- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 8
" சாமி அவ கனவு கண்டு பதறுறத என் கண்ணால பார்த்திருக்கேன். அவ அந்த கனவுல இருந்து வெளிவந்ததும் செத்து பொழச்ச மாதிரி உணர்வா. ஆனா அது வெறும் கனவுனு மட்டும் தான் நெனச்சேன். என்னால அவளை அப்டி விட முடியாது. அவளை காப்பாத்த என்ன வழினு சொல்லுங்க " என்ற எழிலை பரிவாக பார்த்தவர் வழியை கூற முதலில் தயங்கியவன் பின் ஒரு முடிவோடு வெளியேற அவனிடம் நான்கு தாயத்தை குடுத்து விட்டார் முனிவர். அதை வாங்கி பாக்கெட்டில் போட்டு கொண்டவன் வெளியேறினான்.
" மச்சான் என்னடா சொன்னாரு முனிவரு " என்ற ஆரவை மேலும் கீழுமாக பார்த்த எழில் " ஹான் உனக்கும் தாய்க்கிழவிக்கும் கல்யாண தேதி குறிச்சி குடுத்துருக்காரு. மூடிட்டு வாடா. இருட்டறதுக்குள்ள காட்ட விட்டு வெளியேறனும் " என்றவன் முன்னால் செல்ல அவன் கூறிய வார்த்தையில் அரண்டு போய் சிலையாய் இருந்த ஆரவை பார்த்து கிண்டலாக சிரித்தான் கணபதி.
இம்முறை ஆத்மி கையை எழில் பிடிக்க அதிர்ந்து பார்த்தவளால் அவனின் முகத்தில் இருந்து எதையும் அறிய முடியவில்லை. அவளுக்கும் அதை விட மனமில்லை. நால்வரும் காருக்கு வர நன்றாக இருட்டி விட்டது.
ஆரவ்க்கோ பயம். எங்கு அந்த கொதறி தின்னும் கோதாவரி வந்து விடுமோ என. " மச்சி நாம திரும்ப ஹோட்டல்ல தங்கி காலைல போலாம்டா. நைட் டைம் இப்டி மலைல இருந்து கீழ இறங்குறது பாதுகாப்பு இல்ல " என்று ஆரவ் கூற அதிசயம் கணபதி கருத்தும் அதே தான்.
ஆனால் எழிலோ " இல்ல நமக்கு பொறுமையா இருக்க நேரம் இல்ல. இன்னும் நாம முடிக்க வேண்டியது நிறைய இருக்கு. இப்போவே கெளம்புனா விடியறதுக்குள்ள நம்ப ஊருக்கு போயிருலாம். எதும் பேசாம கார்ல ஏறுங்க " என்று எழில் உறுதியாக கூறவே மூவரும் ஏறி கொண்டனர்.
காரில் எறிய எழில் மூவருக்கும் அந்த தாயத்தை குடுத்து கையில் கட்ட சொல்ல ஆத்மீக்கு தானே கட்டியும் விட்டான் எழில்.
ஆரவ் இருந்த பயத்தில் அருணாகயிறை கொடுத்தாலே கட்டிருப்பான். இதுவோ தாயத்து சொல்லவா வேண்டும்.
இங்கு காமினி மட்டும் தனியாக ஆத்மி வீட்டில் தங்கி இருந்தாள். நல்ல வேளை இம்முறை பவானி எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் காமினிக்கு பாதுகாப்பாக இருந்தது.
காமினியும் சாப்பிட்டு முடித்தவள் ஆத்மிக்கு அழைத்து வரும் தகவலை கேட்டு விட்டு உறங்கி விட பவானி காமினி அருகிலே இருந்தது.
ஆனால் பவானிக்கு சிந்தனை எல்லாம் ஆத்மி மீது தான் இருந்தது. அவளுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் பவானி அறிவாள். அதற்கு ஒரு வழி கிடைத்திட வேண்டும் என அந்த தூய்மையான ஆத்மா மனதார வேண்டியது.
********* ********** ***********
பொதுவாக மலை மேல் இருப்பவர்கள் இரவு நேரத்தில் அடிவாரம் வர நினைக்க மாட்டார்கள். அதும் குறிப்பாக கொல்லிமலையில் வசிப்பவர்களுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்யங்கள் நன்றாக தெரியும்.
அது எதும் அறியாத எழில் காரை கிளப்பினான். ஒரு சில கார்கள் மட்டும் சீறி பாய்ந்து போனது. கணபதி ஆரவும் ஒருவர் மண்டை ஒருவர் முட்டுக்கொடுத்து உறங்கி விட. கொஞ்ச நேரத்தில் ஆத்மியும் சொக்கி எழில் மேல் சாய்ந்து விட்டாள்.
சிரித்தவன் அவளுக்கு வகையாக தோளை சாய்த்து கொண்டு மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தினான். அவன் அறியவில்லை அது ஆபத்தான இடம் என்று.
இருபக்கமும் ஓங்கி வளர்ந்த மரங்கள் கொண்ட காடுகள்.ஏதோ காரின் முன் விளக்கு வெளிச்சத்தில் தான் சாலையை பார்க்க முடிந்தது.அதும் இல்லை என்றால் எதிரில் இருப்பவர்களை பார்க்க கூட முடியாத. அந்த அளவிற்கு இருட்டு.
வண்டி குலுங்கியதில் முழித்து கொண்டவள் பதறி எழிலை விட்டு விலகினாள். அதை கண்டு நகைத்தவன் " தூங்க தோள் குடுத்தேன் இதுக்கு ஏன் இவ்ளோ பதட்டம் " என்றதில் மென்மையாய் சிரித்தவள்
" ஒரு வாரத்துல இவ்ளோ நெருக்கம் ஆகிட்டோம் " என்று ஆத்மி கூறியதை ஆமோதித்தவன்
" எனக்கும் அதிர்ச்சி தான். பட் உன்கூட பழகுறது பேசுறது புதுசா தெரியல. நாம இதுக்கு முன்னாடி எங்கையாவது மீட் பண்ணி பேசிருக்கோமா " என்று கேட்டதில் தடுமாறியவள்
" ஹான் இல்ல எழில். நா முதல் முதல்ல ஹாஸ்பிடல்ல தான் பார்த்தேன் " என்று உண்மையை மறைத்து பொய் கூற எழிலும் அவள் கூறியதை உண்மை என நம்பி விட்டான்.
இருவரும் பேசி கொண்டே போக திடீரென ஒரு அலறல் சத்தம். ஒரு ஆணும் பெண்ணும் கதறுவது போல் கேட்டது. எழில் வண்டியை நிறுத்த ஆத்மியோ மிரண்டு போய் இருந்தாள்.
ஆரவ்வும் கணபதியும் எழில் பிரேக் போட்டதில் முன்னால் மோதி தூக்கம் கலைந்தனர்.
" டேய் எதுக்குடா வண்டியை நிறுத்துன '' கணபதி தூக்கம் கலைந்த கடுப்பில் கேட்க எழில் வெளியே நோட்டமிட்டவாறு
" இல்ல மச்சி யாரோ அழற மாதிரி சத்தம் கேட்டுச்சு. அதான் " என்றதும் பதறி போன ஆரவ்
" அடேய் தாய்க்கிழவிக்கு சோறு போட்ட சாத்தானே. இப்போதான்டா நீ வேகமா போயிருக்கணும். இந்த எடத்துல எந்த பைத்தியம்டா அழுகும். தெய்வமே கெளம்புடா " அழாத குறையாக சொல்ல மீண்டும் கேட்டது அந்த அலறல் குரல்.
" காப்பாத்துங்க. எங்கள யாராச்சும் காப்பாத்துங்க. நாங்க மாட்டிக்கிட்டோம். தயவு செய்து எங்கள காப்பாத்துங்க " என்ற பெண் மற்றும் ஆணின் குரல்.
யாரோ விபத்தில் சிக்கி விட்டார்கள் என எழிலும் ஆத்மியும் காரை விட்டு இறங்க ஆரவும் கணபதியும் இன்ச் கூட நகர வில்லை.
நடுங்கிய ஆரவ் " மச்சி பேய் வந்தா அத விரட்ட எதாச்சும் மந்திரம் இருக்கா " என வெளியே பார்த்த படி கேட்க
" இருக்கு மச்சி. பேய் முன்னால வந்தா அப்பாலே போ சாத்தானேனு மூனு டைம் சொல்லு போகிரும் " என்ற கணபதியை கேவலமாக பார்த்த ஆரவ்
" டேய் இது என்ன டோரா புஜ்ஜில வர்ற குள்ளநரியா மூனு டைம் சொன்னதும் ஓடுறதுக்கு. போடா வெண்ணை " என்றவன் மீண்டும் வெளியே பார்வை விட கணபதியும் முறைத்து விட்டு திரும்பி கொண்டான்.
இங்கு எழிலும் ஆத்மியும் குரல் வந்த திசையில் பார்க்க அங்கு ஒரு கணவன் மனைவி தம்பதிகள் அடிப்பட்ட நிலையில் காரில் இருந்தனர் . கார் நன்றாக புதரில் சிக்கி கொண்டது.
எழில் ஆத்மி புறம் திரும்பியவன் " ஆத்மி உடனே அவனுங்கள இங்க வர சொல்லு. இவங்கள சீக்கிரம் காப்பாத்தணும் " என சொல்லி முடித்து திரும்ப அங்கு கார் இல்லை. ஆத்மிக்கு பயத்தில் இதயமே நின்று விட்டது போல் ஆக எழிலுக்கு ஏதோ ஒன்று எச்சரிக்கை தோன்ற, சரியாக ஆரவ் கணபதியின் அலறல் சத்தம் கேட்டு இருவரும் காரை நோக்கி சென்றவர்கள் அங்கு கண்ட காட்சியில் உறைந்து போனார்கள்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 8
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.