- Thread Author
- #1
12.. என்னருகே நீ வேண்டும்..
போன பகுதியில் : இப்படி இருவரும் தங்கள் வேதனை கொட்டி தீர்த்தனர் அதன் பின்பு பெரியவர்கள் யாரும் அந்த வீட்டில் இல்லாததால் அந்த தெருவில் இருக்கும் சில நல்ல உள்ளங்கள் அந்தப் பாட்டிக்கு செய்ய வேண்டிய ஈம சடங்குகள் அனைத்தையும் செய்து முடித்தனர்…
இனி..
அதன் பின்னர் பெண்கள் இருவரும் தனித்து நின்றனர் துளசி ஹாஸ்பிடலில் இருந்தார். இதுவரை இவர்கள் படிப்பையும் இவர்களுக்கு தேவையானதையும் பாட்டி தான் பார்த்து கொண்டார்.
“என் கா இதுவரைக்கும் அந்த அம்மா இருந்தது இந்த புள்ளைங்கள பாத்துட்டு இருந்தது இப்போ இந்த புள்ளைங்க நிலைமை என்ன ஆகிறது.”என்று கேட்டார்..
“நம்ம என்னடி பண்ண முடியும் நம்ப சம்பாதிக்கிறது வாய்க்கும் வயித்துக்கும் சரியா இருக்கு இதுல மத்தவங்கள பத்தி எங்க இருந்து கவலைப்படுவது இதுக்கு அப்புறம் அதுங்களா பொழச்சிக்கிட்டா தான் உண்டு.”என்று அங்கிருந்து சென்று விட்டார்.
அனைவரும் பாட்டி சடங்கை முடித்ததால் அங்கு இருந்து சென்றுவிட இப்பொழுது துவாரகா நிவி இருவர் மட்டுமே அங்கு இருந்தனர்.. இருவரும் பாட்டியின் புகைப்படத்தை பார்த்தபடி அப்படியே கண்களில் நீருடன் அமர்ந்திருந்தனர்.. நேரங்கள் ஓடி அன்றைய பொழுதும் மறைந்து மறுநாள் காலையும் விடிந்தது.. இருவருக்கும் ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது இப்படியே அமர்ந்திருந்தால் தாங்கள் அமர்ந்திருக்க வேண்டியது தான் தங்களுக்காக எதுவும் நிற்காது என்று புரிந்து கொண்டவர்கள்..
“துவா இப்படியே உட்கார்ந்துட்டு இருந்தா என்ன நடக்க போகுது நேத்து உட்கார்ந்தவங்க இப்போ வரைக்கும் நம்ம ஒக்காந்துட்டு தான் இருக்கோம் ஆனா பாரு நைட் என் நாள் முடிஞ்சு இன்னிக்கு நாளும் தொடங்கிடுச்சு நேத்து இந்த நேரம் எல்லாம் பார்ட்டி நம்ம கூட இருந்தாங்க ஆனா இப்போ இல்ல காலம் எவ்ளோ பொன்னானது என்று நமக்கு காமிச்சு கொடுக்குது இனி நம்பல நம்ப தான் பாத்துக்கணும்.”என்று சொன்னாள் நிவி..
“எனக்கு புரியுது டி ஆனா மனசுக்கு புரிய மாட்டேங்குது அம்மாவும் இல்லை இப்போ பாட்டியும் ஒரேடியா போய்ட்டாங்க அத நினைக்கும் போது என்னால எதையும் யோசிக்க முடியல.”என்று சொல்லி மீண்டும் அழுந்தால் துவாரகா.
எப்படியோ அவளை ஒரு வழியாக சமாதானம் செய்தவள் இன்னும் இரண்டு மாதத்தில் பப்ளிக் எக்ஸாம் இருப்பதால் பள்ளிக்கு செல்ல தொடங்கினார்கள் என்னதான் மன வேதனை மனதுக்குள் இருந்தாலும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மிகவும் கடினப்பட்டு பள்ளி படிப்பை முடித்தவர்கள் நல்ல மதிப்பெண்களை வாங்கி ஸ்காலர்ஷிப்பில் காலேஜ் சேர்ந்தார்கள் இருவரும்.. இருவருக்கும் மேக்ஸ் பிடிக்கும் என்பதால் இருவரும் அக்கவுண்ட்ஸ் குரூப் எடுத்தார்கள்.
காலேஜில் முதல் நாள்..
பெண்கள் இருவரும் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் கால் பதித்தனர். எப்பொழுதும் புதிதாக வரும் மாணவர்களிடம் சீனியர்கள் ராகிங் செய்வதுபோல் இன்றும் கல்லூரி தொடக்கத்தில் சீனியர்கள் ராகிங் செய்து கொண்டு இருந்தனர் வரும் ஒவ்வொரு தரையும். துவாரகா நிவி இருவரும் பேசிய படியே வர ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது.
“ஹாய் கேர்ள்ஸ் எங்க போறீங்க.”என்று கேட்டான் ஒருவன்.
“கிளாசுக்கு.”என்று சொன்னாள் நிவி..
“எல்லாரும் கிளாசுக்கு தான் போவாங்க ஆனா கிளாசுக்கு போறதுக்கு முன்னாடி சீனியர் இருக்கு விஷ் பண்ணனும்னு தெரியாதா.”என்று சொன்னான் இன்னொருவன்.
“நீங்க சீனியரா.”என்று கேட்டாள் துவாரகா.
“டேய் பார்த்தியாடா பாப்பா உடைய கேள்வியை நம்மள பார்த்தா சீனியரா தெரியலையாம்.”என்று சொன்னான் ஒருவன்.
“அப்போ எப்படி தெரியுது.”என்று கேட்டான் இன்னொருவன்.
“சொல்லுமா கேக்குறாங்க இல்ல எங்கள பார்த்தா சீனியர் தெரியாம எப்படி தெரியுது.”என்று கேட்டான் இன்னொருவன்..
“சாரிங்க உங்கள பாத்தா எங்களுக்கு சீனியர் மாதிரி தெரியல அதனால தான் அப்படி கேட்டுட்டேன் சாரி சீனியர் நாங்க இப்போ கிளாஸ்க்கு போலாமா.”என்று கேட்டாள் துவாரகா.
“என்ன கலாய்க்கிறீயா எங்கள பார்த்தா படிக்கிற பசங்க மாதிரி தெரியலையே என்ன இவ்வளவு திமிரா பதில் சொல்ற.”என்று கேட்டான் முதலில் பேசியவன்.
“அண்ணா அண்ணா அவ பேசினதுக்கு நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன் அவ தெரியாம பேசிட்டா எங்களை மன்னிச்சிடுங்க இனி உங்க கிட்ட இப்படி பேச மாட்டோம்.”என்று சொன்னாள் நிவி.
“நீ என்ன அவளுக்கு வாயா .. அவ பேசுனதுக்கு நீ சாரி கேக்குற ரெண்டு பெருக்கும் எங்கள பாத்தா எப்படி தெரியுது.”என்று கேட்டான் என்ன ஒருவன்.
“சரி நா நான் பேசுனது தப்புதான் எங்களை மன்னிச்சிடுங்க கிளாஸ்க்கு டைம் ஆகுது நாங்க போகலாமா.”என்று கேட்டாள் துவாரகா..
“ஏ பியூட்டிஸ் என்ன அண்ணா அண்ணன்னு மாத்தி மாத்தி கூப்பிட்டு இருக்கீங்க எங்களை அண்ணா எல்லாம் கூப்பிடக்கூடாது ஒன்லி சீனியர் வர பொண்ணுங்க எல்லாருமே அண்ணான்னு கூப்பிட்டா நாங்க என்ன பண்றது.. நீங்க எங்கள சீனியரா மதிக்காம போனதுக்கும் எங்களை எல்லாரையும் அண்ணன்னு கூப்பிட்டதுக்கோ உங்களுக்கு கண்டிப்பா பனிஷ்மென்ட் இருக்கு.. டேய் மச்சான் ஸ் இவங்க ரெண்டு பேருக்கும் என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம் சொல்லுங்க.”என்று கேட்டான்.
“டேய் மச்சி இவங்களுக்கு பனிஷ்மென்ட் சின்னதா தான் கொடுக்க கூடாதுடா பெருசா கொடுக்கணும் இனி நம்மளோட ப்ராஜெக்ட்ல இருந்து நோட்ஸ் வரைக்கும் இவங்க தான் பண்ணி தரணும்.”என்று சொன்னான் ஒருவன்.
“அது மட்டும் இல்ல மச்சி காலேஜ்ல இருக்கிற வரைக்கும் நமக்கு எல்லா வேலையும் இவங்க தான் செய்யணும்.”என்று சொன்னான் இன்னொருவன்.
இப்படி இவர்கள் பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இருவரும்.
“இது என்ன அநியாயமா இருக்கு உங்களோட ப்ராஜெக்ட் நோட்ஸ் எல்லாம் நாங்க எழுதி தரணுமா எங்களால எல்லாம் முடியாது நாங்களும் படிக்கணும் இல்ல நாங்க படிக்கிறதுக்கு தான் காலேஜ் வந்தோம் இந்த மாதிரி இன்னொருத்தர் ப்ராஜெக்ட்ட செஞ்சு கொடுக்கறதுக்கு இல்ல.”என்று சொன்னாள் துவாரகா.
அதில் கோபம் வந்து ஒருவன் துவாரகாவின் கையைப் பிடிக்க சென்றான். அவன் தன்னை தொட வருகிறான் என்று தெரிந்ததும் ஒரு அடி பின்னால் எடுத்து வைக்க சற்றென்று அவள் துப்பட்டாவை பிடித்து இழுத்தான். அந்த துப்பட்ட அவனின் கைகளுக்கு முழுதாக கூட சென்று இருக்கவில்லை அதற்குள் இன்னொரு கரம் அந்த துப்பட்டாவை வாங்கி அவனை கீழே தள்ளியது.. இது எல்லாம் நொடி பொழுது நடந்திருக்க பெண் அவளோ தன் மானத்தை காத்துக் கொள்ள நினைத்தவள் அப்படியே கீழ அமர்ந்திருக்க இது எதுவும் அவளுக்கு தெரியவில்லை..
“டேய் நீ எங்க வலிக்கு எப்ப பார்த்தாலும் வந்துகிட்டே இருக்க இது சரியில்லை.”என்று சொன்னான் ஒருவன்.
“இங்க பாருங்க நீங்க தப்பு பண்ணாம இருந்தா உங்க கிட்ட நான் வரப்போறது கிடையாது நீங்க பொண்ணுங்கள மட்டும் ரேகிங்க் பண்றீங்க போய் பசங்களை பண்ண வேண்டியதுதானே அது என்ன வர பொண்ணுங்கள மட்டும் ராகிங் பண்றது பொண்ணுங்க மேல கை வைக்கிறது இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் நீங்க இருக்கிற எவன் வீட்டிலும் அக்காவோ தங்கச்சியும் என் அம்மா கூட இல்ல இப்படித்தான் அவங்க மேல கை வைப்பீங்களா.”என்று கேட்டான் கோபமாக.
“போகன் என்ன பேசுற.”என்று இன்னொருவன் கொந்தளித்தான்.
“என்ன கோபம் வருதா அதே மாதிரி தான் இவங்களும் இன்னொரு வீட்டு பொண்ணு உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியாடா வெண்ணைங்களா இன்னொரு வாட்டி பொண்ணுங்கள கிண்டல் பண்ணாத நான் பார்த்தேன் மேனேஜ்மென்ட்ல சொல்லி இந்த காலேஜ் விட்டு உங்களை வெளியே அனுப்பிவிடுவேன் பார்த்துக்கோங்க.”என்று சொன்னான் போகன்.
“எங்களையே மிரட்டுரியா ஒரு நாள் இருக்குடா உனக்கு அப்போ நாங்க யாருன்னு காட்டுறோம்.”என்று சொன்னவர்கள்..
அங்கிருந்து சென்று விட்டார்கள் கோபத்துடன் துவாரகா நிவி இருவரையும் முறைத்துக் கொண்டு சென்றார்கள். இங்கு இவ்வளவு நடந்து கொண்டிருக்க ஆனால் துவாரகாவோ கீழே அமர்ந்தவள் தான் கொஞ்சம் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.. நிவி எவ்வளவோ அவளை அழைத்துப் பார்த்தால் அவள் கொஞ்சமும் எழுந்திருக்கவில்லை அப்படியே அமர்ந்தவள் அமர்ந்தவள் தான் அவர்களிடம் பேசி விட்டு திரும்பிய போகன் அவள் அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் அவளுக்கு சரிசமமாக அமர்ந்தவன்.
“இந்தாங்க உங்களோட ஷால் அவங்க போயிட்டாங்க.”என்று சொன்னான் போகன்.
அப்பவும் அவளிடத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை அதைப் பார்த்தவன்..
“இதுக்கே இப்படி பயந்தா எப்படிங்க இந்த காலேஜ்ல மூணு வருஷம் படிப்பிங்க. ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க இது அட்வைஸ் எடுத்துக்கிட்டாலும் பரவால்ல யாராவது உங்களை ராகிங் பண்ணா எதிர்த்து பேச கத்துக்கோங்க அப்படி பேசினா மட்டும்தான் சர்வே பண்ண முடியும் இப்படி பயந்தா இன்னும் அவங்க அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு வேற ஏதாவது பண்ணுவாங்க பிடிங்க உங்களோட ஷால் கிளாஸ்க்கு டைம் ஆகுது சீக்கிரம் போங்க.”என்று சொன்னான் போகன்..
ஆனாலும் அவள் நிமிர்ந்து கூட பார்க்காமல் தன் ஆடையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தால்.. அப்பொழுதுதான் போகன் ஒன்று கவனித்தான் அவள் கை வைத்திருக்கும் விதத்தில் ஆடை கிழிந்திருப்பது.. உடனே தன் சட்டை கழுவியவன் அவள் மீது போற்றியவன் நிமிர்ந்து நிவியை பார்த்தான் நிதியை பார்த்தவுடன் தான் அவன் கண்கள் அகல விரிந்தது இதுவரை முகத்தையும் அவன் சரியாக பார்க்கவில்லை யாரோ இரண்டு பெண்களிடம் அவர்கள் ராகிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் தான் நினைத்தான் ஆனால் இப்பொழுது நிவியின் முகத்தை பார்த்தவுடன் தான் அமர்ந்திருப்பது யார் என்று புரிய.. அவன் முகத்தில் ஒரு சிறு புன்னகை மனதில் சொல்ல முடியாத ஆனந்தம் இருந்தாலும் அவள் நிலையை கண்டவுடன் இவ்வளவு நேரம் இருந்த கோபத்தை விட இப்பொழுது இன்னும் கூடியது அதில் அவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது ஆனால் அதற்கான நேரம் இது இல்லை என்று எண்ணியவன் தன் போனை எடுத்து தனது டிபார்ட்மெண்டில் இருந்து ஒரு பெண்ணை அழைத்தான் அந்த பெண்ணும் அங்கு வர..
“என்ன போகா கிளாஸ் ஸ்டார்ட் ஆகிற டைம் இங்க கூப்பிட்டு இருக்க.”என்று கேட்டால் அந்தப் பெண்.
“இல்லப்பா இவங்க டிரஸ் தெளிஞ்சிடுச்சு நான் போய் ஏதாவது டிரஸ் உடனே வாங்கிட்டு வரேன் இவங்கள லேடிஸ் பாத்ரூமுக்கு கூட்டிட்டு போ.”என்று சொன்னான் போகன்.
அந்தப் பெண்ணும் சரி என்பது போல் சொல்லியவள் அவர்கள் இருவரையும் லேடிஸ் பாத்ரூமுக்கு கொண்டு வந்து விட்டுவிட்டு அவனின் சட்டையை வாங்கிக் கொண்டு மீண்டும் போகனிடம் கொடுத்தாள் அதை வாங்கி போட்டுக் கொண்டவன் அடுத்த நிமிடம் அங்கு நிற்காமல் வேகமாக அருகில் இருக்கும் ஒரு கடைக்கு சென்றவன் ஒரு ஆடையை வாங்கிக் கொண்டு மீண்டும் வேகமாக காலேஜ் வந்தவன் தன் தோழியை அழைத்து அந்த ஆடையை கொடுத்தான். அடுத்த சிறிது நேரத்தில் துவாரகா ஆடையை மாற்றிக் கொண்டு வந்தால் ஆனால் முன்பு எப்படி யாரிடமும் பேசாமல் இருந்தாலோ அதே போல் தான் இப்பொழுதும் இருந்தால் துவாரகா.
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..

Author: Sanjana
Article Title: 12.. என்னருகே நீ வேண்டும்..
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.