New member
- Joined
- Aug 19, 2025
- Messages
- 8
- Thread Author
- #1
ஒரு வாரம் கழித்து...
தன் முன் மருத்துவர் உடையில் வந்தமர்ந்திருந்த மூன்று நண்பர்களையும் தான் உற்று பார்த்திருந்தான் ஆதிஷ்.
இது உதகையில் இருந்து திரும்பி வந்ததில் இருந்து அன்றாடம் நடக்கும் கூற்று தான். அவர்கள் உணவு வேளையில், ஃப்ரீ டைமில் என இவனை தேடி வருவதும், இவன் அவர்களை புறக்கணிப்பதுமாய் தான் போய் கொண்டிருக்கிறது.
"சொல்லுங்க டாக்டர் மனோஜ், டாக்டர் வினோத், டாக்டர் லாவண்யா. என்ன விஷயம்?" கேட்டவனை கண்டு நொந்து போனான் மனோஜ்.
"இதோ பாரு நமக்குள்ள எதுக்கு இந்த கேப். வீ ஆர் ஃபிரண்ட்ஸ் ஃபிரம் சைல்டு ஹூட். அந்த பொண்ணு மேட்டர் தான் முடிஞ்சு போச்சே. அப்புறமும் ஏன் இப்படி பிஹேவ் பண்ற!" என சமாதானம் ஆற்ற முயன்று கொண்டிருந்தான் மனோஜ்.
"அதானே!" என்றான் வினோத்.
ஆனால் இவர்கள் யாரிடம் பேசிக் கொண்டுள்ளனரோ அந்த ஆதிஷ் பார்வை என்னவோ வாய் திறவாத தோழி லாவண்யாவிடம் தான் பதிந்திருந்தது.
அவள், 'நீ தான் முக்கியம் நண்பா. அந்த பெண் முல்லையை பற்றிய பேச்சை எடுப்பதென்ன நினைக்க கூட மாட்டேன். அவளை ஒரு போதும் சென்று சந்திக்க மாட்டேன். அவளுக்கு உதவ மாட்டேன்!' என கூற வேண்டும் இவனுக்கு.
"நீ தான் வாயை திறயேன்டி!" என அவள் தோளை இடித்தான் மனோஜ்.
"நான் வாயை திறந்தா அவன் எதிர்பார்க்கிறதை சொல்லணும். அதை என்னால சொல்ல முடியாது. அதனால வாயவும் திறக்க முடியாது!" என்றாள் அவள்.
"சுத்தம்! இவ கேர்ள்ஸ் யார்க்கூடயாவது பேசினாலே இவனுக்கு பிடிக்காது. பொசசிவ் ஆகிடுவான். பொண்ணுக்கு பொண்ணு ஃபிரண்டா கிடைச்சுட்டா என்னை மறந்திடுவான்னு அந்த ஃபிரண்ட்ஷிப்பை பிரேக் அப் பண்ற வரை மூஞ்சை தூக்கிட்டே திரியுவான். இதுல இவன் தப்பி தவறி தாலி கட்டின பொண்ணை அவனே விட்டும், இவ விடுவனாங்குறா..." என்றான் மனோஜ்.
"எம்மா அது உன் பொறுப்பு இல்லை. இவனே தேவை இல்லைனுட்டான். நீ ஏன் தூக்கி சுமக்குற?" என கேட்டான் வினோத்.
"ஓவரா பேசாதீங்க. அன்னிக்கு எப்படி இவன் அவளை ஒரு மனிதாபிமானத்துல காப்பாத்தினானோ, நானும் அதே போல ஒரு பாசத்துல அவளை பாத்துக்கிறேன் அவ்ளோ தான்!" என்றாள் லாவண்யா.
"பார்க்குறீல்ல... அதுவும் பாசமா வேற பார்க்குறில்ல!"
"அதே போல பாசமா என்னை கொஞ்சமாவது பாக்குறியா நீ?"
"அவ வந்ததுக்கு அப்புறமா உனக்கு நான் வேண்டாதவனாகிட்டேன்ல!"
"அப்படி என்னடி உனக்கு சொக்குப்பொடி போட்டுட்டா அவ?"
"பாதிக்கப்பட்ட என்னைவிட என்னை பாதிச்ச அவ முக்கியமா போயிட்டா!"
"பல வருஷ ஃபிரண்ட் என்னை விட நேத்து வந்த அவ முக்கியமா போயிட்டா..." ஆதிஷ் தன் ஆதங்கத்தை கொட்டினான்.
"அட யார்றா இவன் பாதிக்கப்பட்டேன் பாதிக்கப்பட்டேன்னு எங்களை சோதிக்கிறான்!" என்றான் மனோஜ்.
"ஏன் பேச மாட்ட. நடந்தது எனக்கில்ல!" என்றான் ஆதிஷ்.
"கல்யாணம் தானே மச்சான். வேற ஒன்னும் இல்லையே!" என்ற வினோத் தலையை ஆதிஷ் கையில் இருந்து பறந்து வந்த பேப்பர் வெயிட் பதம் பாராது போனதே பெரிய விடயம் தான்.
"இப்படி தான் டா அன்னிக்கு அந்த கூட்டமும் நான் என்னவோ காஜி முத்தி போய் அவ மேல கையை வச்ச போல பேசுச்சி. இத்தனை வருஷம் கற்போட இருந்து என் மானம் போனது தான் மிச்சம். எல்லாம் அந்த கல்லூளிமங்கியால. அவங்க பேசும் போதுக்கூட அமைதியா தானே நின்னா!" என்றான் ஆதிஷ்.
"அத்தனை பேர் சுத்தி வளைக்கவும் நீயே ஒன்னும் பண்ண முடியலை. அவளால என்ன பண்ண முடியும்?" என கேட்டாள் லாவண்யா.
"அதுவும் சரி தானேடா!" என்றான் மனோஜ்.
தன் தலை தப்பியதே போதுமென வினோத் வாயை மூடி அமர்ந்திருந்தான்.
"நீ பேசின பேச்சுக்கு தாலியவும் கழட்டி தந்துட்டா. கார்ல இருந்து குதிக்கவும் போயிட்டா. இன்னும் என்ன தான் பண்ணனுங்கிற?" லாவண்யா கேள்விக்கு ஆதிஷ் பதில் கூறவில்லை.
"சின்ன பொண்ணு அவ. நாம இந்த இடத்துல அவளை ரெஸ்கியூ செய்து வந்த போல தான். அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைச்சு தரலாம்!" என்றான் மனோஜ்.
ஆதிஷ் கண்களை மூடி சுழற் நாற்காலியில் அறை வட்டம் அடித்தபடி சுழன்று கொண்டிருந்தான்.
"சோ அவளை செட்டில் பண்ணிட்டா நாம எல்லாம் அந்த தலைவலியை மறந்துட்டு நிம்மதியா வாழலாம் இல்லையா?" விழி திறக்காமலே அவன் கேட்ட போது, "யெஸ்!" என்றான் மனோஜ்.
"நீ சொல்ற. ஆனால் உன் பக்கத்துல இருக்க அம்மணி ஒன்னும் வாயை திறக்கிற போல இல்லையே!" விழி திறந்தவன் லாவண்யாவை பார்த்து கேட்ட போது அவளோ அவனை கண்டு பெருமூச்சு விட்டாள்.
"என்னடாப்பா வேணும் உனக்கு? முல்லையை எதாவது ஹாஸ்டல்ல சேர்த்து தங்க வைக்க தான் நானும் பார்த்துட்டு இருக்கேன். ஆனால் அவளுக்கு காலேஜ் அட்மிஷன் கிடைக்க வேண்டி இருக்கு. அவ கொஞ்சம் வெளிய பழக வேண்டி இருக்கு!" என்றாள் லாவண்யா.
"அவளுக்கு பேபி சிட்டிங் பண்ண தான் நீ இருக்கியா? காலேஜ் சீட், ஹாஸ்டலுக்குனு நானே பணம் தரேன். கொண்டு போய் சேர்த்து விடு. அதோட அவளையும் விட்டுடு. கத்துட்டு எப்படியாவது வாழட்டும். சும்மா ஒன்னு ஒன்னுக்கும் பாவம் பாத்துட்டு!" என்றான் ஆதிஷ் வெறுப்பாக.
லாவண்யா ஏதோ பேச வாயெடுக்க.
"சரினு சொல்லு. சரினு சொல்லு..." என அவளுக்கு இரு புறமிருந்தும் மனோஜூம், வினோத்தும் அவளை உந்தி தள்ளினர்.
அவளும், "சரிடா. இன்னும் ஒன் வீக் மட்டும் டைம் குடு. நான் அவளை சேர்த்து விட்டு, செட்டில் பண்ணிட்டு ரிலாக்ஸ் ஆகிடுறேன். போதுமா?" என கேட்டாள்.
"ம்ம்... ம்ம்..." என்றான் ஆதிஷ்.
"அதான் கொண்டு போய் விடுறேன்னு சொல்லிட்டேன்ல. அப்புறம் என்ன?" அவள் கேளவும், "தெரியலை. ஒரு மாதிரி அவளை பத்தி நினைச்சா பேசினாலே ஆத்திரம் ஆத்திரமா வருது. ஐ கான்ட் கன்ட்ரோல் மை செல்ஃப்!" என்றான் அவன்.
"சரி மச்சான். பாதிக்கப்பட்டிருக்க. உனக்கும் மறக்க அவகாசம் வேணும். அதனால டேக் யுவர் டைம். நாங்க வர்றோம்..." என ஊருக்கு முன் நல்லவனாக புறப்பட்டான் வினோத்.
"டேய் நல்லவனே. அவ்ளோ அவசரமா எங்க போற? உன்கிட்ட தான் முக்கியமான ஒரு பொறுப்பை ஒப்படைக்க போறேன் நில்லு!" ஆதிஷ் குரலில், "என்ன பொறுப்பு?" என திரும்பினான் வினோத்.
"அதுவா என்ன தான் இருந்தாலும் நாம போனது உன் கெஸ்ட் ஹவுஸ். அவங்க எல்லாம் உனக்கு தெரிஞ்சவங்க. நாளை பின்ன நீயோ, உன் ஃபேமிலியோ அங்க எப்படி தலை காட்டுவீங்க?" ஆதிஷ் கேள்வியில் அதிர்ந்தவன், "அதுக்கு?" என கேட்டான் வினோத்.
"அதான் நீ என்ன பண்ற. நீயே லாவண்யா வீட்டுக்கு போய் அந்த பொண்ணை பார்த்து இந்த பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு வர!" என தயாராக வைத்திருந்த அதனை தன் டிராவில் இருந்து எடுத்து தரவும், அதனை வினோத்துக்கு முன் வாங்கி படித்து பார்த்தான் மனோஜ்.
அபத்தம் என கூற ஒன்றும் இல்லை. தங்களுக்கு நடந்தது கட்டாய திருமணம் மட்டுமே. ஆதலால் தனக்கும் முல்லை கொடிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அச்சிடப்பட்டதில் இவன் கையெழுத்து இட்டிருந்தான். இப்போது அவளும் அதனை ஒப்புக் கொண்டு கையெழுத்து இட வேண்டும். அதுவே அவன் தேவை.
"என்ன பார்க்குறீங்க. தாலியை கழட்டி வீசிட்டா அப்படியே விட்ற முடியுமா?" என கேட்டான் ஆதிஷ்.
அதிர்ச்சியில் இருந்து மீண்ட வினோத், "கரெக்ட் மச்சான். இப்ப எல்லாம் சும்மா இருந்துட்டு நாளை பின்ன நீ வேற யார் கழுத்துலயாவது கட்ட போகும் போது நிறுத்துங்கனு அவ ஊர் ஆளுங்களோட வந்துட்டான்னா?" என கேட்டான்.
"அதான் சொல்றேன். இதுல அவ சைன் மட்டும் இல்லை ஃபிங்கர் பிரின்ட்டும் வாங்கி வா. நாளை பின்ன ஃபிராடு என் கையெழுத்து இல்லைனு சொன்னாலும் சொல்லிடுவா..." இவன் பேசிக் கொண்டே போக.
அந்த பத்திரத்தை வெடுக்கென பிடுங்கினாள் லாவண்யா.
"உனக்கென்ன முல்லை சைனும், ஃபிங்கர் பிரின்ட்டும் வேணும் அதானே. சரிடா வாங்கி தரேன். இத்தோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம். நீயும் அந்த பொண்ணை இனி டிகிரேட் பண்ணி பேசாதே!" என்ற லாவண்யா அங்கிருந்து புறப்பட்டாள்.
"எல்லாம் ஓகே. ஆனால் அவங்க ஆளுங்க தேடி வந்தா என்ன பண்றது?" என கேட்டான் வினோத்.
"அதுவா? அதான் சைன் வாங்குற வேலையை அவ எடுத்துக்கிட்டால்ல. அவங்களை சமாளிக்கிற வேலையை நீ எடுத்துக்க!" அசால்ட்டாய் மனோஜ் சொல்லி முடிக்க.
"சரிடா..." முதலில் ஆர்வக் கோளாறில் தலையை ஆட்டிய வினோத், "என்னது நானா?" என வாயை பிளந்தான்.
"மச்சான் விளையாடாதடா. ஆதி நீயே சொல்லுடா. அவங்க வந்து அந்த பொண்ணு உன் வீட்ல உன் வைஃபா இல்லைனு தெரிஞ்சு பிரச்சனை பண்ணா என்ன பண்றது? அவங்களுக்கு நம்ம ஹாஸ்பிடல் அட்ரஸ் தெரியும். அதே போல என் அப்பாவையும் தெரியும்!" பதறினான் வினோத்.
"இதெல்லாம் தெரிஞ்சவங்களுக்கு இங்க நான் யார்னு இன்னும் தெரியாதுல்ல. வரட்டும் வர்ற ஒருத்தன் விடாம தூக்குறேன். இங்க வந்து பேசட்டுமே அதே நியாயத்தை..." என்றான் ஆதிஷ்.
"ஆகமொத்தம் அவங்க வரப்போற நேரம் பிரச்சனை நமக்கு இல்லை. அவங்களுக்குனு சொல்ல வர. அதானே. ரைட்டு விடு!" என்றான் மனோஜ்.
என்ன வினோத் தான் அந்த நாளை இன்றே நினைத்து சற்று கடுப்பில் இருந்தான்.
"சரிடா அந்த பிரச்சனையை முடிச்சுட்டு சொல்லுங்க. நிம்மதியா எங்கயாவது மீட் பண்ணலாம்..." ஆதிஷ் கூற.
இவர்களும் சரி என வெளியே வந்து விட்டனர். லாவண்யாவும் ஆதிஷிடம் சொன்ன போலவே முல்லையிடம் அந்த பத்திரத்தில் கையெழுத்தை வாங்கி விட்டாள்.
தாலியையே கழட்டி தந்து விட்ட முல்லைக்கு லாவண்யா பெரிதாக எதையும் எடுத்துக்கூற தேவைப்படவும் இல்லை. அவளே தன் பக்க தவறுகளை புரிந்து கொண்டிருந்ததால் போட்டு தந்து விட்டாள்.
அதன் பின் அவளை விசாரித்து கல்லூரியில் சேர்த்து விட்டதோடு, அவளுக்கென விடுதி ஒன்றையும் பார்த்து சேர்த்து விட்டாயிற்று.
லாவண்யா புறப்படும் வேளை முல்லையை கட்டிக் கொண்டாள். முல்லையோ லாவண்யாவை கட்டிக் கொண்டு ஒரே அழுகை. என்ன செய்வது பிரிவென்பது நிகழ்ந்தே ஆக வேண்டும் என ஆதிஷ் கூறி விட்டால் நேரத்தானே வேண்டும். பாதிக்கப்பட்டு இருக்கிறானே!
தொடரும்...

Author: உங்களில் ஒருத்தி
Article Title: முள் நேசம் - 4
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.