நயனவாசினி - 1(i)

New member
Joined
Aug 20, 2025
Messages
19
கோவை ஒப்பனக்கார வீதியில் இயங்கி வரும் பல ஜவுளி நிறுவனங்களுள் ‘சத்யம் சில்க்ஸ்’ இன்று இன்றியமையாத கடையாக உருவாக இருந்தது.

நான்கு மாடிகளைக் கொண்ட ப்ரமாண்ட கடையை இன்று தான் பிரபல(?) நடிகை ஒருவர் திறந்து வைத்திருந்தார்.

ஜேஜே என்று நல்ல மக்கள் வெள்ளம். ரோட்டை அடைத்து மேடை போட்டு, பாட்டு, நடனம், பேச்சு என்று கடையின் ஓனர் நடிகையோடுப் போட்ட ஆட்டம் தான் பேச்சானது அங்கு வேலையில் இருந்தவர்களிடம்.

‘கிளி மாதிரி பொண்டாட்டி இருக்க குரங்காட்டம் செட்டப்பு எதுக்கு?’ என்று பலர் அடித்த கமெண்ட் தான் சத்யமில் அன்றைய ஹாட் டாப்பிக்.

கிட்டத்தட்ட ஐந்நூறு ஊழியர்களை உள்ளடக்கி இயங்க ஆரம்பித்த சத்யமில் இல்லாத ஜவுளி ரகங்களே இல்லை எனகலாம்.

மக்களின் ரசணையை, சீரியல் நடிகைகளின் புதிய ட்ரெண்ட் டிசைன்களை, த்ரிஷாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா வைரல் ஃபோட்டோவின் ரெப்ளிகேட் புடவைகளைக் கணக்கிட்டு மகளீருக்கான உடைகளை இறக்கியிருந்தார், சத்யமின் மு..த..லா..ளி!

மதியம் போல பரபரப்புகள் அடங்கியிருக்க, மக்களின் துணி மோகம் கடையை அடைத்திருந்தது.

“இதென்னடா தெறந்துவிட்ட ஆட்டு மந்தையாட்டாம் வராங்க” என்று அலுத்துக்கொண்ட கார்த்தியின் முதுகில் தட்டிய குமரன்,

“கஸ்டமர் வந்தா நல்லது தானே மச்சான், அட்டெண்ட் பண்ணு” என்க,

“நீ சொல்லுவடா ராசா, ஒரு நாள் கூத்துக்காக ரெண்டு வாரமா வேல செஞ்சு ஏ உடம்பே போச்சு போ” என்று இடுப்பை முறித்து நெளிந்தான், கார்த்தி.

ஐந்து மாதங்களுக்கு முன்னரே ‘சத்யம் சில்க்ஸ்’ கட்டுமான பணி நடைபெறும் நேரத்திலேயே வேலையில் சேர்ந்திருந்தனர் பலர்.

துணிக்கடையில் துணியோடு தானே வேலையிருக்கும்?

அல்ல, ஒரு ஸ்தாபனம் கல்லுன்ற ஆரம்பித்திருக்கும் போதே அதில் உள் நுழைந்துவிட்டு கிடைக்கும் வேலையை செய்யும் போது, அதில் கிடைக்கும் லாபம் ஒரு ஊழியனான உழைப்பாளிக்குத் தான் தெரியும்!

ஜவுளி தொழிலில் பழம் திண்று கொட்டை போட்டவர்கள் தான் கார்த்தியும் குமரனும்.

பதினெட்டு வயதில் கால் கடுக்க நின்று பீஸ் துணிக் கிழிக்க ஆரம்பித்து இதோ வருடம் பத்தை கடந்த போது ஜவுளி கடையின் மிக ‘முக்கிய செக்ஷன்’ என்று சொல்லப்படும் சத்யமின் பட்டு செக்ஷன் இன்-சார்ஜ் இவர்கள் தான்.

கோடியில் பெறும் சரங்குகள் குவிந்திருக்க, பெண்களின் துடிப்பை அறிந்து புடவையை அனாயசமாக எடுத்துப் போட்டுக் காட்டி, ‘சும்மா, புடவை கலெக்ஷன் பார்க்க வந்தேன்’ என்பரைக் கூட ஒரு புடவையை வாங்க வைத்துவிடும் வாய் திறமை மிக்கவர்கள்.

இன்று பலரை வாங்கவும் வைத்துவிட்டனர்.

“என்னதான் சொல்லு, ஆரணியவிட திருபுவனத்தோட டிசைனே தனிதான்” சிலாகித்தபடி வாடிக்கையாளரின் புடவையில் தன்னுடைய அடையாள எண் கொண்ட பார்க்கோட் ஸ்டிக்கரை ஒட்டிய கையோடு பில் போட்டு கொடுத்தான் குமரன்.

அவன் அருகில் நின்றிருந்த பாண்டி, “வூரு பெருமையா மாப்ள?” என்றவன் அவனை மேலும் கீழுமாய் பார்த்து, “சல்லி பைசாவுக்கு பெறுமானம் ஆவாது. மூடிகிட்டு கஸ்ஸ கவனி” என்றான் நாக்கை மடித்துக்கொண்டு.

அடுத்தடுத்து வந்து நின்றிருந்த கஸ்டமர்ஸை கவனித்து, அவர்கள் தேவையறிந்து, அவனின் ஆலோசனையை கொடுத்து அவர்களின் எண்ணத்தின் நூலை பிடித்து ஒரு புடவையை கொடுப்பதற்குள் அவன் சக்தியை உறிஞ்சி எடுத்திருந்தனர்.

அவர்களை முடித்த கையுடன் பட்டு கவுண்டருக்குள் வந்த குமரனை, “எவ்வளவுக்கு போட்டிருக்க குமரா?” என்று கார்த்தி கேள்வி எழுப்ப,

“ம்ம், எழுபது வந்திருக்கும். நைட்டுக்குள்ள ஒன்னு வந்துரும்னு நெனக்கிறேன்”

“நா இருக்கட்டும்னு அட்ட பாக்ஸ்ல எழுதி வெச்சிருக்கேன் மச்சான். இவனுங்கல நம்பக் கூடாது” என்றான் கணினி முன்பிருந்த காசாளர்களைப் பார்த்துக்கொண்டு.

“பில்லுல நம்ம நம்பர் வரும்ல எரும. அப்றம் என்ன?” குமரன் கடிக்க,

“இருந்தாலும்? புது கடை, அம்புட்டு சர்வரும் புதுசு வேற. மாறிகிறி போச்சுன்னா? எல்லாம் ஒரு முன்னேற்பாடுதேன்” என்றவன் பேச்சும் ஒற்றுக்கொள்ளும்படியாகவே இருந்தது.

“மொத இன்சென்டிவ் எப்போ தருவாங்கனு கேட்கனும் கார்த்தி. இவனுங்க பாட்டுக்கு ஏதாவது ஒரு நாள சொன்னா ஆவாது. ஒன்னு சம்பளத்தோட இருக்கனும் இல்லையா பத்தாந்தேதி தரனும். இல்லேனா நா சொல்லிடலாம்னு இருக்கேன்” என்றான் குமரன்.

அவன் சொல்லும் இன்சென்டிவானது அவன் விற்பனை செய்திருக்கும் பொருட்களின் விலைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரும் அவனின் கமிஷனை தான்.

எழுபது, எண்பது என்பது கூட அவன் விற்பனை செய்த பொருட்களின் விலை மதிப்பீடு. ஆயிரம் ரூபாய் துணியை விற்றிருந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையும் அதற்கு மேல் செல்ல செல்ல அதன் அளவீடு கணிசமாக ஏறும்.

ஏன் சம்பள பணத்தைவிட இவர்கள் இன்சென்டிவில் தான் அதிகம் வருமானம் பார்ப்பதே!

கடைக்குக் கடை அந்த அளவீடு மாறுபட்டாலும் குமரனிற்கும் கார்த்திக்கும் எப்போதும் எங்கு வேலையில் இருந்தாலும் அந்த மதிப்பீட்டு பணம் வந்துவிடும்.

காரணம், அவர்களின் பேச்சு சாதுர்யம்.

பெண்களின் மண்டையை கழுவியாவது புடவையை வாங்க வைக்காது ஓயமாட்டார்கள் இருவரும். அதில் ஒருவருக்கு ஒருவன் சளைத்தவனும் இல்லை.

கடை திறப்பு நாளில் 30% தள்ளுபடி அறிக்கை வேறு இருக்க, நல்ல கல்லா கட்டியது சத்யம் சில்க்ஸ்.

நிற்க நேரமில்லாது கடையில் இருந்த ஐநூறு ஊழியர்களும் சுழன்று வேலை செய்தனர்.

பட்டு செக்ஷனில் கூட்டம் சற்று குறையவும், தரையில் அமர்ந்துவிட்டான், குமரன்.

கால் வலி பின்னி எடுத்தது. இன்னும் ஜவுளி கடைகளில் கால் கடுக்க நின்று கொண்டு தான் வியாபாரம் செய்ய வேண்டிய நிலை. அரசாங்க உத்தரவை யார் மதிப்பார்?

குதிங்காலை நீவிவிட்டபடி இருந்தவனிடம்,
“என்னடா, ரொம்ப வலியா?”
பக்கத்தில் நின்றிருந்த வனஜா கேட்க,

குமரன், “செமத்தியா வலியிருக்கு’க்கா” என்றான் முகம் சுருங்க.

வனஜா, “நேத்தென்ன தூங்குனீங்களா? விடிய விடிய வேலை இருந்துச்சுன்னு ஜோதி சொன்னா?” என்க,

“ஆமா, ஒரு நா மட்டுமா? ரெண்டு வாரமாவே டே & நைட் பார்க்கறோம். நீ வேற ஏங்கா?” என்றவனின் அலுப்பு அவனின் உழைப்பின் தீவிரத்தைச் சொன்னது.

சந்தனக்குமரன். தஞ்சாவூர் திருபுவனத்தை பூர்வீகமாக கொண்ட விவசாயின் மகன்.

நஞ்சை நிலம் ஊரில் எட்டு ஏக்கரா இருக்க, அதில் பெரும் நாட்டமிருந்தாலும் பள்ளி முடித்த கையோடு கோவையில் இருந்த ஐவுளிக் கடைக்குள் புகுந்துவிட்டான்.

பன்னெட்டாப்பு படித்தவனுக்கு புடவைகளின் மேல் ஒரு அலாதி காதல்.

திருபுவனத்தில் பட்டுத் தறியின் ஓசையில் பிறந்தவனுக்கு புடவைகளின் மேல் காதலில்லாமல் இருந்தால் தான் அதிசயம்.

முன்னர் குறைந்த சம்பளம் தான். படிப்படியாக உயர்ந்து இதோ இருபதாயிரம் வாங்கும் வரை வளர்ந்திருக்கிறான். இன்னும் கூட இந்த கடையின் ஓனர் தருவதாக கூறியிருக்கிறார் என்பது காத்து வாக்கு செய்தி.

அதுபோக, இந்த OT, நைட் டியூட்டி, இன்சென்டிவ் என்று மாதம் ஒரு எட்டு, பத்து தேறி வரும்.

ஏதோ யோசனையில் இருந்தவனை சாப்பிட அழைத்து சென்றிருந்தான், கார்த்தி.

மதிய நேரம் மெஸ்ஸில் கூட்டம் அவ்வளவு இல்லை. சுமாரான சாப்பாடு தான். நன்றாக சாப்பிட்ட கையுடன் பதினைந்து நிமிடங்கள் படியில் அமர்ந்து ஆசுவாசம் கொண்டிருந்தனர்.

திடீரென, “மச்சான், நாளைக்கு பாரேன் என்னைய வேற செக்ஷன் மாத்துவாங்க” என்றான் கார்த்தி.

அலட்டாது, “எந்த ப்ளோர் மேனேஜ் கண்ண உறுத்துச்சாம்” என்க,

“குள்ள முனி தான். காலேல இருந்து பார்வை நம்ம மேலையே இருக்கு” என்றான் கார்த்தி தூரத்தில் உணவருந்திக்கொண்டிருந்த காமராஜை பார்த்தபடி.

காமராஜ் சத்யமின் முதன்மை மேனேஜர். அந்த வளாகத்தில் எது நடந்தாலும் அவர் தான் பொறுப்பு.
அறுபதை நெருங்கும் நபரிடம் அவர் பெயரின் முற்பாதி நெடி வீசும்.

இதில் குமரனுக்கும் காமராஜிற்கும் ஆரம்பம் தொட்டே ஆகாது.

ஐந்தே முக்காலுக்கும் நான்கரைக்கும் எப்போதும் பாய்ச்சல் தான்.

அதிலும் கார்த்தியுடன் இருப்பதை மனிதர் இப்போது பார்த்திருக்க, நிச்சயம் ஒரு தரமான சம்பவம் நாளை இருவருக்கும் காத்திருக்கிறது அவரிடம்.

மாலைக்கு பின் சற்று கூட்டமும் வியாபாரம் மீண்டும் சூடு பிடித்திருக்க, முதல் நாள் வசூலே முப்பது லட்சத்தை எட்டியிருந்தது சத்யம் சில்க்ஸ்.

சத்யத்தின் முதலாளியான சரபேஸ்வரன் பார்மலில் வாயெல்லாம் பல்லாக வரவேற்பு இடத்திலேயே நின்றிருந்தார்.

இருந்தால் என்ன வயது நாற்பதின் மத்தியில் இருக்கும். வியாபாரக் கலை சுத்தமாய் தெரிந்தது அவர் முகத்தில்.

முதல் நாள் அவரே எதிர்பார்க்காத அளவு வரவேற்பு கிடைத்திருக்க, கடையை மூடும் நேரம் வரை மனிதர் அங்கிங்கு நகராமல் அனைத்து வேலையாட்களின் மீதும் பார்வையை வைத்தபடி நின்றிருந்தார்.
 
Last edited:

Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 1(i)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
34
என்றைக்கும் உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பு குறைவு தான் அதுவும் அவர்கள் வேலை செய்யுமிடத்தில்
 
New member
Joined
Aug 20, 2025
Messages
19
என்றைக்கும் உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பு குறைவு தான் அதுவும் அவர்கள் வேலை செய்யுமிடத்தில்
நன்றி 📿
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
சந்தனகுமரன்☺️☺️. இவனை பிடித்து போக முழுசா ஒரு எபி கூட வேண்டாம். அவனோட சீன் வந்த போதே மனசோட நெருக்கமாகிருச்சு அந்த கேரக்டர். இதுலாம் அரிது ஒரு கேரக்டர் நெருக்கமாகுறது. அவனோட பேச்சும் அந்த விதமும் விரும்ப வச்சிருச்சு!!! அவனை இப்படியே ஜாலி கொண்டு போங்க. பிள்ளைய எங்கையாச்சும் எமோஷனல் ஆக்கிடாத தெய்வமே
 
எமோஷனல் ஏகாம்பரம் அளவுக்கு இருக்க மாட்டான் 😂

நன்றி 📿
 
New member
Joined
Aug 21, 2025
Messages
11
கோவை ஒப்பனக்கார வீதியில் இயங்கி வரும் பல ஜவுளி நிறுவனங்களுள் ‘சத்யம் சில்க்ஸ்’ இன்று இன்றியமையாத கடையாக உருவாக இருந்தது.

நான்கு மாடிகளைக் கொண்ட ப்ரமாண்ட கடையை இன்று தான் பிரபல(?) நடிகை ஒருவர் திறந்து வைத்திருந்தார்.

ஜேஜே என்று நல்ல மக்கள் வெள்ளம். ரோட்டை அடைத்து மேடை போட்டு, பாட்டு, நடனம், பேச்சு என்று கடையின் ஓனர் நடிகையோடுப் போட்ட ஆட்டம் தான் பேச்சானது அங்கு வேலையில் இருந்தவர்களிடம்.

‘கிளி மாதிரி பொண்டாட்டி இருக்க குரங்காட்டம் செட்டப்பு எதுக்கு?’ என்று பலர் அடித்த கமெண்ட் தான் சத்யமில் அன்றைய ஹாட் டாப்பிக்.

கிட்டத்தட்ட ஐந்நூறு ஊழியர்களை உள்ளடக்கி இயங்க ஆரம்பித்த சத்யமில் இல்லாத ஜவுளி ரகங்களே இல்லை எனகலாம்.

மக்களின் ரசணையை, சீரியல் நடிகைகளின் புதிய ட்ரெண்ட் டிசைன்களை, த்ரிஷாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா வைரல் ஃபோட்டோவின் ரெப்ளிகேட் புடவைகளைக் கணக்கிட்டு மகளீருக்கான உடைகளை இறக்கியிருந்தார், சத்யமின் மு..த..லா..ளி!

மதியம் போல பரபரப்புகள் அடங்கியிருக்க, மக்களின் துணி மோகம் கடையை அடைத்திருந்தது.

“இதென்னடா தெறந்துவிட்ட ஆட்டு மந்தையாட்டாம் வராங்க” என்று அலுத்துக்கொண்ட கார்த்தியின் முதுகில் தட்டிய குமரன்,

“கஸ்டமர் வந்தா நல்லது தானே மச்சான், அட்டெண்ட் பண்ணு” என்க,

“நீ சொல்லுவடா ராசா, ஒரு நாள் கூத்துக்காக ரெண்டு வாரமா வேல செஞ்சு ஏ உடம்பே போச்சு போ” என்று இடுப்பை முறித்து நெளிந்தான், கார்த்தி.

ஐந்து மாதங்களுக்கு முன்னரே ‘சத்யம் சில்க்ஸ்’ கட்டுமான பணி நடைபெறும் நேரத்திலேயே வேலையில் சேர்ந்திருந்தனர் பலர்.

துணிக்கடையில் துணியோடு தானே வேலையிருக்கும்?

அல்ல, ஒரு ஸ்தாபனம் கல்லுன்ற ஆரம்பித்திருக்கும் போதே அதில் உள் நுழைந்துவிட்டு கிடைக்கும் வேலையை செய்யும் போது, அதில் கிடைக்கும் லாபம் ஒரு ஊழியனான உழைப்பாளிக்குத் தான் தெரியும்!

ஜவுளி தொழிலில் பழம் திண்று கொட்டை போட்டவர்கள் தான் கார்த்தியும் குமரனும்.

பதினெட்டு வயதில் கால் கடுக்க நின்று பீஸ் துணிக் கிழிக்க ஆரம்பித்து இதோ வருடம் பத்தை கடந்த போது ஜவுளி கடையின் மிக ‘முக்கிய செக்ஷன்’ என்று சொல்லப்படும் சத்யமின் பட்டு செக்ஷன் இன்-சார்ஜ் இவர்கள் தான்.

கோடியில் பெறும் சரங்குகள் குவிந்திருக்க, பெண்களின் துடிப்பை அறிந்து புடவையை அனாயசமாக எடுத்துப் போட்டுக் காட்டி, ‘சும்மா, புடவை கலெக்ஷன் பார்க்க வந்தேன்’ என்பரைக் கூட ஒரு புடவையை வாங்க வைத்துவிடும் வாய் திறமை மிக்கவர்கள்.

இன்று பலரை வாங்கவும் வைத்துவிட்டனர்.

“என்னதான் சொல்லு, ஆரணியவிட திருபுவனத்தோட டிசைனே தனிதான்” சிலாகித்தபடி வாடிக்கையாளரின் புடவையில் தன்னுடைய அடையாள எண் கொண்ட பார்க்கோட் ஸ்டிக்கரை ஒட்டிய கையோடு பில் போட்டு கொடுத்தான் குமரன்.

அவன் அருகில் நின்றிருந்த பாண்டி, “வூரு பெருமையா மாப்ள?” என்றவன் அவனை மேலும் கீழுமாய் பார்த்து, “சல்லி பைசாவுக்கு பெறுமானம் ஆவாது. மூடிகிட்டு கஸ்ஸ கவனி” என்றான் நாக்கை மடித்துக்கொண்டு.

அடுத்தடுத்து வந்து நின்றிருந்த கஸ்டமர்ஸை கவனித்து, அவர்கள் தேவையறிந்து, அவனின் ஆலோசனையை கொடுத்து அவர்களின் எண்ணத்தின் நூலை பிடித்து ஒரு புடவையை கொடுப்பதற்குள் அவன் சக்தியை உறிஞ்சி எடுத்திருந்தனர்.

அவர்களை முடித்த கையுடன் பட்டு கவுண்டருக்குள் வந்த குமரனை, “எவ்வளவுக்கு போட்டிருக்க குமரா?” என்று கார்த்தி கேள்வி எழுப்ப,

“ம்ம், எழுபது வந்திருக்கும். நைட்டுக்குள்ள ஒன்னு வந்துரும்னு நெனக்கிறேன்”

“நா இருக்கட்டும்னு அட்ட பாக்ஸ்ல எழுதி வெச்சிருக்கேன் மச்சான். இவனுங்கல நம்பக் கூடாது” என்றான் கணினி முன்பிருந்த காசாளர்களைப் பார்த்துக்கொண்டு.

“பில்லுல நம்ம நம்பர் வரும்ல எரும. அப்றம் என்ன?” குமரன் கடிக்க,

“இருந்தாலும்? புது கடை, அம்புட்டு சர்வரும் புதுசு வேற. மாறிகிறி போச்சுன்னா? எல்லாம் ஒரு முன்னேற்பாடுதேன்” என்றவன் பேச்சும் ஒற்றுக்கொள்ளும்படியாகவே இருந்தது.

“மொத இன்சென்டிவ் எப்போ தருவாங்கனு கேட்கனும் கார்த்தி. இவனுங்க பாட்டுக்கு ஏதாவது ஒரு நாள சொன்னா ஆவாது. ஒன்னு சம்பளத்தோட இருக்கனும் இல்லையா பத்தாந்தேதி தரனும். இல்லேனா நா சொல்லிடலாம்னு இருக்கேன்” என்றான் குமரன்.

அவன் சொல்லும் இன்சென்டிவானது அவன் விற்பனை செய்திருக்கும் பொருட்களின் விலைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரும் அவனின் கமிஷனை தான்.

எழுபது, எண்பது என்பது கூட அவன் விற்பனை செய்த பொருட்களின் விலை மதிப்பீடு. ஆயிரம் ரூபாய் துணியை விற்றிருந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையும் அதற்கு மேல் செல்ல செல்ல அதன் அளவீடு கணிசமாக ஏறும்.

ஏன் சம்பள பணத்தைவிட இவர்கள் இன்சென்டிவில் தான் அதிகம் வருமானம் பார்ப்பதே!

கடைக்குக் கடை அந்த அளவீடு மாறுபட்டாலும் குமரனிற்கும் கார்த்திக்கும் எப்போதும் எங்கு வேலையில் இருந்தாலும் அந்த மதிப்பீட்டு பணம் வந்துவிடும்.

காரணம், அவர்களின் பேச்சு சாதுர்யம்.

பெண்களின் மண்டையை கழுவியாவது புடவையை வாங்க வைக்காது ஓயமாட்டார்கள் இருவரும். அதில் ஒருவருக்கு ஒருவன் சளைத்தவனும் இல்லை.

கடை திறப்பு நாளில் 30% தள்ளுபடி அறிக்கை வேறு இருக்க, நல்ல கல்லா கட்டியது சத்யம் சில்க்ஸ்.

நிற்க நேரமில்லாது கடையில் இருந்த ஐநூறு ஊழியர்களும் சுழன்று வேலை செய்தனர்.

பட்டு செக்ஷனில் கூட்டம் சற்று குறையவும், தரையில் அமர்ந்துவிட்டான், குமரன்.

கால் வலி பின்னி எடுத்தது. இன்னும் ஜவுளி கடைகளில் கால் கடுக்க நின்று கொண்டு தான் வியாபாரம் செய்ய வேண்டிய நிலை. அரசாங்க உத்தரவை யார் மதிப்பார்?

குதிங்காலை நீவிவிட்டபடி இருந்தவனிடம்,
“என்னடா, ரொம்ப வலியா?”
பக்கத்தில் நின்றிருந்த வனஜா கேட்க,

குமரன், “செமத்தியா வலியிருக்கு’க்கா” என்றான் முகம் சுருங்க.

வனஜா, “நேத்தென்ன தூங்குனீங்களா? விடிய விடிய வேலை இருந்துச்சுன்னு ஜோதி சொன்னா?” என்க,

“ஆமா, ஒரு நா மட்டுமா? ரெண்டு வாரமாவே டே & நைட் பார்க்கறோம். நீ வேற ஏங்கா?” என்றவனின் அலுப்பு அவனின் உழைப்பின் தீவிரத்தைச் சொன்னது.

சந்தனக்குமரன். தஞ்சாவூர் திருபுவனத்தை பூர்வீகமாக கொண்ட விவசாயின் மகன்.

நஞ்சை நிலம் ஊரில் எட்டு ஏக்கரா இருக்க, அதில் பெரும் நாட்டமிருந்தாலும் பள்ளி முடித்த கையோடு கோவையில் இருந்த ஐவுளிக் கடைக்குள் புகுந்துவிட்டான்.

பன்னெட்டாப்பு படித்தவனுக்கு புடவைகளின் மேல் ஒரு அலாதி காதல்.

திருபுவனத்தில் பட்டுத் தறியின் ஓசையில் பிறந்தவனுக்கு புடவைகளின் மேல் காதலில்லாமல் இருந்தால் தான் அதிசயம்.

முன்னர் குறைந்த சம்பளம் தான். படிப்படியாக உயர்ந்து இதோ இருபதாயிரம் வாங்கும் வரை வளர்ந்திருக்கிறான். இன்னும் கூட இந்த கடையின் ஓனர் தருவதாக கூறியிருக்கிறார் என்பது காத்து வாக்கு செய்தி.

அதுபோக, இந்த OT, நைட் டியூட்டி, இன்சென்டிவ் என்று மாதம் ஒரு எட்டு, பத்து தேறி வரும்.

ஏதோ யோசனையில் இருந்தவனை சாப்பிட அழைத்து சென்றிருந்தான், கார்த்தி.

மதிய நேரம் மெஸ்ஸில் கூட்டம் அவ்வளவு இல்லை. சுமாரான சாப்பாடு தான். நன்றாக சாப்பிட்ட கையுடன் பதினைந்து நிமிடங்கள் படியில் அமர்ந்து ஆசுவாசம் கொண்டிருந்தனர்.

திடீரென, “மச்சான், நாளைக்கு பாரேன் என்னைய வேற செக்ஷன் மாத்துவாங்க” என்றான் கார்த்தி.

அலட்டாது, “எந்த ப்ளோர் மேனேஜ் கண்ண உறுத்துச்சாம்” என்க,

“குள்ள முனி தான். காலேல இருந்து பார்வை நம்ம மேலையே இருக்கு” என்றான் கார்த்தி தூரத்தில் உணவருந்திக்கொண்டிருந்த காமராஜை பார்த்தபடி.

காமராஜ் சத்யமின் முதன்மை மேனேஜர். அந்த வளாகத்தில் எது நடந்தாலும் அவர் தான் பொறுப்பு.
அறுபதை நெருங்கும் நபரிடம் அவர் பெயரின் முற்பாதி நெடி வீசும்.

இதில் குமரனுக்கும் காமராஜிற்கும் ஆரம்பம் தொட்டே ஆகாது.

ஐந்தே முக்காலுக்கும் நான்கரைக்கும் எப்போதும் பாய்ச்சல் தான்.

அதிலும் கார்த்தியுடன் இருப்பதை மனிதர் இப்போது பார்த்திருக்க, நிச்சயம் ஒரு தரமான சம்பவம் நாளை இருவருக்கும் காத்திருக்கிறது அவரிடம்.

மாலைக்கு பின் சற்று கூட்டமும் வியாபாரம் மீண்டும் சூடு பிடித்திருக்க, முதல் நாள் வசூலே முப்பது லட்சத்தை எட்டியிருந்தது சத்யம் சில்க்ஸ்.

சத்யத்தின் முதலாளியான சரபேஸ்வரன் பார்மலில் வாயெல்லாம் பல்லாக வரவேற்பு இடத்திலேயே நின்றிருந்தார்.

இருந்தால் என்ன வயது நாற்பதின் மத்தியில் இருக்கும். வியாபாரக் கலை சுத்தமாய் தெரிந்தது அவர் முகத்தில்.

முதல் நாள் அவரே எதிர்பார்க்காத அளவு வரவேற்பு கிடைத்திருக்க, கடையை மூடும் நேரம் வரை மனிதர் அங்கிங்கு நகராமல் அனைத்து வேலையாட்களின் மீதும் பார்வையை வைத்தபடி நின்றிருந்தார்.
I like குமரன், ஏனோ படித்தவுடன் பிடித்து விட்டது.... சூப்பர் சூப்பர் வித்தியாசமான கதை களம் சூப்பர்.... 💐💐
 
New member
Joined
Aug 20, 2025
Messages
19
I like குமரன், ஏனோ படித்தவுடன் பிடித்து விட்டது.... சூப்பர் சூப்பர் வித்தியாசமான கதை களம் சூப்பர்.... 💐💐
மிக்க நன்றி சகோ 📿
 
Top