New member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 20
- Thread Author
- #1
அத்தியாயம் 1....
விடிய காலை 5 மணி....
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த ஏரியாவின் மிகப்பெரிய பிரம்மாண்டமான திருமண மண்டபம் தான்
அருந்ததி கல்யாண மண்டபம்...
அந்த பெரிய மண்டபத்தின் வாசலில், கௌதம் weds தேவசேனா.. என்று தங்க நிறத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டு... மணமக்களின் புகைப்படத்துடன் கூடிய அழகிய பேனர் ஒட்டப்பட்டு இருந்தது...!!
மிகப்பெரிய கார் பார்க்கிங் ஏரியாவை கடந்து உள்ளே நுழைந்ததும் பன்னீர் தெளித்து வருவோரை எல்லாம் வரவேற்றுக் கொண்டிருந்தனர் அங்கு நின்றிருந்த இளம் பெண்கள்...!!
ஆங்காங்கே ஓடி விளையாடி கொண்டிருந்த சிறார்கள்....
வந்திருக்கும் சொந்த பந்தங்கள் அனைவரையும் வரவேற்று அமர செய்து உபசரித்துக் கொண்டிருந்தனர் ஒரு பக்கம் பெண் வீட்டார்கள்..
அனைத்து வேலைகளும் சரியாக நடக்கிறதா??.. எதுவும் பிழை இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டிருந்தனர் இன்னொரு பக்கம் மாப்பிள்ளை விட்டார்கள்...
வீடியோ கவரேஜ்க்காக அழைத்து வந்திருந்த கேமராமேன் அங்கும் இங்கும் நடக்கும் இயல்பான காட்சிகளை எல்லாம் படம் பிடித்துக் கொண்டும் , வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தார்.....
அதிகாலை நாலரை ஆறு முகூர்த்தம் என்பதால் தான்... அந்நேரத்திற்கே அந்த மண்டபத்தில் அத்தனை பரபரப்பு.....!!
பட்டுப் புடவையும் நகை நட்டுகளும் அணிந்து கொண்டு ஜொலித்துக் கொண்டிருந்தனர் அனைத்து பெண்களும்..
இன்னொரு பக்கம் கட்டிய வேஷ்டி இடுப்பில் நிற்கிறதா இல்லையா என்று தெரியாமல் பயத்தில் அதை இறுக பிடித்த வண்ணம் சில இளைஞர்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர் இளம் பெண்களை சைட் அடித்துக் கொண்டு....!!
முழுசாக தூக்கம் கலையாமல் இன்னும் அரை தூக்கத்துடன் கண்களை கசக்கிய கொண்டு, கொட்டாவி விட்ட வண்ணம் அமர்ந்திருந்தனர், அங்கு முன் வரிசையில் அமர்ந்து இருந்த பெரியோர்கள்..
எங்க என்ன நடந்தாலும் தனக்கு கவலை இல்லை என்பது போல் கடமையே கண்ணாக யாககுண்டத்திற்கு முன்பாக அமர்ந்து கொண்டு மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தார் ஐயர்.......
வெளி நிலவரம் என்னவென்று அறிந்தாயிற்று..
சரி வாருங்கள் நேராக மணமகன் அறையைத் தட்டி உள்ளே நுழைந்து என்ன நிலவரம் என்று அறிந்து கொள்வோம்..
மணமகன் அறை.....
" டேய் மச்சான்.. செமையா இருக்கடா.. உனக்கு ஜீன்ஸ் பேண்ட் விட வேஷ்டி சட்டை ரொம்பவே பொருத்தமா இருக்கு.. நல்ல கம்பீரமான லுக்கா இருக்குடா.. இந்த விளம்பரத்தில் எல்லாம் வருமே, வேஷ்டிகள் மற்றும் ஷர்ட்டுகள்...என்று அதுபோல ஒரு விளம்பர மாடல் மாதிரி இருக்கடா மச்சான்", என்று அவன் தோளில் தட்டி, அவனை பெருமையாக பேசினான் மாப்பிள்ளையின் நண்பன் கணேஷ்...
" ஆமா ஆமா ஐயா ரொம்பவே கம்பீரமாக இருக்காரு.. அந்த தேவசேனாவுக்கு ஏத்த பாகுபலி தான் இவரு", என்று கூறி அவனை கேலி செய்து கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தனர் அவனின் நண்பர்கள் அனைவரும்....
" யப்பா சாமிங்களா கொஞ்ச நேரம் சும்மா இருங்கடா.. நானே பதட்டத்துல இருக்கேன்.. நீங்க வேற கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க", என்று சிறு வெட்கம் கலந்த பதட்டத்துடன் கூறினான் மாப்பிள்ளை கௌதம்...
" இங்க பாருடா மாப்பிள்ளைக்கு வெட்கமெல்லாம் வருது.. ஏன் மச்சான்.. உனக்கு வெட்கம் எல்லாம் வருமா?? கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ.. அப்புறம் சிஸ்டர் முன்னாடி வந்து நின்னா..உன்னால பர்ஃபாமென்ஸ் பண்ண முடியாமல் போய்விடும்", என்று கூறி அனைவரும் நகைக்க...
" அடடா.. என் பையனை போட்டு ஏன்பா இப்படி கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க?? இன்னைக்கு அவன் தான்பா மாப்பிள்ளை.. இந்த விழாவின் நாயகனே அவன் தான்.. இப்படி கிண்டல் பண்ணி என் புள்ள கன்னம் எல்லாம் சிவக்க வச்சிட்டீங்களே..", என்று புன்னகையுடன் கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தார் மாப்பிள்ளையின் அம்மா கற்பகம்...
" என்ன ஆன்ட்டி இப்படி சொல்லிட்டீங்க.. இன்னைக்கு ஒரு நாள் தான் நாங்க இவனை கிண்டல் பண்ண முடியும்.. இனிமே கிண்டல் பண்ணா அப்புறம் தேவசேனா சிஸ்டர், எங்களை அடிக்க வந்திடுவாங்களே.. எப்படிடா என் புருஷனை நீங்க எல்லாம் கிண்டல் பண்ணுவீங்க அப்படின்னு..", என்று பாவமாக கூறினான் கணேஷ்...
" அது சரி உங்க கலாட்டாவ கொஞ்சம் மிச்சம் வைங்க பா... அவன் தாலி கட்டுற வரைக்கும் உங்க வாலை எல்லாம் சுருட்டி வைங்க ..", என்று அவர் சொல்லவும்..
" உத்தரவு அம்மா", என்று கிண்டலாக கூறி தலை குனிந்து வணங்கினான் அங்கு இருக்கும் இன்னொரு நண்பன்..
" சரியான வானர கூட்டமா இருக்கீங்க.. என்னவோ பண்ணுங்க.. சீக்கிரம் வா கௌதம்... மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்க என்று ஐயர் சொல்லிட்டாரு.. இன்னும் கொஞ்ச நேரத்துல மணமேடைக்கு வரணும்.. தயாரா தானே இருக்க??", என்று கேட்டுக் கொண்டே தன் மகனை பார்வையாலேயே அளந்தார் கற்பகம்..
ஆறடி உயரத்திற்கு குறையாமல் ஆஜானுபாகுவான உடல்வாகுடன் கம்பீரமான முக களையுடன் நின்றிருந்தான் கௌதம்...!!
தன் மகனின் கம்பீரத்தை கண்டு.. தானே எங்கே கண் வைத்து விடுவோமோ, என்று பயந்து அவனுக்கு திருஷ்டி சுற்றினார்...
" என் அழகு ராஜா..!! சரிப்பா சீக்கிரம் கிளம்பி மணமேடைக்கு வா.. நான் முன்னாடி போறேன்", என்று சொல்லி அவர் சென்று விட்டார்..
இன்னும் சற்று நேரத்தில் தேவசேனா கழுத்தில் தான் தாலி கட்ட போவதை நினைத்து பூரித்து போனான் கௌதம்....
ம்ம்... ஆக மொத்தம் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்பது போல் கௌதம் ரொம்பவே ஹாப்பியா இருக்காருன்னு தெரிஞ்சு போச்சு..
சரி மணமகள் அறையை நோக்கி போவோம்.. அங்கே என்ன நிலவரம் என்று போய் பார்த்தா தானே தெரியும்...
மணமகள் அறை..
தோழிகளின் புடை சூழ, ஆள் உயர கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தாள் மணப்பெண்..
சர்வ அலங்காரமும் செய்யப்பட்டு தேவலோகத்து பெண் போல காட்சி அளித்தாள் தேவசேனா.....
பார்த்து பார்த்து பொறுமையுடன் பிரம்மனால் செதுக்கப்பட்ட அழகிய சிற்பம் போல் காணப்பட்டாள் அவள்...
என்ன , அந்த சிற்பத்திற்கு தான் இப்போது முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாதது போல் தென்பட்டது....!!
" என்னதான் ஆச்சு?? ஏன் இப்படி இருக்க தேவி??", என்று அவளின் தோழிகள் என்ன கேட்டாலும் பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்....
" ஏய் உன்ன தாண்டி உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லையா..?? ஏன் எதையோ பறி கொடுத்தது போல் அமர்ந்திருக்க??", என்று அக்கறையுடன் கேட்டாள் அவளின் நெருங்கிய தோழி வாணி....
" இன்னும் என்ன பேச்சு?? பொண்ணு ரெடியாயிட்டாளா?? இல்லையா?? ஐயர் வர சொல்லிட்டு இருக்காரு..",என்று அதட்டி கொண்டே உள்ளே நுழைந்தார் தேவசேனாவின் அம்மா விமலா...
" அலங்காரம் எல்லாம் முடிஞ்சது ஆன்ட்டி.. ஆனால் இவதான் ரொம்ப சோகமா இருக்கா.. என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறா", என்றாள் வாணி...
" அது.. அது வந்து.. அது ஒன்னும் இல்ல.. எல்லா பெண்களுக்கும் இருக்கக்கூடிய உணர்வு தான்.. கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போகும்போது எல்லா பெண்களும் இப்படித்தானே வருத்தமா இருப்பாங்க.. இத்தனை வருஷமா தூக்கி வளர்த்த அம்மா அப்பாவை விட்டுட்டு இன்னொருத்தர் வீட்டுக்கு போறது என்றால் சும்மாவா?? அதனாலதான் சோகமா இருக்கா.. இத போய் பெருசு படுத்தி பேசிக்கிட்டு.. சரி சரி.. நேரமாகிட்டே இருக்கு சீக்கிரமா அழைச்சிட்டு மேடைக்கு வாங்க..", என்று அவர்களிடம் கூறிவிட்டு...
தேவசேனாவின் அருகே குனிந்து மெதுவாக பேசத் தொடங்கினார் விமலா..
" அம்மாடி தேவசேனா.. தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை பண்ணிக்கோ.. முடியாது என்று மட்டும் சொல்லி கடைசி நேரத்தில் கழுத்தறுத்து விடாதே.. உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன்.. முகத்தை கொஞ்சம் இயல்பாக வச்சுக்கோ.. யாருக்கும் சந்தேகம் வராதபடி", என்று தன் மகளுக்கு உத்தரவிட்டு பின் அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்....
" அடியே உங்க அம்மா சொன்னது காதில் விழல...நேரம் ஆகிட்டே இருக்கு வா மணமேடைக்கு போகலாம்..", என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றாள் வாணி...
மேடைக்கு வந்த மணமகனும் மணமகளும்.. அனைவருக்கும் வணக்கத்தை வைத்து விட்டு பின் அமர்ந்தனர்..
ஐயர் மந்திரம் சொல்ல சொல்ல அதை பின்பற்றி உச்சரித்துக் கொண்டிருந்தனர் இருவரும்...
தன்னருகில் தேவசேனா அமர்ந்து இருப்பதை அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை.. தனக்கு வர போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினானோ.. அதேபோல அவனின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்த ஒரே பெண் தேவசேனா மட்டுமே..!!
அதனால்தான் பெண் பார்த்த அன்னைக்கே கையோடு நிச்சயதார்த்தமும் வைத்துவிட்டு... கூடிய விரைவிலேயே திருமணம் நடக்க வேண்டும் என்று நெருக்கு வட்டத்தில் , அவசரமாக அடுத்த முகூர்த்தத்திலேயே திருமண தேதி குறித்து விட்டு.. இதோ இப்பொழுது மணமேடை வரை வந்தாயிற்று.....!!
ஓரக்கண்ணால் அவளை பார்த்து கண்ணடித்தான் கௌதம்...
அதை கண்டதும் ஏதோ மின் வெட்டியது போல சடாரென்று தலையை குனிந்து கொண்டாள் தேவசேனா.....
தன்னை கண்டதும் இத்தனை வெக்கமா?? என்று எண்ணிக்கொண்டு அவளின் கை விரல்களை மெல்ல தொட முயன்றான்...
ஏதோ தீ பட்டார் போல வெடுக்கென்று கைவிரல்களை இழுத்துக் கொண்டாள் அவள்......!!
" ஒருவேளை கூச்சப்படுகிறாளோ அனைவரின் முன்பும் கையை பிடித்தற்காக",என்று எண்ணிக்கொண்டு புன்னகை புரிந்தான் மணமகன்.....
" நாழி ஆகிறது.. தாலியை கட்டுங்கோ.. கெட்டிமேளம்.. கெட்டி மேளம்... மாங்கல்யம் தந்துநானே....", என்று அவர் மந்திரங்களை உச்சரித்து விட்டு தாலியை எடுத்து அவன் கையில் கொடுக்க..
மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அதை வாங்கி அவளின் சங்கு கழுத்தில் கட்ட நினைத்தான்.....
தாலியை அவளின் கழுத்து அருகே கொண்டு வரவும், இறுக கண்களை மூடிக்கொண்டு குனிந்த வண்ணம் அமர்ந்து இருந்தாள் தேவசேனா...
" நிறுத்துங்க.. இந்த கல்யாணம் நடக்கவே கூடாது..", என்று கர்ஜித்த வண்ணம் அங்கு வந்து நின்றான் அந்த நெடியவன் ....!!
அவன் போட்ட கூச்சலில் மொத்த மண்டபமும் ஸ்தம்பித்து போக.. நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தவர்களும் வாசிப்பதை நிறுத்தி விட்டனர்...
நிச்சயித்த பெண்ணை மொத்தமாக தனக்கு சொந்தம் ஆக்கி மனைவியாக்கிக் கொள்ளும் ஆசையுடன் இருந்த கௌதமும்...
அவ்வளவுதான் , தன் வாழ்க்கையே முடிந்து விட்டது.. என்பது போல் கண்ணில் கண்ணீர் மல்க அமர்ந்திருந்த தேவசேனாவும்...
சுற்றமும் நட்பும் சூழ அவர்களை அச்சதை தூவி வாழ்த்த இருந்த சொந்த பந்தங்கள் நண்பர்கள்.. என அனைவரும் குரல் வந்த திசையை நோக்கி அதிர்ச்சியாக திரும்பிப் பார்க்க...
அங்கே கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் விக்ரம் சக்கரவர்த்தி !!
- தொடரும்.....
என் கதையை வாசித்து அனைவரும் மறக்காமல் கமெண்ட் செய்து உங்களின் ஆதரவை தெரிவியுங்கள்.. நன்றி!!

Author: praba novels
Article Title: அத்தியாயம் 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.