New member
- Joined
- Aug 14, 2025
- Messages
- 6
- Thread Author
- #1
அழகியின் அரக்கனவன்
அத்தியாயம் : 1
அன்று, அந்த வானுயர்ந்த மாளிகை பவித்ராவுக்கு சிறை போலத் தெரிந்தது. சுவர்கள் முழுவதும் விலை உயர்ந்த ஓவியங்கள்; தரை முழுவதும் பளிங்கு கற்கள்; பிரம்மாண்டமான கூரையில் இருந்து தொங்கிய பெரிய சரவிளக்குகள்... பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அவை யாவும் பவித்ராவிற்கு நறுமணம் தரவில்லை மாறாக அந்தப் பூக்களில் கூட ஏதாவது சூழ்ச்சிகள் இருக்குமா என்ற பயத்தை தான் தந்தது… எவ்வளவுதான் அழகாக அந்த இடம் இருந்தாலும் இவையாவும் அவளுக்கு நிம்மதியைத் தரவில்லை. அவை அவளது துயரத்தின் நிமித்தம் போல அவளைச் சூழ்ந்தன.
திருமணம் நடந்து சரியாக மூன்றாவது நாள். அவள் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது. ஆனால், அவளால் இன்னும் அவன் பார்வையைத் தாங்க முடியவில்லை.ஆம் அவனின் கணவன் தான் ஆதித்யா …
அவன் தனது பகையைத் தீர்த்துக்கொள்ள அவளை வலுக்கட்டாயமாகக் கைப்பிடித்திருக்கிறான் என்பதை அவளால் ஒவ்வொரு விநாடியும் உணர முடிந்தது. அவனை எதிர்த்ததற்கான தண்டனையை, இந்த வாழ்நாள் முழுவதும் அவளுக்குக் கொடுப்பதே அவனது ஒரே நோக்கம்.அளவிற்கு அந்த இரண்டு நாளில் அவன் கொடுக்கும் தண்டனையை பெண்ணவளுக்கு ஆயுள் சிறை கைதியாக தோன்றியது… அவன் தன்னை பழிவாங்கும் நோக்கத்தோடு தன் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறான் சிறை கைதியாக …ஆனால் இது எல்லாம் எதற்காக ..? ஏன் இந்த பழிவாங்கல் அப்படி நான் என்ன செய்தேன் !! என்று அவள் மனதிற்குள் மருகிக் கொண்டு புலுங்கிக் கொண்டிருந்தாள்…
பவித்ரா, மாளிகையின் பெரிய சமையலறை வாசலில் தயங்கி நின்றாள். கேட்கலாமா வேண்டாமா என்று தயக்கத்தில் இருந்தால் ஒருவேளை இதைப்பற்றி கேட்டால் ஏதாவது தனக்கு தண்டனை கொடுப்பானோ !!!என்று அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அவளின் வயிரோ கவா கவா என்று பசி எடுக்க ஆரம்பித்தது… அவன் ஏதாவது சொல்லுவான் என்று அச்சத்தை விட அடிவயிற்றில் பசி அதிகம் எடுக்க கேட்டு விடுவோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளோ கேட்க ஆரம்பித்தாள்…"இந்த அறையில் நான் ஏதாவது சமைத்துச் சாப்பிடலாமா... பசிக்குது," என்று மெதுவாக, பயத்துடன் அங்கு உள்ள சமையல் பொறுப்பாளரிடம் கேட்டாள்.
பதிலுக்கு, அந்தப் பொறுப்பாளர், அவளை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல், தலையை மட்டும் அசைத்து, சற்றுத் தள்ளி நின்ற ஆதித்யாவைப் பார்த்தார்.அவருக்கு ஒரு பயம் இந்தப் பெண் தன்னிடம் பேசி ஏதாவது பிரச்சினையாகி விடுமோ தன்னுடைய வேலைக்கு ஏதாவது பங்கம் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆதித்யாவை மனதில் நினைத்துக்கொண்டு வர அமைதியாகவே இருந்தார் அந்த சமையல் பொறுப்பாளர் ..
ஆதித்யா ஒரு நாற்காலியில் அமர்ந்து, நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தான். அவனது முகம் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. மெதுவாக நாளிதழைக் கீழே வைத்துவிட்டு, நிதானமாக எழுந்தான் அங்கிருந்து…
இவ்வளவு நேரம் அமைதியாக நாளிதழை படித்துக் கொண்டிருந்தவனோ அங்கிருந்து எழவும் அதை பார்த்தவளுக்கு பயம் தன்னை அறியாமலே தொற்றிக் கொண்டது…அவள் நெஞ்சுக்குள் ஒரு குத்து விழுந்தது போலிருந்தது. கால்கள் நடுங்கத் தொடங்கின.
நேராக சமையலறைக்கு வந்தவனோ "என்ன கேட்டாள்?" என்று சமையல் பொறுப்பாளரிடம் கேட்டான், பவித்ராவைப் பார்க்காமலேயே.
"சமையல் செய்யலாமா என்று கேட்டாங்க, ஐயா."என்று மனதிற்குள் ஒரு பயம் உருள இருந்தும் மறைத்துக் கொண்டு நடுங்கிக் கொண்டே அந்த சமையல் பொறுப்பாளர் ஆதித்யாவிடம் சொல்ல…
ஆதித்யா சமையலறைக்குள்ளே நுழைந்தான். ஒவ்வொரு அடியும் மரணத்தை நெருங்குவது போல் இருந்தது பவித்ராவுக்கு. அருகில் நெருங்காமலே அவனது நிழல் அவளைப் பின்தொடர்வது போன்ற உணர்வு.
அவன் அவளுக்கு மிக அருகில் வந்தபோது, பவித்ரா தன்னைச் சுருக்கிக்கொண்டு, தலை குனிந்தாள். அவனைக் கண்டாலே அவள் நாக்கு உலர்ந்து, வார்த்தைகள் வராமல் தொண்டைக்குள் அடைபட்டுவிடும்.
"சமைக்க அனுமதி கேட்டாயா, பவித்ரா?" அவன் குரல் மிகவும் அமைதியாகவும், அதேசமயம் பயங்கரமாகவும் இருந்தது.
ஆம் என்று மெதுவாக தலையசைத்தாள் பயந்து கொண்டே அவளின் விழிகளோ அலைபாய அவள் கண்களிலோ பயம் எக்கத் தப்பாக நன்றாகவே தெரிந்தது..
அதை கண்டவனின் உதடு யாரூம் அறியா வண்ணம் புன்னகை செய்ய அவளின் முகத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தான்…"இந்த வீட்டில் உனக்கென்று எந்த விதியும் இல்லை, நான் சொல்வதுதான் விதி. உனக்குப் பசியெடுத்தால், நான் கொடுப்பதைத் தான் உண்ண வேண்டும். நீ எதைச் செய்ய வேண்டும் என்று கேட்க, நான் உனக்கு எந்த உரிமையையும் தரவில்லை."அழுத்தமாக அவனின் குரல் வெளிவர..
அவன் கண்களை நிமிர்ந்து பார்க்க அவளால் முடியவில்லை. அவள் நிலைகுலைந்து நிற்பதைப் பார்த்து, ஆதித்யாவின் உதடுகளில் ஒரு வக்கிரமான சிரிப்பு தோன்றியது.
"இங்க பார் பவி!" என்று அவளது தாடையைப் பிடித்து நிமிர்த்தினான். அவனது தொடுதலில் பவித்ராவின் உடல் அப்படியே சிலை போல உறைந்தது. "நான் உன்னை எதுக்கு இங்க கொண்டு வந்தேன்னு உனக்கே தெரியும். பழிவாங்க! நீ உயிரோடு இருப்பதற்கும், உனக்குப் பசிக்கிறதுக்கும் நான் அனுகிரகம் செய்யலைன்னா, நீ இங்க ஒரு அணுவளவும் இருக்க முடியாது. இனிமே, நீ எது செஞ்சாலும், அதுக்கு என்னோட உத்தரவு இருக்கணும்."தாடையைப் பிடித்து அழுத்திக் கொண்டே, அவள் முகத்தின் மிக அருகில் குனிந்தான். "உன் அனுமதி... அது எனக்கே தேவையில்லை. அப்புறம் உனக்கு மட்டும் எதுக்கு?"அகங்காரமாகவும் ஆக்ரோஷமாகவும் அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தினான்…
அவன் அவளை விடுவித்ததும் அவள் மீண்டும் தலை குனிந்து கொண்டாள். அவளது கண்களில் நீர் திரண்டது. ஆனால் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்…அழுவதற்குக் கூட அவளுக்கு தைரியம் இல்லை. அழுகை சத்தமாக வெளிவந்துவிட்டால், அதற்காக அவன் தரும் தண்டனை எப்படி இருக்குமோ என்ற பயம் அவளை அழாமல் தடுத்தது. அவள் மனதுக்குள் மட்டும் கதறிக் கொண்டாள்..கடவுளே என்னை காப்பாற்று எதிலிருந்து நான் எப்படி வெளிவரப் போறேன் என்று ஒவ்வொரு நிமிடமும் அவனின் அருகிலும் அவன் பக்கத்தில் நெருங்கும் சமயமும் அவள் கதறி கொண்டிருந்தாள்..
இரவு வந்தது. பவித்ரா மாளிகையின் ஒரு மூலையில் இருந்த அறையில் அடைக்கப்பட்டிருந்தாள்..காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை பசி வேறு அவளுக்கு அதிகம் இருந்தது அங்கு இருக்கும் தண்ணீரை மட்டும் அவ்வப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டாள்... பெரிய வீடு, ஆனால் அவளுக்கு என ஒதுக்கப்பட்ட அறை என்னவோ சின்னதாக இருந்தது. ஜன்னலுக்கு வெளியே அடர்ந்த இருள்.
அவள் கட்டிலில் அமர்ந்திருக்க, ஆதித்யா திடீரென உள்ளே வந்தான். அவனது வருகைக்கான எந்த சத்தமும் கேட்கவில்லை. அதுவே அவளை மிகவும் அச்சுறுத்தியது.
"படுக்கப் போகிறாயா?" என்று கேட்டான், அறையைச் சுற்றிப் பார்த்தபடி.
அவள் வேகமாகத் தலையசைத்தாள்.
"நான் சொன்னேனா? நீ இப்போது படுக்க வேண்டும் என்று நான் சொன்னேனா?"ஆரம்பத்தில் சாதாரணமாக கேட்டவன் இப்பொழுது கர்ஜனையாக அவளிடம் கேட்க…
அவனின் கர்ஜனை குரலில் பயத்தில் எழுந்தாள். "இல்லை..." என்று மெல்லிய குரலில் முனகினாள்.
அவன் வன்மமாக சிரித்தான். "இங்கே வந்து உன்னைப் பூட்டவும், திறக்கவும், உனக்கு உணவளிக்கவும், உன்னைத் தண்டிப்பதற்கும் மட்டும்தான் நான் இருக்கேன். நீ என்ன செய்யணும்னு முடிவெடுக்க, நீ யாருமில்லை."என அவன் சாதாரணமாக சொல்ல…
அவள் மனதுக்குள் பயம் ஒரு அலை போலப் பரவியது. பயத்தில் அவளது நாடித் துடிப்பு வேகமாகியது. இவன் எப்போது கோபப்படுவான், எப்போது அமைதியாக இருப்பான் என்று அவளால் கணிக்கவே முடியவில்லை. அந்தக் கணிக்க முடியாத பயம்தான் அவளைச் சிதைத்தது.
அவள் பயப்படுவதை பார்த்தவனோ.."நீ ஏன் என்னைப் பார்த்து இப்படி பயப்படுகிறாய், பவி?" என்று மெதுவாகக் கேட்டான். அவனது குரல் திடீரென பாசாங்கு அன்பு காட்டுவது போல மாறியது. "நான் உன் கணவன் அல்லவா?"என்று அவளிடம் மிக மெதுவாக சொல்ல…
இந்தக் கேள்வி, அவனது முந்தைய கோபத்தை விட மிகவும் கொடூரமாக இருந்ததை போல் உணர்ந்தாள் ... திருமணத்தின் புனிதத்தை அவன் கேலி செய்வதாக உணர்ந்தாள்.
"நீ... நீ..." அவளால் வார்த்தையை முடிக்க முடியவில்லை.
"என்ன, நான்?" அவன் தன் கைகளைத் தன் மார்பில் கட்டிக்கொண்டு நின்றான். அடுத்ததாக அவனே பேச ஆரம்பித்தான் …"நான் உன் கணவன். உன்னைக் கட்டாயப்படுத்திக் கூட்டி வந்தவன். நீ அனுபவிக்கப் போற ஒவ்வொரு நொடியும், உன்னால எனக்கு ஏற்பட்ட வலியோட பிரதிபலிப்பு. இந்தப் பழி உன்னை தினமும் எரிக்கும்." என்று ஆக்ரோஷமாக சொல்லியவனோ …திடீரென, அறையின் மூலையில் இருந்த அவளது பழைய புகைப்படத்தை எடுத்தான். அது அவளது கல்லூரிப் பருவத்தில், சிரித்தபடி எடுத்த படம்.
அவன் அப்படத்தைப் பார்த்தான். "இனிமே நீ சிரிக்க மாட்டாய், பவித்ரா. அந்த உரிமையை நான் எடுத்துக்கிறேன். உனக்கு அழக்கூடத் தைரியம் இருக்காது. பயம் மட்டும் தான் இருக்கும்."என்று சொல்லியவன் அவளை பார்த்துக் கொண்டேஅந்தப் படத்தை மெதுவாகக் கிழித்தான். அந்தச் சத்தம், பவித்ராவின் இதயத்தில் இடி விழுந்தது போல இருந்தது. அது ஒரு படம் மட்டுமல்ல, அவளது கடந்த காலத்தின் சந்தோஷத்தையும் அவன் கிழிப்பது போல உணர்ந்தாள். அவள் கண்களை மூடிக் கொண்டாள். அவளால் பார்க்க முடியவில்லை.
ஆதித்யா கிழிந்த படங்களை அவளது பாதத்தில் வீசினான்.
"இனிமே உன்னோட கவனம் என் மேல மட்டும் தான் இருக்கணும். என் பார்வை, என் சத்தம், என் கோபம்... இதுதான் உன் உலகம். நீ மறுபடியும் சிரிச்சா, அந்தப் படத்தோட கதி என்ன ஆகும்னு உனக்கே தெரியும்."என்று சொல்லிவிட்டு அவன் மெதுவாக வெளியேறினான். கதவு சாத்தப்பட்ட சத்தம் ஒரு வெடிகுண்டு வெடிப்பது போல இருந்தது அவளுக்கு…
பவித்ரா தரையில் மண்டியிட்டு, அந்த கிழிந்த துண்டுகளை எடுத்தாள். பயத்தில் அவளது உடல் அப்படியே நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் அலற விரும்பினாள், ஆனால் தொண்டைக்குள் ஒரு முடிச்சு விழுந்தது போல இருந்தது. அவள் சத்தம் போடவில்லை. அவனது கொடுமையின் முன் அவளது மௌனம் மட்டுமே அவளது அழுகையாக இருந்தது… அவன் அருகில் இல்லாத போதும், அவனைப் பற்றிய எண்ணம் அவளைத் தொடர்ந்து நடுக்கத்திலே வைத்திருந்தது. அவனைக் கண்டால் பயந்து நடுங்கும் பொம்மையாக அவள் மாறினாள்.
அரக்கனவன் வருவான் 😈

Author: அம்மு
Article Title: அத்தியாயம் : 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.