காதல் தீ❤️‍🔥-4

New member
Joined
Aug 16, 2025
Messages
27
அந்த ரெஸ்டாரன்ட் இன் மேனேஜர் ஜெனியை தவறாக பேசிக் கொண்டிருந்ததை , எந்த நிமிடமும் வெடித்து விடும் எரிமலை என்ற விதத்தில் தான் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்வி.


சரியாக அப்பொழுதுதான் அங்கு அந்த ரெஸ்டாரன்ட் இன் உரிமையாளர் மகள் சரண்யா ஜெனியை காண்பதற்காக வந்திருந்தாள்.

அப்பொழுது அந்த மேனேஜரின் கன்னத்தில் ஒரு அரை விழுந்தது. ஆம் சரண்யா தான், அரைந்திருந்தாள்..

"மைண்ட் யுவர் வேர்ட்ஸ், யாரைப் பார்த்து என்ன பேசிட்டு இருக்கீங்க... ஹீ இஸ் மை ஃபிரண்ட் ,எனக்கு இருக்கிற அதே மரியாத அவளுக்கும் இருக்கணும். நான் எத்தனையோ தடவை சொன்ன அவ கிட்ட ,இந்த ஒர்க் எல்லாம் வேண்டாம் ...நானே உனக்காக எல்லாத்தையும் பண்றேன், அவ தான் கேக்காம இங்க வொர்க் பண்றேன்னு சொன்னா..."

"இவ்ளோ சீப்பா தான் உங்களோட ஒர்க்கர்ஸ்ஸ நடத்துவீங்களா? உங்களா எல்லாம் நம்பி பெண்கள் எல்லாம் எப்படி வேலைக்கு வைக்கிறது..."


"மேம் நீங்க தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க ,இவதான் அவங்ககிட்ட மிஸ்..."அவன் பேசி முடிக்கும் முன்பே மீண்டும் அந்த மேனேஜரின் கண்ணத்தில் அரை விழுந்தது. இதுவரை அந்த மேனேஜர் ஜெனியை வசை பாடி கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் கூட்டம் ,கூட இப்பொழுது வாயை மூடிக் கொண்டது .


ஆர்விக்கு இப்பொழுது அனைத்து கோபமும் ஜெனியின் மேல் தான் வந்தது....


"அந்த. #@#@#@@அவ்ளோ பேசிட்டு இருக்கான், இவ என்னடான்னா மண்ணு மாதிரி நின்னுட்டு இருக்கா, திரும்பி ஓங்கி ஒன்னு வச்சிருந்தா... அவன் வாயை மூடி இருப்பான்ல... சரியான இடியட்" என்று ஜெனியை மனதில் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான் ஆர்வி.


இனி இந்த ரெஸ்டாரண்டில் வேலை செய்ய வேண்டாம் என்று ஜெனியிடம் கூறியவள், அதற்கு முன்பே அந்த மேனேஜரை வேலையை விட்டு நீக்கி சரண்யா.


ஜெனியின் மனம் மாறும் பொருட்டு, அன்று நைட் பார்ட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தாள் சரண்யா. ஜெனியை பொருத்தவரை இவ்வாறான பார்ட்டிகள் எதுவும் அவளுக்கு பிடித்தமில்லை. சரண்யாவின் வற்புறுத்தலின் பேரில் இப்பொழுது பாட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தாள்.

ஜெனி நினைத்தவாறு இது சாதாரண பார்ட்டி அல்ல, அங்கிருந்த அனைவரும் போதை வஸ்துகளை மிக சாதாரணமாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

அதை கவனித்தவள் ஏதோ தவறாக நடக்க இருக்கிறது என்று உணர்ந்து சரண்யாவை அவ்விடத்திலிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று யோசித்தாள்.

"ப்ளீஸ் சரா, எனக்கு என்னமோ இங்க எதுவும் செட் ஆக மாட்டிற்கு நாம போகலாமா?"

"என்னடி இப்பதானே வந்தோம் கொஞ்ச நேரம் என்ஜாய் பண்ணு ஏன் தேவையில்லாம எல்லாத்தையும் போட்டு குழப்பிக்கிற?"என்று பதில் உரைத்தாள் சரண்யா... என்னதான் பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும் வீட்டில் மிகுந்த கட்டுப்பாடுடன் பொறுப்பாக வளர்க்கப்பட்டவள் சரண்யா. அவளது தந்தை ஒரு நேர்மையான அரசியல்வாதி மற்றும் தொழில்அதிபருமான விஷ்வநாதனின் வளர்ப்பு.


சரண்யா இது போன்ற பாட்டிகளின் கலந்து கொள்வாள் தான் ஆனால் எந்தவிதமான மதுபானங்களையும் அல்லது போதை வஸ்துக்களையும் பயன்படுத்த மாட்டாள்.


வருங்காலத்தில் அவள் தான் தனது தந்தையின் தொழில்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால், இவ்வாறான பார்ட்டிகளில் கலந்துகொண்டு அவளுடைய வயதிற்கு ஒற்ற இளைஞர்களின் விருப்பு வெறுப்புகளை பற்றியும் மேலும் அவர்களுடன் ஒரு சுமூகமான உறவை கடைபிடிக்கவும் தான் வேறு வழி இல்லாமல் கலந்து கொள்கிறாள்.


இன்று சரண்யாவின் மிக நெருங்கிய பேமிலி பிரண்ட் இன் மகளது பர்த்டே பார்ட்டி ஆகையால் அங்கிருந்து, உடனடியாக கிளம்ப முடியாது என்பதால் ஜெனியின் வற்புறுத்தல்களை அவள் சற்று தள்ளி வைத்திருந்தாள்.


"ஏய் யாருடா அந்த பொண்ணு?"என்று ரித்விக் தனது நண்பன் பிரணவிடம் விசாரித்தான்.

"அவ தாண்டா, எம் பி விஸ்வநாதன் ஓட ஒரே பொண்ணு சரண்யா"

"அவளை முன்ன பின்ன நான் இந்த மாதிரி பாட்டில பார்த்ததே இல்லையே?"

"அவ அதிகப்படியான பார்ட்டி எல்லம் கலந்து கொள்ளவதில்லை,ஆர்தோடாக்ஸ் பேமிலி"

"அது யாருடா சரண்யா கூட இந்த இடத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம ஒருத்தி"


"யாரோ ஜெனி, சரண்யாவோட கிளாஸ் மெட்டு அன்ட் அவளோட ஃப்ரெண்ட்"


"டிரஸ்ஸ நம்மல மாறி கிளாஸ்சா போடலனாலும் ஆளு பார்க்க ஒரு மாதிரி கிக்கா தான் இருக்கா"


"இந்த சரண்யாவ கரெக்ட் பண்ணா செமையா இருக்குமில்ல, எம்பி பொண்ணு, மேல அவங்களோட பிசினஸும் நம்பர் ஒன் இல்ல"


"டேய் நீ நினைக்கிற மாதிரி அவ்வளவு ஈஸியா எல்லாம் அவளை கரெக்ட் பண்ண முடியாது டா"என்றான் பிரணவ்.


"அத நான் பாத்துக்குறேன் நீ உன் வேலைய பாரு"என்று கூறி அவ்விடத்தை விட்டு நகந்தான் ரித்விக்.

கவுண்டரில் தனக்கான குளிர்பானத்தை வேலையாட்களிடம் ஆர்டர் செய்துவிட்டு, தனது தோழிகளுடன் சென்று டான்ஸ் ஃப்ளோரில் இசைக்கு ஏற்ப வளைந்து நெளிந்து நளினமாக ஆடிக் கொண்டிருந்தாள்..
சரண்யா.


அதேசமயம் அவளை கண்காணித்துக் கொண்டிருந்த ரித்விக் அங்கு வந்து, சரண்யா ஆர்டர் செய்திருந்த குளிர்பானத்தில் இதை கலக்குமாறு ஒரு சிறிய பொட்டலத்தை அந்த வெயிட்டரிடம் கொடுத்து அதோடு சில கட்டுகள் நிறைந்த பணத்தையும் கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றிருந்தான்.


அப்பொழுதுதான் வாஷ்ரூம் சென்று விட்டு வந்த ஜெனி, சரண்யா வை வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ரித்திக் மீது தனது கவனத்தை செலுத்தினாள்...


ஜெனியை பார்த்தவுடன் டான்ஸ் ஃப்ளோரிலிருந்து வெளியே வந்த சரண்யா , ஜெனியையும் இழுத்துக் கொண்டு டான்ஸ் ஃப்ளூரில் ஐக்கியமானால்.


ஜெனிக்கு அங்கு நடப்பது எதுவும் சரியாக படவில்லை, அவள் கண்கள் டான்ஸ் ஃப்ளூரிலிருந்து... பார் கவுண்டரில் இருந்த ரித்திக் மீது தான் இருந்தது.

சரியாக அதே நேரம் ஜெனியின் கைகளை பற்றி ஒரு உருவம் நடனத்தை ஆட துவங்கியது. அவன் முகமூடி அணிந்திருந்தான்.

"ஹே பேபி கேர்ள், லெட்ஸ் டான்ஸ்"என்று அவனது சிம்மக் குரல் பெண்அவளிடம் இடம் பெண்மையை கையாண்டது.


அந்த கலவையான மின்னியெறியும் விளக்குகளுக்கு நடுவே ஜெனியின் தேன் நிற விழிகளும், முகமுடி காரனின் பச்சை மற்றும் நீலம் நிற விடும் ஒன்றை ஒன்று சந்தித்து கலந்து கொண்டன...


ஜெனியின் வலது கையில் தனது வலது கையை கோர்த்தவன், அவளது இடது கையை எடுத்து தனது தோள்பட்டையில் வைத்தான். பின் இருவரும் ஒன்றாக இணைந்து நடனமாட தொடங்கினர். சாதாரணமாக ஆரம்பித்த அவர்களது நடனம் வளைந்து நெளிந்து நீரோடையில் நீந்தும் மீன்களைப் போல மிகவும் அழுத்தமாகவும் அனைவரும் ரசிக்கும் வண்ணமும் உருகி உருகி ஸேல்சா நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

ஒரு பத்து நிமிடம் நடனத்திற்கு பிறகு, இறுதியாக ஜெனியை தனது வலது கையால் தாங்கி நடனத்தை முடித்து இருந்தான் ஆர்வி. தற்பொழுதும் இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்து தான் இருந்தது. பலமாக மூச்சு வாங்கியது இருவருக்கும்.

அவள் அவனைப் பார்த்த இரண்டு வினாடிகளிலேயே ,அது அவன் தான் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டாள் ஜெனி.


அவளை நேராக நிறுத்தியவன், அவளை விட்டு விலகி கூட்டத்தில் எங்கோ மறைந்து விட்டான்... அவனைத் தேடிக் கொண்டிருந்த ஜெனியின் விழிகளில் இப்பொழுதுதான் நாற்காலியைப் பற்றி நிற்க முடியாமல் அதில் சரிந்து அமர்ந்த சரண்யாவை பார்க்க முடிந்தது.

தனது தலையில் அடித்துக் கொண்ட ஜெனி, அவனை சந்தித்த மோனநிலையில் இருந்து வெளியில் வந்திருந்தாள். "அவனை பார்த்தா உலகத்துல என்ன நடக்குதுன்னு எதுவுமே தெரிய மாட்டேங்குது, சரண்யாவை இந்த நிலைமையில் கவனிக்காமல் விட்டுட்டோமே" என்று நொந்து கொண்டாள் ஜெனி.


ஓடி சென்று தனது தோழியை எழுப்பு நிறுத்தியவள், அவளது நடவடிக்கைகள் எதுவும் சரி இல்லை என்பது நன்றாக தெரிந்தது. யாரோ அவளை இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்பதும் புரிந்து கொண்ட ஜெனிக்கு அவளை எப்படியாவது இங்கிருந்து வெளியில் அழைத்து செல்ல வேண்டும் என்று நினைத்தால்...


சரியாக அதே நேரம் அங்கு வந்த ரித்விக் மற்றும் பிரணவ் அவர்களுக்கு உதவி புரிவதாக கூறியிருந்தனர். எப்பொழுதும் சரண்யாவின் பாதுகாப்பிற்காக ஓரிரு பவுன்சர்கள் அவளுடனே இருப்பார்கள். ஆனால் இன்று அவளே அவர்களை விடுமுறை அளித்து அனுப்பியிருந்தாள்..

மேலும் சரண்யா தான் காரை டிரைவ் செய்து வந்திருந்தாள்... ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவர்களிடம் உதவியை ஏற்றுக் கொண்டாள் ஜெனி. ஆனாலும் அவர்களுடைய பார்வை சரண்யாவின் மேல் தவறாக படிவதை நன்றாக உணர்ந்திருந்தாள்...


மூவரும் கார் பார்க்கிங்க்கு வந்து சேர்ந்தவுடன், ரித்திக்... பிரணவிடம் கண்களாலே சைகை செய்தான். அவனும் சரி என்று அவனுக்கு தலையசைப்பை கொடுத்து... ஜெனி இடம் தனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்று கிளம்பி இருக்க... அதே நேரம் அங்கு மேலும் 5 இளைஞர்கள் வந்து சேர்ந்தனர்.


"என்னாச்சு ரித்திக் ஏதாச்சும் ப்ராப்ளமா, ஹெல்ப் ஏதும் பண்ணனுமா?"என்று அவர்கள் கேட்ட தோரனையே ஒரு மார்க்கமாகத்தான் இருந்தது.

"ஒன்னும் இல்ல இவங்க என்னோட பிரண்டு, லைட்டா மயங்கிட்டாங்க அதுக்காக தான் ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்"என்று கூறிய ரித்விக் அவர்களுக்கு கண்ணை காட்ட.

மொத்தம் ஆறு பேர் அவர்களை சுற்றி வளைத்திருந்தனர் ரித்திக் உட்பட.

இப்பொழுது ஜெனிக்கு நன்றாக புரிந்தது. அவர்களின் திட்டம், அதே நேரம் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு அவர்களுக்கு அருகில் வந்து நின்றான் பிரணவ்.

அந்த இளைஞர்கள் சரண்யாவை வந்து தூக்க முயலவும் ஜெனி அவர்களை தடுத்தாள்...


"இங்க இருக்கிற ஒருத்தன் கை,அவ மேல பட்டுச்சு அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்"என்று சிறுத்தையாக சீறினால் ஜெனி.


அவளது பேச்சை யாரும் மதிக்கவே இல்லை அனைவரும் ஜெனியை நக்களாக பார்த்து சிரித்தனர்.

"சும்மா இருக்க மாட்டியாமே என்ன பண்ணுவ, என்ன பண்றதுன்னு நான் சொல்லட்டுமா?"என்று அந்த கூட்டத்தில் ஒருவன் கூற இன்னொருவன்...

நான் சொல்றேன் மச்சான், "உள்ள ஆடுனல்ல ஒரு ஆட்டம் அதே மாதிரி இங்கேயும் ஆடு நாங்க இவ்ள விட்டுருவோம்"என்று சிரிக்க ...


"ஆனா ஒரு சின்ன கண்டிஷன்ஸ், நீ போட்டிருக்கிற டிரஸ் இல்லாம"என கூற அங்கே இருந்த அனைவரும் "ஹோ ஹோ"என்று கோரஸ் பாடினர் வரவிருக்கும் ஆபத்து தெரியாமல்....


"அவள மாதிரி நீ பணக்காரி இல்ல நா கூட ,ஆளு சும்மா நச்சுன்னு தான் இருக்க. நீ ஒருத்தி நாங்க ஆறு பேருன்னு பயப்படாதே... உனக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பணம் வாங்கிக்கோ... இது ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டி மிஸ் பண்ணிடாத"என்று கூறினான் ரித்திக்.


தனது தோழியை அவளது காரில் படுக்க வைத்தவள், மீண்டும் அந்த இளைஞர்களை நோக்கி திரும்பினாள்... ஆனால் இப்பொழுது அவளிடம் இருந்த மென்மை மொத்தமாக மாறியிருந்தது...

"விஸ்வநாதன் சார், சரண்யா மேடம் எங்களை அவங்களுக்கு பாதுகாப்பு தர வேணாம்னு சொல்லிட்டாங்க"இன்று சரண்யாவின் பவுன்சர் கிளம்பும் முன்னே அவளது தந்தைக்கு தகவல் தெரிவித்திருந்தார்.

"இட்ஸ் ஓகே ஜெனி கூட இருக்கா இல்ல, அப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல"என்று கூறி விஸ்வநாதன் அழைப்பை துண்டித்தார்.

தொடரும்...

ஜெனி❤️‍🔥ஆர்வி

ஜானு
 

Attachments

  • 6dbc3769819a94b1c2e2b4c579c259cf.jpg
    6dbc3769819a94b1c2e2b4c579c259cf.jpg
    66.1 KB · Views: 1

Author: gomathi.C
Article Title: காதல் தீ❤️‍🔥-4
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
75
வாட்ttttt 😯😯😯 இந்த ட்விஸ்ட் நான் எதிர்பார்க்கவே இல்லை.... எங்க அந்த முகமூடிக்காரன்... இந்நேரம் வேடிக்கை பார்க்க வந்துருவானே... பாரு மேன் உங்க பார்பி டால் ஆக்ஷன... சீக்கிரம் கொஞ்சம் நெஸ்ட் எபிய போடுங்க 🥹 நான் வேற ஆர்வத்துல அடுத்த எபிக்கு போறேன் இல்லை 🥲
 
New member
Joined
Aug 16, 2025
Messages
27
வாட்ttttt 😯😯😯 இந்த ட்விஸ்ட் நான் எதிர்பார்க்கவே இல்லை.... எங்க அந்த முகமூடிக்காரன்... இந்நேரம் வேடிக்கை பார்க்க வந்துருவானே... பாரு மேன் உங்க பார்பி டால் ஆக்ஷன... சீக்கிரம் கொஞ்சம் நெஸ்ட் எபிய போடுங்க 🥹 நான் வேற ஆர்வத்துல அடுத்த எபிக்கு போறேன் இல்லை 🥲
NXT epi padingA
 
Top