New member
- Joined
- Aug 11, 2025
- Messages
- 16
- Thread Author
- #1
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜
எபி 2
அங்கே இருந்த குளியல் அறைக்குள் சென்ற காவ்யா அந்த புடவையை மாற்றி விட்டு ஒரு சாதாரமான புடவையை கட்டி கொண்டு வெளியே வந்தாள். அவளை கண்ட மீனாட்சியோ இங்கன பாரு பொண்ணே நாளையில இருந்து நீ தான் இந்த வீட்டுல எல்லா வேலையும் பாக்கணும். காலையில நாலு மணிக்கு எல்லாம் எழுந்து வாசக்கூட்டி நல்லா பெரிய கோலம் போடணும் அப்பறம் பாத்திரம் விளக்கி, துணிய எல்லாம் கையலையே தூவச்சி காயப்பபோடணும், அப்படி எப்படி என வேலை நீண்டு கொண்டே போக கடைசியாய் இரவு அனைவரும் உண்டு முடித்து எச்சில் பாத்திரம் கழுவும் வரை அனைத்து வேலையும் அவளிடம் கூறினாள் மீனாட்சி. இங்கன பாரு நான் சொன்னத தவிர வேற அதிங்கபிரசங்கி தனமா எதுவும் பண்ண கூடாது புரிஞ்சிதா என கேக்க அவளும் புரிஞ்சது என தலை அசைத்தாள்.
பின் அவள் அந்த வீட்டை சுற்றி பார்க்க அதுவோ நான்கு அறைகள் கொண்ட அந்த காலத்து தொட்டி வைத்து கட்டிய நான்கு பக்கம் வாசல் வைத்த செம்மண் ஒட்டினால் கூரை வெயிந்த ஒரு மாடி கொண்ட வீடு. அதில் அவள் அங்கே சுவற்றில் மாற்றி இருந்த தனி தனி படங்களில் கண்டதோ வீரராகவன் - மீனாட்சியின் நிழல் படம் கூடவே ஒரு இளம் பெண்ணின் படமும் சித்தார்த்யின் படமும் மாட்டி வைக்க பட்டு இருந்தது.காலை பதினோரு மணி அளவில் அவள் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தவள் இரவு எட்டு மணி போல தான் முடித்து விட்டு வந்தாள். மீனாட்சியோ அல்லது அந்த வீட்டில் இருக்கும் ஒருவர் கூட அவளை சாப்டியா என கேட்கவும் இல்லை சாப்பிடு என கூறவும் இல்லை. அவளும் இதனை எல்லாம் எதிர்பார்த்தது போலவே நடந்து கொண்டாள்.
இரவு அவளை காண வந்த மீனாட்சியோ அவளிடம் மீதம் இருந்த பழைய சாத்தை உண்ண உணவாக கொடுத்தார். அவளும் மறுப்பு சொல்லாமல் உண்டு விட்டு அந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி விட்டு மீனாட்சி காண்பித்த சித்தார்த்தின் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.உள்ளே வந்தவளோ அறையை நன்றாக சுற்றி பார்த்தாள். சிறிய குளியல் அறையுடன் கூடிய படுக்கை அறை தான் அது. அதில் ஒரு மர அலமாரியும் ஒரு மூலையில் பாயும் தலையணையும் இருந்தது. அவளும் அமைதியாக தன் கடந்த காலத்தை மனதில் அசை போட்டவாரு தரையில் அமர்ந்து கொண்டாள். இரவு பத்து மணி போல அந்த வீட்டிற்குள் முழு போதையில் இருப்பது போல நுழைந்தான் சித்தார்த். அவனை கண்ட மீனாட்சியோ ஒரு நாளாவது குடிக்காம இருக்கானா சரியான குடிகாரன் என புலம்பி கொண்டே அவர் அறைக்குள் சென்றார்.
அவனை அறையில் கண்டதும் அமைதியாய் எழுந்து ஓரமாக நின்றாள் காவ்யா . ஆணவனை பார்த்ததும் கண்டு கொண்டாள் அவன் குடிக்க வில்லை என..
இருவரும் திருமணம் முடிந்து இன்று தான் முதல் முறையாக சந்தித்து கொள்கின்றனர். அவளை இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்த சித்தார்த்தின் நினைவோ இயற்கையாக சிவந்த அவள் இதழ்கள் சிரித்தாள் எப்படி இருக்கும் என யோசித்து கொண்டு இருந்தது. உண்டே தன் மனம் போன போக்கை எண்ணி தலையை சிலுப்பி கொண்டவன் காவ்யாவை பார்த்து உங்க கிட்ட பேசணும் என தெளிவாக கூற அவளோ சொல்லுங்க என பதிலாளித்தாள்.
சித்தார்த்: இந்த கல்யாணம் ஏன் நடந்துச்சு உனக்கு தெரியுமா?
காவ்யா: இல்ல.
சித்தார்த் : சரி நானே சொல்றேன், அதாவது என் அக்கா பூஜா கர்பமா இருக்க அதுக்கு ஹரிஷ் தான் காரணம் சோ அவங்களுக்கு கல்யாணம் பண்ண உங்க வீட்ல கேக்க அவங்களோ 100 சவரன் நகை கேட்டு இருகாங்க, அதுக்காக தான் உங்கள நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது. ஏன்னா? எங்க தாத்தா சொத்து மொத்தம் என் மனைவி கையெழுத்து இருந்த மட்டும் தான் விக்கிற மாதிரி உயில் எழுதி இருக்காரு அதனால நீங்க என் மனைவிய இந்த சொத்து டாக்குமெண்ட்ல சைன் பண்ணனும் என கூற
காவ்யா : அப்ப நீங்க விருப்பட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கல,ரைட்?
சித்தார்த் : எஸ், உங்க வீட்டுல இருக்கவங்களுக்கும் இது தெரியும் அண்ட் இது சொத்து பபெர்ஸ் நீங்க சைன் பண்ண நான் கோர்ட்ல சப்மிட் பண்ணிடுவேன் என ஒரு பத்திரத்தை காண்பித்தான். அண்ட் நீங்க விருப்பட்டா நாம டிவோர்ஸ் பண்ணிக்கலாம் பட் அதுக்கு ஆறு மாசம் நாம ஒன்ன இருக்கனும் அண்ட் அதுக்கு அப்பறம் நீங்க உங்க லைப் பாத்துட்டு போகலாம் என எதோ கதை சொல்வது போல அவன் கூறினான்.
காவ்யா : ஓகே, பைன் நான் சைன் பண்றேன் பட் நாளைக்கே நான் சென்னைக்கு போகணும் இதுக்கு ஓகே அப்படினா நான் சைன் பண்றேன் என அவள் முடிக்க
சித்தார்த் : ஓகே பைன். எப்படியும் நான் நாளை கழிச்சி அங்க தான் வேலைக்கு போகணும் சோ உங்களையும் என் கூடவே நாளைக்கு கூட்டிட்டு போறேன் என கூற
காவ்யா : ஓகே. என கூறி அந்த பேப்பரில் சைன் பண்ணினாள்.
சித்தார்த்தோ பேப்பரை அலமாரியில் உள்ளே வைத்து பூட்டி விட்டு கீழே பாயை விரித்து படுத்து கொண்டான். கண்களை மூடி படுத்தானே தவிர உறக்கம் தான் அவனுக்கு வரவில்லை. காவ்யாவோ அவள் கொண்டு வந்த கைப்பையில் இருந்த மடிக்கணினியை எடுத்து கொண்டு ஓரமாக அமர்ந்து கொண்டாள். அவளோ இரவு முழுவதும் உறங்காமல் அதில் வேலை செய்து கொண்டு இருக்க அவளை அரை கண்ணால் பார்த்து கொண்டு இருந்தான் சித்தார்த்.
அவன் மனமோ என்ன பொண்ணுடா இவ அவளுக்கு நடந்த கல்யாணமே ஒரு நாடகம்னு சொல்றேன் கொஞ்சம் கூட அத பத்தி யோசிக்காம அவளோட வேலைய பார்த்தூக்கிட்டு இருக்க என யோசித்தாவரே அதிகாலை நான்கு மணி போல உறங்கினான். அவன் அறியாத ஒன்று இதை விடவும் அவள் நிறைய சோதனைகளை கடந்து வந்து உள்ளாள் என்பதே.
காவ்யா நேரம் நான்கு ஆனதை பார்த்து விட்டு குளிக்க சென்றாள். குளித்து முடித்து அவள் கொண்டு வந்த உடையை மாற்றி கொண்டு மீனாட்சி கூறியது போல வாசல் தெளித்து பெரிய அளவில் கோலம் போட்டாள். பின் வீட்டை சுத்தமாக பெருக்கி மாப் போட்டு துடைத்து விட்டாள். அவள் சமையலறை சென்று அங்கே மீதம் இருந்த பாத்திரங்களை எல்லாம் பல... பல.. வென தேய்த்து வைத்து விட்டு திரும்ப அப்போது தான் எழுந்து வெளியே வந்தார் மீனாட்சி. அவரோ வீட்டை கண்டு அவளை மனதில் பெருமையாக நினைத்தார், ஏனெனில் இதுவரை அவர் மகள் கூட அவர் சொன்ன வேலையை சரியாக செய்தது கிடையாது அப்படி இருக்கையில் நேற்று வந்த பெண் செய்ததில் அவருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி என்றாலும் வெளியே போய் கோபத்தோடு இந்த பொண்ணே! பரவலயே நான் சொன்ன மாறி எல்லா வேலையும் செஞ்சு வச்சு இருக்க சரி.. சரி.. போ போய் டீ தண்ணி, காப்பி தண்ணி கலந்து நான் போய் சமையல் வேலைய பாக்குறேன் என கூறி சென்றார்.
அனைத்து வேலையையும் முடித்து அவள் அறைக்குள் வரும் போது மணி காலை எட்டு. அவளோ அவள் உடமைகளை எடுத்து தயாராக வைத்து விட்டு வெளியே சென்றாள். அவள் சென்றதும் குளியல் அறையில் இருந்து வந்த சித்தார்த் அவனும் ஊருக்கு செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்து விட்டு வெளியே வந்தான். நேராக சோபாவில் அமர்ந்து இருந்த வீரராகவனிடம் சென்று நானும் காவ்யாவும் மதியம் போல சென்னைக்கு போறோம் என தகவலாக கூற அவரோ ஏலே! சொத்து பத்திரம் என்னாச்சுலா என கேட்டார்.
அது ரெஜிஸ்டர் பண்ண சொல்லி கொடுத்துட்டேன், இதுக்கு அப்பறம் எனக்கும் உங்க சொத்துக்கும் எந்த சம்மந்தம் இல்ல என கூறி சென்று விட்டான். கூறியது போலவே மதியம் காவ்யாவோடு வாடகை காரில் சென்னை நோக்கி அவன் பயணத்தை தொடர்ந்தான். அந்த வீட்டில் இருந்த யாரும் அவனை ஏன் போகிறாய்? இல்ல பார்த்து பத்திரமா போய்ட்டுவா என கடைமைக்காக கூட கூறவில்லை. இத்தனை எல்லாம் கவனித்து கொண்டே தான் காவ்யாவும் அமைதியாக வந்தாள்.
வண்டியின் டிரைவர் மீதமான மெல்லிசையோடு வண்டியை சென்னை நோக்கி இயக்கி கொண்டு இருந்தார். இருவரும் அமைதியாக அமர்ந்து இருக்க காவ்யா மென்மையான தென்றலின் வருடலில் சிறிது நேரத்திலே உறங்கி போனாள். சித்தார்த்தோ உறங்கும் அவளை அவன் தோளில் சாய்த்து கொண்டு அவனும் கண்களை மூடி உறங்கினான். இதனை எல்லாம் முன் கண்ணாடி வழியாக பார்த்து கொண்டு இருந்த அவனோ உனக்கு நல்ல புருஷன் தான் கிடைச்சு இருக்கான் கவி என கூறினான்.
சுமார் ஐந்து மணி நேரம் கழித்து சென்னையை அடைந்தது அந்த கார். கண்களை விழித்த சித்தார்த் கண்டதோ அவன் கூறிய வீட்டுக்கு செல்லாமல் வேறு வழியில் செல்லும் காரை தான். அவனோ ஏன்? டிரைவர் நான் சொன்ன ரூட்ல போகாம வேற எங்கயோ போறீங்க என வினவ அவனோ நான் கரெக்டா தான் போறேன் சார் என கூறி ஒரு பெரிய பங்களா வீட்டின் முன் காரை நிறுத்தினான். குழப்பதோடு காவ்யாவை எழுப்பினான். அவளும் எழுந்து விட இருக்கும் இடத்தை கண்டு அதிர்ந்த காவ்யா அவன் புறம் திரும்பி இங்க ஏன் வந்து இருக்கோம் என கேக்க சித்தார்த்தோ தெரியல என கூறி கொண்டே முன்புறம் பார்க்க அதற்குள் அங்கே இருந்த டிரைவர் வெளியே சென்று இருந்தான்.
இருவரும் கீழே இறங்கி சுற்றி பார்க்க அங்கே வந்த ஒரு யுவதியோ ஹலோ, மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரெஸ் சித்தார்த் என கூறி வாங்க உள்ள போய் பேசலாம் என கூற காவ்யாவோ ஹே! நிதி மித்து வந்துட்டான்னா என கேக்க அந்த பெண்ணோ சார், எனக்கு இங்க யார் கிட்டயும் பேச விருப்பம் இல்ல அண்ட் அவங்க கேட்ட மித்து தான் இப்ப கார் ஓட்டிட்டு வந்தாரு... உள்ள தான் இருக்காரு.. போய் பேசிக்க சொல்லுங்க சார்.. என கோபமாக கூறி கொண்டே உள்ளே சென்றாள்.
இருவரும் அவளை தொடர்ந்து உள்ளே சென்றனர். அவர்கள் அங்கு கண்டதோ ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டுகொண்டு கண்ணில் அனல் தெறிக்க அமர்ந்து இருக்கும் ஆடவனை தான். அந்த ஆடவனோ என்ன? கவி மேடம் எங்கள எல்லாம் நியாபகம் இருக்கா இல்ல மறந்துட்டீங்களா என நக்கல் குரலில் கேக்க காவ்யாவோ மித்து அது நான்... என எதோ கூற அதற்குள் அவன் கையை உயர்த்தி போதும் என காட்டிய ஆடவனோ இங்க பாரு இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல உனக்கு சேர வேண்டிய ப்ரோபெர்ட்டிஸ் அண்ட் ஷேர்ஸ் உன்ன தேடி வரும். கெட் லாஸ்ட் என கோபத்தில் அவன் கர்ஜிக்க
காவ்யாவோ அவன் அருகில் மண்டி இட்டு அமர்ந்து ப்ளீஸ் மித்து என்னால முடியல, ரொம்ப சோர்ந்து போய்ட்டேன், நீயும் என்ன வார்த்தையால கொள்ளாதடா, நீயும் போ... போ.. னா.. நான் எங்கடா மித்து போவேன் என அவன் கையை பிடித்து கொண்டே கூற அவனோ அப்ப ஏன்? எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாம கல்யாணம் பண்ண? எல்லாம் அந்த அஞ்சு கிழவிய சொல்லணும் ஆசை, சொந்தம்னு உன்ன இப்படி தள்ளிவிட்டுட்டு அது செத்து போச்சு என பொறிந்து தள்ள காவ்யாவோ அப்படியே மயங்கி சரிந்தாள். அவள் கீழே விழும் முன் இரு ஆண்களும் காவ்யா... யா..யா.. கவி... வி.. வீவீ வீ இ என்ற கூவளோடு அவளை இருபக்கமும் பிடித்து கொண்டனர்.
யார் இந்த மித்து? காவ்யாவுக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்? விடை அடுத்த பாகத்தில்....
காதல் கூடுமா 💞 ....

Author: velvizhiyaal
Article Title: கனவு 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.