5.என்னருகே நீ வேண்டும்

New member
Joined
Aug 21, 2025
Messages
18
5. என்னருகே நீ வேண்டும்..

போன பகுதியில் :அதை கேட்ட அவளின் கண்கள் கலங்கியது. அதன்பின் இருவரும் கிளம்பி நிவி ஆபீஸ்க்கும் துவாரகா டிரஸ்ட் க்கு சென்றார்கள்.

இனி..

டிரஸ்ட்..

காலை 9 மணி என்பதால் அந்த ஆபீஸில் அவ்வளவாக பணிபுரியும் ஆட்கள் காணவில்லை இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். அவர்களை பார்த்த துவாரகா.

“சார் மேனேஜர் பாக்கணும்.”என்று சொன்னாள் துவாரகா.

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க மேடம் மேனேஜர் வந்துருவாரு. நீங்க அங்க வெயிட் பண்ணுங்க”என்று சொன்னான் அதில் ஒருவன்.

அதைக் கேட்டவள் அங்கு காத்திருக்கும் அறைக்கு சென்று காத்திருக்க தொடங்கினால் 15 நிமிடங்கள் சென்றது அந்த அலுவலகத்திற்கு அனைவரும் வர தொடங்கினார்கள்.. அப்பொழுது ஒருவர்.

“Madam சார் வந்துட்டாரு நீங்க போய் பாருங்க.”என்று சொல்லியவர்.

மேனேஜர் அறையை கை காண்பித்தார். அந்த அறையின் அருகே வந்தவள்.. கதவை இரண்டு முறை தட்டி.

“My coming sir.”என்று கேட்டாள் துவாரகா.

“Yes coming”என்று சொன்னார் மேனேஜர்.

அவர் அனுமதி வழங்கியவுடன் உள்ளே நுழைந்தவள்.

“Sir I am துவாரகா.”என்று சொன்னாள் துவாரகா.

“உக்காருங்க துவாரகா. உங்க அம்மாவுடைய மெடிக்கல் டாக்குமெண்ட் கொண்டு வந்து இருக்கீங்களா.”என்று கேட்டார் மேனேஜர்.

“எஸ் சார் எல்லாம் கொண்டு வந்து இருக்கேன் இந்தாங்க.”என்று சொன்னாள் துவாரகா..

அதை வாங்கி மொத்த டாக்குமெண்ட்டையும் பார்த்தவர்..

“ஓகே மா உங்க அம்மாவுடைய மெடிக்கல் டாக்குமெண்ட் எல்லாமே கரெக்ட்டா இருக்கு. சீக்கிரமா ட்ரீட்மென்ட் கானா ஏற்பாடு ஸ்டார்ட் பண்ணிடலாம்”என்று சொன்னார் மேனேஜர்.

“ஓகே சார் ஆனா.”என்று கேட்டாள் துவாரகா.

“எந்த டவுட்னாலும் ஓப்பனா கேளுங்க தயக்கம் வேண்டாம்.”என்று சொன்னார் மேனேஜர்.

“இல்ல ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்றீங்க கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கு மேல செலவாகும் என்று சொன்னாங்க.”என்று கேட்டாள் துவாரகா.

“உங்களுக்கு இதுல எந்த டவுட்டுமே வேண்டாம் உங்க அம்மாவுடைய முழு ட்ரீட்மென்ட் நாங்க பார்த்துப்போம் உங்களுக்கு மட்டும் இல்ல கஷ்டப்பட எல்லாருக்குமே எங்க டிரஸ்ட் உதவி பண்ணிக்கிட்டு தான் இருக்கு.. அதனால நீங்க ஏதோ நினைச்சோம் கவலைப்பட வேண்டாம் இன்னிக்கு உங்க அம்மா ட்ரீட்மென்ட் கானா ப்ரோஸ்ஸ்ஸ் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க ஒரு சில டாக்குமெண்ட் மட்டும் படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போட்டுருங்க.”என்று சொன்னார் மேனேஜர்.

சொல்லியவர் அவர் கையில் ஒரு டாக்குமென்டை கொடுக்க அதை வாங்கி முழுவதும் படித்தவனுக்கு அதில் எந்த குறையும் தெரியவில்லை.. அதனால் அதில் கையெழுத்து போட்டு கொடுத்தாள் துவாரகா..

“ஓகே மா ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் கிட்ட பேசிட்டு என்னைக்கு ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்றோம்னு இன்பார்ம் பண்றோம்.”என்று சொன்னார் மேனேஜர்.

“ரொம்ப தேங்க்யூ சார் உங்களால தான் என்னோட அம்மா எனக்கு மறுபடியும் திரும்பி கிடைக்கப் போறீங்க அதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப ரொம்ப தேங்க்யூ சார்.”என்று சொல்லியவள்.

அங்கு இருந்து விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தவள் இந்த சந்தோஷமான விஷயத்தை தன் தோழியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவள் உடனே தன் மொபைலை எடுத்து நிவிக்கு அழைத்தாள்.

“என்னடி போன காரியம் என்ன ஆச்சு ஏதாவது சொன்னார்களா.”என்று மிகவும் ஆர்வத்துடன் கேட்டால் நிவி.

“கொஞ்சம் அமைதியா இருடி ஏண்டி இப்படி பறக்குற போனை எடுத்தோன லைனா கேள்விகளை கேட்ட நான் எப்படி பதில் சொல்றது.”என்று கேட்டாள் துவாரகா.

“சரி சரி சொல்லு என்ன சொன்னாங்க.”என்றாள் நிவி.

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் கிட்ட பேசிட்டு ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க எப்படி இந்த ஒன் வீக் உள்ள ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் ஆயிடும் நினைக்கிறேன்.”என்று சொன்னாள் துவாரகா.

“ஏதுவா கேட்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. பல நாள் கனவு இன்னிக்கு தான் அழகா என்ன மாதிரி இருக்கு எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்குடி.”என்று சொன்னாள் நிவி.

“எனக்குமே ரொம்ப சந்தோஷமா தான் இருக்கு ஆனா இப்போ நம்மளால எதுவுமே பண்ண முடியாது எனக்கும் ஆபீஸ்க்கு டைம் ஆயிடுச்சு நீயும் ஆபீஸ்ல இருக்கேன் நம்ம ஈவினிங் நம்மளோட செலிப்ரேஷன் வச்சுக்கலாம் இப்ப நீ வேலைய பாரு நானும் ஆபீஸ் போறேன் எனக்கு இப்பதான் மெசேஜ் வந்தது புது பாஸ் வந்திருக்காருன்னு நானும் சீக்கிரம் போகணும் ஓகே டி பாய் ஈவினிங் பார்ப்போம்.”என்று சொன்னவள்.

ஃபோனை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள் துவாரகா.

ஆபீஸ்:

காலை 9:00 மணி..

அலுவலகம் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தாலும், அன்றைய தினம் காற்றில் வித்தியாசமான பதட்டம் கலந்திருந்தது. எங்கோ பக்கத்தில் விழும் காகிதத்தின் சத்தம் கூட அனைவரின் மனதையும் பதறச் செய்தது. அப்பொழுது சரியாக வாசலில் மூன்று கார்கள் வந்து நின்றது. அவ்வளவு நேரம் பதட்டமாக நின்று கொண்டிருந்த அமுதம் அந்தக் கார்களை பார்த்தவுடன் வேகமாக பூங்கொத்தை எடுத்துக்கொண்டு வேகமாக வந்து வாசலில் நின்றார் இவர் வந்து நிற்பதற்கும் காரில் இருந்து அவர்கள் இறங்குவதற்கும் சரியாக இருந்தது அமுதன் பின்பு அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களும் வந்து நின்றனர். அதுவும் அந்த விலை உயர்ந்த காரில் இருந்து இறங்கியவன் மெடுக்காகவே அவர்களைப் பார்த்தான்.

“Hi sir welcome to your office.”என்று சொன்னார் அமுதன்.

மரியாதை நிமித்தமாக தலையை மட்டும் ஆசைதான். அதன் பின்பு அனைவரும் வாழ்த்துக்களை சொல்ல தொடங்கினார்கள். ரேஷ்மி அசுரா இருவரும் ஒரு படி மேலே சென்று அவனை நெருங்கி அவனுக்கு கை கொடுத்தார்கள் ஹாய் என்பது போல். அவனும் ஹாய் என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான் அவர்களுக்கு கைகொடுக்காமல்.. அதில் இருவருக்கும் ஒரு மாதிரியாக ஆகி விட அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி சமாளித்துக் கொண்டனர் ஆனால் அவனும் கம்பீர நடை உடன் உள்ளே நுழைந்தவன் அந்த அலுவலகத்தில் மத்தியில் வந்து நின்று அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்..

“Hi guys நான்தான் உங்களோட new boss என்னோட பேரு போகன். எல்லாரும் என்ன பத்தி ஆல்ரெடி தெரியும். இதுவரைக்கும் இந்த ஆபீஸ் எப்படி இருந்ததோ அது எனக்கு தெரியாது இனி எப்படி இருக்கும் என்பதை நீங்க தெரிஞ்சுக்கோங்க.”என்று சொன்னான் போகன்.

இவன் சொல்லி ஏதும் அவன் அருகே வந்து ஒருவன் நின்றவன் பேச தொடங்கினான்.

“Hi ladies and gentleman. I am ஆபீர் நான் போகன் சார் PA.. எங்களோட மத்த ஆபீஸ் மாதிரி இந்த ஆபீஸுக்கும் சில ரூல்ஸ் வெச்சிருக்கோம் இனி அந்த rules and regulation படி இனி இந்த ஆபீஸ் மூவ் ஆகும்.அது மட்டும் இல்ல இப்போ இந்த பிசினஸ் ரொம்பவே லாஸ்ட்ல போயிட்டு இருக்கேன் உங்க எல்லாருக்குமே தெரியும் மறுபடியும் நல்ல நிலைமைக்கு வர வரைக்கும் யாருக்குமே லீவு பர்மிஷனும் கிடையவே கிடையாது இது தான் உங்களோட முதல் கண்டிஷன். ஆல்ரெடி உங்களுக்கே தெரியும் போகன் குரூப்ஸ் ஐடி ஃபீல்டுல தான் இருக்குன்னு அதே மாதிரி இந்த ஆபீஸையும் நாங்க ஐடி ஃபீல்டுக்கு மாத்தி இருக்கும் இனி ஷிப்ட்ல தான் நீங்க வொர்க் பண்ண போறீங்க. அந்த டீம் பத்தியும் ஒரு டீம் எத்தனை பேர் என்றதும் உங்களுக்கு சீக்கிரமா தெரியப்படுத்துவோம். இதுவரைக்கும் நீங்க யூஸ் பண்ண ஐடி கார்டு இனி நீங்க யூஸ் பண்ண கூடாது டு டேஸ்ல உங்களுக்கு ஐடி கார்டு கொடுப்போம் இதுக்கப்புறம் நீங்க ஆபீஸ்ல என்டர் ஆகணும்னா Palmistry பிக்ஸ் பண்ணனும் நீங்க உங்க டியூட்டி முடிச்சுட்டு போகும் போதும் இதே ரூல்ஸ் தான் இன்னும் சில ரூல்ஸ் இருக்கு அது என்னன்னு உங்களோட மெயிலுக்கு அனுப்பி இருக்கோம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.”என்று சொன்னான் ஆபீர்..

இவன் சொன்னதும் அனைவரிடமும் சலசலப்பு ஏற்பட்டது.

“Guys one minute நான் முழுசா சொல்லியே முடிக்கல அதுக்குள்ள இப்படி டென்ஷன் ஆனா எப்படி. நீங்க உங்களோட ஹார்ட்வொர்க்கை போடும்போது நாங்களும் உங்க ஒர்க்கு ஏத்த சேலரி கொடுக்கணும் இல்ல எல்லாருக்குமே சேலரி இன்கிரிமென்ட் இருக்கு அது கூட ஒரு கூட இன்கிரிமென்ட் இருக்கு நீங்க எவ்வளவு மறுபடியும் பிராஃபிட் கொண்டு வரீங்களோ அவ்வளவு சீக்கிரம் நீங்க உங்க ஒர்க் பிரஷர் ல இருந்து ரிலீஸ் ஆகலாம்.. அது மட்டும் இல்ல உங்களுக்கு ஒன் மந்த் சேலரி போனச எனக்கு ஈவினிங் கொள்ள உங்களோட அக்கவுண்டுக்கு வந்துடும் இந்த புட்டு உணர்ச்சியோட வொர்க்ல உங்களோட டேலண்ட் காட்டுவீங்கன்னு நாங்க நம்புறோம்.”என்று சொன்னான் ஆபீர்‌

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..
 

Author: Sanjana
Article Title: 5.என்னருகே நீ வேண்டும்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top