New member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 10
- Thread Author
- #1
கவிதை 7
"ஹலோ ஸ்ரீ, ஹான் சொல்லுடா என்ன விஷயம்? இப்போ நான் ஒரு இன்டர்வியூ வந்துருக்கேன். எதுவும் அவசரமா? கொஞ்ச நேரம் கழிச்சி கூப்பிடவா?" என்றான் பார்த்தீபன் அவளிடம்.
"டைம் வேஸ்ட் ப்ரோ... உங்க எக்ஸ் ப்ரெண்ட் அந்த கம்பெனி ஓனருக்கு கால் பண்ணி வேலை கொடுக்க கூடாதுனு சொல்லிட்டாரு" என்றவள் சொல்ல அவளை கேலிச் சிரிப்புடன் பார்த்த படி அமர்ந்திருந்தான் ராகவ்.
"ப்ச்... இப்போ அவனுக்கு என்ன தான் வேணுமாம்?" என்று பார்த்தீபன் கோபத்தில் கேட்க.
"தெரியலை ப்ரோ" என்றாள் அவள் சலிப்பாக.
பார்த்தீபனோ போனைப் பாதியில் கட் செய்து விட்டான்.
ஸ்ரீயோ சலிப்பாக போனைப் பார்க்க...
"என்னவாம்?" என்றான் ராகவ் ஏளனமாக.
ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்தவள் தனது வேலையில் கவனமாகி விட்டாள்.
"ஆமா ஸ்ரீ மதி உனக்கு உன் ப்ரெண்ட் சுஜிதாவை ரொம்ப பிடிக்கும்னு கேள்விபட்டேன். அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்வியாமே? அப்படியா?" என்றவன் கேள்வியாக அவளைப் பார்க்க.
அவள் எதுவும் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தாள்.
"நான் ஒரு கேள்வி கேட்டா பதில் வரனும் மிஸ் ஸ்ரீ மதி" என்றவன் அழுத்தமாகச் சொல்ல...
இதழ் குவித்து ஊதியவள் "எல்லாருமே அப்படி தான் பாஸ். நமக்கு ஒரு கஷ்டம்னா சொந்தகாரன் கூட வரதுக்கு ஒரு செகண்ட் யோசிப்பான். ஆனா நண்பன் அப்படி கிடையாது. பிரச்சனைனு தெரிஞ்ச அடுத்த செகன்ட் அங்க நிற்பான்" என்றவள் சொல்ல...
"இந்த வலவல கொளகொள எல்லாம் இங்க இருக்க கூடாது. கேட்ட கேள்விக்கு எஸ் ஆர் நோ அவ்வளவு தான் பதில் இருக்கனும். இந்த ஒன் லைன் ஆன்சர் எல்லாம் உனக்கு தெரியாதா? பக்கம் பக்கமாக தான் பேசுவியா என்ன?" என்றவன் கேட்க.
'இவன் அப்படியே ஒன் லைன்ல பேசி கிழிச்சிட்டான் டபரா வாயா...' என்று வாய்க்குள் முனுமுனுத்தவள் "நோ எஸ் பாஸ் " என்றாள் அவள்.
"எதாவது ஒரு பதில் சொல்லு பைத்தியம்" என்றவன் சொல்ல... "நீங்க கேட்டது இரண்டு கேள்வி பாஸ்" என்றாள் அவள்.
அவளை ஓர் பார்வை பார்த்தவன் தனது வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் "உன் ப்ரோ ரொம்பவே பாஸ்ட் தான் போல?" என்றவன் அவளிடம் சொல்ல அவளோ அவனைப் புரியாது பார்த்து வைத்தாள்.
அவனோ தனது லேப்டாப் திரையை அவளை நோக்கி நகர்த்தியவன் பார் என்பது போல கண்ணைக் காட்ட அதைப் பார்த்தவளிற்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை. அவள் எதிர்பார்த்தது தான். ஒரு பெருமூச்சுடன் "இப்போவாச்சு ப்ரோவை உள்ள கூப்பிட்டு பேசலாமே?" என்றவள் சொல்ல.
அவனோ "நாட் இன் அ மூட். நீ என்ன பண்ற இப்போ.... அப்படியே கோபமா போய் உனக்கெல்லாம் அறிவில்லையாடா... மதியாதார் தலை வாசல் மிதியாதேனு தெரியாதாடா முட்டாப் பயலேனு உன் ஸ்டைல்ல நாலு டோஸ் குடுத்துட்டு வர... இதுல நீ எக்ஸ்ட்ரா எவ்ளோ வேணும்னாலும் சேர்த்துக்கோ... பட் ஸ்பீட் அண்ட் டோன் மாறக் கூடாது... புரிஞ்சுதா?" என்றவன் கேட்க.
"எஸ் பாஸ்" என்றவள் வாசல் நோக்கி செல்ல அவளைத் தடுத்து அவள் கையில் இருந்த போனை புடுங்கியவன் "இப்போ போ" என்று சொல்ல...
உதட்டை சுழித்தவள் கிட்டதட்ட பார்த்தீபனை நோக்கி ஓடினாள்.
அங்கே அவன் கலைந்த உடையில் கோபத்தின் உச்சியில் நின்றிருந்தான்.
"ராகவா... டேய்... வெளிய வா ராகவா... இன்னைக்கு உன்கிட்ட நான் பேசியே ஆகனும்" என்றவன் காட்டுக் கத்து கத்தியவன் ஸ்ரீயைப் பார்த்ததும் "ஸ்ரீ... எங்க அவனை? கூப்பிடு இன்னைக்கு அவனா நானானு பார்த்துட்டுறேன்" என்றவன் சொல்ல... அங்கிருந்த செக்யூரிட்டியோ அவனை அங்கிருந்து அகற்றவே முயன்று கொண்டிருந்தார்.
"உனக்கு என்ன அறிவில்லையா ப்ரோ... அவன் உள்ள தான் இருக்கான்... உன்னை தான் அவன் மதிக்கலையே... இன்னும் ஏன் ப்ரோ இங்க நின்னு கத்திட்டு இருக்க... உன்னை கத்த வச்சி வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கான் சைகோ... நீ இங்க என்ன பண்ணாலும் அவன் வெளிய வர மாட்டான். அவனுக்கு உன் கூட அடிதடி போட இஷ்டம் இல்லை ப்ரோ... உன்னை உடல் அளவில இல்லாம மனசளவுல கஷ்டபடுத்தி சந்தோஷப்பட்டுட்டு இருக்கான்" என்றவள் சொல்ல...
"இதுக்கு அப்புறமும் நீ இங்க இருக்க வேணாம் கிளம்பு ஸ்ரீ என் கூட" என்று பார்த்தீபன் சொல்ல...
"நீ மூச்சு விடறது முதல் கொண்டு பார்த்துட்டு இருக்கான் அந்த சைகோ... அவனை மீறி உன்னால என்னை பார்த்துக்க முடியுமா ப்ரோ... வேலை என்ன தங்க ஹாஸ்டல்ல கூட அவனை மீறி நம்ப தங்க முடியாது ப்ரோ" என்றவள் சொல்ல.
அவனும் அவளைத் தான் பார்த்திருந்தான்.
"பேசாம உங்க ஊருக்கே போய்டுங்க ப்ரோ... அங்க ராகவால எதுவும் பண்ண முடியாது" என்றவள் சொல்ல.
"அங்க போய் நான் என்ன செய்றது?" என்றவன் புரியாது கேட்க.
"என்ன செய்ய முடியாது. உங்க ஊரு உங்க சொந்த பந்தம்... உங்க மண்ணு... அங்க ராகவால என்ன பண்ணிட முடியும்... சும்மா இந்த வெட்டி வீராப்பை விட்டுட்டு அங்க போய் எதாவது பொழைப்பை தேடிட்டு பொண்டாட்டி புள்ளைனு வாழ வழியப் பாருங்க" என்றாள் அவள்.
"நீ?" என்ற கேள்வியுடன் அவன் அவளைப் பார்க்க...
"உங்களுக்காக இவ்வளவு யோசிக்குறவ எனக்காக யோசிக்க மாட்டேனா? முதல் உங்க பொழப்பைப் பாருங்க ப்ரோ" என்றாள் அவள்.
"ம்ம்... அதுக்கு முதல் நான் ராகவைப் பார்க்கனும்" என்றான் பார்த்தீபன் அழுத்தமாக.
"பர் வாட்?" என்றபடி அங்கே வந்தான் அவன்.
ஓங்கி ராகவனின் முகத்தில் குத்த வந்த பார்த்தீபனின் கைகளைத் தடுத்துப் பிடித்தவன் பார்த்தீபனைப் பிடிக்க வந்த செக்யூரிட்டியை வேண்டாம் என்று தடுத்தவன் "உள்ள வா" என்றவனிடம் சொன்ன ராகவன், "நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னு செய்றியா? உள்ள வாடி" என்று ஸ்ரீயின் காதருகே பல்லிடுக்கில் கடுகடுத்தவன் முன்னே செல்ல அவனைப் பின்தொடர்ந்து சென்றனர் இருவரும்.
இருவருக்குமே ராகவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவனிற்கு அப்படி என்ன தான் வேண்டும் என்று சத்தியமாக அவனிடம் கேட்டால் கூட பதில் இருக்காது.
பார்த்தீபனின் கசங்கிய சட்டையை நீவி விட்டவன் "அந்த ரூம்ல போய் ப்ரெஸ் ஆகிட்டு வா... " என்று ராகவ் சொல்ல... "எதுக்கு ராகவா இப்படி பண்ணிட்டு இருக்க? உனக்கு என்ன தான் வேணும்?" என்றவன் கேட்க.
"சொல்றேன் அதுக்கு முதல் போய் குளிச்சி ப்ரெஸ் ஆகிட்டு வா... உள்ள புது ட்ரெஸ் வச்சிருக்கேன்... போட்டுட்டு வா பேசலாம்" என்றான் அவன்.
"ப்ச் அதெல்லாம் எனக்கு தேவையில்லை... எனக்கு பதில் தான் வேணும்" என்றான் பார்த்தீபன்.
"நான் சொன்னதை செய் நீ கேட்டது கிடைக்கும்" என்றான் ராகவ்.
"இவனைப் பத்தி தெரியாதா ப்ரோ... அவன் நினைச்சது நடக்க என்ன வேணும்னாலும் பண்ணுவான்" என்றாள் ஸ்ரீ.
"அதுக்குனு நான் குளிக்குறதுக்கு கூட அவன் தான் சொல்லனுமா?" என்றான் பார்த்தீபன் கோபமாக.
"ப்ரோ அவன் நம்பலை கஷ்டப்படுத்தி அவன் இஷ்டத்துக்கு நம்பலை ஆட்டி வச்சி சந்தோஷப்படனும்னு ஆசைப்படுறான். பட் அதை எப்படி பண்ணனும்னு பயபுள்ளைக்கு தெரியலை... நீங்களும் தான் கொஞ்ச அவனுக்கு கோ ஆப்ரைட் பண்ணுங்களேன் ப்ரோ... " என்று ஸ்ரீ அவன் காதில் முனுமுனுக்க...
இதழ் குவித்து ஊதியவன் ராகவ் காட்டிய அறை நோக்கி நடந்தான்.
செல்லும் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீயின் முன் சொடக்கிட்டவன் "நான் கொடுத்த வேலை முடிஞ்சிதா?" என்று கேட்க.
அவளோ இல்லையென வேகமாக தலையசைத்தாள்.
போ எனும் விதமாக அவன் தலையசைக்க அவளும் விட்டால் போதுமென அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.
சற்று நேரத்தில் பார்த்தீபனும் ப்ரெஸ் ஆகி விட்டு வர, அவனுக்காக மதிய உணவு தயாராக இருந்தது மேஜையில்.
அந்த மேஜையையும் ராகவையும் மாறி மாறி பார்த்தவன் "இப்போ என்ன?" என்று கேட்க.
உட்கார் என்பது போல சைகை செய்தவன் அவனுக்காக பறிமாற ஆரம்பித்தான்.
"உனக்கு பிடிச்ச மட்டன் பிரியாணியும் நாட்டுக் கோழி வருவல் நண்டு மசால் எல்லாம் இருக்கு... நீ வருவனு தெரியும் அதான் எல்லாம் என் கையால பண்ணேன்" என்று ராகவ் சொல்ல.
"ம்ம்" என்றவன் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டான். கிட்டதட்ட இரண்டு வாரம் கையில் இருந்த காசில் ஸ்ரீக்கு சாப்பிட எதாவது வாங்கிக் கொடுத்து விட்டு அவன் டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டு சுற்றி வந்தான். இன்று தான் திருப்தியாக சாப்பிட்டான் அதுவும் தனது நெறுங்கிய நண்பன் கையால்.
"இப்போ சொல்லு ராகவா ஏன் இப்படி பண்ற? நான் அப்படி என்ன பண்ணிட்டேன்?" என்று பார்த்தீபன் கேட்க.
"நான் உன் கல்யாணத்தன்னைக்கு ஒரு கிப்ட் கொடுத்தனே இன்னும் பிரிச்சிப் பார்க்கலையா?" என்றான் ராகவ்.
"நான் கேட்டதுக்கும் நீ கேட்குறதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் பார்த்தீபன் புரியாது.
"கேட்டதுக்கு பதில்" என்றவன் சொல்ல.
"என்னோட டெர்மினேஷன் லெட்டர் தானே? அதை தனியா வேற பிரிச்சிப் பார்க்கனுமா என்ன?" என்றான் பார்த்தீபன்.
"கண்டிப்பா" என்று ராகவ் அழுத்தமாக சொல்ல...
"அந்த கிப்ட் இப்போ எங்க இருக்குனு தெரியலை" என்றவன் சொல்ல.
ராகவ் எதுவும் பேசவில்லை. ஓர் நொடி யோசித்த பார்த்தீபனும் தனது தாய்க்கு அழைத்து கிப்ட் பற்றி கேட்க. அவரோ அனைத்தும் இங்கு தான் இருப்பதாகச் சொன்னவர் ராகவ் கொடுத்த பரிசை பிரித்து அதில் ஒரு கடிதம் இருப்பதாக பார்த்தீபனின் எண்ணிற்கு அதை புகைப்படம் எடுத்து அனுப்பினார்.
அந்த கடிதத்தைப் படித்தவனிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
"என்ன இது? நீ ஏன் எதுக்கு இதெல்லாம் பண்றேன்னு சத்தியமா எனக்கு புரியவே இல்லை ராகவ்" என்றான் அவன் சலிப்பாக.
"ஹாஹா" என்று இதழ் பிரித்து சிரித்த ராகவ் "போகப் போக புரியும்" என்றவன் "ஆல் தி பெஸ்ட்" என்று பார்த்தீபனிற்கு கை கொடுக்க அவனும் ஒரு பெருமூச்சுடன் அவனுடன் கைக் குலுக்கினான் பார்த்தீபன்.
"சரி ஸ்ரீ எங்க? அவகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்புறேன்.
"தேவையில்லை" என்றான் ராகவ் அழுத்தமாக.
இதழ் குவித்து ஊதியவன் "நான் கிளம்புறேன்" என்ற பார்த்தீபன் முகத்தில் ஒரு புதுப் பொழிவு உண்டாகத் தான் செய்தது.
அவன் சென்ற அடுத்த நொடி தனது கையில் இருந்த ஸ்ரீயின் போனை சுழற்றியவன் 'இனி தானே ஆட்டம் ஆரம்பம்' என்று முனுமுனுத்துக் கொண்டான்.

Author: காதல் கவிதை
Article Title: கவிதை 7
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.