10.. என்னருகே நீ வேண்டும்..

New member
Joined
Aug 21, 2025
Messages
18
10.. என்னருகே நீ வேண்டும்..

போன பகுதியில் :அவள் சிரித்தபடி விளையாடிக் கொண்டிருந்த அவள் முகம் வாடியது சரியாக அந்த சமயம் தான் துளசியும் கடைக்கு சென்று விட்டு வந்தார்.

இனி..

வந்தவர் வாசலிலே இருவர் அமர்ந்திருப்பது பார்த்தவுடன் மிகவும் சந்தோஷத்துடன்..

“வாங்க அக்கா எப்ப வந்தீங்க.”என்று இன்முகத்தோடு வரவேற்றார் துளசி.

“இப்பதான் கொஞ்ச நேரம் தான் ஆகுது.”என்று சொன்னார் ஒருவர்.

ஆனால் இன்னொருவரோ துளசி கையில் இருக்கும் பகுதிகளை பார்த்தவுடன்..

“என்ன துளசி கைல நல்லா வெயிட்டா புடிச்சிட்டு வந்திருக்க.”என்று கேட்டார் இன்னொருவர்.

“அவ்ளோ வெயிட்டா எதுவும் இல்ல அக்கா துவாக்கு ஸ்னாக்ஸ் தான் வாங்கிட்டு வந்தேன் அப்படியே வீட்டுக்கு கொஞ்சம் காய்கறியும்.”என்று சொன்னார் துளசி.

“ஓ ஸ்நாக்ஸ் இவ்வளவா சரிதான்.”என்று சொன்னார் ஒருவர்.

“சரி என் வாசல்ல நிக்கிறீங்க உள்ள வாங்க.”என்று அழைத்த துளசி.

அவர்கள் இருவருக்கும் காபி போட்டு கொடுத்தேன் அந்த இருவரும் காஃபியை கையில் வாங்கியவர்கள் வீட்டை ஒரு பார்வை பார்த்தார்கள் வீடு மிகவும் நீட்டாக நேர்த்தியாக இருந்தது அதை பார்த்தவுடன் இருவரும் ஒருவர் ஒருவர் பார்த்துக் கொண்டு கண்களிலே பேசிக்கொண்டனர்.

“சரி துளசி நானும் வேலைக்கு போறேன் உங்க மாமாவ வேலைக்கு போறாரு எங்க ரெண்டு பேரால குடும்பத்தை நடத்தவே முடியல எப்படி இருந்தாலும் பணத்தை இருக்க ஆனா நீ ஒருத்திய எப்படி இப்படி எல்லாமே சமாளிக்கிற.”என்று கேட்டார் ஒருவர்.

“என்னக்கா இப்படி கேட்டுட்ட அதான் அக்கம் பக்கத்துல எல்லாரும் பேசிக்கிறாங்க துளசி பெயருக்கு தான் தனியா இருக்கேன் ஆனா இன்னொரு துணை அவளுக்கு மறைவாக இருக்கிறது ன்னு.”என்று சொன்னார் இன்னொருவர்.

அதைக் கேட்டவுடன் துளசிக்கு கோபம் வந்துவிட்டது..

“அக்கா என்ன பேசுறீங்க யாரும் ஏதோ சொன்னார்கள் என்று சொல்லி என்னை இப்படி பேசுறீங்க நான் எப்படின்னு உங்களுக்கு தெரியாதா அவர் போன இத்தனை வருஷத்துல என் பொண்ண நான் தான் பாத்துக்குறேன் அம்மா அண்ணன் அக்கா தங்கச்சி யாருமே இருந்து கூட என்ன பாக்கலையே என் குழந்தை கஷ்டப்படக்கூடாதுன்னு யாத்திரையும் பகலா எந்த வேலை கிடைச்சாலும் நான் பார்த்து என் பொண்ணு சந்தோஷமா வச்சுக்கறேன் அப்படி இருக்கும்போது இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா இல்லையா.”என்று கோபமாக கேட்டார் துளசி.

இப்படி இவர் பேசியதும் அங்க இருவருக்கும் கோபம் வந்தது..

“என்ன துளசி இப்படி பேசுற நெருப்பு இல்லாமல் புகையுமா அக்கம் பக்கம் இல்லாமையா பேசிடுவாங்க யாரும் இல்லாதத பேச மாட்டாங்க அது உனக்கே தெரியும் இல்ல கத்திரிக்காய் முத்தனா கடை தெரு வந்ததான ஆகும் அதே போல தான் உன்னோட விஷயம் நாலு பேருக்கு தெரிஞ்சவன எல்லாருக்கும் தெரிய தொடங்கிடுச்சு அதுக்கு போய் இப்படி கோபப்படுறியே எந்த தப்பும் பண்ணாத மாதிரி இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் நானும் என் புருஷனும் நல்லா தான் சம்பாதிக்கிறோம் ஆனால் எங்களால இப்படி இருக்க முடியல ஆனா நீ எப்படி பொறுத்து சம்பாரிச்சு இருக்கிற அதுவோ நீ ஒருத்தி தான் சம்பாதிச்சு உங்கள பாத்துக்கிறேன்னு நீ சொல்றத நான் நம்பணுமா இத்தனைக்கும் நீ வச்சிருக்கது பெண் குழந்தை நாங்க பையன வச்சுக்கிட்டு அவ்வளவு செலவு பண்றோம்.. இனி உன்ன மாதிரி ஒருத்தி கூட பேசி பழகலாம் எங்களோட புருஷனும் எங்களை தப்பா தான் நினைப்பாங்க இனி உன்ன மாதிரி ஆள் கூட எல்லாம் பேசி பழக கூடாது உண்மைய சொன்னா இவ்ளோ கோவம் வருது உனக்கு வாக்கா போலாம் இங்க இருந்து.”என்று சொன்னவர்.

அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவர்கள் இருவரும் சென்றவுடன் அதுவரை திடமாக நின்று கொண்டிருந்த துளசி உடைந்து அப்படியே அமர்ந்து விட்டார் அவர் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது அதுவரை ஓரமாக நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த துவாரகா வேகமாக ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டால்.. இவள் ஓடி வந்து அனைத்தும் இன்னும் அவருக்கு அழுகை தாங்க முடியவில்லை மனவேதனை தாங்க முடியாமல் அவர் அழுது கொண்டே இருக்க..

“அம்மா ஏம்மா அழுவுறீங்க அவங்க உங்களை தப்பா பேச நாங்களே அதனாலயா.”என்று கேட்டாள் துவாரகா..

துவாரகாவின் வார்த்தைகளை கேட்டவுடன் இன்னும் மனம் வேதனையாக இருந்தது அதை கண்ணீர் என்ன பேகம் எடுக்க..

“ஏம்மா இன்னும் அழுதுட்டே இருக்கீங்க எதுக்கு அப்பா நம்மள விட்டுட்டு போனாரு நானும் எத்தனையோ வாடி உங்ககிட்ட கேட்கிறேன் நீங்கள் அதுக்கு பதில் சொல்லவே மாட்டேங்கிறீங்களே.”என்று கேட்டாள் துவாரகா.

அவள் எட்டு வயது சிறுமி என்றாலும் அவள் கேட்பது சரி என்று அவள் அன்னைக்கு தோன்ற ஆனால் என்ன பதில் சொல்வது என்று அவருக்கு தெரியவில்லை.. சிறிது நேரம் அவளை கட்டிப்பிடித்து அழுதவர்.

“துவா நீ போய் விளையாடு அம்மா பீல் பண்ணல டா சரக்கு போயிட்டு வந்தேன் இல்ல அதான் அம்மாக்கு கால் வலிக்குது வேற ஒன்னும் இல்ல நீ போ.”என்று சொன்னார் துளசி.

“அம்மா நீங்க பொய் சொல்றீங்க அவங்க பேசினதுக்கு தானே அலறீங்க.”என்று கேட்டாய் துவாரகா.

“இல்லடா உனக்கே தெரியும் இல்ல அம்மா நடந்து தான் கடைக்கு போயிட்டு வருவேன்னு அதனாலதான் இப்போ விளையாடு.”என்று அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் துளசி.

அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தது துளசி வேகமாக வந்தவர் எதிரில் இருக்கும் அறைக்குள் நுழைந்தவர் அவையின் கதவை சாத்தி விட்டு கபோர்டு திறந்து ஒரு போட்டோவை கையில் எடுத்தவர் அதை பார்த்து மீண்டும் கண்ணீர் விட தொடங்கினார்.

“எங்க எங்க போனீங்க நீ எதுவும் கவலைப்படாத வந்ததான சொல்லிட்டு போனீங்களே நீங்க வருவீங்கன்னு என்னை வரைக்கும் நம்பிகிட்டு இருக்கேன் இதுக்கப்புறம் என்னோட நம்பிக்கைய நான் கைவிட மாட்டேன்.. இத்தனை நாள் எனக்கு பின்னாடி தான் வேணும் தப்பு தப்பா பேசிட்டு இருந்தாங்க ஆனா இப்போ என் மூஞ்சிக்கு மேலாக பேசு தொடங்கிட்டாங்க அதைப்பற்றி நான் கவலப்படல ஆனா நம்ப துவா இந்த மாதிரி பேசுறாங்க என்னால அதுதான் தாண்டி இருக்க முடியல அவங்க வார்த்தைகளை கேட்கும் போது என்னையும் அறியாம என் மனசு உடைஞ்சு போகுது நான் வேதனை படுறத நம்ம பொண்ணு பார்த்து அவளும் வேதனை படுற.”என்று சொன்னவர்.

அந்த போட்டோவை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தன் வேதனை சேரும் அளவிற்கு அழுது கரைந்தார்.. அந்த இருவரிடமும் துளசி கோபமாக பேசியதால் அவர்கள் இருவரும் சொந்த பந்தங்களிடம் துளசி பற்றி தவறாக பேச தொடங்கினார்கள் இவர்களின் பேச்சு காட்டு தீயை விட வேகமாக பரவி துளசியின் நற்பெயர் கெட தொடங்கியது.. இதுவரை அக்கம் பக்கம் என்று பேசிக்கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது சொந்த பந்தங்களும் பேச தொடங்கியது அதற்கும் மேலே சென்று சில ஆண்கள் இரவில் வீட்டின் கதவை தட்டுவது என்று பல தொல்லைகள் அவருக்கு வந்தது ஏன் சொந்த பந்தங்கள் தான் தவறாக பேசுகிறது என்று பார்த்தால் கூட பிறந்தவர்களே பேச தொடங்கினார்கள்.. இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது அப்படி ஒரு நாள்.. துளசியின் அண்ணன் இவர்களின் வீட்டிற்கு வந்தார்.. இவர் காதல் திருமணம் செய்து கொண்டதிலிருந்து இவர்கள் வீட்டில் இருப்பவர்கள் இவர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்கள் என் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்திருந்தவர்கள் இப்பொழுது தன்னை தேடி வந்தது அதை பார்த்தவுடன் மிகவும் சந்தோஷப்பட்ட துளசி.

“அண்ணா வாங்க அண்ணா ஏன் வெளியவே நிக்கிறீங்க.”என்று தன் அண்ணனை பார்த்தவுடன் சந்தோஷமாக உள்ளே அழைத்தார் துளசி.

ஆனால் அவரோ வாசலில் இருந்தபடி.

“உன்கிட்ட நான் எல்லாம் விசாரிச்சு உங்க வீட்ல விருந்து சாப்பிட உன்னைய நான் வரல உன்னால எங்க வீட்டு மானம் மரியாதை தான் போது. நிலா ஏண்டி உயிரோட இருக்குற என் கூட பொறந்தவனு சொல்லிக்கிறதுக்கே அசிங்கமா இருக்கு பொண்ண பெத்து வச்சுக்கிட்டு இப்படி எல்லாம் நடந்துக்குவியே உனக்கு அசிங்கமா இல்லையா புருஷன் போனா உன்னால உழைச்சு சாப்பிட முடியாதா இந்த மாதிரி ஒவ்வொருத்தனா பார்த்து தான் சம்பாதிப்பியா.”என்று என்று கேட்டார் அவரின் அண்ணன்.

அது மட்டுமல்ல இன்னும் கொச்சை கொச்சையாக பேசினார் அதை மனம் தாங்க முடியாமல் அப்படியே உடைந்து போய் வாசலிலே அமர்ந்துவிட்ட தன் அம்மாவை பேசியதை அனைத்தையும் கேட்டேன் இந்த துவாரகாக்கு கண்கள் கலங்கியது.. அவரோ தன்னால் எவ்வளவு வார்த்தைகளை நரம்பில்லா நாக்கின் மூலம் சொல்ல முடியுமோ சொல்லிவிட்டு கடைசியாக..

“நீ இப்போ இருக்கிற மாதிரி தான் நாளைக்கு உன் பொண்ணு இருப்ப அதனால நீங்க ரெண்டு பேருமே சாகிறது தான் எங்களுக்கு நல்லது அப்பதான் நாங்க அசிங்கப்படாம இருப்போம். எனக்கு தெரிஞ்சு நீ எவன் கூட நான் இருக்கறதை பார்த்துட்டு தான் உன் புருஷன் உன்னை விட்டுட்டு போயிருப்பான்னு நினைக்கிறேன் அதுக்கு நீங்க ரெண்டு பேரும் ஒரேடியா போயிடுங்க.”என்று சொன்னவர் அங்கிருந்து சென்றுவிட்டார்..

அவர் சென்ற பின்பும் அதே வார்த்தைகள் அவர் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க. இதனால் வரை யார் யாரோ பேசினார்கள் என்று தன் கூட பிறந்தவன் பேசியதும் முழுவதும் அவருக்கு மனம் உடைந்து விட தட்டு தடுமாறி உள்ளே சென்றவர்.. அப்படியே மயங்கி சரிந்த அன்று சரிந்தவர் தான் இன்றுவரை எழுந்திருக்கவே இல்லை..

இனி என்ன நடக்கும் என்று
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..

இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..
 

Author: Sanjana
Article Title: 10.. என்னருகே நீ வேண்டும்..
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top