நயனவாசினி - 1(ii)

New member
Joined
Aug 20, 2025
Messages
19
கார்த்தி, “என்ன கிளி வாயெல்லாம் பல்லா நிக்குது? வேற ஏதாவது பட்சி மாட்டிக்கிச்சா என்ன?” சக ஊழியன் ஒருவனிடம் பேசுவது கேட்டு குமரன் திரும்ப,

அங்கு சரபேஸ்வரன் பார்வை வாயிலில் நின்றிருந்த பெண்(கள்!) மீதுதான்.

அவன், “இந்தாள் வீக் தான். ஆனா ரொம்ப மோசமெல்லாம் இல்ல மச்சான். பார்க்கறதோட நிறுத்திக்குவான்” என்க,

வனஜா, “நீ பார்த்த? ஒருத்தேன் பெண்ணுகள பார்க்கறத வெச்சே அவேன் புத்திய சொல்லிடலாம். மொத அடுத்த பொம்பளைங்கள பார்க்கறதே தப்பு, இதுல மோசமில்லேனு வேற சொல்லுற” அவர் சண்டை கட்ட,

கார்த்தி, “எக்கா, நம்மள மாதிரியா கிளி இருக்கும்? பணக்காரன் சகவாசம் எல்லாம் பணத்தோட இருக்கும் தான”

“யார விட்டுச்சு. பொன்னோ பெண்ணோ, எது மேல ஆசை வந்தாலும் அவன் நாசமா தான் போவான்” என்றார் அதீத கோபத்துடன்.

கார்த்தி அதற்கு மேல் பேசவில்லை. வனஜாவின் ஆங்கார ரூபம் அவனை மேற்கொண்டு அங்கே நிற்கக் கூட விடாது நகர வைத்திருந்தது.

“முற்கால விட்ட குறை இருக்கும் போல” கூட இருந்தவன் உட்சொருக,

குமரன், “பேசாம இருங்கடா. அந்தாள் காதுக்குப் போச்சு, சீட்டு கிழிஞ்சுது” பலமாக அதட்டல் அவனிடம்.

அதற்கு அலட்டிக்கொள்ளவே இல்லை கார்த்தி.

“இந்த மடம் இல்லாட்டி சந்த மடம்” என்றவன் நிகர்ந்துவிட, குமரனின் பார்வை வாயிலேயே தான் நொடிக்கு குறைவாக படிந்து மீண்டது.

அவன் எச்சிலை கூட்டி விழுங்கிய நிமிடம் ஒரு இனம் புரியாத பயம் அவனை கவ்வியது. ஒரு நொடியேனும் அவன் மனது அடித்துக்கொண்டு நின்றது உண்மை.

ஆட்கள் குறைந்து, கடையை அடைத்து, உள்ளே ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு வர இரவு பதினோரு மணியை தாண்டியிருந்தது.

“இன்னிக்குப் பாரு புரோட்டா தான் கிடைக்கும்” என்றபடி வந்தான் கார்த்தி.

அந்த நேரத்திற்கு வேறு என்ன உணவு இவர்களை வரவேற்குமாம்?

உணவு விடுதிகள் திறந்திருந்தாலும் பெரும்பாலும் இம்மாதிரி வேலையாட்கள் நம்புவது தள்ளுவண்டிகளை தானே?!

தரத்தைவிட உணவு இவர்களின் நா’ருசிக்கும் கை இருப்பிற்கும் தக்க இருக்குமே.

“பொழுதுக்கும் புரோட்டாவையே திங்காதடா. சந்தக, இட்லி மாதிரி‌ திண்ணு தொல” என்று அதட்ட,

“நடுராத்திரியில வவுறு பசிக்கும்டா மச்சான். அப்புறம் தூக்கமும் வராது, சோகத்த”

“அப்போ கூட ரெண்டு பழத்தை எக்ஸ்ட்ராவா திண்ணு” என்றபடி நாலு இட்லி, இரண்டு கல் தோசையுடன் ஒரு ஆம்லெட்டை வெட்டினான் குமரன்.

கையோடு இரண்டு வாழைப்பழத்தை அமுக்கிக்கொண்டுஅரைக் கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஹாஸ்டல் வரை நடையிட்டனர்.

அது அவர்களின் இத்தனை வருடம் பழக்கம். வெளி உணவு உட்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சினை வராதிருக்க பழமும் நடையும் இன்றியமையாது போயிருந்தது.

“இன்னிக்கு என்ன பீடி அதுக்குள்ள தூங்கிடுச்சு” என்று ஹாஸ்டல் வார்டனை ஒரு சுற்று சுற்றி வந்தான், கார்த்தி.

ஆண்களுக்கு மட்டும் தங்கும் வசதி உண்டு சத்யம் சில்க்ஸில்.

பெண்கள் சிக்கலில் முதலாளி சிக்கிக்கொள்ள விரும்பவில்லை போல… ம்ம்.

குமரன், “கொஞ்ச விட்டா பீடிய கொசு தூக்கிட்டு போயிடும். மொத நீ வா, எங்க போனாலும் நின்னு சடவெடுத்துகிட்டு”

“அட இதெல்லாம் ஒரு இளைப்பாரும் தருணம்டா கட்டெறும்பு”

அவனை கொத்தாக தூக்கிக்கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றான், குமரன்.

பல அறைகள் வரிசையாக இருந்தது. அதில் அறைக்கு ஐந்து பேர் தங்கியிருக்க, அவர்களுக்கான‌ காலை நேர உணவு மட்டும் அங்கு கொடுக்கப்படும்.

பெரும்பாலும் தென் மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் தான் சத்யத்தில் வேலையில் இருந்தனர். உள்ளூர்காரர்களும் கணிசமான‌ அளவில் இருந்தாலும் யார் எப்போது வேலையில் இருந்து நீக்கப்படுவர் என்ற அச்சமும் இருந்து வந்தது.

பல அறைகளில் தீர்த்த வாரி நடைபெற, வாடை குமரனுக்கு தலைவலியை கொடுத்தது.

அவன் கை சுத்தம். அதைவிட உடலளவில் அத்தனை சுத்தமானவன்.

கலைப்பு போக நன்றாக குளித்து அறைக்கு ஓடிவந்துவிட்டான். கார்த்தி எந்த அறையில் யாருடன் உருள்கிறானோ?!

ஒரு பத்து நிமிட நிதானமான தியானம் செய்தவன் முகம் சாந்தமானது.

தூய வேஷ்டி பனியனுடன் கோரை பாயில் படுத்தவனுக்கு அத்தனை அசதி.

உழைத்து கலைத்த உடம்பு ஓய்வுக்கு தயாரகும் முன்,

கண்களை மூடி, “மீனாட்சி” என்று நெஞ்சில் கை வைத்து மதுரையை ஆளும் அரசி அவளை மனக்கண்ணில் கொண்டு வந்த நேரம், அவன் முகத்தில் தான் எத்தனை சாந்தம்!

சந்தனக்குமரனின் கண் நிறைந்துவிட்டாள் அவன் வணங்கி உருகும் தடாதகை நாச்சியார்.


***

கதையை வாசிக்கும் வாசகர்கள் இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறவாமல் உங்களின் கருத்துக்களை இங்கு பகிருங்க.


அடுத்த பதிவோடு விரைவில் வருகிறேன்.

நன்றி 📿
 

Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 1(ii)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
34
நாள் முழுக்க கஷ்டப்பட்டு வேலை பாத்து இராத்திரி தூங்குறதே ஒரு தனி சுகம் தான்
 
New member
Joined
Aug 20, 2025
Messages
19
நாள் முழுக்க கஷ்டப்பட்டு வேலை பாத்து இராத்திரி தூங்குறதே ஒரு தனி சுகம் தான்
ஆமாம். நன்றி 📿
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
குமரன்... அவனை என்னானு சொல்ல??? எவ்ளோ சொன்னாலும் ஒரு வார்த்தையில அடக்கணும்னா மனதுக்கு பிடித்த கேரக்ட்டர் ❤️ அவன் பேச்சும். அவனோட அயராத வேலையும், கடினமான நேரத்திலும் ஒரு கடி ஜோக் போல் ஆங்காங்கே வீசி விட்டு போற மேகம் 🥰
 
New member
Joined
Aug 20, 2025
Messages
19
குமரன்... அவனை என்னானு சொல்ல??? எவ்ளோ சொன்னாலும் ஒரு வார்த்தையில அடக்கணும்னா மனதுக்கு பிடித்த கேரக்ட்டர் ❤️ அவன் பேச்சும். அவனோட அயராத வேலையும், கடினமான நேரத்திலும் ஒரு கடி ஜோக் போல் ஆங்காங்கே வீசி விட்டு போற மேகம் 🥰
மிக்க நன்றி ❤️ ✨
எதிர்பார்க்காத விமர்சனம் இங்கு
 
Top