New member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 19
- Thread Author
- #1
வீட்டு மாடியில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்திருந்தாள், நயனி.
குமரனிடம் தேவையில்லா கோபம் கொண்டோமோ என்று சிந்தனை சிக்கலில் அவள் தவிக்க, அதை மேலும் வலு கூடவே அவன் இப்போதுவரை உணவுன்ன வரவில்லை.
நேரம் மூன்றைக் கடந்திருக்க, அவளுக்குத் தான் மனது அடித்துக்கொண்டது.
‘தப்பு பண்ணீட்ட நயனி’ என்று உள்ளுக்குள் அவள் பினாத்த, படிகளில் தடதடவென்று ஏறிவந்தாள் அவள் தங்கை, பவதாரணி.
“நைனா கூட்டார்’க்கா உன்ன. சரி கோபத்துல வந்துருக்கு” என்க,
முகம் கசங்க தலையை பின்னோக்கி சாய்த்துக்கொண்டாள் நயனி.
விழியோரம் நீர் வழிந்தவள் இயலாமையைக் கூறியது.
“ஏய் மனோ, எதுக்கு இப்போ அழற? மொத கீழ வா, நீ” என்று நயனியின் கைகளைப் பிடித்திழுத்துக் கொண்டுக் கூடத்திற்குச் சென்றாள், தாரணி.
மஞ்சு குமரன் வராததைச் செல்லியிருக்க, “இன்னும் தம்பி சாப்ட வரலை. என்னனு கேட்டியா மனோ” என்று கஜேந்திரனின் குரல் உயர்ந்தது.
வெளியிடத்தில் ஏதோ கோபம் போல். அதை அப்படியே வீட்டிலும் வந்து ப்ரதீபளிக்கிறார் மனிதர்.
பெரும்பாலும் இந்த ஆண்கள் இப்படித்தானே?!
கலங்கிய கண்களை உருட்டிக்கொண்டு, “போன் போட்டேன், எடுக்கல” என்றாள் வெறுமனே.
மஞ்சு, “என்னடீ செஞ்ச? கண்ணெல்லாம் கலங்குது. தம்பியோட சண்டை என்னாவது போட்டியா?” என்று சமையலறையில் இருந்து வந்தவர் மகளின் முகத்தைப் பார்த்து கத்த, கஜேந்திரன் பார்வை மாறியது.
பார்வையில் மொத்த மிரட்சியுடன், “சண்டயெல்லாம் போடல’ம்மா” என்றபடி ஒரு விசும்பல் அவளிடம்.
கஜேந்திரனின், “என்ன தப்பு பண்ணின மனோ” என்ற அதட்டலில் ஒருமுறை அவள் உடல் தூக்கிவாரிப் போட்டது.
சுடிதார் டாப்ஸை இருபுறம் இருக்கிப் பிடித்தபடி, “நா அவர்கிட்ட ஒன்னும் பேசல நைனா… போன தான் வெச்சுட்டேன்” என்றபோது அழுகைக் கொட்டியது.
பவதாரணிக்கு நயனியைப் பார்க்க அத்தனை இறக்கமாய் போய்விட்டது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அவளின் அதீதங்கள் கவலையாக்கியது.
“அதான் என்ன ஆச்சு” என்று மஞ்சு வர,
தாரணி, “ம்மா, இருங்கம்மா. அக்கா பயப்படுத்துல. அமைதியா கேளுங்க” என்க,
“என்னடீ அமைதியா கேக்க. அவளா தேர்ந்தெடுத்த வாழ்க்கையில என்னத்தையாவது செஞ்சு வெச்சுக்குவாளோன்னு நா கேட்டா…” என்று பேசக்கொண்டிருக்க,
ஒரு கேவலுடன், “குமரன் வீட்டுல அவருக்கு பொண்ணு பார்த்திருக்காங்கலாம்’ம்மா” என்று இருந்த இடத்திலேயே மடிந்தமர்ந்து அழுதாள், நயன மனோகரி.
அந்த அழு குரல் கஜேந்திரன் தாக்க, என்ன செய்கிறோம் என்றில்லாது அவர் நிலை தப்பி செய்த ஒன்று நயனியின் வாழ்க்கையை மாற்றி அமைக்க காத்திருந்தது.
“பொட்டக்கழுத” என்றவர் அவள் தலைமுடியைக் கொத்தாக பற்றித் தூக்கி, சல்லென்று ஒரு அறையை விட்டார் அவர் ஆசை மகளுக்கு.
அடுத்தடுத்து அடிகள் விழ, மஞ்சுவும் தாரணியும் தடுக்கத் தடுக்க அவர்களும் மானாவாரியாக அடி விழுந்தது.
கஜேந்திரனின் ஆக்ரோஷம் ஒருகட்டத்தில் மிதமிஞ்சிப் போய்விட்டது.
முற்றும் பிறழ்ந்து நயனியை ஓங்கி ஒரு உதைவிட, “அம்மா” என்ற பெண், மொத்தமாய் மயங்கி சரிந்திருந்தாள்.
❀
குமரனிற்கு அவன் ஐயாவிடம் பேசும் முன்பு சற்று அமைதியும் மன ஒருங்கிணைப்பும் தேவையாய் இருந்தது.
என்ன முயன்று அடித்துக்கொண்ட அவன் மனதை சமனாக்கும் மார்க்கம் அவன் ஒருநிலை படுத்தலை தாண்டி வேறெங்கும் செல்லவில்லை.
“ஐயா, இங்க கொஞ்சம் தள்ளி ஒரு சிவன் கோவில் இருக்கு. அங்க போலாங்கலா? அரை மணி ஆகும்” என்க, ஈசனின் அடியானவர் உடனே ஒற்றுக்கொண்டார்.
சூலூர் குளத்தருகே அமைந்திருந்த அந்த கோவிலுக்கு ஆண்டியப்பனை அழைத்துச் சென்றிருந்தான், சந்தனக்குமரன்.
மிகத் தொன்மையான கோவிலான அதில் எம்பெருமான் சுயம்பு மூர்த்தியாய் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் நோய் தீர்த்தருளும் வைத்தீஸ்வரனாய் கோவிக்கொண்டிருந்தார்.
அத்தனை அமைதியாய், மராமத்து செய்து விசாலமாய் தன் சகதர்மினியுடன் காட்சி தந்தார், ஈஸ்வரன்.
சுழன்றடித்த காற்றில் தரிசனம் முடித்து, கோவிலுக்கு முன்பிருந்த திண்ணை போன்ற இடத்தில் அமர்ந்துக்கொண்டனர் இருவரும்.
அஸ்தமிக்கும் சூரியனின் கதிர்களெல்லாம் குள நீரில் பட்டு தங்கமென ஜொலிக்க, அந்த இடமும் சூழலும் ஆண்டியப்பனை நெகிழ்த்தி இருந்தது.
‘என்ன வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற நினைப்புடன் அமர்ந்திருந்தவனிடம், “நம்ம விருமாண்டி பொண்ண உனக்கு முடிக்கலாமுட்டு இருக்கேன் தம்பி” என்றார் ஆண்டியப்பன் அமைதியாய்.
உடனே, “இல்லைய்யா. வேண்டாம்” என்றான் தலை குனிந்து.
“என்ன ஏதுன்னு கேக்காம என்ன?” அவர் ஆட்சேபிக்க,
நிமிர்ந்தமர்ந்தவன், “என்ன கேட்டாலும் எனக்கு விருப்பம் இல்லைங்கய்யா. அவங்ககிட்ட வேண்டாம் சொல்லிடுங்க” என்றான் உறுதியாய்.
பொறுமையிழந்த ஆண்டியப்பன், “வேண்டாம் வேண்டாம்’னா என்ன தம்பி நா அர்த்தம் கற்பிக்க? காரணத்த சொல்லுய்யா?” என்க, குமரனிடம் மௌனம்.
போட்டுடைக்க ஒரு கணம் ஆகாது தான். இருந்தாலும், பெற்றவரிடத்தில் பதமாய் சொல்ல வேண்டும் என்ற ஸ்தீரத்தை எடுத்திருந்தவனிடம் ஒரு தயக்கம்.
மிகுந்த எரிச்சல் மூண்டது ஆண்டியப்பனுக்கு. நல்ல வளமான இடத்தில் பெண் கிடைத்திருக்க, அதை அவர் தட்டிக்களிக்க எண்ணவில்லை.
மகனின் அசாத்திய மௌனம் அவரை கொஞ்சம் கொஞ்சமாய் சினக்க வைக்க ஆரம்பித்திருந்தது.
“அதுங்க.. ஐயா.. இங்க” என்றவன் இழுத்த இழுப்பிலேயே அவர் பொறுமை பறந்திருந்தது.
தோளிலிருந்த துண்டை உதறி அவன் முதுகிலேயே சுள்’ளென்று ஒரு அடியை வைத்திருந்தார்.
“வாயில என்னடா மாவா ஆட்டுற. வந்து போயினுட்டு, ஏ உயிர எடுக்காம துப்பித் தொல” என்றவர் வெங்கல குரல் பேச்சு, சற்று தள்ளி அமர்ந்திருந்தவர்கள் கருத்தையும் கவர்ந்திருந்தது.
பறக்கவிருந்த பொறுமையை இழுத்துப் பிடித்தவனாய், ஒரு நீண்ட மூச்சை எடுத்துவிட்டு, கண்ணை மூடிக்கொண்டான், குமரன்.
அவன் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் பார்த்த ஆண்டியப்பனின் வயிர் சுண்டி இழுத்தது.
நெஞ்சம் சற்று படபடப்பாகத் தான் இருந்தது இருவருக்கும்.
என்ன குண்டு வருமோ என்றவரும், எப்படி அதை பதமாய் இறக்குவது என்று இவனும் குறிப்பாய் இருக்க, மிகுந்த யோசனைக்குப் பின்
குமரனின், “நயனி” என்ற வார்த்தையில் முடிவுக்கு வந்துவிட்டார் ஆண்டியப்பன்.
ஆதலால், அது காதல் என்று!
அதை அவரால் சீரணிக்க முடியவில்லை. மெல்ல மெல்ல ஆலகால விஷத்தை குமரன் அவருக்குக் தருகிறான் என்றிருந்தது அவரின் எண்ணம்.
அதே தாக்கத்தில் அவர் கேட்ட கேள்வி, அவனை ஆட்டம் காண வைத்திருந்தது.
முகம் இறுக, “என்ன சாதிக்காரி?” என்றார் மரத்த குரலில்.
கண்ணை விரித்தவன், “ஐயா” என்றான் அதிர்வு மறையாது.
அவனுக்கு தெரியும் எங்கு அவன் காதல் பிரச்சனையில் வந்து நிற்கும் என்று.
ஆனால் இப்படி பொதுவில் அவர் கேட்பார் என்ற அனுமானம் இல்லாதவன், அதிர்ந்து தான் போனான்.
குமரன் சொல்லவும், யோசிக்காது காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து அவன் முகத்திலேயே விட்டெரிந்தார் கேட்ட ஆத்திரத்தில்.
“வேத்து சாதியா இருந்தாங்குடி சரினுட்டு இருப்பேன். போயும் கீழ் சாதிக்காரிய காதல் பண்ணிட்டு என்கிட்டைய எத்தன திண்ணக்கத்தோட வந்து சொல்லுற நீயி. ஒழிஞ்சு போடா, எனக்கு தலமவனே இல்லைனுட்டு இருந்துப்பேன்” என்றவர்,
“நாஞ்செத்தா கடைசி வாய் அரிசிக் கூட போட வராத” கன்னத்துச் சதை அதிர, கடுங்கோபத்துடன் இரைந்தவர் கண்ணீலும் கண்ணீர் மெல்ல கசிந்ததுவோ?!
வெக்கு வெக்கு என்று வெயிலில் செருப்பில்லாது நடந்தவரின் நிலை, அத்தனை உலுக்கி எடுத்தது.
அவர் நம்பிக்கை அவரை கைவிட்டதை ஏற்க முடியாது மருகி தவித்து நடந்தவர் நடையில் இருந்த தள்ளாட்டம்; போட்டடித்தது சந்தனக்குமரனை.
சுற்றும் மறந்திருந்தவனை ஆட்டப்படைத்தது ஆண்டியப்பனின் வார்த்தைகள்.
ஒரு கட்டத்தில் வெய்யிலின் தூண்டுதலால் பிரஞ்ஞை வந்தவன் அவன் ஐயாவைத் தேட, அவரோ தூரமாய் போய்கொண்டிருந்தார்.
அவனை அடித்து வீழ்ந்த ஆண்டியப்பனின் செருப்புகளை அள்ளியெடுத்தவன், நெஞ்சோடுப் பிடித்துக்கொண்டு அவன் தகப்பனை நோக்கி ஓடினான், அவன் வாழ்க்கையின் பிடிப்பை பிடிக்க.
எல்லாம் முடிந்தது என்பதை போன்றதொரு மனநிலை ஆண்டியப்பனுக்கு.
சாதியை பெரியதாய் மதித்து போற்றும் பெரிய தலைகளுள் அவரும் ஒருவர் தான். என்ன காரணத்திற்காகவும் அதை விட்டுக்கொடுத்தோ விட்டுவிட்டோ வாழ முடியாதவர்.
ம்ஹூம், வாழத் தெரியாதவர்.
கலப்பு என்பதைத் தாண்டிய ஒரு தீண்டாமை அவரை வெகு கொடூரமாய் பிடித்தாட்டியிருக்க, மகன் அதை தான் வேண்டும் என்று சொல்லும் போது ரத்தமெல்லாம் கொதித்தது.
“எங்க கை வெச்சிருக்கான் பாரு” என்று கண்ணீர் வழிய துடைத்துக்கொண்டவர் நடக்க, “ஐயா.. ஐயா நில்லுங்க” என்று குமரனும் மூச்சிரைக்க அவரை சமிபத்துவிட்டான்.
ஓடிவந்த வேகத்தில், “ஐயா” என்று ஆண்டியப்பனின் மேல் கையை அவன் பிடிக்க, “ச்சீ” என்று அவனை தொடாது விலகி நின்றிருந்தவரின் உதாசீனத்தை சந்தனக்குமரன் எதிர்பார்க்கவில்லை.
சமைந்துவிட்டான். மறு பேச்சில்லாது அவன் ஆண்டியப்பனையே பார்த்தபடி இருக்க, “ஏ வம்சத்தை அறுக்க வந்த எமன் நீயி. இன்னுமிக்க எங்க மூஞ்சிலையே முழிக்காதடா பாவி. இன்னையோட நீ செத்து போயிட்ட’’ என்றவர் திரும்பியும் பாராது போய் விட்டார்.
ஒரேடியாய் திருபுவனத்திற்கே சென்றும்விட்டார்.
அவன் கையில் இருந்த அந்த ஒரு ஜோடி செருப்பு மட்டும் தான் அவன் நிதர்சன நிலையை சொன்னது.
பெற்றோர் மீது பற்றில்லாத பிள்ளை இல்லையே அவன். ஈடற்ற மதிப்பில்லா பேரன்பை தான் இருவரிடத்திலும் வைத்திருந்தான், சந்தனக்குமரன்.
அந்த அன்பை அவனையும் அவன் நயனிக் கண்ணையும் ஒரு போராட்டத்திற்குப் பின் என்றாவது ஓர் நாள் ஏற்கும் என்று எண்ணியிருந்தானே!
மொத்தமும் பொய்த்துப் போய் விட்டது. அவர் மகனைவிட அவரின் அந்த உயர் சாதிதான் ஆகச் சிறந்தது என்று சொல்லி காட்டிச் சென்றுவிட்டாரே அவன் ஐயா.
“இன்னுமாடா இந்த சாதி சாகல” பக்கத்தில் நின்றிருந்த இளைஞன் அவனுடன் வந்தவனிடம் பேசியது கேட்டது.
ஒரு விரக்தி சிரிப்பொன்று தன்னால் உதிர்ந்து மடிந்தது குமரனிடம்.
அங்கு சாதி சாகவில்லை; மாறாக பெற்ற பிள்ளையை சாகடித்து சென்றிருந்தார் அவனை உயிரூட்டிய தந்தை.
எங்கு செல்ல என்று தெரியாது எப்படியோ தட்டுத் தடுமாறி, துக்கத்தை முழுங்கவும் முடியாது, வெளியே கண்ணீரை அடக்கவும் முடியாது; உள்ளுக்குள் புலுங்கி வெதும்பி ஹாஸ்டலுக்கு பக்கத்தில் இருந்த பூங்காவிற்கு வந்திருந்தான் குமரன்.
நயனியாவது சுற்றமாவது ஒன்றும் அவன் சிந்தையில் இல்லை. பதியவில்லை என்று தான் கூறவேண்டும்.
‘ஏ வம்சத்தை அறுக்க வந்த எமன்’ என்ற வார்தையில் மொத்தமாய் தளர்ந்திருந்தான், சந்தனக்குமரன்.
வண்டாய் ரீங்காரமிட்ட வார்த்தை அவனை வைத்து தைத்தது.
அங்கிருந்த கல் பென்ச்சில் படுத்தவன், “மீனாட்சி” என்றபடி அவன் நெஞ்சை தடவிட்டுக்கொண்டான்.
அவளை அன்றி அவனை தேற்ற யாரிருக்கிறார் இப்போது?!
கண்ணோறம் கரித்துக்கொண்டு வந்தது. நெஞ்சமும் நிலையற்ற துடிக்க, அடிவயிறும் பிடித்துப் பிசைந்தது.
“அம்மா” என்று அரற்றினான்.
இனி, மோகனா அவனிடம் பேச மாட்டார் என்ற கசந்த உண்மை புரிய, ஒரு கொடுமையான கேவல் பிறந்தது ஆண்மகனிடம்.
அவனுக்கும் மனதென்று ஒன்று இருக்கிறதல்லவா? அதிலும் வலியும் வேதனையும் பாய்ந்து வருமல்லவா?
யாரைதான் விட்டது இந்த விதி?
மனிதனாய் பிறந்தவனுக்கு வாழ்க்கை அமையும் முன்பு வலிகளை கடந்து வந்துதான் ஆகவேண்டும் என்ற தலையெழுத்து இருப்பின் அதை சகித்து தாண்டி தானே வந்தாக வேண்டும்.
பெற்றவருக்காய் காதலையோ;
காதலுக்காய் பெற்றவரையோ விட்டு வருதல்ல ஆண்மை.
நின்று, போராடி, வென்று, வாழ்ந்து காட்டுதலில் தான் மொத்த அத்தியாயமுமே அடங்கியிருக்கும்.
காத்திருப்பின் ஸ்வீகரிப்பு எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. அது குமரனுக்கு வழிய வந்திரு
க்கிறது.
காத்திருந்து காதலையும் பெற்றவரின் சம்மதத்தையும் வெல்லும் எண்ணத்துடன் இருப்பவனின் வைராக்கியம் வெல்லுமா பார்ப்போம்.
ஆனால், என்ன நடந்தாலும் சந்தனக்குமரன் வாழ்ந்து காட்டுவான்!
•••

Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 06
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.