New member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 19
- Thread Author
- #1
நிச்சயமாய் அந்நேரத்திற்கு யாரும் சரபேஸ்வரனை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை.
விடிந்தும் விடியாத காலை பொழுதில் சூரியனின் கதிர்கள் கூட முழுமையாய் பாரில் பாதியாத வேளையில் முக்கால்வாசிப் போர் பாதித் தூக்கத்தில் தான் இருந்தனர்.
சட்டென்று ஒரு பரபரப்பு சூழ, அசாதாரண மௌன நிலையை கலைத்துக்கொண்டு ஒரு ஆட்டம் ஆடி நின்றது ஹாஸ்டல்.
புதியவர்கள் எல்லாம், “டேய் எம்.டி சார் வந்துருக்கார்டா. ஹேமாம்மாவும் கூட வந்திருக்காங்கடா” என்று சக நண்பர்களை எழுப்புவது நன்று காதில் விழுந்தது.
“தூங்கறவங்கள எழுப்பாதீங்க தம்பி. குமரன் எங்க? எந்த ரூம்?” என்றவர் கேட்டதை எல்லாம் அத்தனை ஆச்சர்யமாய் பார்த்து நின்றனர் ஆண் மக்கள்.
இன்னும் பலரிடம் சரபேஸ்வரன் என்ற பின்பம் ஒரு படையை நடத்தும் தளபதியாய், உச்ச நட்சத்திரத்தினை பார்த்து நிற்கும் பரவசத்துடன், கொஞ்சம் கூச்சம் மேலிட்டு என்று கலவையான மரியாதையோடு தான் இருந்தது.
அப்படிபட்ட அவர் இப்போது அவர்கள் இடத்திற்கு வந்தால்? முதலில் எந்த முதலாளி அப்படி வருவார் என்றவர்களின் விவாதம் அப்போதே துவங்கியிருந்தது.
ஹேமாவை முன்னரே நிற்க சொல்லியவர், ஒருவன் வழிகாட்டுதலில் முதல் மாடியில் இருந்த குமரனின் அறையை நாசுக்காய் தட்டி காத்திருந்தார்.
எத்தனை பதவிசு அவர் நடவடிக்கையில் என்று அதையும் பார்த்து வியக்காது இல்லை மறற்வர்கள்.
கதவை திறந்த கார்த்தி, அவரை அங்கு எதிர்பாராது பே’வென நின்றுவிட்டான்.
“உள்ள வரலாமா?”
“@#₹!”
“தம்பி?” என்று அவன் தோள் தட்ட,
“ஸா…ர்” என்று வழிவிட்டவன் நிகழ்வுக்கு வர நேரமானது.
மேற்சட்டையின்றி இருந்த குமரன் பட்டென்று ஒரு துண்டை எடுத்து மேலே போட்டவன், “ஸார்” என்று எழுந்துக்கொண்டதில் ஒரு குட்டி பரபரப்பு மட்டும்.
“எப்டி இருக்கீங்க குமரன்” என்றபடி அங்கிருந்து ஜன்னல் மேடையில் அவர் சாதாரணமாய் அமர, இருப்பில்லை கார்த்தியிடம்.
அவன் வெளியே நாற்காலி எடுக்க வரவதற்குள், ஒருவன் எடுத்துவந்து அறைக்குள் போட்டிருந்தான்.
சரபேஸ்வரன், “இல்ல, வேண்டாம். எடுத்துடுங்க” என்க,
“உட்காருங்க ஸார். இங்கன தூசியா இருக்கப் போகுது” என்றான் மற்றொருவன்.
“ம்ம்.. கீழ ஹேமா மேம் இருப்பாங்க. அவங்களை பாருங்க” என்றவர் வார்த்தையில், குமரனிடம் தனித்து பேச வேண்டும் என்ற செய்தி இருந்ததை உணர்ந்து, நகர்ந்துவிட்டனர்.
ஒரு அரை நொடி குமரனை உற்றுப் பார்த்தவர், “உங்கள மாதிரி ஹார்ட் வர்கிங் பர்ஸன் தான் எனக்கு தேவை குமரன். உங்கள பத்தி ஹேமா மேம் சொன்னதுனால நான் வேலைக்கு எடுத்தேன்னு நெனக்கிறீங்களா?” என்றவர் கேட்டு நிறுத்த, கேள்வியாய் அவரை பார்த்து நின்றான்.
“சத்யம விட்டு போறதா கேள்வி பட்டேன்” என்றவர் நிறுத்த, அதை ஆதரிப்பதைப் போன்ற தோரனை குமரனிடம்.
“சத்யம் என்னோட பதனஞ்சு வருஷக் கனவு தம்பி. யாரும் எனக்கு தூக்கி எல்லாம் கொடுத்திடலை. ஒரு ஒரு செங்கலுக்கும் என்னோட உழைப்பு இருக்கனும்னு பாத்து பாத்து செதுக்கியிருக்க, அங்க அனுபவமில்லாத, எனக்கு நம்பகம் இல்லாதவங்களையா நா வேலைக்கு எடுப்பேன்” என்று சிரித்த மனிதர் புதியதாய் தெரிந்தார்.
சரபேஸ்வரன், “உங்களையும் தெரியும், உங்க சுத்தயுள்ளவங்கள பத்தியும் எனக்குத் தெரியும்” என்றவர் பேச்சில் அத்தனை அடர்த்தி.
குமரன் கேட்டறிந்த வரை, சரபேஸ்வரன் அவர் தந்தையின் ஸ்தபன கிளையை கோவையில் ஆரம்பித்திருக்கிறார்.
உழைப்பை மதிப்பவர்; கஞ்சம். பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி; ராஜா வீட்டு இளங்காளை உடன் அவர் போட்ட ஒரே ஒரு கன்றுக்குட்டி.
சத்யமின் திறப்பு விழாவின் போதுதான் வெளி உலகம் அவர் மனைவியை பார்த்தது. கண்ணை விரித்து வியந்தது!
அவ்வளவுதான். ஆனால் இவர் விடும் கதை, என்று நினைத்தவன் புருவம் தன்னால் குறுகிக்கொண்டது.
அவன் பாவனையில் சின்னதாய் சிரித்தவர், “உன்ன காந்திபுரம் கடைல பார்த்திருக்கேன். அங்க உன் வேலை, தொழில் சுத்தம் எல்லாம் ஆதித்யன் சொல்லவும், நானும் பார்த்து தெரிஞ்ச பின்ன தான் பட்டு செக்ஷனுக்கே போட்டேன்” என்க, அவன் கண்கள் விரிந்தது.
ஆதித்யன், அவன் முன்னர் வேலையில் இருந்த கடையின் முதலாளி.
குமரன், “அவரா?” வாயை பிளக்க,
“ம்ம், என்னோட நண்பன்” என்றார் சிரிப்பு மாறாது.
“வெளில எப்டியோ ஆனா உன்ன எனக்கு தனிப்பட்டு பிடிச்சதால தான் நீ சத்யம் உள்ள வந்ததே” என்றவர்,
மாறிய முகபாவத்துடன், “சில விஷயங்கள் தொழில் செய்ற இடத்தில் நமக்கு பிடிக்கலைனாலும் இருந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கும். சில சமயம் அது நமக்கு அதீத தேவைய கூட தரலாம். அதுக்காக தான் அத கூடவே வெச்சிருப்போம்” என்றவர் குரலின் ஆழம் அவனை கூர்மையாய் கவனிக்க வைத்தது.
குமரன், “காமராஜ்” என்றான் அழுத்தமாய்.
“என்னடா இவர் கடையோட மேனேஜரையே நம்மகிட்ட வந்து குறை சொல்லுறாரேன்னு நெனைக்காத” என்றவர் அவன் தோளில் தட்டிக்கொடுத்து,
அவன் கண்களை பார்த்தவண்ணம், “அவர் எப்படி பட்டவரா இருந்தாலும் நேத்து அவர் விட்ட வார்த்தை ரொம்ப தப்பு குமரன்” என்றார்.
ஏதோ உள்ளூர குளிர்ந்த உணர்வு குமரனுக்கு. யாருக்கும் அவனை அவன் நிரூபிக்க தேவையில்லை தான்.
இருந்தாலும், அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் அதிபரே அவனுக்கு பரிந்து பரிவாக பேசுவது, உச்சி குளிர்ந்துவிட்டது குமரனுக்கு.
“நான் அவரையும் சரின்னு சொல்லலை. நீங்க பண்ணதும்..” என்று நிறுத்த, குமரன் முகத்தில் ஒரு சங்கடம்.
“தப்பா எதுவும் இல்லை ஸார். நாங்க கல்யாண் செய்துக்க போறவங்க தான். முந்தா நாள், முத்துராமன், நயனி வீட்டுக்கு போய் ப்ரச்சனை பண்ணியிருக்கான். அதான் என்கிட்ட சொல்லிட்டு இருந்தா. அவளோட பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம். அதை பாதிக்க நானே காரணமா இருக்க மாட்டேன்.” தன்னையும் தன்னவளையும் எங்கும் தாழ்த்திப் போகாது உண்மையைப் பேசினான்.
அந்த பேச்சு பிடித்திருந்தது; சரபேஸ்வரனை கவர்ந்தது. இருந்தும் அவர் ஸ்தாபனத்தில் நடந்ததை அவர் ரசிக்கவில்லை என்று அவர் முகம் காட்டிக்கொடுக்காமல் இல்லை.
“ம்ம்.. இனி இப்படி நடக்காம பார்த்துக்கோங்க. காயம் எல்லாம் சரியான பின்ன அடுத்த வாரம் கடைக்கு வாங்க” என்றவர் நகர,
குமரன், “நன்றி ஸார்” என்றான் உள்ளார்ந்து.
சன்ன புன்னகையோடு அதை ஏற்றவர் முன்னே நடக்க, நிச்சயம் சத்யமை விட்டு போகும் எண்ணம் துளியும் இல்லாது போனது குமரனிடம்.
ஹேமா, பாண்டியிடமும் கார்த்தியிடமும் பேசியபடி இருந்தார்.
கார்த்தி அழைத்த போது அழைப்பை ஏற்க முடியாத சூழலை அவர் சொல்ல, பல்லைக் கடித்து நல்ல வார்த்தைகளை இறக்கினான்.
“அந்தாள் எல்லாம் சரியான பொம்பள பொறுக்கி மேடம். அவனும் அவன் பார்வை ம**ம்” என்க, சரபேஸ்வரர் சமீபத்துவிட்டார்.
ஹாஸ்டல் வார்டன், முருகையனிடம் பேசியவன் சமையல் செய்யும் இடம், ஸ்டோர் ரூம், இரண்டாம் நிலை குடோன், மற்ற ஊழியர்களின் அறைகள் என்று பார்வையிட்டவர் கிளம்ப ஏழரை மணியானது.
ஹேம்வும் குமரனிடம் பேசி நலனை விசாரித்த கையுடன், தனித்து ஒரு வார சம்பள பணத்தை தந்தார்.
சிலவற்றை நேரடியாய் முதல் போட்டவர்கள் தரமாட்டார்கள் தானே!?
இருவரும் கிளம்ப, இளம் வெய்யிலில் பளபளத்த கருப்பு ஜாக்குவாரை சரபேஸ்வரன் இயக்கி வந்தார்.
சற்று பொறுத்து, ஹேமாவின் கணவர், சைலேந்திரன் அழைத்திருந்தார்.
மேலோட்ட பேச்சு முடிந்து, சரபேஸ்வரனும் அவரிடம் பேசி வைக்க, ஹேமாவின் மௌனம் புரிந்து பேச்சை எடுத்தார், சரபேஸ்வரன்.
“நமக்கு வேலை ஆகனும் ஹேமா. இப்படி பேசினா தான் இந்த பசங்களுக்கு சாமரம் வீசுன மாதிரி இருக்கும். ஒன்னுக்கு ஒன்னு சலச்சதில்லை. எனக்கு அந்தாளும் வேணும் இவனும் வேணும். ரெண்டையும் நா சரியான சுக்கான்ல கொண்டு போனாதான், சத்யமுக்கும் எனக்கும் ஃப்ராபிட்” என்றார் பக்கா முதலாளியாக.
ஹேமாவிற்கு இதெல்லாம் சாதாரணம் தான். இருந்தாலும், சரபேஷ்வரன் மேல் ஒரு தாங்கல் இல்லாமல் இல்லை.
என்ன இருந்தாலும் அவர் காமராஜை ஏதாவது திட்டி, சஸ்பென்ட் செய்திருக்க வேண்டும் என்பது அவரின் எண்ணம்.
“ஹேமா?”
கடுப்பில், “ரோட்ட பார்த்து வண்டிய ஓட்டு சரண்” என்றுவிட்டார்.
“ஓய், நான் ஆன் டியூட்டில இருக்கேன், ஸார் சொல்லு” அவர் வம்பிலுக்க,
“ம்ப்ச், போடா” என்றுவிட்டு கண்மூடி சீட்டில் சாய்ந்துவிட்டார்.
சரபேஸ்வரனிற்கு சொந்தமான வீடு நகரின் மையத்தில் இருந்தாலும் இப்போது குழந்தை(கள்!) மனைவியோடு அவர் வசிப்பது மாதம்பட்டியில் தான்.
பண்ணையும் தோப்பும், இதமான சீதோஷ்ண நிலையும் திராட்சை தோட்டமும் அதன் நெடுவில் அவர் வீடும் என்று கிராமத்து வீட்டில் இருப்பதை தான் சரபேஷின் மனைவி விரும்புவார்.
இன்று, அதை ஆழ்ந்து அனுபவித்தபடி சரபேஷின் வீட்டை அனுகியவர்களை வரவேற்றார், அவ்னி சரபேஸ்வரன்.
✽
தை மாதம் துவங்கியிருந்தாலும் பனியின் அடர்த்தி துளியும் குறையாது குளிரால் நடுங்க வைத்து மிரட்டியது அரவங்காடு.
மேடான இடத்தில் அமைந்திருந்த ரிசார்ட் ஒன்றில் தன் கை வலியோடுத்து துவளும் வரை சவுக்கம்பூட்டால் அவனை வெளுத்துக்கொண்டிருந்தார், காமராஜ்.
அவரை சுற்றி ஐந்தாறு பேர் நின்றிருக்க, வலி தாங்காது ஒரு கட்டத்தில் மயங்கி மரண காயம் வாங்கியிருந்தான், முத்துராமன்!
“செத்துட்டானா பாருங்கடா” என்று கத்தியவரின் சொல்லுக்கு இணங்கி, முத்துராமனை பரிசோதித்தனர்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சுடும் சார்” என்றான் ஒருவன்.
“ம்ம்.. ஜிப்சில தூக்கி போட்டு போயி தர்மாஸ்பத்திரியில போடு போ. இங்ககிங்க செத்து தொலைய போகுது” என்றபடி நாட்டு சரக்கில் மூழ்கினார்.
இரண்டு நாட்கள் ஆகியிருந்தது காமராஜ் சத்யம் சென்று.
வந்ததில் இருந்து, பொண்ணும் சரக்கும் அடியும் என்று ரிப்பீட் மோடில் சென்றுகொண்டிருக்க, அதை தடுக்கவென முத்துராமன் மொத்தமாய் போக இருந்தான்.
அவருக்கு என்று வீடு இருந்தாலும் தனியாய் இப்படி ஒரு அரக்க வாழ்க்கை. சுய ஒழுக்கம் தப்பியவரின் நடவடிக்கையில் எல்லாம் பிழைதான்.
மழை வெழுத்து வாங்க, வானிலை மோசமானது.
சாயந்திரம் போல் தூக்கம் காலைந்து லூங்கியை சரி செய்தபடி வந்தவர் எண்ணம் முழுக்க ஹேமாவும் நயனியும்.
அவர் பொல்லா மூளை பல கணக்கை மந்தமாய் போட்டாலும் உடல் ஸ்டெடியாய் இருந்தது.
அங்கிருந்த மேசையில் அமர்ந்தவர், “டேய் சிவா, அந்த ஹேம லட்சுமிய எதாவது செஞ்சே ஆகனும்டா. ***, ஏ பேர நாரடிச்சுட்டா ****” என்றவர் சிவந்த கண்களில் வேட்டையாடும் வெறி.
“என்னனு மட்டும் சொல்லுங்க சார், முடிச்சுட்டு வரோம்” என்றவன் கூராய் நின்றான்.
“ரெண்டும் பசங்க தானே அவளுக்கு. அதுங்க முன்னாடியே அவள தட்டி தூக்கு. ரொம்ப வேண்டாம், ஆறு மாசமாவது அவ கொட்டம் அடங்கியிருக்கனும்” என்றார் அதீத வன்மத்துடன்.
அவரின் அளவும் அதுதான். ரொம்பவெல்லாம் போகமாட்டார். இருந்தாலும், இந்த காழ்ப்புணர்ச்சி கூட பின்னாளில் அவரின் கணக்கில் பலமாய் ஏறி அவரை குழியில் தள்ள அவராய் போட்ட முதல் சுழி.
“அப்போ அவ” என்று வந்தான் வேறொருவன்.
“ம்ம்” என்று தாடியை சொறிந்தவராய்,
“அந்த குமரனை மொததமா ஏதாவது செய்யனும். அதுக்கான ஆள பாரு, சத்தங்காட்டாம விசாரி. இப்போ அந்த புள்ளைய துள்ளத் துடிக்க வெச்சாகனும். சும்மா எல்லாம் அவன உட்கார விடக்கூடாது” என்று நயனிக்கு ஆபத்தை ஏற்பாடு செய்துவிட்டார்.
அதற்கான வேலையில் ஆட்கள் இறங்க, அவரின் எண்ணத்தில் வந்ததெல்லாம் அவர் பேசிய ஆடியோ வாய்ஸ் தான்.
அதை யாரெல்லாம் கேட்கக் கூடாது என்று நினைத்தாரோ, அவர்களே கேட்கவும் செய்திருக்க வேலையிடத்தில் இருந்த மானமும் போய், வீட்டில் இருந்த மரியாதையும் காவு வாங்கியிருந்தார் ஹேமா.
ஆம், அவர் பேசிய ஆடியோவை வாட்ஸ் ஆப் குரூபில் இருந்து எடுத்த யாரோ, அவரின் மூத்த மகனிற்கும் அனுப்பியிருந்தான்.
யார் செய்த வேலை என்று தெரியவில்லை. ஆனால் அதற்கெல்லாம் காரணியான ஹேமாவை கன்னங்கன்னமாய் அறைந்து வெளுக்க ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது, காமராஜிற்கு.
“என்ன’ப்பா இது! ச்சீ, வயசு என்னாச்சு உங்களுக்கு, என்ன பேசியிருக்கீங்க. இத்தன அசிங்கம் பிடிச்சவரா நீங்க. எங்க அம்மாவுக்கு இப்படி ஒரு துரோகம் பண்ண எப்படி துணிஞ்சீங்க? இன்னும் எத்தன பேரோட கான்டேக்ட்ல இருக்கீங்க” என்று ஒரு மகன் தந்தையிடம் கேட்க கூடாத கேள்வியெல்லாம் அவரிடம் கேட்டு தந்தையின் தொடர்பையே முறித்துக்கொண்டான் காமராஜின் மானமுள்ள மகன்.

Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 04
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.