Member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 36
- Thread Author
- #1
கார்த்தி ரூமிற்கு வர, இன்னும் குமரனிடம் மாற்றமில்லை.
ஜன்னலின் கீழ் அமர்ந்திருந்தவன் மனதில் சுருக்கு சுருக்கென்று குற்றிக்கொண்டே இருந்தது.
காலம் எல்லாவற்றையும் மாற்றும் தான். ஆனால் சூடான ஒரு பேச்சை அதுவும் அவனை மொத்தமாய் உதறித்தள்ளும் பேச்சை எங்ஙனம் அவன் பசும் இதயம் தாங்குமாம்?!
கடந்தாகவேண்டிய கசப்பு நிகழ்வது.
அதை கார்த்தியால் புரிந்துகொள்ள முடிந்தது. குமரனைப் போன்ற இலகுவான இதயமுள்ளவர்களுக்கு இது பெரும் சவாலான ஒன்றென்றாலும், வெளியே வந்தாக வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலையும் கூட தானே?!
கார்த்தியால் ஓரளவிற்கு மேலும் எதுவும் செயய் முடியாதே. ஒரு பெருமூச்சோடு குமரனை அனுகினான்.
“மிஸ். நயனியோட அட்டென்ட்டர் வாங்க” என்ற குரலில் களைந்தாள், தாரணி.
“நா தான்ங்க” என்று வேகமாய் அவள் விரைய, “டாக்டர் கூப்டறார். இங்க வெயிட் பண்ணுங்க” என்று செவிலியர் செல்ல, பயமாய் போய்விட்டது அவளுக்கு.
கஜேந்திரனிடமிருந்து நயனியை போராடி மீட்கவே அம்மாவுக்கும் மகளுக்கும் போதும் போதும் என்றாகியிருந்தது. நயனி மயங்கியும் கூட கஜேந்திரன் அவர் அடியை நிறுத்தியிருக்கவில்லை.
அப்போது என்ன வந்து அவரைப் பிடித்ததோ?
சத்தம் கேட்டு அவர்கள் மேல் வீட்டில் குடியிருந்த சரஸ்வதி ஓடிவந்திருந்தார்.
“அய்யோ என்ன’ண்ணே செய்றீங்க. விடுங்க விடுங்க” என்று அவர் நடுவில் புக, சரஸ்வதியின் பின்னோடு வந்த அவர் கணவன் செல்வம், கஜேந்திரனைப் பிடித்துக்கொண்டார்.
அவர்கள் தான் தாரணியோடு நயனியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தனர்.
அங்கிருந்த பெண் மருத்துவரோ, “என்ன’ம்மா, என்ன இது? உங்க அப்பா எல்லாம் என்ன மனுஷர்? புள்ளைய போய் இந்த அடி அடிச்சிருக்கார்” என்றவர் நயனியின் முகத்தைத் திருப்பிக் கட்டியபடி,
“உள் கன்னத்துல பல் குத்திக் கிழிஞ்சுருக்கு.. கடைசி பல்லு வேற ஒடஞ்சிருக்கு. கை, கால்ல தசை பிரண்ருக்கு. மாட்டடிக்கற மாதிரி அடி வேற உடம்பு முழுக்க. என்ன ஹான்? டொமஸ்டிக் வயலன்ஸ் இது” என்று அத்தனை பேச்சு.
ஒரு வார்த்தை இருவராலும் உதிர்க்க முடியவில்லை. என்ன சொல்லி அவரிடம் சமாதானம் செய்ய? அவள் அக்காவை அவளே காக்க தவறியிருந்தாலே!
நயனியை முழுக்க ஆராய்ந்தவர், “என்ன லவ் இஷ்யூவா?” என்றாள் நயனியின் வயதைக் கொண்டு.
அவள் தலை மெல்ல அசைய, மருத்துவரிடம் முறைப்பு பொங்கியது.
தாரணி, “மேம், லவ் மேட்டர் தான். ஆனா இவ அத சரியா பேஸ் பண்ணலைன்னு தான் அடியே. லவ் சக்சஸ் ஆகி மாமாவ கல்யாணம் செய்ய எங்க அப்பா ஓகே சொல்லிட்டார். இப்போ மாமா வீட்டுல பிரச்சனை. இவ அவர்கிட்ட எதுவும் இவளுக்காக பேசமா இருக்கவும் அப்பாவுக்கு கோபம்” என்று அவசர அவசரமாய் மருத்துவரிடம் வாக்குமூலம் சொன்னாள் தாரணி.
“அதுக்கு இத்தன அடியா?” என்றவர் நயனியிடம் ஒரு அரைமணி நேரம் பாடம் நடத்திய பின்னரே கிளம்ப அனுமதித்தார்.
கைத்தாங்கலாக நயனியை தாரணியும் சரண்யாவும் அழைத்து வருவதை பார்த்துவிட்டான், பாண்டி.
கஜேந்திரன் அடித்தத் தடம் இடப்பக்க முகம் பயங்கரமாய் வீக்கத்துடன் சிவந்து லேசாய் பச்சை நிறமாய் மாற ஆரம்பித்திருந்தது.
இருவர் பிடித்து அழைத்து வந்தாலும் அவளிடம் சுத்தமாய் தெம்பில்லை.
அவள் துவளும் நேரம் பாண்டியின் கண்களில் பாட்டுவிட்டாள் நயன மனோகரி.
ஒரு நிமிடம் அது நயனி தானா என்று குழம்பிய பாண்டி, சற்று அருகில் சென்று உறுதியானப் பின் அதிர்ந்துவிட்டான்.
“ஹேய், நயனி” என்றவன் பக்கம் செல்லும் முன்பு, செல்வம் ஆட்டோவுடன் வந்துவிட, பாண்டியால் அவர்களை பிடிக்க முடியவில்லை.
அவசரத்தில் அவனுக்கு நெஞ்சு படபடத்தது. ஒன்றும் புரியாது நின்றவன் கார்த்திக்கு அழைத்துவிட்டான்.
அங்கு அவன் அப்போதுதான் குமரனை உணவுன்ன வைக்க போராட, பாண்டியின் அழைப்பை அவன் ஏற்பதாக இல்லை.
கார்த்தி, “மூடிகிட்ட சாப்டு. எதுவா இருந்தாலும் காலேல பேசலாம். இல்லேனு வை, ராஜா கிட்ட சரக்க வாங்கி வாயில ஊத்தி விட்ருவேன்” என்றான் குமரனின் முன்பு சாப்பாட்டு தட்டை ஏந்திய வண்ணம்.
எப்போதும் நன்றாய் துணியணிந்து, சிகை வாரிக்கொண்டு, தன்னை ஒரு நல்லத் தோற்றத்தில் வைத்துக்கொள்வான் குமரன்.
தன்னொழுக்கம் எப்படி முக்கியமோ அதே அளவிற்கு புறத்தோற்றத்தையும் அத்தனை ஸ்ரத்தை எடுத்து நேர்த்தியாக அமையும்படி பார்த்துக்கொள்வான்.
வேலையின் பொருட்டு ஏதோனும் சின்ன அழுக்கு உடலில் ஏற்பட்டாலும் கூட அவன் குளிக்கும் போது அதை தேய்த்து எடுப்பதை பார்த்தால், ‘இவன் அழுக்க எடுக்காம என்ன தோளையே உரிக்கறான்’ என்பதாக இருக்கும் அவன் சுத்தத்தின் அளவு.
அப்படிப்பட்டவனை கொஞ்சமும் பிரஞ்ஞையற்று சாலையோற சேற்றில் விழுந்து கிடப்பதை பார்த்தால் யாருக்குத் தான் பொறுக்கும்?
பூங்காவில் படுத்திருந்தவன் நிலை யோசித்து யோசித்து மிகவும் மோசமாக, விரைந்து ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
ஒரு திருப்பத்தில் வண்டிக்காரன் அசந்தர்ப்பமாய் குறுக்கே வர, சமாளிக்க முடியாமல் தள்ளாடி சேற்றில் விழுந்துவிட்டான், சந்தனக்குமரன்.
உடல் மொத்தமும் சேராக, வழிந்து சாலையேறத்தில் அமர்ந்துக்கொண்டவனைத் தான்
தீர்த்தம் வாங்க அந்த பக்கம் சென்ற கார்த்தி பார்த்தது.
இப்போதும் அதை நினைக்க, கார்த்தியின் உடல் சிலிர்த்தடங்கியது!
எத்தனை துயரை தான் இவன் தாங்குவான் என்றவன் மனதும் நண்பனுக்காய் அடித்துக்கொண்டது.
அங்கு பக்கத்தில் இருந்த பைப்பில் அவனை குளிக்க வைத்து, ஹாஸ்டலுக்கு அழைத்து வந்திருந்தான், கார்த்தி.
குமரனிடம் இன்னும் அசைவில்லை.
கண்ணீர் வருவதும் நிற்கவில்லை.
கார்த்திக்கு அவன் சொன்ன விஷயத்தை ஏற்கவே நேரம் எடுத்திருந்தாலும் இப்போது ஆண்டியப்பனின் அந்த பேச்சு அத்தனை ஆத்திரத்தைக் கூட்டியது.
“டேய், அந்த மனுஷன் பேசுன பேச்சுக்கு இன்னும் நீ அழுதியிண்டா என்ன அர்த்தம்? நாலு சொல் சொல்லுறதுதான், இல்லேங்கல. ஆனா அவர் என்ன ஒரேடியாவா அப்படி இருக்கப்போறார்?
நாளைக்கே உனக்கு ஒரு குழந்த வந்தா, பேரப்பிள்ளைய பார்க்க வரமாட்டாரா? இல்ல நீதேன் கட கண்ணி வெச்சு நல்லா வளர்ந்துட்டியண்டா ஓடியாரமாட்டாரா?
சும்மா உட்காந்து மூக்க சிந்தாம எழுந்து, சாப்டு. ம்ம்” அவன் ஆனவரை சொல்ல, குமரனிடம் எதிற்கும் எதிர்வினையில்லை.
அதில் கடுப்பானவன், “எக்கேடோ கெட்டு ஒழி” என்று சாப்பாட்டை அவன் பக்கத்தில் வைத்துவிட்டு வெளியேறினான்.
பாண்டி மேலும் மேலும் அழைக்கவே, "இவனொருத்தேன்" என்றபடி அழைப்பை அவன் ஏற்க,
"டேய் மச்சான், இங்கன நயனிய பார்த்தேன்டா" என்றான் அதி அவசரமாய்.
"மூதேவி, மேடம பாக்க வந்துருப்பாடா"
"அய்யோ அந்த புள்ள முஞ்சி மொகறை எல்லாம் வீங்கி ரெண்டு பொம்பளையாள் கை தாங்கலா கூட்டிட்டு போனாங்கடா. நா போகறதுக்குள்ள ஒரு ஆட்டோல ஏறி போயிட்டா" என்றான் படபடவென்று.
"என்னடா சொல்லுற? நயனியா? சரியா பாத்து தொலஞ்சியா நீ?" என்றவன் அதிர்ச்சி மாறாமல் கேட்க, பாண்டி மேலும் நிகழ்வை விளக்கினான்.
கார்த்திக்கு ஒன்றுமே புரியவில்லை. நேற்று மாலை பார்த்தவளுக்கு இன்று என்னவானது? என்று யோசனை ஓடினாலும் சட்டென்று ஹேமாவுடன் நயனியை பொறுத்திப் பார்த்தது மனம்.
'ஒருவேள குள்ளமுனி' என்றவன் மனதில் ஒரு நொடி தோன்ற, "குமரா" என்று அலறிக்கொண்டு ஓடினான் கார்த்தி.
••••

Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 07(ii)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.