New member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 10
- Thread Author
- #1
கவிதை 3
'இவனா? இவனை எப்படி மறந்தேன்?' என்று உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டு இருந்தாள் ஸ்ரீ.
அவளை கேலியாகப் பார்த்த ராகவன் உள்ளே ஏறும் படி கண்களைக் காட்ட... அவளுக்கும் வேறு வழியில்லையே அவன் சொல்வதை கேட்டுத் தான் ஆக வேண்டும். ஒரு பெருமூச்சுடன் புறங்கையால் தன் கண்ணீரைத் துடைத்தவள் காரில் அவனுக்கு அடுத்த இருக்கையில் சற்று இடைவெளி விட்டு அமர காரானது அதிவேகமெடுத்துக் கிளம்பியது.
ஏற்கனவே மழையில் நனைந்ததில் உடலெல்லாம் சில்லிட்டு போய் இருக்க... இதில் காரில் ஏசியும் அதிகமாக இருக்க அவளது உடலோ குளிரில் நடுங்க ஆரம்பித்தது.
திரும்பி அவனைப் பார்க்க அவன் பார்வை அவளில் தான் இருந்தது. அவனது பார்வை அவளது பரிதவிக்கும் விழிகளைப் பார்த்து சிரித்துக் கொண்டது.
'எப்படியும் இவன் தனக்கு உதவப் போவது இல்லை' என்பது புரிந்தவள் "ட்ரைவர் அண்ணா கொஞ்சம் ஏசி ஆப் பண்றீங்களா ப்ளீஸ்" என்று இறைஞ்சும் குரலில் கேட்க.
அவரோ பின்னால் திரும்பி ராகவனின் பதிலுக்காக காத்திருக்க... அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. அவனை மீறி எதுவும் பேசவும் முடியாது என்பதை அறிந்த ட்ரைவரும் அவளை பாவமா ஓர் பார்வை பார்த்து விட்டு முன்னால் திரும்பி சாலையில் கவனமாகி விட...
இவளுக்கு அய்யோ என்றாகி போனது.
இனி அவனிடம் அமைதியாக இருப்பதால் எதுவும் மாறப் போவது இல்லை என்பதை உணர்ந்தவள் "தப்பு ராகவ்... மறுபடி மறுபடி தப்பு பண்ற..." என்று அவள் சொல்ல.
அவளை அழுத்தமாகப் பார்த்தவன் "இஸ் இட்?" என்று கேலியாகக் கேட்க.
"ம்ம்" என்றவளின் ஸ்ருதி குறைந்து போனது.
"உன் அப்பா சொன்னது போல உண்மையாவே நீ நாடககாரி தான்" என்றவனின் குரலில் கேலி மறைந்து கோபம் வெளிபட்டது.
"இதை எதுக்கு எனக்கு கட்டுன ராகவ்... இதை வச்சி என்னை கஷ்டப்படுத்த போறியா? நீயும் தானே கஷ்டப்படுவ?" என்றவள் தன் தாலியை தூக்கிக் காட்ட...
"ஆஹான்" என்றான் அவன் கேலியாக.
"ப்ச் ரொம்ப பண்ணாத ராகவ்... அன்னைக்கு நீ பண்ணது தப்பு... இப்போ எதுக்கு தேவையில்லாம எங்களை கஷ்டப்படுத்தி பார்க்குற? இந்த தாலியை கட்டிட்டா மட்டும். நீ சொல்றதையெல்லாம் நான் கேட்பேன்னு உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டிப்படைக்கலாம்னு நினைக்குறியா? அது ஒரு நாளும் நடக்காது" என்றவள் "ப்ச் ரொம்ப குளுருது ராகவ் ஒன்னு ஏசி ஆப் பண்ண சொல்லு இல்லைனா காரை நிறுத்த சொல்லு" என்றவள் எரிச்சலில் கத்த.
காரும் சட்டென நின்று விட 'என்னை சொன்னதும் நிறுத்திட்டான். இதை முதலிலே சொல்லியிருக்கலாமோ?' என்று நினைத்தவள் வேகமாக காரை விட்டு இறங்க அங்கே அவளை வரவேற்றது என்னவோ அந்த பிரம்மாண்ட மாளிகை தான்.
'அப்போ நான் சொன்னதால வண்டி நிக்கலை போல' என்று நினைத்துக் கொண்டவள் அங்கிருந்து வெளியே செல்ல வழி இருக்குமா என்று பார்க்க... கிட்டதட்ட பத்திற்கும் மேற்பட்ட பலவகையான ஆளுயர நாய்கள் அவளை தான் உர்ரென்று உறுமிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தன.
அவற்றைப் பார்த்ததும் அவளது நா வறண்டு போனது. கால்கள் நகர மறுத்தது.
"இன்னும் கிளம்பல? நீ இறங்குன வேகத்துக்கு இந்நேரம் உன் வீட்டுக்கே போய்ருப்பனு நினைச்சேன்" என்றவன் நக்கலாக சொல்ல.
"அதுக்கு தான் வழியில்லாம பண்ணிட்டியே... இந்த மறப்போம் மன்னிப்போம் எல்லாம் உனக்கு தெரியாதா?" என்றவள் கேட்க.
"டிட் பார் டாட் தெரியும்" என்றான் அவன்.
சலிப்பாக தலையசைத்துக் கொண்டவள் "அடுத்து என்னை இந்த வீட்ல வச்சி கொடுமைப் பண்ண போறியா?" என்று கேட்க.
"உனக்காக இந்த வாசல் எப்பவும் திறந்தே இருக்கும். உனக்கு எப்போ போகனும்னு தோணுதோ அப்போ கிளம்பலாம்... இப்போவே கூட" என்றவன் வீட்டிற்குள் செல்ல.
அவனது பதிலில் அதிர்ந்து நின்றவள் 'இப்போவே போலாமா?' என்று முனுமுனுத்தவள் அவனது வேக எட்டுகளைப் பிடிக்க அவன் பின்னால் கிட்டதட்ட ஓடிச் சென்றாள்.
"அவ்வளவு தானா? இதுக்கா என் கழுத்துல தாலி கட்டுன?" என்றவள் அவனிடம் அதிர்ந்து கேட்க.
"வாட் ரப்பிஸ்? நான் ஏன் உனக்கு தாலி கட்டனும்... என் ஸ்டேடஸ் என்னனு தெரியுமா உனக்கு முதல்? என் வைப்க்கு டைமண்ட்ல தாலி கட்டுவேன்... நான் போய் உனக்கு... அதுவும் இந்த எல்லோ த்ரெட்... என் நிழல் படக் கூட உனக்கு ஒரு தகுதி வேணும்" என்றான் அவன் ஏதோ வேண்டா பொருளை தொட்டது போல முகத்தை வைத்துக் கொண்டு.
"அப்போ இந்த தாலி?" என்றவள் அதை தூக்கிக் காட்ட... தோள்களைக் குலுக்கினான் அவன்.
"பார்த்தீ அண்ணா வேலை போக நீங்க தானே காரணம்?" என்றவள் அவனை கேள்வியாகப் பார்க்க.
"அவனோட வீட்டையும் என் பேர்ல எழுது வாங்கி... கல்யாணம் ஆன அன்னைக்கே புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரையும் பிரிச்சது கூட நான் தான்" என்றான் அவன் சிரித்த படி...
"சுஜி" என்றவள் பதற...
"இப்போ உன் பார்த்தீ அண்ணா வாடகைக்கு வீடு தேடி தெரு தெருவாக அழைஞ்சிக்கிட்டு இருக்கிறான்... பார்க்குறியா லைவ்வா?" என்றவன் தனது போனில் ஒரு வீடியோவை ஓட விட அதில் கொட்டும் மழையில் தனது பைக்கில் நனைத்த படி அவன் ஒவ்வொரு வீடாக அழைந்து கொண்டிருந்தான்.
"ஆனா பாரேன் உன் பார்த்தீ அண்ணாவுக்கு ஒரு வீடு கூட கிடைக்காது" என்றான் அவன்.
"உனக்கு என்னை தான் வேணும்?" என்றவள் கேட்க.
"நிம்மதி... அது நீங்க மூனு பேரும் இப்படி அழுது கரையும் போது தான் கிடைக்குது... என்ன பண்ணட்டும்?" என்றான் அவன் தோள்களைக் குலுக்கி.
இப்படி பேசுபவனிடம் என்ன கேட்க முடியும் என்றவள் அமைதியாக அவனைப் பின் தொடர்ந்து வீட்டிற்குள் செல்ல.
"ஹலோ மேடம்... எங்கையோ போறேன்னு கிளம்புனீங்க?" என்றவன் புருவம் உயர்த்த.
"இப்போ எப்படியும் நைட் பத்து மணி தாண்டியிருக்கும். லேடீஸ் ஹாஸ்டல் கூட திறந்திருக்காது. என் வீட்லையும் எனக்கு இடமில்லைனு தெரிஞ்சி போச்சு... சுஜிகிட்டவும் இப்போ போக முடியாது. தெருவுலையா படுக்க முடியும்... எனக்கு இப்போ பாதுகாப்பா ஒரு இடம் வேணும். அது இங்க இருக்கு... நீங்க தான் இந்த தாலியை கட்டலைனு சொல்லிட்டீங்களே... எந்த நாசமா போன எடுபட்ட நாய் இந்த கருமத்தை கட்டிச்சோ?" என்றவள் பேசிக் கொண்டே தாலி கழற்றி கையில் வைத்து சுற்றிக் கொண்டே...
"எனக்கு வேற பாதுகாப்பான இடம் கிடைக்குற வரை இங்கையே இருக்கேனே" என்று கேட்க.
அவள் உள் நோக்கம் புரியாதவனா அவன்.
"முதல்ல ரொம்ப குளுருது ராகவ். குளிக்க ஹாட் வாட்டர்... சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆச்சு... வயிறு கியாமியானு கத்துது... இரண்டு இட்லி கொடுத்தா கூட இந்த குட்டி வயிறுக்கு போதும். இன்னைக்கு ரொம்பவே அழைஞ்சிட்டேன்... ரொம்ப டையர்டா இருக்கேன். சோ இவ்வளவு பெரிய வீட்ல எனக்குனு ஒரு குட்டி ரூம் கொடுத்தா நல்லா இருக்கும்" என்றவள் அவனைப் பார்க்க.
அவளை அழுத்தமாகப் பார்த்தவன் "டேக் தட் ரூம்" என்று ஒரு அறையை கை நீட்டியவன் "அதுக்கு முன்னாடி இந்த பேப்பர்ஸ்ல சைன் பண்ணிட்டு போ" என்றவன் ஒரு அக்ரிமென்ட் பத்திரத்தை அவள் முன் நீட்ட...
"ஏற்கனவே மழைல நினைஞ்சி ரொம்ப குளுருது பாஸ் இதுல இந்த ஏசி வேற, ஏதோ ஊட்டில இருக்க போலவே இருக்கு... போய்ட்டு வேற ட்ரெஸ் மாத்திட்டு... உங்ககிட்ட ஏதாச்சி உங்க அம்மா சேலை தங்கச்சி சுடிதார்னு இருக்கா?... என்கிட்ட எதுவும் இல்லை மாத்த... ஆமா ரொம்ப நேரமா இந்த வீட்ல நானும் நீங்களும் மட்டும் தான் இருக்கோம்... வேற யாரும் இல்லை... உங்களுக்கு ஒரு தங்கச்சி உண்டு தானே? எங்க எல்லாரும்?" என்றவள் சுற்றிலும் பார்வையை சுழலவிட.
"க்கும்" என்று தொண்டையை செறுமியவன் "என்னோட ட்ரெஸ் அந்த ரூம்ல இருக்கும் எடுத்துக்கோ... நாளைக்கு உனக்கு புது ட்ரெஸ் எடுத்துக்கலாம்" என்றவன் அவளை பார்க்காது வேகமாக தனது அறைக்குள் சென்று கதவடைத்துக் கொள்ள.
'என்னாச்சி இவனுக்கு?' என்று யோசித்துக் கொண்டே அவன் காட்டிய அறைக்குள் நுழைந்தவள் குளித்து விட்டு அவள் துணிகளை ட்ரையரில் போட்டவள் அங்கிருந்த கபோர்டில் அவனது டீ சர்ட்டும் அவனது சார்ட்ஸூம் எடுத்து அணிந்து கொண்டாள்.
அவன் ஆறடி அவளோ ஐந்தடி. அவனது சார்ட்ஸ் அவளது முட்டிக்கும் கீழாக இருக்க... டீ சர்ட்டும் அவளிற்கு பெருசாகத் தான் இருந்தது.
'இந்த வயிறு வேற கியாமியானு கத்துக்கிட்டே கிடக்குது... நம்பளே போய் கிட்சன்ல நமக்கு தேவையானதை செஞ்சி சாப்பிடனும்... அவன் குடுத்தான்னு பச்ச தண்ணி கூட குடிச்சிட கூடாது' என்று நினைத்துக் கொண்டே கிட்சன் இருக்கும் இடம் தேடி அவள் செல்ல...
ராகவன் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அவளும் அவனைக் கடந்து சென்று பாத்திரங்களை உருட்ட அனைத்தும் காலியாக இருந்தது.
"எனக்கு சாப்பாடு இல்லையா ராகவ்?" என்றவள் அவனிடம் கேட்க.
"என் கையால எதுவும் சாப்பிட கூடாதுனு ப்ளான் பண்ணிட்டு தானே கிட்சன் உள்ளவே வந்த... இப்போ எதுக்கு சீன் க்ரியேட் பண்ற... உனக்கு தேவையானதை நீயே செஞ்சிக்கோ" என்றவன் "ஹான் அப்புறம்... உனக்கு சாப்பாடுல மயக்க மறந்து கொடுத்து உன்கிட்ட அந்த மாதிரி நடந்துக்குற எந்த எண்ணமும் எனக்கு இல்லை" என்றவன் கையைக் கழுவி விட்டு தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டான்.
தோள்களைக் குலுக்கியவள் கோதுமை மாவில் சீனியும் தேங்காய் துருவலும் சேர்த்து நெய் ஊற்றி மணக்க மணக்க இரண்டு இனிப்பு தோசை சுட்டு விட்டு சாப்பிட அமர சட்டென அங்கு வந்த ராகவனோ அவளையும் அவள் கையில் இருந்த தோசையையும் ஓர் பார்வைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ மீண்டும் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
'இவனுக்கு என்னாச்சி?' என்று நினைத்துக் கொண்டவளிற்கு ஒரு வில்லைக்கு மேல் தோசை தொண்டைக்குள் இறங்கவில்லை.
அவள் மனதில் பல யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது. 'இத்தனை நாட்கள் யார் கண்ணிலும் படாது மறைந்து வாழ்ந்தவன் இன்று தங்களைத் தேடி வந்ததும். ஒரே நாளில் தங்கள் மூவரின் வாழ்க்கையையும் கேள்விக் குறியாய் மாற்றியதையும் அவளால் கிரகிக்கவே முடியவில்லை'.
தன் கையில் இருந்த தாலியை ஓர் பார்வை பார்த்தவள் 'ராகவும் இதை கட்டலைனா யார் கட்டியிருப்பா? பார்த்தீ அண்ணா விஷயத்துல நான் தான் பண்ணேன்னு உண்மையை சொல்ற ராகவ் என் விஷயத்துல பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே? யார் அந்த இரண்டாவது ஆள்? இப்படி மறைஞ்சி விளையாட என்ன காரணம்? ராகவ் என்னை இந்த வீட்ல இருக்க வைக்குற ரீசன் என்ன? அடுத்து என்ன பண்ண போறான்?' என்ற பல கேள்விகளுக்கு மத்தியில் அவள்.

Author: காதல் கவிதை
Article Title: கவிதை 3
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.