கவிதை 1

Joined
Aug 20, 2025
Messages
11
கவிதை 1

'சுஜிதா வெட்ஸ் பார்த்தீபன்' என்ற மணமக்கள் பெயர், புகைப்படம் பதிக்கப்பட்ட பேனர்களும் அலங்காரங்களுமென ஜெகஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம்.

தான் பாதி குடித்து முடித்த சிகரெட்டின் கங்கினால் சுஜிதா என்ற பெயரை மட்டும் பொசுக்கிய அந்த நெடியவனின் கண்களிலும் அதே அனல்.

ஓர் நொடி பொசுங்கிய அந்த பெயர் பலகையைப் திருப்தியாகப் பார்த்தவன் பேனரில் சிரித்துக் கொண்டிருந்த சுஜிதாவின் விம்பத்தை ஓர் பார்வை பார்த்தவன் மனதிலோ ஏகப்பட்ட நினைவுகள், அவன் மனதின் ரணத்தை கிளறிவிட்டிருக்க...

அந்த அனல் குறையும் முன்னே வேக எட்டுகளுடன் மணமேடை நோக்கி சென்றான் அவன்.

அங்கே தங்க நிற பட்டு சேலையில் இன்னும் சற்று நேரத்தில் தன் மனம் விரும்பியவின் கரம் கோர்க்கப் போகும் அந்த ஒரு நொடிக்காக ஆவலுடன் காத்திருந்தாள் அவள்.

அவள் காதின் ஓரம் அவளது தோழி ஸ்ரீ ஏதோ முனுமுனுக்க ஓரக் கண்ணால் தன் அருகில் அமர்ந்திருந்த பார்த்தீபனை ஓர் பார்வை பார்த்தவள் கன்னங்களோ சிவப்பேறி போனது வெட்கத்தால்.

அவளது மெல்லிய சிரிப்பைக் கண்ட பார்த்தீபன் இதழ்களுக்குள் தன் சிரிப்பை மறைக்க அதை கண்டு கொண்ட ஸ்ரீயோ அவனை வம்பு செய்ய... ஒவ்வொரு நொடியையும் ஆழ்ந்து அனுபவித்தனர் மணமக்கள் இருவரும்.

மூவரின் சிரிப்பும் சட்டென துடைக்கப்பட்டது மண்டப வாசலில் கண்ட அவன் ஒருவனைக் கண்டது.

மூவரும் ஒருவரையொருவர் மாறி மாறி பார்த்துக் கொள்ள அந்த புதியவனோ முதல் வரிசையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.

மூவருக்கும் திக்கென்றது ஓர் நொடி.

"சுஜி" என்று ஸ்ரீயும் பார்த்திபனும் அவளைத் தான் ஒரு சேர பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவளுக்கு பயத்தில் கை காலெல்லாம் ஆட்டம் கண்டு போனது. பின்னே கடந்த ஐந்து வருடங்களாக யார் பார்வையிலும் தட்டு படாமல் அத்தனை தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு காணாமல் போனவன் இன்று சரியாக அவர்கள் திருமணத்திற்கு வந்திருக்கிறான் என்றால், எங்கோ இருந்து கொண்டு அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்திருக்கிறான் என்று தானே அர்த்தம்.

ஸ்ரீ அவளை சுரண்ட "இரண்டு பேரையும் சாகடிச்சிடுவேன். ஒழுங்கா முன்னாடி பாருங்க. இந்த கடன்காரன் வேற ஏன் இப்போ வந்தான்னு தெரியலையே... ஸ்ரீ பக்கத்துலையே இருடி... பார்தீ லாஸ்ட் மினிட்ல எதுவும் சொதப்பிட மாட்டீங்களே" என்று கோபமாக ஆரம்பித்தவள் பதட்டமாக முடிக்க.

அவளை முறைத்து பார்த்தான் பார்தீபன்.

"முறைக்காதீங்க பார்த்தீ... நானே அல்ரெடி பயத்துல இருக்கேன். இங்க பாருங்க கையெல்லாம் எப்படி நடுங்குதுனு" என்றவள் நடுங்கிய கைகளை அவன் முன் காட்ட...

அவளது கரத்தை அழுத்தமாக பற்றிய பார்த்தீபனோ "அது தான் நான் இருக்கேன்ல. அப்புறம் என்ன பயம்?" என்றான் அவன் சற்றே கண்டிப்பான குரலில்.

"இருந்தாலும்" என்றவளின் பார்வை முன்னால் அமர்ந்திருந்தவனைப் பார்க்க.

"நான் வேணும்னா போய் பேசி பார்க்கட்டுமா?" என்றாள் ஸ்ரீ.

"நீ என்ன பேசப் போற? அதெல்லாம் ஒன்னும் வேணா எங்க கூடவே இரு" என்றாள் சுஜி அவசரமாக.

"மாப்ள பொண்ணு கூட அப்புறமா பேசிக்கலாம் இப்போ நல்ல நேரம் முடிய போகுது தாலியை கட்டு" என்று பார்தீபனின் உறவினர்கள் அவனை கிண்டல் செய்ய... அதை ரசிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை.

வலுக்கட்டாயமாக சிரிப்பது போல காட்டிக் கொண்டனர் இருவரும். கெட்டி மேளம் முழங்க ஐயர் மந்திரம் ஓத சுற்றம் சூழ பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் பார்தீபன் பொன்தாலி சரடை சுஜிதாவிற்கு அணிவித்து அவளது வகிட்டில் குங்குமமும் வைத்து விட அட்சதை தூவி இருவரரையும் வாழ்த்தினர் மற்றவர்கள்.

ஸ்ரீயோ சுஜியின் காதில் "என்னடி கல்யாணம் நடந்துருச்சி. நான் கூட அவரைப் பார்த்ததும் லாஸ்ட் மினிட்ல சினிமால வர போல கல்யாணத்தை நிறுத்துங்கககக அப்படினு ஹை ஸ்பீட்ல கத்திட்டே வந்து அவரு மறைச்சி வச்சிருக்க தாலியை எடுத்து உன்கழுத்துல கட்டுவாருனு நினைச்சேன்" என்றாள் யோசனைப் போல.

"முன்னால குண்டம் நல்ல சூடாத் தான் இருக்கு முக்கிடுவேன் பார்த்துக்கோ" என்ற சுஜியின் முறைப்பில் சட்டென ஸ்ரீ வாயை மூடிக் கொண்டவள் சட்டென ஏதோ யோசனை வந்தவளாக "ஒருவேளை எங்கிருந்தாலும் வாழ்கனு வாழ்த்திட்டு போக வந்துருப்பாரோ" என்றவள் சுஜியை கேள்வியாகப் பார்க்க.

"ஸ்ரீ" என்றான் பார்த்தீபன் அதட்டலாக.

"ஹிஹி சாரி ப்ரோ" என்றாள் அவள் சட்டென.

அவனும் ஒரு பெருமூச்சுடன் முன்னே அந்த நெடியவனைப் பார்க்க அவன் இருந்த இடம் காலியாக இருக்க அவன் கண்களோ பதட்டமாக சுழல ஆரம்பித்து விட்டது.

"என்னையா தேடுற?" என்ற இறுகிய குரலைக் கேட்டதும் மூவரும் அவனை அதிர்ந்து பார்க்க.

பார்தீபனின் கைகளைக் குலுக்கியவன் "என்ன இருந்தாலும் என்னோட முன்னாள் காதலி, முன்னாள் நண்பனோட கல்யாணத்துக்கு நான் வரலைனா எப்படி? என்னோட கல்யாணப் பரிசு உங்க இரண்டு பேருக்கும். உங்க வாழ்க்கையிலையே மறக்க முடியாத கல்யாணப் பரிசு" என்றவன் சொன்னதும் அவனது பிஏ ஒரு கிப்ட் பாக்ஸை அந்த நெடியவனிடம் கொடுக்க அதை வாங்கி பார்த்தீபனிடம் கொடுத்தவன் அருகிலிருந்த சுஜியை ஓர் பார்வை பார்க்க.

அவளோ மிரண்டு போய் பார்தீபனின் கையை இறுக பற்றிக் கொள்ள.

அவர்களது கையை ஓர் பார்வை பார்த்தவன் "பயப்பட வேண்டாம் உங்களை நான் பிரிக்க வரலை. ஏன்னா இன்னும் கொஞ்ச நாளுல நீங்களே பிரிஞ்சிடுவீங்க" என்றவன் விறுவிறுவென அங்கிருந்து அகன்று விட்டான்.

மூவரும் அவனைத் தான் புரியாது பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ப்ரோ நீங்க ஏன் ப்ரோ அந்த பாக்ஸை வாங்குனீங்க? ஒரு வேளை அதுல பாம் எதுவும் இருந்துச்சின்னா என்ன பண்றது? உங்க கூட சேர்ந்ததுக்கு நானும்ல பரலோகம் போகனும் போலவே" என்று ஸ்ரீ ஒரு பக்கம் புளம்ப.

"என்ன பார்த்தீ இது?" என்றாள் சுஜி.

அவனோ இதழ்களைப் பிதுக்கினான் தெரியலையே என்பது போல்.

அதன் பிறகு ஜோடியாக இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர்.

சற்று நேரத்தில் பார்தீபனின் அலுவலக நண்பன் ஒருவன் அவனிடம் தயங்கி தயங்கி வர, "என்னடா?" என்றான் அவன்.

"அது மச்சி நம்ப கம்பெனில மாஸ் லே ஆப் லிஸ்ட் வந்துருக்கு... அதுல உன் பேரும் இருக்கு" என்றான் தயங்கி தயங்கி...

"வாட்? பட் வொய்?" என்றான் அவன் அதிர்ச்சி நீங்காது.

"ப்ரொடக்ஷன் இல்லைனு நிறைய பேரை லே ஆப் பண்ணியிருக்காங்க மச்சான். சாரிடா..." என்றான் அவன் தயக்கமாக.

"ப்ரோ எதுவா இருந்தாலும் இந்த நேரத்துல தான் சொல்லுவீங்களா? பாருங்க அவங்க மூடே போச்சி... இது அவங்க லைப்ல எவ்ளோ முக்கியமான நேரம் அதைப் போய் சொதப்பிட்டீங்களே?" என்றாள் ஸ்ரீ, பார்தீபனின் நண்பனிடம்.

"எப்போவா இருந்தாலும் தெரிஞ்சி தானே ஆகணும். விடு ஸ்ரீ" என்று அவளிடம் சொன்னவன் "சரிடா நான் பார்த்துக்கிறேன்" என்று தன் நண்பனிடம் சொன்னவன் சுஜியின் கரத்தை இறுக பற்றிக் கொண்டான்.

"பார்த்தீ ஒருவேளை இது அவனோட வேலையா இருக்குமோ?" என்றவள் அவனை கேள்வியாகப் பார்க்க.

"என்ன இருக்குமோ? அவன் தான் காரணம்" என்றான் அழுத்தமாக. அவன் முகத்தில் என்ன உணர்வென்றே தெரியவில்லை.

"என்னால தானே" என்றவள் தயக்கமாக அவனைப் பார்க்க.

"நீயும் கடுப்பேத்தாதடீ" என்றான் அவன் அழுத்தமாக.

ஒரு வழியாக சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிய மணமக்களை வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஸ்ரீயும் நல்லா சாப்பிட்டு விட்டு தன் வீட்டிற்கு கிளம்பியாகி விட்டது. 'இனி இரவு வரவேற்பிற்கு வேறு கிளம்பி வர வேண்டும். என்ன ட்ரெஸ் போடலாம்' என்று தீவிர யோசனையில் ஸ்ரீ.

தன்னவனின் கரம் கோர்த்து அவன் அகம் புகும் நேரத்திற்காக அவள் காத்திருக்க அவனது மொத்த குடும்பமும் வீட்டு வாசலில் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

பொருட்கள் அனைத்தும் வீதியில் கிடந்தது. கல்யாண வீடே அலங்கோலமாக கிடந்தது.

ஒருத்தர் முகத்திலும் மருந்திற்கும் சிரிப்பு என்பதே இல்லை.

தன் வீட்டினரை நோக்கி வேகமாக வந்த பார்தீபனோ "இங்க என்ன தான் நடக்குது. பொருள் எல்லாம் ஏன் இப்படி வீதியில கிடக்குது. யாராச்சி என்ன நடந்ததுனு தான் சொல்லுங்களேன்" என்றான் பார்தீபன் பொறுக்க மாட்டாது.

"ஹான் எல்லாம் உன் பொண்டாட்டி வந்த நேரம் தான். எந்த நேரத்துல இவ கழுத்துல தாலியை கட்டுனியோ அடுத்த நிமிஷம் வேலைப் போச்சி இப்போ குடியிருந்த வீடும் போச்சு மானமரியாதையும் போச்சு... இன்னும் யார் உயிரெல்லாம் போக காத்திருக்கோ" என்று பார்தீபனின் தாய் ஒப்பாரி வைக்க.

சுஜிக்கோ கண்கள் கரித்து விட்டது. அவளோ கலங்கிய கண்களுடன் தன்னவனை ஏறிட்டு பார்க்க.

அவள் கையை ஓர் நொடி அழுத்தி விடுவித்தவன் "என்ன நடந்ததுனு தெளிவா சொல்லுங்கம்மா. இப்படி சொன்னா நான் என்னன்னு எடுத்துக்கட்டும். பொருள் எல்லாம் ஏன் இப்படி சிதறிக் கிடக்கு. வீட்டு சாவி எங்க?" என்றவன் மீண்டும் கேட்க.

"ம்ம் உன் அண்ணன்காரன் எவன்கிட்டயோ ஐம்பது இலட்சம் கடன் வாங்கியிருக்கானாம் பிஸ்னஸ் பண்றேன்னு. இப்போ வட்டியும் கட்டாம முதலும் கட்டாம வீட்டை எடுத்துக்கிட்டாங்க. எல்லாம் இவ வந்த நேரம் தான் நம்ப நடுதெருவுல நிக்குறோம்" என்றவர் மீண்டும் சுஜியை சாட...

"ம்மா அண்ணன் பண்ணதுக்கு சுஜி என்னமா பண்ணுவா?" என்றவன் ஒரு வார்த்தை தான் சொல்லியிருப்பான். அவன் மொத்த குடும்பமும் அவனுக்கு எதிராக மாறி விட்டது.

மொத்த குடும்பமும் சேர்ந்து இருவரையும் வசை பாட ஆரம்பித்து விட...

அந்நேரம் பார்த்து தான் மறுவீடு அழைக்க சுஜியின் வீட்டு ஆட்கள் வர வேண்டுமா?

அப்புறம் சொல்லவும் வேண்டுமா என்ன?

உங்க பொண்ணு ராசி தான் காரணம்னு பார்தீபன் வீட்டில் சண்டைக்கு நிக்க... இப்படி நடுத்தெருவுல கால் வைக்க ஒரு பொட்டு இடம் இல்லாத குடும்பத்துல எங்க பொண்ணு இருக்கனுமானு சுஜி வீட்டு ஆட்கள் ஒரு பக்கம் மல்லிற்கு நிற்க கல்யாண வீடு சந்தைக் கடை ஆனது தான் மிச்சம்.

விஷயம் கேள்விபட்டு அங்கு வந்த சுஜியின் தந்தையோ "கையில வேலையும், இருக்க வீடும் இல்லாத இங்க, என் பொண்ணை எதை நம்பி விட்டு போகுறது? உங்க எல்லா பிரச்சனையும் முடிச்சிட்டு வந்து உங்க பொண்டாட்டியை கூட்டிட்டு போங்க மாப்ள... அதுவரை என் பொண்ணு எங்க கூடவே இருக்கட்டும்" என்றவர் சுஜியின் வார்த்தைகளையோ பார்தீபனின் வார்த்தைகளோ காது கொடுத்துக் கூட கேட்கவில்லை அவர்...

இருவருமே தங்கள் திருமண வாழ்க்கை இப்படி ஆரம்பிக்கும் என கனவிலும் நினைத்தது இல்லை.

தனது பார்வை மட்டத்தில் இருந்து தன்னவன் மறையும் வரை அவனை தனது கலங்கிய கண்களுடன் திரும்பி பார்த்துக் கொண்டே தன் தந்தையுடன் அவள் இழுபட்டு செல்ல, அதை தடுக்க கூட முடியாத தனது இந்நிலையை அவனே வெறுத்தான்.

இருவரின் துயரையும் சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்த தனது சொகுசு காரில் இதழ்களில் புன்னகைத் தவழ பார்த்துக் கொண்டிருந்தான் அவன் ராகவன்.
 
Author: காதல் கவிதை
Article Title: கவிதை 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
90

இது தான் டா வில்லன்
 
Top