Member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 36
- Thread Author
- #1
மழையில்லாது வரண்டு காணப்பட்ட பூமியைப் பார்த்து பரிதாபம் கொண்ட வானத்தின் கோபக் கணலை மெல்ல உள்வாகிக்கொண்டு கருமேகங்களை விடுத்து அதன் கோபத்தை செம்மஞ்சள் நிறத்தில் பிரதிபலித்தது மேகம்.
அந்த வர்ணஜால கோலம் நாம் எவ்வாறு பார்க்கிறோமோ அவ்வாறு மாறுபடும்.
கோபமோ ஆனந்தமோ மகிழ்வோ அழுகையோ தாளாமையோ எந்த ஒரு மனநிலையோடு அதை நாம் பார்த்தாலும் அந்த மாயக்கோலம் அதற்குத் தக்க புலனாகும்.
அந்தியின் வான வேடிக்கை பார்த்து ரசித்த குடும்பத்தை இதோ இப்போது மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தது ஒரு பெரும் விபத்து!
“நித்தி நீ மாமாவுக்கு ட்ரை பண்ணு. அப்பாவ டிஸ்டர்ப் செய்யவேண்டாம்” என்றான் இளையவன் நிரஞ்சன்.
பெரியவனான நித்யன், “எதுக்கு அவங்களையெல்லாம் கூப்டனும். நாம ஹாண்டல் பண்ணிக்கலாம். அம்மா எழுந்தா அப்றம் கேட்பாங்க” என்றவன் பொறுமையாக அங்கு நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
நிரஞ்சன், “இட்ஸ் பெட்டர் டு கால் மாமா. சொல்லாம இருக்கக் கூடாதுடா” என்று முன்னர் சொன்னதை பல வார்த்தைகளை மாற்றிப்போட்டு அவன் சொல்ல, எதற்கும் நித்யன் செவி செய்கவில்லை.
நித்யனின் பார்வை மொத்தமும் அவனுக்கு எதிரே இருந்த ஐசியூ’விலேயே தான்.
காதுகளை தீற்றிக்கொண்டு கண்கொத்தி பாம்பாய் அவன் தைரியமாய் உட்காந்திருக்க, இளையதிற்கு யாராவது பெரியவர் உடன் இருந்தால் தேவலாம் நிலையிலும் கொஞ்சம் தைரியம்
தெரிந்தது உடல் மொழியில்.
மருத்துவர் அறையிலிருந்து வர, ஈட்டியார் அவர் முன்பு போய் நின்றான் நித்யன்.
அவர் பார்க்கவும், “ஹேம லஷ்மி சன்” என்றான் அழுத்தமாய்.
அவனுடன் நிரஞ்சனும் வர, இருவரையும் பார்த்தவர் முகத்தில் இரக்கம்.
ஒருவன் மீசை முளைக்கும் வயதில் இருக்க மற்றொருவன் குரலுடையும் வயதை எட்ட இருந்தான்.
ஒரு பெருமூச்சோடு, “வீட்டுல பெரியவங்க யாரும் இல்லையா?” என்றார் மருத்துவர்.
எடுத்த எடுப்பில் ‘அப்பா எங்கே?’ என்ற கேள்வியின் அபத்தத்தை சில காலமாக அவர் உணர்ந்ததன் பயனாக.
நித்யன், “இல்ல. நா யாருக்கும் சொல்லலை. எதுவா இருந்தாலும் என்கிட்டையே சொல்லுங்க” அவன் அடமாய் நிற்க,
“நா கூப்டறேன். ரூம் வாங்க” என்றுவிட்டு அவர் விறுவிறுவென்று சென்றிருந்தார்.
“நாந்தான் சொன்னேனே மாமாவ கூப்டலாம்னு. கேட்டியா?” நிரஞ்சன் அண்ணனை குற்றம் சொல்ல,
“க்வைட் நிரு. எந்த சுட்சூவேஷன் வந்தாலும் நாம ஃபேஸ் பண்ணணும்னு அப்பா சொல்லியிருக்கார்ல”
“இருக்கட்டும். ஆனா இப்போ அம்மாவுக்கு ஹெல்ப் தேவை” என்றான் முறைப்பாய்.
செவிலியர் அதற்குள் அவர்களை கூப்பிட, “சிட் ஹெர் நிரு. டேன்ட் இன்ட்டர் வீன்” என்றபடி உள்ளே சென்றான் தனயன்.
அங்கு, டாக்டர் ஹேமாவைப் பற்றி அடுக்கடுக்காய் சொல்லிக் கொண்டே போக, நித்யனுக்கு கவலையாய் போய்விட்டது.
“கான்சியஸ் வர ஒரு நாள் கூட ஆகலாம். அதுக்கு பின்ன போஸ்ட் ஆப்ரேட்டிவ் கேர் ரொம்ப முக்கியம். இப்போ நடந்திருக்கறது கிட்டத்தட்ட மேஜர் சர்ஜரி மாதிரி தான். அதுக்கு உன்டான கேர் நாம கண்டிப்பா கொடுக்கனும்” என்க,
அனைத்தையும் கேட்டவன், “அவங்க ரெக்கவரி பீரியட்?” என்றான் நிதானமாக.
இதழ்விரித்தவர், “அவங்க வில் பவர் பொறுத்து. மேக்ஸிமம் டென் வீக்ஸ் டு ட்வல்வ் ஆகலாம். லெட்ஸ் சி” என்றவர் அவனின் பாவனையிலும் திடத்திலும் கவர்ந்தவராய்,
“உங்க அப்பா?” என்று
கேள்வியாக அவர் கேட்டு நிறுத்த, நிமிர்ந்து அமர்ந்த நித்யன் கண்கள் ஒளிர்ந்தது.
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு,
“மேஜர் சைலேந்திரன் திருஞானம்”
என்றான் அத்தனை கர்வமாய்.
அவனின் அந்த நிமிர்வு மருத்துவருக்கும் தோற்றியதைப் போல், ஒரு மரியாதை உடனே தோன்றியது அவனின் மேல்; நித்யனின் குடும்பத்தின் மேல்.
நித்யன் மேலும் அவரிடம் பேசிவிட்டு வெளியே வரவும், நிரஞ்சனோட நின்றிருந்தார், சரபேஸ்வரன்.
ஏன் ஹேமாவைத் தெரிந்த ஜவுளிக்கடை ஜனங்கள் மொத்தமும் அங்கு தான் அதற்குள் குழுமியிருந்தனர்.
நிரஞ்சன் செய்த வேலையின் பலன்!
அப்போதுவரை ஹேமாவிற்கு ஆக்சிடென்ட் என்பது வரை தான் அனைவருக்கும் தெரிந்திருந்தது.
அது திட்டமிடப் பட்டதோ, காமராஜின் துண்டுதளின் பெயரில் தான் நடத்தப்பட்ட கொலை முயற்சி என்பதோ அப்போது வரை யாருக்கும் தெரியாது.
ஏன், இனி தெரிய வருமா என்பதும் தெரியாது!
பாதிப் பேர் மட்டும் சத்யமில் இருக்க, மீதி பாதி செய்தி வந்ததும் லீவைப் போட்டுவிட்டு பறந்து வந்திருந்தனர்.
பாண்டியும் கார்த்திக்கு அழைத்து விஷயத்தைப் பகிர,
"நீ போ பாண்டி. நா கட்டெறும்பு கூட இருக்கனும். இன்னொரு நா பாத்துக்கலாம்" என்றான்.
குமரனை அவன் சற்று முன்னர் பார்த்தக் கோலத்தை நினைத்து, ஒரு நொடி அவன் நெஞ்சம் நடுங்கியது. அதை பாண்டியிடம் கூட சொல்ல அவன் விரும்பவில்லை.
“ஏன் என்னாச்சு? காலேல நல்லாத் தான இருந்தான்?”
“உடம்பு முடியலடா அவனுக்கு” என்றுவிட,
"சரி மச்சான். நாங்க எல்லாம் கடையில இருந்தே கெளம்பறேம். ரொம்ப சீரியஸ் போல" என்றான் சோகமாய்.
அவனும் வருந்தியவனாய், "நல்லாகிடுவாங்கடா. நல்லவங்களுக்குத் தான் இதெல்லாம் வரும். திரும்ப வந்துடுவாங்க, நீ பார்த்துட்டு வா. முடிஞ்சா அவங்க பசங்க கூடவே இரு" என்றவன் உணவை வாங்கிக்கொண்டு ஹாஸ்டல் நோக்கி சென்றான்.
"கட்டெறும்பு?"
"அதான் காய்ச்ச கண்ட உடம்பே. படுத்துக்கெடக்கான்டா" என்றுவிட,
பாண்டி, "சரி நா நைட் வந்தா ரூம் வரேன். இல்ல காலேல பாக்கலாம்" என்றவனும் வைத்துவிட்டான்.

Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 07(i)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.