New member
- Joined
- Aug 11, 2025
- Messages
- 16
- Thread Author
- #1
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜
எபி 5
காவ்யா கூறிய கண்டிஷனிற்கு சித்தார்த் சிறிது நேரம் யோசித்து தலை அசைத்தான்.
“சரி. ஓகே உங்க கண்டிஷன்க்கு நான் ஒத்துக்குறேன் அண்ட் நான் உங்க ப்ரெண்ட்ஷிப்புக்காக இந்த குடியையும் விடுறேன்.” என கூற
அவளோ " தட்ஸ் குட் " என்றாள்.
அந்த நாளிலிருந்து அவர்கள் தினமும் சின்ன சின்ன விஷயங்களைப் பகிர ஆரம்பித்தனர்.
காவ்யா சமையலறையில் இருந்தால், சித்தார்த் வந்து உதவுவான். வீட்டு வேலைகளை இருவரும் சேர்ந்து முடிப்பார்.
ஒரு ஞாயிறு மதியம்…
காவ்யா சமையலறையில் பிஸியாக இருந்தாள். சித்தார்த் ஹாலில் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அப்போதே கதவு மணி அடித்தது.
“கவி, நான் பாக்குறேன்,” என்று சித்தார்த் கதவுக்குச் சென்றான்.
கதவைத் திறந்தவுடன் ஒரு குரல்—
“டூட்! நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா டா ! ?” என்ற வார்த்தையில்
சித்தார்த் அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“சமர்! நீயா … நீ எப்படி இங்க ?” என கேக்க
முன் நின்ற உயரமான, கூலாக இருக்கும் ஒரு இளைஞன். ஜீன்ஸ், ஷர்ட், முகத்தில் ஒரு ஸ்மார்ட் சிரிப்பு. அவன் சித்தார்தின் பழைய கல்லூரி தோழன் சமர்.
இருவரும் கட்டித்தழுவிக் கொண்டனர்.
“டூட்! இவ்ளோ நாள் தொடர்பே இல்ல. உன் லைப் உன் ஒர்க் எல்லாம் எப்படி போகுது . உன்னை இப்படி நேர்ல பாப்பேன்னு நினைக்கவே இல்ல,” என்று சமர் அன்பாக சொன்னான்.
சித்தார்த்தோ " ம்ம். நல்ல போகுது மச்சான். அப்பறம் என்ன விசியம் என்ன தேடி வந்து இருக்க " என கேக்க
அவனோ " எனக்கு நெஸ்ட் வீக் கல்யாணம் டா மச்சி, அதுக்கு நீ கண்டிப்பா வரணும் " என இருவரும் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டு இருக்க
அந்த சத்தத்தைக் கேட்டுக் கொண்டு காவ்யா ஹாலுக்கு வந்தாள். அவள் பார்க்க, இருவரும் சிரித்து கொண்டிருந்தார்கள்.
சித்தார்த் அவளை நோக்கி,
“கவி, இது என் கல்லூரி பிரெண்ட்—சமர். என் வாழ்க்கையில நீங்க ப்ரெண்ட் ஆனதுக்கு முன்னாடி, பிரெண்ட் என்றால் சமர் தான்.” என்றான்
சமர் சிரித்து,
“அப்போ, இந்த அழகான லேடி யார்? நீங்க சொல்லவே இல்லையே?” என்று கிண்டலாக கேட்டான்.
சித்தார்த் சற்று தயங்கினான்.
“அவங்க… காவ்யாஞ்சலி. என்… என்…”
காவ்யா அமைதியாக
“நான் சித்தார்தின் ப்ரெண்ட்,” என்று சொன்னாள்.
சமர் அவளைப் பார்த்து,
“சூப்பர்! எனக்கும் உங்ககூட பிரண்ட் ஆகணும்னு ஆசை. சித்தார்த்-ஐ காப்பாத்துறவங்க யாராக இருந்தாலும், அவங்க எனக்கும் பெஸ்ட் பிரண்ட் ” என கூற
அவளோ “சரி, அதுக்கு பிரச்சனை இல்லை, இனிமே நாம மூணு பேரும் பிரிஎண்ட்ஸ்.” என்றாள்
சமர் இருவரையும் பார்த்து " நெஸ்ட் வீக் எனக்கு கல்யாணம் அதனால கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் வரணும் " என கூறி இருவரிடமும் விடை பெற்று சென்றான்.
அன்று மாலை....
மழை வெளியில் தூறிக் கொண்டிருந்தது. சித்தார்த் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். காவ்யாவோ காபி எடுத்து வந்து அவனருகே வைத்தாள். தற்செயலாக அவன் கையைத் தொட அந்த நொடி, இருவருக்கும் கண்-கண் சந்தித்தது.
அந்த பார்வையில் சொற்களால் சொல்ல முடியாத ஏதோ ஒன்று இருந்தது.
சித்தார்த்தின் இதயம் திடீரென துடித்தது. அவன் உள்ளத்தில் ஒரு கேள்வி:
“இந்த பெண்ணை நான் வெறுமனே நண்பி மாதிரி தான் பார்கிறேனா? இல்ல… இன்னும் டீப் -ஆ?…” என யோசிக்க
காவ்யாவோ திடீரென முகம் திருப்பி, “காப்பி ஆற விடாதீங்க” என்று சொல்லி ஓடி உள்ளே போய்விட்டாள்.
---
இரவு 11 மணி.
அவன் மெத்தையில் படுத்திருந்தான். இருவருக்கும் இடையில் ஒரு தலையணையை வைத்து காவ்யா அதை கட்டி கொண்டு படுத்து இருந்தாள்.அவள் பக்கத்தில் இருந்தாலும், அவள் முகம் சற்றே கவலையுடன் இருந்தது. சித்தார்த்தோ மெதுவாக கேட்டான்,
“கவி… நம்ம வாழ்க்கையை பற்றி உங்களுக்கு இன்னும் குழப்பமா இருக்கு தெரியுது. பட் என்னை நம்புங்க … நான் ஒரு நாளும் உன்ன போர்ஸ் பண்ண மாட்டேன். ஆனா ஒரு சின்ன டவுட் … நீங்க ஒருநாள் என்னை உங்க பார்ட்னர் -ஆக் நினைச்சு பாப்பிங்களா ?”
காவ்யா அந்த கேள்வியைக் கேட்டு நடுங்கினாள். தன்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. அவள் கண்களில் கண்ணீர் தேங்க , “சித்தார்த்… என் வாழ்க்கையில் நான் யாரையும் நம்பினால்… அந்த நம்பிக்கை எப்போதும் உடைந்துவிடும். நான் இனி அந்த தவறு செய்ய விரும்பல” என்று கூறினாள்.
அவள் வார்த்தைகளில் இருந்த வலி, சித்தார்த்தின் மனதை கிழித்தது. இருந்தாலும் அவள் கூறும் அர்த்தம் தான் அவனுக்கு புரிய வில்லை.
---
அந்த இரவு காவ்யா சொன்ன வார்த்தைகள் சித்தார்த்தின் மனதில் பதிந்துவிட்டன. அவன் கண்களை மூடியும் தூங்க முடியவில்லை. “ஒருநாள் அவள் என்மேல் நம்பிக்கை வைப்பாளா?” என்ற கேள்வியே அவனை துரத்தியது.
அடுத்த சில நாட்கள் இருவரும் பழக்கத்தினால் பேசிக் கொண்டாலும், காவ்யாவின் முகத்தில் எப்போதும் ஒரு எச்சரிக்கை, ஒரு தூரம் இருந்தது. சித்தார்த்தின் உள்ளம் அதை கவனித்தாலும், அவன் அதை வெளிக்காட்டவில்லை.
நான்கு நாட்கள் கழித்து....
காலை வேலை சித்தார்த் வீட்டின் வெளியில் கார் ஹார்ன் அடிக்க, காவ்யா கதவைத் திறந்தாள். வெளியே சிரித்தபடி சமர்.
“ஹாய் காவ்யா! ரெடி ஆகிட்டீங்களா? நாம ரொம்ப பிஸியாக இருக்கப்போறோம் அடுத்த சில நாள்கள்.” என்று கூற
அவள் " ம்ம். நாங்க ரெடி சமர் அண்ணா.” என்றாள்
பின்பு மூவரும் சமரின் காரில் அவன் வீட்டிற்கு சென்றனர்.
---
மாலை நேரம்.
சமரின் வீட்டில் மூவரும் பேசி கொண்டு இருந்தனர். திடீரென சமரின் போன் அடித்ததும் அவன் முகம் மாறி மங்கியது. அதனை எடுத்து பேசிக் கொண்டிருந்தபோது அவன் சிரிப்பே மறைந்து போனது. சித்தார்த்தும் காவ்யாவும் கவலையுடன் பார்த்தனர்.
சமர் போனை கைவிட்டு உட்கார்ந்தான்.
காவ்யா என்னாச்சு அண்ணா என கேக்க
சமரோ “டூட், கவி இப்படி, என்ன சொல்றதுன்னு தெரியல. என் கல்யாணம்… கான்சல் ஆயிடுச்சு.” என்றான்
அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
“என்னடா சொல்றே?” – சித்தார்த் கேட்டான்.
சமர் மெதுவாக, கண்ணீர் துடைத்து,
“என் வருங்கால மனைவி… அவங்க குடும்பம் சில காரணங்களுக்காக கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. எதுவுமே சொல்லாம, நேத்து வரைக்கும் சந்தோஷமாக இருந்தவங்க, இப்போ ‘இது சாத்தியமே இல்ல’ன்னு சொல்றாங்க. என்னால நம்பவே முடியல.” என கூற
அவனுடைய குரலில் உடைந்த மனம் தெரிந்தது.
காவ்யாவோ " கவலை படாதீங்க அண்ணா உங்களுக்கு ஏத்த நல்ல பொண்ண பார்த்து உங்களுக்கு நானே கல்யாணம் பண்ணி வைக்குறேன் " என கூற
சித்தார்த்தும் " ஆமா, மச்சான் நீ பீல் பண்ணாத " என அவன் மனதை மாற்றினான்.
சமரின் வலி காவ்யாவுக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது. அவள் மனதில் தன் கடந்த கால நினைவுகள் புயலாய் எழுந்தன.
“நம்பிக்கை கொடுத்து உடைக்கிறதுதான் வாழ்க்கையிலேயே பெரிய தண்டனை…” என்று அவள் மனதில் சொன்னாள்.
அந்த இரவு இருவரும் சமரின் வீட்டில் தாங்குவது என முடிவு செய்தனர். இரவு உணவாக சித்தார்த் சப்பாத்தி செய்து கொண்டு இருந்தான். அவனுக்கு அருகில் சமர் காய்கறிகளை வெட்டி கொண்டு இருந்தான். காவ்யா மசாலா பொருட்களை எல்லாம் மிக்ஸியில் அறைத்து கொண்டு இருந்தாள்.
மூவரும் எதோ கதைகளை பேசி கொண்டே சமைத்து முடித்து ஒன்றாக அமர்ந்து உணவை உண்டனர்.
பின்பு மூன்று பேரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். வெளியில் இன்னும் மழை பெய்துக் கொண்டிருந்தது. சமர் பெண் வீட்டார் கூறியதை நினைத்து கண்ணீரை சிந்தினான். அவன் மனம் கண்ணீரை அடக்க முயன்றாலும் அவனால் முடியவில்லை.
சித்தார்த் அவனுடைய தோளில் கை வைத்தான்,
“மச்சி, வாழ்க்கை நம்மை விட்டு போனது போல தோன்றலாம். ஆனா சிலர் போகும்போது, நம்முடைய உண்மையானவர்களை அறிய இடம் கிடைக்கிறது. நீ தைரியமா இரு. நான் உன் கூடவே இருப்பேன் ” என கூற
காவ்யா மெதுவாக
“நானும் உங்க பக்கம்தான்.” என்றாள்.
சமரோ " என்னால முடியல கவி, வேற எதாவது ரீசன் சொல்லி இருந்த கூட பரவாயில்ல நான் ஒரு அனாதை அதனால எனக்கு பொண்ணு கொடுத்தா அவங்க ஸ்டேட்டஸ் குறைஞ்சிடுமா, இத அவங்க முதலயே சொல்லி இருந்த நான் வேற எதாவது பண்ணி இருப்பேன் " என கூற
காவ்யாவோ " விடுங்க அண்ணா, வாழ்க்கையில நமக்கு எல்லாமே ஒரு பாடம் தான், அதை புரிஞ்சிகிட்டு நாம தான் முன்னேறி போகணுமே தவிர இப்படி பின் வாங்க கூடாது, உங்கள வேணாம் சொன்ன அவங்க வருத்த படுற மாதிரி நீங்க பெரிய உயரத்த தொட்டு காட்டணும் " என கூற
அவளின் வார்த்தைகளில் இரு ஆண்களுக்கும் புதிய நம்பிக்கை பிறந்தது.
சமரோ கண்களை துடைத்து கொண்டு " கண்டிப்பா கவி மா இந்த சமர் உனக்காக பெரிய உயரத்த அடைந்து காட்டுவேன் " என கூறினான்.
சித்தார்த் சரி சரி பேசுனது போதும் வாங்க எல்லாரும் போய் தூங்கலாம் என அழைத்து சென்று கவி ஒரு அறையிலும் சமர், சித்தார்த் ஒரு அறையிலும் படுத்து கொண்டனர்.
அந்த நொடி, மூன்று பேரின் நட்பு ஒரு புதிய உறவாக மாறியது—வலி, ஆறுதல், நம்பிக்கை கலந்து பிறந்த உறவு.
சித்தார்த்தின் உள்ளத்தில் மட்டும் இன்னும் ஒரு கேள்வி:
“ஒருநாள் காவ்யா, என்னை முழுமையாக நம்புவாளா? அல்லது அவள் இதயத்தில் எப்போதும் அந்த பயம் நிலைத்திருக்குமா?”
அந்த கேள்வியின் பதில் இன்னும் எதிர்காலத்தில் மறைந்தே இருந்தது…
காதல் கூடுமா 💞....

Author: velvizhiyaal
Article Title: கனவு 5
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.