New member
- Joined
- Aug 17, 2025
- Messages
- 5
- Thread Author
- #1
டீசர்
"என்னடா இது கேபின் வெளிச்சமே இல்லாம டல்லா இருக்குதேன்னு பார்த்தேன். நம்ம மீரா மேடமோட சோக முகம் தான் அதுக்கான காரணமா?"
டேபிளின் மீது கைவைத்து, தலையை தாங்கிய படி அமர்திருந்த மீரா ஒரு முறைப்போடு,
"மரியாதையா போய்டு இல்லாட்டி கிரீன் வோட்ஸ் யூஸ் பண்ணிடுவேன்."
மீராவிற்கு அருகே அமர்ந்திருந்த அவளது தோழி நிஷா வாயை பொத்திக் கொண்டு சிரிக்க, பெண்களை இம்ப்ரெஸ் பண்ணுவது ஒன்றே தனது தலையாய கடமை என்று சுற்றிக் கொண்டிருக்கும் விமலுக்கு, கோபம் வந்தாலும் சூழ்நிலையை சமாளிக்க எண்ணி,
"என்ன மீரா சோகமா இருக்கீங்களே உங்களை சியர் பண்ணலாம்னு வந்தா இப்படி பேசறீங்களே? உங்க மூட் மாத்தலாம்னு தாங்க நான்..."
"அப்படியாங்க இத்தனை நாள் எனக்கு இது தெரியாம போயிடுச்சே, என் சந்தோஷம் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா?"
அவளது பதிலில் விமல் வாயெல்லாம் பல்லாக ,
"பின்ன இல்லயா மீரா, உன் சந்தோஷத்துக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். சொல்லு மீரா இப்ப நான் என்ன செய்யனும்?"
"இந்த வேலையை விட்டுட்டு போயிடு மகராசா."
விமல் அதிர்ந்து போய் நிற்க, மீரா தனது பேச்சை தொடர்ந்தாள்.
"அப்பவாச்சும் இந்த பில்டிங்ல இருக்கற லேடீஸ் எல்லாம் நிம்மதியா இருக்கட்டும், உன் வேலையை பார்த்துட்டு போடா என் வென்று. "
நிஷா சத்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டாள். விமல் சிவந்த முகத்தோடு அங்கிருந்து நகர்ந்து விட, கையில் இருந்த பைலைக் கொண்டு, நிஷாவை அடிக்கத் தொடங்கினாள் மீரா.
"நானே டென்ஷன்ல இருக்கேன் உனக்கு என்ன எருமே இளிப்பு வேண்டிக்கிடக்கு?"
"நம்ம கார்த்திக் சார்கிட்ட போய் லீவு கேட்க உனக்கு எதுக்குடி இவ்வளவு டென்ஷன்? அவர் எவ்வளவு ஸ்வீட் தெரியுமா? அவரோட அந்த ஸ்மைல் இருக்கே...ப்பா, அதை விட அவரு கண்ணு சிரிக்கும் பாரு, சும்மாவா அவரை எல்லாரும் கனவு நாயகன்னு சொல்றோம்."
கண்களில் கனவுகள் மின்ன சொல்லிக் கொண்டிருந்த நிஷாவின் தலையை, மீண்டும் ஒருமுறை தனது பைலினால் தட்டியவள்,
"அது என்னமோ உங்களுக்கெல்லாம் சாக்லேட் பாயா இருக்கிற மனுஷன், என்னை பார்த்தா மட்டும் வாத்தியா மாறி ரவுண்டு கட்ட ஆரம்பிச்சிடறாரு. "
"அதுக்கு மெயின் காரணமே நீ தான்."
"வாட்... என்னைப் பார்த்து...என்ன வார்த்தை சொல்லிட்ட? இந்த சூதுவாது தெரியாத பச்சக்குழந்தை மேல, இப்படி ஒரு பழியை தூக்கிப் போடறியே? என்ன கொடுமை சரவணன் இது?"
"ஆஹான் இந்த ஒண்ணும் தெரியாத பச்சை புள்ள ஒரு டைம் ஆபீஸ் பார்ட்டில, லாவண்யா மேடமுக்கு பண்ணிண சிறப்பான சம்பவம் நியாபகம் இருக்கா?"
" அது அது எதிர்பாராம நடந்தது, அந்த சீன் லாவண்யா தானா போய் ஏர் கூலர்கிட்ட நின்னு, கவுனை பறக்க விட்டு வித்தை காட்டினா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?"
"அப்படியா அப்ப கரெக்டா உன் போன்ல இருந்து, அழகிய லைலா பாட்டு ப்ளே ஆச்சே அது கூட தற்செயலா? அதோட மேடையை பார்த்து இருந்த கூலர் எப்படி என்ட்ரன்ஸை பார்த்து திரும்புச்சு?"
மீரா திருட்டு முழி முழிக்க,
"அது எதிர்பாராம நடந்த விஷயம் இல்லைன்னு கார்த்திக் சார் மாதிரியே எனக்கும் தெரியும். "
"எதே? ஓ... அது தான் அதுக்கு அடுத்து நடந்த கிளைண்ட் பார்ட்டில, அவரே வாண்டட்டா என்கிட்ட வந்து போன் சைலண்ட்ல தான் இருக்கான்னு கேட்டாறா? நான் எதார்த்தமான ஏன் சார் எதுவும் ப்ரே பண்ண போறமான்னு கேட்டு வைக்க, மனுஷன் வழக்கம் போல கத்திட்டு போனாரோ?"
" அடிப்பாவி அவர் உன்னை திட்டறதுக்கு முத காரணமே உன் வாய் தான், நீ உன் வாயை வெச்சுகிட்டு சும்மா இருந்தா பரவால்ல, அவருக்கு டென்ஷன் ஏத்துற மாதிரியே ஏதோ ஒன்னு பேசிடற, உடனே மனுஷன் கத்த ஆரம்பிச்சிடறாரு."
"என்கிட்ட உருப்படியா இருக்கிறதே அது ஒன்னு தான், அதுவும் இல்லாம நான் என்ன பண்றது? சும்மா நான் போய் பேசினாலே உர்ருனு முறைச்சுப் பார்ப்பாரு, இப்ப வேற முக்கியமான ப்ராஜெக்ட் வொர்க் போயிட்டு இருக்கு, இந்த டைம்ல போய் நான் லீவு கேட்டா மனுஷன் கடிச்சு கொதறி எடுத்துருவாரே?
லீவு கேட்டா வாத்தி கத்துவாரு, அதுக்கு பயந்து ஊருக்கு போகாட்டி என் அப்பத்தா கத்தும், இதுக்கு இடைல ப்ராஜெக்ட் வொர்க் வேற, அச்சோ... ஆண்டவா... ஒரு குட்டி இதயத்தை நோக்கி அடுத்தடுத்து இத்தனை தாக்குதலா?"

Author: ருத்ரனின் மீனாள்
Article Title: டீசர்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.