை சொல்லவில்லை.
" ஒண்ணுமில்ல தாத்தா "
" டேய். ஒண்ணுமில்லன்னு நீ சொல்லுற லட்சணம் உன் மூஞ்சிலையே தெரியுது. உன் அம்மா கீதாவை பேசுனத நினைச்சி வருத்தத்தில இருக்கியா? " பொய் சொல்ல தெரியாமல் காரணம் தேடியவனுக்கு அவரே எடுத்துக் கொடுக்க ஆமாம் என்று ஒப்புக்கொண்டான் வேந்தன்.
உண்மை அறியாதவர் பேரன் தோளை தட்டி " எல்லாம் சீக்கிரம் சரி ஆகும்டா. குடும்பமே அவளை ஏத்துக்கும். நீயும் சீக்கிரம் ஒரு பேர பிள்ளையை பெத்துக் கொடுத்தா நான் என் பேரனை பார்த்துருவேன் உன் பேர்ல எல்லாத்தையும் எழுதி வச்சிட்டு " ஆசை மின்ன சொல்ல அவர் முகத்தை பார்த்தவன் எதுவும் பேசிடவில்லை.
" ஒரு குழந்தையை பார்த்துட்டா எல்லார் மனசும் மாறிடும் மறந்திடும். எனக்கும் ஒரு நிம்மதி கிடைக்கும் வேந்தா. நீ கீதாவை நல்லா பார்த்துப்பேன்னு நம்பிக்கை வந்துருச்சு. இருந்தாலும் அதை இன்னும் வலுவாக்க விரும்புறேன். சீக்கிரம் உனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கு " தோளை தட்டி சென்று விட முகம் இருண்டு போனது வேந்தனுக்கு.
கொஞ்ச நேரத்திற்கு முன்பு நடந்த சம்பவத்திலிருந்தே மனம் அமைதியாகவில்லை... மீட்டிங் முடிந்த மறுகணம் வந்துவிடுவேன் என்றவன் இருட்டிய பின்பும் அலுவலக அறைக்குள் தான் அடைந்திருந்தான் மாணிக்கம் அழைக்கும் வரை.
" நேரமாச்சு கிளம்பலையா? "
" நேரமாச்சா!!" யோசனையோடு நேரத்தை பார்த்தவன் நேரம் எட்டை நெருங்கியதில் திடுக்கிட்டு எழ புருவம் இடுங்கினார் பெரியவர்.
" என்னாச்சு வேந்தா? காலையில இருந்தே ஒரு மாதிரி இருக்க " என்பவர் கேள்வியை ஓரம் ஒதுக்கி தன் போனை தேடி எடுத்த வேந்தன்
" ஒன்னுமில்ல தாத்தா . கொஞ்ச வேலையில இருந்தேன். நேரம் ஆனதையே கவனிக்கல. நான் கிளம்புறேன். நீங்க பார்த்து வீட்டுக்கு போங்க " ஓட்டமும் நடையையுமாய் சொல்லிவிட்டு ஓடுபவனை சிறு புன்னகையோடு கவனித்தவரும் தன் வீட்டை நோக்கி சென்று விட்டார்.
இரவு போக்குவரத்து நெரிசலை கடந்து பீச் ஹவுஸ் வருவதற்குள் நன்றாகவே இருட்டி போனது. சத்தமில்லாமல் பொறுமையாய் காரை பார்க் செய்து உள்ளே நுழைந்தவனின் கண்ணில் பட்டது என்னவோ சோபாவிலே படுத்துறங்கிய அவள் முகம் தான்.
மஞ்சள் ஒளியில் மின்னும் அவள் முகத்தை கண்ட கணமே அத்தனை எண்ணங்களும் தூரம் ஓடிட பார்வையை அகற்றியவன் அடுக்கிருக்கும் உணவு பாத்திரங்களையும் கவனித்து தன் மீதே கோவம் கொண்டான்.
அவனுக்காக சமைத்து காத்திருந்திருக்கிறாள். வந்துருவேன் என எதிர்பார்த்து ஏமாந்து போகிருப்பாளே வெசனம் கொண்டவன் கோட்டை ஓரம் வைத்து அவள் முன் நெருங்க நிழல் ஒன்று தன் மேல் விழுந்த உணர்விலே விழித்தவள் வேந்தனைக் கண்டு திடுக்கிட்டு போனாள் பயத்தில்.
மங்கிய வெளிச்சத்தில் உற்று பார்த்த பின்பே வந்தவன் கணவன் என புரிய " நீங்க தானா? இப்படியா பூனை மாதிரி வருவீங்க? சத்தம் கொடுக்க வேண்டாம்?"
கண்ணை கசக்கி மொத்த உறக்கத்தையும் விரட்டினாள்.
" உன்னை எழுப்பிட கூடாதுனு தான் அமைதியா வந்தேன். அப்பவும் எழுந்துட்டியே. சாப்பிட்டியா அஞ்சலி? "
" இல்ல. நீங்க வந்ததும் சாப்பிடலாம்னு தான் வெயிட் பண்ணேன் "
" நான் வருலைனா சாப்பிட வேண்டியது தானே. இவ்ளோ நேரம் சாப்பிடாமலா இருக்குறது? இனி இப்படி பண்ணாத அஞ்சலி " கண்டிப்பான அவன் குரலில், அப்போது தான் சந்தேகமாய் நேரத்தை பார்த்து அதிர்ந்தாள்.
" ஐயோ இவ்ளோ நேரமா தூங்கிட்டேனா? அப்போ நீங்க எப்போ வந்திங்க? நான் தான் கவனிக்கலையா " பதட்டமாய் அவள் எழ போக தோளை பற்றி நிதானமாய் அமர வைத்து அவள் அருகில் அமர்ந்துக் கொண்டான் வேந்தன்.
" நீ இவ்ளோ பதற வேண்டிய அவசியம் இல்லை அஞ்சலி. நீ சாப்பிட்டு தூங்கிருந்தா நிம்மதியா இருந்திருப்பேன். எதுக்காகவும் வயிற பட்னி போடாத " கலைந்த கூந்தலை சரி செய்திட அவனை புதிதாய் பார்த்தாள் கீதாஞ்சலி.
அவன் செய்யும் எல்லாமே புதிது தான். அதிலும் இந்த மென்மை ரொம்பவே புதிது. அவ்ளோவே.
அவன் பார்வையை நேர்கொண்டதில் தடுமாறிய கீதா பார்வையை விலக்கி " சரி நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க சாப்பிடுலாம் " பேச்சை மாற்ற அவனும் அமைதியாய் எழுந்து சென்று விட்டான் எவ்வித சீண்டலும் வழக்கமான குறும்பும் செய்யாது.
இருவரும் சேர்ந்து இரவு உணவை முடித்து மெத்தையை சரி செய்து ஓரமாய் சாய்ந்து அமர்ந்த கீதா சற்று முன்பு வேந்தன் வாங்கிக் கொடுத்த புதிய போனை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் மடியில் தலை சாயித்துக் கொண்டான்.
அதிர்ந்து போனவள் " எ... என்ன பண்ணுறீங்க? " காலை அவள் சுருட்டிக் கொள்ள போகாம நகராதவன்
" கொஞ்ச நேரம் அஞ்சலி. ப்ளீஸ் " என்றவன் கெஞ்சளில் தன்னிச்சய்யாக கரம் தலையை கோதி கொடுக்க உலகமே மறந்து போனான் அதன் சுகத்தில்.
மனசு சரியில்லா குழந்தை தாயை தேடுவது போல் இவன் செய்கை தோன்ற, மனம் கேட்கவில்லை அவளுக்கு. தயக்கம் உடைத்தவள் " என்னாச்சு உங்களுக்கு? ஆபீஸ்ல ஏதும் பிரச்சனையா? " அக்கறையாய் கேட்டிட தலையை மட்டும் மறுப்பாய் ஆட்டியவன் முகம் அவள் வயிற்றுக்குள் புதைந்து கொண்டது அழுத்தமாய்.
" அப்றம் என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா? "
"...."
" உடம்பு ஏதும் முடியலையா? "
"....."
" தலை ஏதும் வலிக்குதாங்க " புதிய போனை ஓரம் வைத்து விட்டு அவன் தலையை தொட்டு பார்த்தாள், எங்கு அடிப்பட்ட இடம் வலிக்குதா என்று.
அதற்கும் மறுக்கும் சிறுவனை புரிந்துகொள்ள முடியாமல் அவள் சோர்ந்திட " பயமா இருக்கு " தளர்ந்து வந்த ஆண் குரலில் கண்கள் சுருக்கினாள் கீதா.
" பயமா? எதுக்கு? "
" உன்னை தொலைச்சிருவேன்னு. ரொம்ப பயமா இருக்குடி. என்னால நீ இல்லாம வாழ முடியுமான்னு தெரியல. உன் மூச்சையே சுவாசிக்க பழகுன எனக்கு நீ இல்லாம சுவாசிக்க முடியாமானு கூட தெரியலடி. எப்படி இவ்ளோ காதலிச்சேன்னு தெரியல அஞ்சலி. இப்போ பயமா இருக்கு அதுவே. என்னை தனியா விட்டுறதா, செத்துருவேன்டி நான் " உணர்ச்சி மிகுந்த குரலில் திணறி சொல்ல திகைப்பில் விழித்தாள் கீதா.
" என்ன ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க? அப்படிலாம் எதுவும் நடக்காது. கண்டதையும் யோசிக்காம தூங்குங்க "
" அஞ்சலி.... "
" நான் எங்கையும் போகல அமைதியா தூங்குங்க "
" ஐ லவ் யூ... ஐ லவ் யூ.. லவ் யூ " விடாமல் சொல்லியவனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி போனது அவள் கேசம் கோதிய சுகத்தில்.
'ஏன் இந்த உளறல் திடீரென்று? நான் தான் அவரை ரொம்பவே ஏங்க வைக்கிறேன் போல. என்னால் தான் இப்படி புலம்புகிறார் ' தன் மீதே பழியை போட்டுக் கொண்ட கீதா அதே யோசனையிலே உறங்கி போனாள்.
என்றுமில்லாத சுகமான உறக்கம் வேந்தனிற்கு. மெத்தையின் சுகமா அல்லது அவள் மஞ்சத்தின் சுகமோ? பகலவன் வெளிச்சம் முகம் மீது பட்டதில் கடுப்பாகிய வேந்தன் முகத்தை புதைத்துக் கொள்ள புதிதான மென்மையில் புருவம் இடுங்கினான்.
வாசனையும் மனதிற்கு மிக பிடித்த ஒன்று. என்னவென்று இமைகள் பிரித்து பார்த்தவன் பெண்ணவள் மெல்லிடையில் தான் இத்தனை நேரம் முகம் புதைத்துள்ளோம் என்ற உணர்வில் இதழ் விரித்தான்.
அசந்து உறங்கும் அழகிய மலரை உசுப்பாமல் அருகில் தள்ளி படுத்து ரசித்தான் ஒற்றைக் கையால் தலையை தாங்கி.
திருத்தப்படா புருவம், நீள் இமை முடிகளை சைடாக படுத்து ரசித்தவனுக்கோ ஒரு ஆர்வம் பெண் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் என்று...
வயிற்றின் மேல் சுமை இல்லாமல் போனதில் திரும்பி படுக்க புரண்ட கீதா இயல்பாய் விரித்த இமைகளை குறுக்கி மீண்டும் சிறகைப் போல் அகல விரித்தாள்.
" நீங்க தூங்கலையா? " அதிர்ச்சியில் கேட்பவளின் இதழ் நோக்கி நெருங்க பதறியவள்
" நான் பிரேஷ் பண்ணல " வாயை இறுக்கிக் கொள்ள சிரித்தான் வேந்தன்.
" ஐ லைக் பெட் காபி மோர் தன் எனிதிங். பெட் கிஸ்ஸும் கூட " விரலால் இதழை பிரித்து மென்மையாய் ஆழ கவ்வி விலகியவன் அவள் வெற்று வயிற்றை வருடி முகம் பார்த்தான் அர்த்தமாய்.
ஏதோ சொல்ல வருகிறான் என புரிந்து கீதா மௌனம் காக்க, நெற்றியிலும் பட்டும் படாமல் முத்தம் வைத்தவன் " எனக்கு குழந்தை வேணும் அஞ்சலி. இந்த வயித்துல என் குழந்தை தோன்றணும். உன்னைப் போலவே ஆச்சு பிசிறாமல். இந்த கண்ணு, இந்த மூக்கு, இந்த வாய்னு என்னோட மினி அஞ்சலியா வேணும் " ஆசையை கண்களில் நிரப்பி சொல்ல வாயடைத்து போனாள் அவள்.
உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு அவளுள். தடுமாறி திரும்பிக் கொள்ள அப்போதும் விலக விடாமல் இழுத்துக் கொண்ட வேந்தன் " எல்லாம் உன் விருப்பம் கிடைச்ச பின்பு தான்டி. அது என் ஆசை அவ்ளோவே தவிர உன்னை அதற்கு வற்புறுத்த போறதில்லை நான். மனசார நீ என்னை எப்போ ஏற்கிறியோ அப்போ தான் நமக்குள்ள அதெல்லாம். நீ இன்னு கொஞ்ச நேரம் தூங்கு " கழுத்தில் தாடை பதிக்க போராடி நெளிந்தவளை காப்பாத்தவே வேந்தனின் போன் அலறியது.
' இந்த காலையில் யாரென ' எரிச்சலாய் எடுக்க தாய் ஹேமா தான் அழைத்திருந்தாள்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 10
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.