New member
- Joined
- Aug 19, 2025
- Messages
- 8
- Thread Author
- #1
அமைதியான கார் பயணத்தில் லாவண்யா தோள் சாய்ந்திருந்தாள் முல்லைக்கொடி.
அவள் கழுத்தில் ஆதிஷ் புனைந்த மஞ்சள் கயிறு இல்லை. அருகில் அவனும் இல்லை. அது அவன் வாகனமே இல்லை.
இடையில் காரை நிறுத்தி வைத்து தாலியை பற்றியவன், "இதை கழட்டி கொடுடி!" என அவன் கேட்ட போது இவளை தவிர யாவரும் அதிரவில்லை.
அவன் இதை தான் செய்வான் என்று அனைவரும் அறிந்தது தானே.
பாவம் முல்லைக்கு தான் நடந்ததில் சரி தவறு ஒன்றும் புரியவே இல்லை.
"என்ன முழிக்குற? வசதியான வீட்டு பசங்களா இருக்கானுங்க. எப்படியாவது அதுல ஒருத்தனை மடக்கிடுனு உன் ஆளுங்க போட்ட பிளானா இது?" கேட்டவனால் இவள் செவிகளை பொத்திக் கொண்டாள்.
ஆனால் வந்த ஆத்திரத்திற்கு ஆதிஷ் நிறுத்திய பாடில்லை.
"இப்படி இதுவரை எத்தனை பேரை ஏமாத்தி இருக்கீங்க. அடுத்து என்ன பிளான் போட்டு அனுப்பி இருக்காங்க? சொல்லுடி!" என கத்தியவன் வார்த்தைகள் இவளுக்கு கேட்காததே மேல் என லாவண்யா முல்லையின் செவியை தானும் பொத்தி, அவள் முகத்தையும் மறைத்துக் கொண்டாள்.
"டேய் கொஞ்ச தூரத்துல தான் போலீஸ் ஸ்டேஷன். அந்த பொண்ணு கழுத்துல புது தாலி. அதை பிடிச்சி இழுக்குற நீ. கண்டிப்பா நமக்கும் தான் பிரச்சனை ஆகும். சிசிடிவில பார்த்தா கூட நியூஸ்ல வருவோம்!" என்றான் வினோத்.
"இப்போ தான் உருப்படியா பேசி இருக்கான். அந்த கயிறை விட்டுடு மச்சான். ஒரு பொண்ணு மனசு இன்னோரு பொண்ணுக்கு தான் புரியும். லாவு பேசுவா..." என்றான் மனோஜ்.
லாவண்யா முல்லையை தவிப்பாய் பார்த்திருந்தவள், "ஆமாடா. நான் பேசுறேன். நீ இப்போ முதல்ல வண்டியை எடு!" என்றாள்.
இவன் தாலியை விட்டு விட்டான். ஆனால் அப்படியே அவ்விடயத்தை விட்டிடவும் இல்லை.
காரின் முன் பக்கம் சென்று ஏறிக் கொண்டவனால் இப்போது மனோஜ் லாவண்யா அருகில் சென்று அமர்ந்தான். வினோத் வண்டியை எடுத்தான்.
முல்லையோடு மீண்டும் காருக்குள் ஏறிய லாவண்யா அவளுக்கு கிளிப்பிள்ளைக்கு எடுத்து கூறுவது போல தங்கள் தரப்பு நியாயத்தையும், அவர்கள் பக்க தரப்பையும் எடுத்துக் கூறினாள்.
முல்லை ஒன்றும் அத்தனை தூரம் நியாய தர்மம் அறியாத பெண்ணும் இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு வரை பல கிலோமீட்டர் தொலைவு கடந்து பள்ளி படிப்பை முடித்தவள் தானே.
படிப்பால் அடைந்த தைரியத்தை ஊரார் முன் தான் காட்ட முடியவில்லை. மற்றபடி அவள் கையில் என முடிவை தரும் போது அனைத்தும் புரிந்தது.
"த...தந்துடுறேன்க்கா! ஆ...ஆனா என் வீட்ல தெரிஞ்சா? என் ஊராளுங்க தேடி வந்தாங்கனா?" என கேட்டாள்
"ஏங்ங்ங்... வந்தா சொல்லு. அவன் ஒன்னும் கேனைப்பைய இல்லையாம். அவனை எல்லாம் ஏமாத்த முடியாதாம். அடுத்த ஆளை பார்ப்பீங்கன்னு..." முன்னிருந்து ஆதிஷ் தான் கத்தி கூறியிருந்தான்.
"ஆதி..." கோபத்தில் லாவண்யா கத்தி இருந்தாள்.
"நானும் பாதிக்கப்பட்டிருக்கனு சும்மா இருந்தா ஓவரா பேசாதே. உன்னை போல தான் அவளுக்கும் எதிர்க்க முடியாத ஏதோ ஒரு சிட்டுவேஷன். அதான் சாகவே போயிருக்கா. நீ பெரிய ஹீரோ டேஷ்னு தண்ணில குதிச்சு காப்பாத்தின போல, அவங்க கிட்ட இருந்தும் காப்பாத்தி இருக்கணும்!" என்றாள் லாவண்யா.
இவன் பலமாக கை தட்டினான்.
"வாரேவா... ஹீரோனா நூத்து கணக்குல ஆளை அடிச்சி பந்தாடணுமா? முட்டாத்தனமா இல்லை இது எல்லாம் உனக்கே. ஏன்டி அந்த தண்ணியை விட மோசம் அவனுங்க. தொக்கா போய் சிக்கிட்டோம்னு இவளை என் தலைல கட்டி அனுப்பி இருக்கானுங்க. அது புரியாம ஹீரோ தானே நீனு கேட்டுட்டு இருக்க!" அவளையும் திட்டினான் ஆதி.
மழையில் நனைந்த கோழி குஞ்சு போல நடுங்கிக் கொண்டிருந்தாள் முல்லை.
"முல்லை இதோ பாருமா. நீ டிவல்வ்த் வரை படிச்சிருக்கல்ல. உனக்கே நடந்தது தப்பு அபத்தம்னு புரியும்ல? புரிஞ்சா அதை கழட்டி அவன்கிட்ட கொடுத்துட்டு, என்கூட வா. அக்கா உன்னை நல்லா பார்த்துக்கிறேன்..." என அழைத்தாள் லாவண்யா.
"ஆமா யாரோ பெத்து விட்டு வளர்ந்த இவளை இன்னும் வளர்த்து ஆளாக்க தான் உன் வீட்ல உன்னை பெத்து விட்டிருக்காங்க பாரு!" மறுபடி ஆதிஷ் தான் கடுப்பை வார்த்தைகளாக வெளியே விட்டிருந்தான்.
"ஆமாடா அதுக்கென்ன இப்ப? இல்லை உனக்கு அதுல என்ன பிரச்சனை?" லாவண்யா கேட்ட போது, இவளுக்காக தோழி தன்னை எதிர்த்து பேசுவதில் கூடுதல் கோபமே வந்தது அவனுக்கு.
"இப்படி நல்லா நடிச்சு நடிச்சு தான் நம்மளை இந்த நிலைமைல நிறுத்தி இருக்காங்க. நீ மறுபடி நம்புற. உன்னை எதுல கோர்த்து விடப்போறாளோ?" என்றான்.
அவன் பேசுவதை எல்லாம் கேட்ட முல்லைக்கு நெஞ்சில் முல் தைத்த போல வலித்தது. அது நேசம், பாசம் என எவ்வித உணர்வும் தனக்கு இல்லாதவரே எனினும், தன் ஒழுக்கத்தை கேள்வி கேட்கிறாரே என எழுந்ததாகவே இருந்தது.
"அக்கா என்னை அப்படியே இறக்கி விட சொல்லுங்க அக்கா. ந...நான் போறேன்..." என்றாள் அழுது கொண்டே.
"ஏய்... என்ன தாலியும் கழட்டி தர மாட்ற. ஒரு முடிவுக்கும் வர மாட்ற. சும்மா போறேன் போறேன்னு மட்டும் டயலாக் விடுற?" மிரட்டவே துவங்கி விட்டான் ஆதிஷ்.
"அதானே. என்னமா திரும்ப உன் ஊருக்கு போய் உன் ஆளுங்களை கூட்டிட்டு வரலாம். இவனை பத்தி அவங்க சொல்லி தர போல போலீஸ்ல தப்பு தப்பா சொல்லலாம்னு எதாவது பிளானா?" என கேட்டான் கார் ஓட்டிக் கொண்டிருந்த வினோத்.
"ஆமா நீ எடுத்து குடு!" என்றான் மனோஜ்.
"அப்படி எதாவது பண்ணி தான் பார்க்கட்டுமே. அப்ப தெரியும் இந்த ஆதிஷ் யார்னு. இவங்க என் மேல சொன்ன அலகேஷனையும் நான் இவ மேல, இவ வீட்டு ஆளுங்க மேல வைப்பேன். ஒரு பையனை பத்தி பொண்ணு கம்பிளைட் பண்றது எல்லாம் அந்த காலம். பொண்ணை பத்தி பையன் பண்ணா என்னாகும்?" என்றவனால் கூடுதலாக நடுங்கினாள் முல்லை.
"வாயை மூடுங்கடா இடியட்டுங்களா..." லாவண்யா கத்தியபடி முல்லையின் முதுகை வருடினாள்.
"அவன் தான் இவ்ளோ பேசுறான்ல. அதை கழட்டி தான் தாயேன்மா. இவ உன்னை கூட்டிட்டு போய் இடம் பார்த்து தங்க வைப்பா. நீ ஆசைப்பட்ட போல படிக்கவோ, வேலைக்கு போகவோ ஹெல்ப் பண்ணுவா! உன் ஊர் ஆளுங்க வந்தா தைரியமா தெளிவா நீயே பேசுற அளவு தன்னம்பிக்கை தான் உன்னை மாத்தும். அர்த்தம் இல்லாத இந்த தாலி வாழ்க்கை இல்லை..." என்றான் மனோஜ்.
"பார்றா டாக்டர் மனோஜ் ஃப்ரீ கவுன்சிலிங் எல்லாம் வாய் கிழிய வக்கனையா தர்றாரு..." என்றான் வினோத்.
அவனிடம் பதில் பேசக்கூட மனோஜூக்கு தோன்றவில்லை.
"இருடா நான் பேசுறேன். பாவம் விலேஜ் பொண்ணு. தாலி சென்டிமென்ட் போல!" என்ற லாவண்யா முல்லையின் முகத்தை நிமிர்த்தினாள்.
"அப்படி தானே முல்லை? ஆனால் இங்க பாரு விருப்பம் இல்லாதவன் கட்டினது எப்படி அர்த்தமுள்ளதா இருக்கும்? அவன் உன்னை இறக்கி விட்டு போனா அத்தோட எல்லாம் முடியப்போறது தானே. அதனால அதை கழட்டி தந்திடு. உனக்கே உனக்காக ஒரு காதல். உன்னை தேடி வரும்..." என்றாள்.
"அது வரும் போது வரட்டும். இப்ப நான் கட்டின தாலி என் கைக்கு வரணும்! இல்லை அடுத்து வரப்போற போலிஸ் ஸ்டேஷனுக்கு அவ என்கூட இறங்கி வரணும்..." என்றான் ஆதிஷ்.
முல்லை கழட்டி தா... கழட்டி தா... என சதா சொல்லிக் கொண்டே இருக்கும் அனைவரையும் சுற்றி முற்றி பார்த்தாள்.
"என்னமா முல்லை? எதாவது சொல்லணுமா?" லாவண்யா கேளவும், "முடியாது! என் கழுத்துல தாலியை கட்டின இவர் தான் இந்த ஜென்மத்துக்கும் என் புருஷன்னு சொல்ல போறா..." உதட்டுக்குள் முனுமுனுத்தான் வினோத்.
ஆனால் முல்லையவளோ, "இது எங்க அப்பா அம்மா கஸ்டப்பட்டு காசு சம்பாதிச்சு வாங்கின தாலி அக்கா. அந்த ஓடிப்போன மாப்பிள்ளை வீட்ல இதைக்கூட எங்களையே பண்ண சொல்லிட்டாங்களே..." என்றாள்.
"அப்ப அதான் கழட்டி தர மாட்றியாமா? மத்தபடி உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என கேட்டான் மனோஜ்.
இவள் தயக்கமாய் தலையசைத்தாள்.
"ஏய் நாளை பின்ன நீங்க கட்டின தாலினு வந்து நிற்க பிளானா? அது எவ்ளோனு சொல்லு. இப்பவே செட்டில் பண்றேன்!" என்ற ஆதிஷ் முன்பிருந்து இவள் பக்கத்திற்கே திரும்பி இருந்தான்.
"காசெல்லாம் வேணாம்..." என்றாள் முல்லை. மறுபடி அவள் கண்களில் புது கண்ணீர் வந்தது.
"அவன் தான் அவ்ளோ தூரம் மானங்கெட்ட கேள்வி கேட்கிறானே. கழட்டி தந்துட்டு என்கூட வாயேன் முல்லை. உனக்கு பெட்டர் லைஃப் அமைச்சு தரேன்..." என்றாள் லாவண்யா.
"என்னை விட இப்போ வந்த இவ முக்கியம்னு பேசுறவங்க இத்தோட என் ஃபிரண்ட்ஷிப் முடிச்சிக்கலாம்!" என்றான் ஆதிஷ்.
"கொஞ்சங்கூட அடுத்தவங்க சிட்டுவேஷன் புரிஞ்சு பொறுமையா நடக்காத யாரும் என்கிட்ட பேச வேண்டாம்!" என்றாள் லாவண்யாவும்.
"சந்தோஷம் உன் புது தங்கச்சி கழுத்துல இருக்க தாலியை கழட்டி தந்துட்டு, கூட்டிட்டு கிளம்பு!" என்றான் அவன்.
ஆனால் முல்லை அதற்கு தயாராக இல்லை.
"பிரச்சனை எல்லாம் பண்ண மாட்டேன் அக்கா. க...கழட்டி நானே வச்சிக்கிறனே!" பாவமாய் முகத்தை வைத்து கேட்டாள்.
ஆதிஷ் மனம் அதில் கனியவில்லை. அதனால் மீண்டும் சில நிமிட வாக்குவாதம் தொடர, இறுதியில் அவன் கேட்ட கேள்விக்கு முல்லையே தாலியை கழட்டி அவன் முகத்தில் வீசி விட்டு ஓடும் காரின் கதவை திறக்க போய் விட்டாள்.
"ஏய் என்னமா பண்ற?" லாவண்யாவும், மனோஜூம் தான் பதறிக் கொண்டு கத்தி இருந்தனர்.
"இ...இறங்கனும். இவர் முகத்தையே பார்க்க வேணாம். உ...உடனே போனும்..." சிறு பிள்ளை போல அழுதவளை கண்டு காரை ஓரம் கட்டினான் வினோத்.
அவளுடனே லாவண்யாவும், மனோஜூம் இறங்கிக் கொண்டனர். ஆதிஷ் வினோத்தை இறங்க கூறி தானே காரை வேகமாக கிளப்பிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.
மனம் நிறைய தனக்கு நேர்ந்த எதற்கும் கூட தன் நண்பர்கள் வருந்தி துணை நிற்கவில்லையே. அந்தளவு பெண் என்பதால் இறக்கத்தை சம்பாதித்து வைத்துள்ளாள் என முல்லை மீது தான் இன்னமும் கோபமாய் வந்தது.
அதே கோபத்துடன் கிளம்பி இருந்தான். அவளும் மனோஜ், லாவண்யா புக் செய்த கேபில் அவர்களுடன் புறப்பட்டிருந்தாள். அவளுக்கு மட்டும் இல்லை அவனுக்கும் கூட இனி அவளை காணவே கூடாது என்றே இருந்தது.
தொடரும்...

Author: உங்களில் ஒருத்தி
Article Title: முள் நேசம் - 3
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.