கல் வெளி : 2

New member
Joined
Aug 21, 2025
Messages
16
அங்கு அந்த பிரமாண்ட ரிசார்ட்டின் கேட்டின் அருகில்...

ஏம்மா!! உங்களைத் தான், அப்பவே போக சொன்னனேன் இல்லை....


இங்க இன்னைக்கு பெரிய சினிமா பங்ஷன் நடக்குது.....

அதுக்குத் தான் நாங்களும் வந்து இருக்கோம். இங்க பாருங்க எங்க ஐடி இன்விடேஷன் கூட இருக்கு என்று அவளுடன் வந்த நால்வரில் ஒருத்தி சாந்தி கத்தி கொண்டு இருக்க... அது எதுவும் காதில் வாங்காமல், அமைதியாக தன் கைப்பையை இறுக்கமாகப் பிடித்து, உள்ளே பார்த்தாள். ஆழிச்செல்வி

இங்கு, தன் கண்களை அங்கும் இங்கும் சுழற்றிக் கொண்டிருந்த தருண்குமாரின் கண்களில் இது பட, அவனும் அவளைப் பார்த்து தன் நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை நடுவிரல் கொண்டு நகர்த்திக் கொண்டு, நக்கலாக சிரித்தான்... தான் என்ன நினைத்து அந்த செக்யூரிட்டியிடம் சொன்னானோ அதில் பாதி தான் நிறைவேறியது...

இவன் நினைத்தது, இது நடந்தவுடன் அவனிடம் வந்து அவள் கெஞ்சுவாள் என்று, ஆனால் அவள் தான் கல்லை விழுங்கியது போல் அமைதியாகவே நின்று கொண்டிருந்தாளே!!

அவனுக்கு இதை பார்த்தவுடன் சிரிப்பு போய், கோவம் தலைக்கு ஏற.... அதை சூழ்நிலைக் கருதி தன் பின்னந்தலையைக் கோதி அமைதியாக்கிக் கொண்டான்.... அவன் கோவத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு வரும் போது தான்,

இங்கு காரில் வந்து இறங்கிய பெங்களூரின் கை விட்டு எண்ணக் கூடிய இயக்குனரில் ஒருவர், சிவகாமி முத்துகிருஷ்ணனை ஆதி மரியாதை நிமித்தம், அவரிடம் சென்று, கை குலுக்கி, அதுவும் அவனுக்கு, முதல் படம் அவனை நம்பி கொடுத்தவர் என்பதால், அவன் சாதாரணமாக பேசினான்... அவனிடம் பேசியது இவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட.... அமைதியாக நின்று இருக்க.... ஆதியிடம் தன் வன்மத்தைக் காட்ட, சிவகாமி அவனை தடுத்து....

தருணின் புறம் திரும்பி... மரியாதை நிமித்தம் கை நீட்ட,
அவனோ, ஒரு நிமிடம் சுற்றி தன்னை யாராவது பார்க்கிறார்களா!! என கண்களை சுழல விட்டு தன்னை யாரும் பார்க்கிவில்லை என அறிந்தப் பின்பு, அவர் கைகளை தட்டி விட்டு,

சிரித்துக் கொண்டே, ஆனால்.. கண்ணில் வன்மத்துடன்... உன்னைய மாதிரி ஊர் சுத்துற பொம்பள கை எல்லாம் நான் தொடுவது இல்லை... என்று வார்த்தையை தன் பல் இடுக்கில் கடித்து துப்பினான்.

அவருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது... ஆனால், இது பொது இடம் என்பதால் ஆதிக்கு கோவம் வந்தாலும் மீண்டும் சிவகாமி அவனை தடுக்க அவன் பொறுத்துக் கொண்டான்.....

அப்போது, கேட்டில் நின்று கொண்டிருந்த சாந்தி சிவகாமிக்கு அழைத்து அங்கு நடப்பதை கூற, அவர் அங்கிருக்கும் ஆட்கள் மூலம் செக்யூரிட்டி இடம் சொல்லி அவர்களை உள்ளே அழைத்து வரச் சொன்னார்....
சிவகாமி சொன்னதாக சொல்லவும் செக்யூரிட்டியும் உள்ளே அனுமதித்து விட்டார்....

அப்போதும் இவன் அவளைப் பார்த்து, உள்ளே வந்துட்டேன்னு ரொம்ப பண்ணாத என்பது போல் முகம் வைத்திருக்க.... அப்போதும் அவள் அமைதியாகத்தான் இருந்தாள்...

இவர்களை மொத்தமாக பார்த்த சாரா மற்றும் மீரா இருவரும் ஓடி வர... அதைப் பார்த்த இவர்களும் அங்கு சிரித்த முகமாக மாற்றிக் கொண்டனர்.

ஹாய் மேடம்... எப்படி இருக்கீங்க...

நல்லா இருக்கேன், சாரா....

சாரா தானே!!!

ஆமாம்.. மேடம், தேங்க்ஸ் மேடம் என் பெயரை... நல்லா நியாபகம் வச்சியிருக்கீங்க...

இதுல என்ன இருக்கு.... நாம நிறைய மீட் பண்ணியிருக்கோம். அதான்... அவர் சிரித்த முகமாக, பதில் அளிக்க...

மேடம், நீங்க தொடர்ந்து மூணு வருஷமா ஒன் ஆப் தி ஜூரி மெம்பெரா இருக்கீங்க... எப்படி மேடம் பீல் பண்ணுறீங்க....

நல்லா, பீல் பண்றேன். எனக்கு அந்த வாய்ப்பை தரும் விழா குழுவினருக்குத் தான் நான் நன்றி சொல்லணும்....

இப்போ இந்த விழாவோட, பொறுப்பை நம்ம தருண் சார் எடுத்து செஞ்சி இருக்காரு... எப்படி மேடம் இருக்கு... அதுவும் இல்லமா, அவரும் ஒன் ஆப் தி ஜூரி மெம்பெர், எப்படி??

தருண் ரொம்ப டேலண்ட் பர்சன் அவரு இன்னும் பெரிய உச்சம் தொடுவாரு.... என்று அவனைப் பார்க்க... அவனும், அவரை பார்த்து பொய்யாக சிரித்து வைத்தான்...

மீரா, சாரா இருவரும் ஆழி செல்வியை பார்த்து யார்? என்பது போல் விழித்துக் கொண்டே அவளை நொடிக்கு ஒருமுறை பார்த்தாள். சாரா, ஏனென்றால் அவள் உடை அப்படி சாதாரண சிமெண்ட் நிற, ஒளி மங்கிய உடையை தான் அணிந்து இருந்தாள்... அதனால் அவள் பார்வை அப்படி...

அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டு சிவகாமி அவளை முன்னிறுத்தி.... இவங்க பேரு ஆழிச்செல்வி,

சாரா தன் நாடியை யோசித்து விட்டு இந்த பேர நான் எங்கே கேள்விப்பட்டிருகேன் மேடம், எதோ?? ஒரு கலை இயக்குனர் நேம் இல்லை,

எஸ். அவங்களே தான்....

மேடம் நான் உங்களை இப்போ தான் முதல் முறை பார்க்கிறேன்... ஆனால், நான் உங்களின் கலைக்கு நான் அடிமை... எவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்துக்கு எல்லாம் கலை கலை வல்லுனரா இருந்திருக்கீங்க.... சூப்பர் மேம்..

என்று அவள், ஆழிசெல்வியிடம் கைக்குலுக்க, அவள் இரு கரம் கூப்பி, வணக்கம் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டாள்....

அதன் பின், செல்வி சிவகாமியை பார்க்க... போதுமா?? முக்கிய கேள்வி முடிஞ்சதுனுனா நாங்க உள்ள போகலாமா?? என்று அவர் உள்ளே எத்தனிக்க... அவர்கள் இருவரும் கலைந்து சென்றனர்.

தருண் குமார் விறுவிறுவென உள்ளே சென்று விட,

ஆதி, என்ன மேடம் அவர் இப்படி பேசிட்டு போறாரு நீங்க அமைதியா இருக்கீங்க....

அவன் புத்தி அவ்வளவு தான் நம்ம என்ன பண்ண முடியும் விடுங்க....

உங்களுக்கு கஷ்டமா இல்லையா மேடம் உங்க உங்க என்று தொடங்கும் முன்னே!!

சிவகாமி அவனைத் தடுத்து நிறுத்திவிட்டு... ஆழிச்செல்வியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்....

அவளும் சாவிக் கொடுத்த பொம்மைபோல் அவர் பின்னாடியே சென்று விட்டாள்.... அவளுக்கு இது மாதிரி விழாவிற்கு வருவதெல்லாம் துளியும் இஷ்டம் இல்லை இது கூட சிவகாமியின் வற்புறுத்தலினால் தான் வந்தாள்...

அங்கு, விருது வழங்கும் விழா,
முதலில் எப்போதும் போல பரதநாட்டியம நடனத்துடன் தொடங்கி அதன்பின் ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடந்த வண்ணமும் இருக்க.....

அடுத்தடுத்து நாமினேஷன் களையும், அவர்களுக்கான பரிசுகள் கோப்பைகள் என மாறி வழங்கிய வண்ணம் இருக்க....

அந்த வருடம் சிறந்த கலை வல்லுநருக்கான நாமினேஷன் வர அதில் ஆழியின் பெயரும், அவள் எந்த படத்திற்காக அந்த கலை வடிவமைப்பை செய்திருந்தால் என்பதும் வர ரசிகர்களுக்கு அந்த படத்தின் பெயர் கேட்டவுடன் உற்சாகம் வந்து, அவள் பெயரைத்தான் கத்தினர்....

சாந்தியும் மற்ற மூவரும் குதுகளமாக இருந்தனர்....

அவளின் போதாத நேரம் தருண்குமார் தான், அந்த விருதை அவளுக்கு வழங்குவதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டான்...

இது சிவகாமிக்குமே ஒரு நிமிடம் ஆனந்தத்தைத் தான் தந்தது ஏனென்றால்?? அவருக்கு தெரியுமே!! யார் வெற்றியாளர் என்று,

அந்த தொகுப்பாளி பெண்ணோ?? சரி யாருன்னு சொல்லுங்க சார் என்று கேட்க... அந்த கவரைப் பிரித்து, வேண்டும் என்றே!! நேரம் கடத்தி ரசிகர்களிடம், கேட்க அவள் பெயரை சொல்லி கத்த,

சிவகாமியும் அவளை தன் அருகிலேயே அமர்த்தி கொண்டு அவள் தோள் மீது தட்டிக் கொடுக்க... அவள் அப்போதும் எந்த ஆர்வமும் இன்றி அமைதியாகத்தான் இருந்தாள்...

அவனும் மெல்ல ஆற அமர, கவரைப் பிரித்து, அதில் இருந்த பெயரைப் படித்தவுடன் எல்லோரும் அதிர்ச்சியாகினர்....

ஏனென்றால், அது அதில் அவள் பெயர் இல்லாமல் நாகேஸ்வரன் என்ற வேறொருவன் பெயர் இருந்தது....

இங்கு சிவகாமி, ஆதி,சாந்தி மற்ற மூன்று தோழிகளுக்கு கோவம் கொப்பளித்து வர, இவள் அப்போதும் அமைதியாக தான் இருந்தாள்...
இது அவர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கு ஒரு முறை ஏமாற்றம் தான், ஏனென்றால் அந்தப் படத்தில் கலை வடிவமைப்பு உண்மையில் அந்த அளவிற்கு இருந்தது முடியாத பல விஷயங்களை கண்முன்னே காட்சிகளாக கொண்டு வந்திருந்தாள்....

அதன் பிறகு ஒவ்வொரு விருதுகளும் கொடுக்க, இறுதியாக ஆதிக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருதுக் கிடைத்தது......

அவன் ஆனந்தமாக வந்தான்.... விருது வழங்கும் விழாவும் நல்லபடியாக முடிய....

எல்லோரும் கிளம்பும் நேரம், சிவகாமியை அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர் எல்லோரிடமும் சென்று பேசிக் கொண்டிருந்தார்... ஆதியும், அவன் நண்பர்களுடனும், தன்னுடைய ரசிகர்களிடமும், பேசிக் கொண்டிருந்தான்...

இதைப் பார்த்து, அவளை சுற்றி யாரும் இல்லை என்பதை உறுதி செய்து தருண் குமார் அவளிடம் வந்தான்...

வலுக்கட்டாயமாக அவள் கையைப் பிடித்து, தன் புறம் இழுக்க.... பாவம் அவனால் அவளை ஒரு இன்ச் கூட அந்த இடத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை....

அவள் ஒன்றும் ஆறடிக் கொண்ட வீர பெண்மணி இல்லை, ஆனால் அத்தனை அழுத்தம் அவளுள், எதையும் பிடிக்கவும் இல்லை, தன் கைபையைத் தவிர,

பாவம் அவனுக்குத் தெரியவில்லை, பெண்கள் கொடுக்க நினைத்தால் எல்லாவற்றையும் கொடுத்து விடுவார்கள்.... வேண்டாம் என்று நினைத்தால், அவர்களை ஒன்றும் பண்ண முடியாது என்று....

ஏய்.... உன்னை கூப்பிட்டா வர மாட்டியா!!
நீ மட்டும் நான் கேட்டதுக்கு சரின்னு சொல்லியிருந்தா!!

அந்த அவார்ட் இப்போ உன் கையில குழந்தை மாதிரி தவிழ்ந்து விளையாடி இருக்கும்....

ம்ம்ம்ம்... இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல, என்று தன் பாக்கெட்டில் இருந்து, சிகரெட் எடுத்து பற்ற வைத்து புகையை அவள் மூஞ்சிலே ஊதி விட்டு, இன்னைக்கு வரியா!! ஒன் டே தான் அதுக்கு அப்பறம் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்... ஆனால், நீ வரலைனா லைப் லாங் ஒன்லி டிஸ்டர்ப்ன்ஸ் தான் என்ன சொல்ற......

அவளுக்கு, கோவம் தானே வந்திருக்க வேண்டும் அந்த இடத்தில் ஆனால் அவனை கடந்து செல்ல முயன்றாள்.

விழா முடிந்து விட, ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணத்திற்காக செல்ல அந்த இடமே சற்று காலியாகத் தான் இருந்தது.... அதை அவனுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அவள் கையைப் பிடித்தான்....

இதுவரை அமைதியாக இருந்தவள் அவன் கை அவள் மேல் பட்டதும், கோவப்படாமல், அவன் கண்ணை நேருக்கு நேர் நின்று ஒருமுறை பார்க்க, என்ன நினைத்தானோ??

ஒகே ஒகே, இது பப்ளிக் பிளேஸ், சோ நான் டீசென்ட்டா நடந்துக்கிறேன்.... அவள் மீண்டும், திரும்பி நடக்க

எதிரில் சாந்தி வந்தாள்....

ஏய்.... இன்னும் இங்க என்னடி பண்ணிட்டு இருக்க....

அவள் ஒன்னும் இல்லை, என்பதை போல் தலையை ஆட்ட,

சரி, சரி வா போகலாம்...

அங்க நம்ம ஹீரோ சார் வெயிட்டிங்... என்று இழுத்துக் கொண்டு சென்றாள்...

அவர்கள் உண்டு கொண்டிருக்கும் போது, ஆழிக்கு ஒரு போன் வந்தது... அதை எடுத்து காதில் வைத்து விட்டு, ஒரே ஒரு வார்த்தை தான் பேசினாள்...

ம்ம்ம்... பார்த்துக்கலாம் என்று....

கதையின் போக்கு எப்படி இருக்குனு சொல்லுங்க.....
அப்படியே, மதிப்பீடுகளையும், தங்களின் விமர்சனத்தயும் கொடுத்து விட்டு போங்க... செல்லம்ஸ்... உங்களின் விமர்சனம் தான் எங்களின் தூண்டு கோல்
மறக்கமா அப்படியே பொல்லொவ்வும் கொடுத்து விடுங்கள்....
 

Author: Roja
Article Title: கல் வெளி : 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top