Member
- Joined
- Aug 11, 2025
- Messages
- 32
- Thread Author
- #1
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜
எபி 14
சமரோ ' பச்! என்ன டி சொன்னதையே சொல்ற... நாளைக்கி நீயும் இதையே ஒரு காரணமா சொல்லி விட்டுட்டு போக மாட்டேன்னு என்ன நிச்சயம்... ஹான் சொல்லு டி...
எதோ பெரிய *** மாதிரி இன்னக்கி நான் தான் வேணும்னு சொல்லுவா... அதுவே நாளைக்கி வேற எதுவும் சொல்ல மாட்டியா... சொல்லு டி... ' என கேக்க
நிதியோ கண்களில் வழியும் நீரை துடைத்து கொண்டு ' நான் வேணும்னா என் கர்பப்பை யா ரிமோவ் பண்ணிக்குறேன்... அப்பயாவது என்ன நம்புவியா... சொல்லு சமர் ' என கேக்க
அவளின் பதிலில் ஒரு நிமிடம் ஆடி தான் போனான்.... அந்த ஆறடி ஆண் மகன் என்ன வார்த்தை... கூறிவிட்டாள் அவள்... யாரும் அற்ற எனக்காக அவள் தாய்மை உணர்வையே அழிக்க முடிவு செய்து விட்டாளே.... பின் தன்னை சமன் செய்து கொண்டு
' இங்க பாரு நிதி நான் உன்ன நம்புறேன் மா... ஆனா நீயே யோசிச்சு பாரு.... என்னால உனக்கு எந்த புரோஜினமும் இல்ல.... நாளைக்கே இந்த உண்மை சித்தார்த் காவ்யாக்கு தெரிஞ்ச என்னைய பத்தி என்ன நினைப்பாங்க சொல்லு....
நான் எதோ பேசி உன்ன ஏமாத்திட்டாத நினைக்க மாட்டாங்களா... சொல்லு மா... ' என இல்லாத பொறுமையோடு கேக்க
நிதியோ ' என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல சமர்.... இனி நீங்க தான் சொல்லணும் ' என கூற
சமரோ ' சரி எனக்கு டைம் கொடு இப்ப தான் ஒருத்தி நான் அனாதை... என்னால ஒரு பொண்ண திருப்தி பண்ண முடியாது... அது இதுன்னு... பேசிட்டு போன... இப்ப நீயும் உன் காதல வந்து சொல்லி இருக்க... நான் கொஞ்சம் யோசிச்சி பாக்குறேன் ' என்றான்
அவளும் ' கண்டிப்பா நாம நேரா 60வது கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்.... சரி அது வர உனக்காக நான் காத்து இருப்பேன் சமர்... ' என கூறி வெளியே சென்று விட்டாள்.
சமரோ பெண் அவள் வார்த்தையில் குழம்பி போய் அப்படியே போத்... என சோபாவில் விழுந்தான். அவன் மனமோ யாருடி நீ.... அப்படி நான் என்ன பண்ணிட்டேன்னு.... நான் தான் வேணும்னு இப்படி தவிக்குற... என யோசித்து கொண்டு இருந்தான்.
---
இப்படியே ஒரு வாரம் செல்ல அவரவர் வேலைகளில் மூழ்கி இருந்தனர் நால்வரும்...
அன்று இரவு சோர்வாக சித்தார்த் வீட்டில் நுழைய... அவனை கண்ட காவ்யாவோ 'என்னாச்சி சித்தார்த் ஏன் ஒரு மாதிரி இருக்க ' என்றாள்
அவனோ ஒன்னும் இல்ல... கவி ஹோட்டல்ல ஒரு சின்ன ப்ரோப்லேம் அதான் எப்படி சரி பண்றதுனு யோசிச்சிட்டு இருக்கேன்... என்றான்
காவ்யாவோ ' இது தான சித்தார்த் விடு பார்த்துக்கலாம்.... இது எல்லாம் பெரிய விசயமா சொல்லு... என்ன பிரச்சனைனு சொல்லு முதல ' என்றாள்
அவனோ ' அது ஹோட்டல்க்கு நிறைய போட்டியாளர்கள் வந்துட்டாங்க... அதனால கொஞ்சம் கஸ்டமர்ஸ்... வரவும் சரியா இல்ல பைனான்சில் ப்ரோப்லேம் வேற... அதனால ஹோட்டல்ல கொஞ்ச சேஞ்சு பண்ணலாம்னு இருக்கேன்... ' என்றான்
காவ்யாவோ ' அதான் நீயே ஐடியா யோசிச்சிட்டியே... சித்தார்த் அப்பறம் என்ன உன் ஐடியா கூட என்னோட ஐடியாவையும் சேர்த்து புதுசா அப்டேட் பண்ணலாம் ' என்றாள்
துவண்டு போன சித்தார்த் மனதிற்கு காவ்யாவின் வார்த்தை தேன் போல பாய... புதிய தெம்போடு அவனும் ' சரி கவி... நீ சொன்ன மாதிரியே பண்ணலாம் ' என்றான்
அவளும் ' சரி வா பசிக்குது சாப்புடலாம்... அப்பறமா உன் சோக கதையா கேக்குறேன் ' என கலாய்க்க
அவனோ ' ஹேய்! என்ன கடைசியில என்ன நீயும் கிண்டல் பண்றல ' என முகத்தை சோகமாக வைத்து கேக்க
அவளோ ' போ மேன் போ 'என அனுப்பி வைத்தாள்... அவனும் சென்று பிரெஷ் ஆகி வர இருவரும் சென்று உணவு உண்ண அமர்ந்தனர்... சித்தார்த் உணவை எடுத்து காவ்யா வாய் அருகே நீட்ட...
அவளோ கேள்வியாக அவனை பார்த்தாள்...
சித்தார்த்தோ ' ஏன் நான் ஊட்டி விட்டா சாப்பிட மாட்டியா ' என்றான்
அவளும் அது எல்லாம் இல்ல எனக்கு நினைவு தெரிஞ்சு இது வர எனக்கு யாரும் ஊட்டி விட்டது இல்ல... மித்து தான் எப்பயாவது ஊட்டி விடுவான்... இப்ப நீ ஊட்டி விடுற... ஆனா இது எப்பவுமே நிரந்தரமா இருக்குமா??? என கேள்வியை கேட்டு உணவை வாங்கி கொண்டாள்.
அவனும் ' அதான் இப்ப நான் இருக்கேன்ல இனிமே மூணு வேலையும் நானே ஊட்டி விடுறேன்... இனிமே எப்பவும் நான் இருப்பேன் ஓகே வா ' என நான் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கூறினான்.
இருவரும் ஒன்றாக உண்டு விட்டு சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு உறங்க செல்ல காவ்யாவோ மெத்தையின் ஒருபுறமும் சித்தார்த்துக்கு முதுகு காட்டி படுத்து இருந்தாள்.. சித்தார்த் சென்று காவ்யாவை அணைத்த படி படுத்து கொள்ள அவளோ ' ஏன்?? அங்க தான் நிறைய இடம் இருக்கே எதுக்காக இப்படி என் மேல இடுச்சிகிட்டு இருக்க ' என்றாள்
சித்தார்த்தோ ' அங்க எல்லாம் படுத்தா தூக்கமே வர மாட்டேங்குது... அதுவும் நீ இருக்கும் போது நான் ஏண்டி தனியா இருக்க போறேன் சொல்லு... இந்த தனியா தூங்குறது, தனியா சாப்பிடுறது, தனியா வாழுறது — இதெல்லாம் நான் ரொம்ப நாட்களா பண்ணிட்டேன்.
அதனால இனிமே எல்லாமே உன்கூட மட்டும் தான் சரியா... ' என்றான்
அவனின் பதிலில் குழம்பிய காவ்யாவோ ' இப்ப என்ன சொல்ல வர சித்தார்த்... நாளைக்கே உங்க வீட்ல இருந்து வந்தா நாம பிரிஞ்சி தான ஆகணும் ' என்றாள்
அவனோ ' பச்! எவளோ நல்லா மூட்ல இருந்தேன் தெரியுமா ஏண்டி மறுபடியும் அந்த காலகேயன் குடும்பத்தை நியாபக படுத்துற... அமைதியா தூங்கு டி ' என கூறி அவளை அணைத்த படி களைப்பில் உறங்கி விட்டான்.
இரவு மெதுவாக கரைந்தது. சோம்பல் நிறைந்த ஒரு அமைதி இருவரையும் சுற்றி கொண்டது.
ஆனால் காவ்யாவுக்கு தூக்கம் வரவில்லை. சித்தார்த் தூங்கிக் கொண்டிருந்தான். அவளோ அவன் முகத்தை பார்த்துக்கொண்டே, மனதில் அலைமோதும் எண்ணங்களை அடக்க முயன்றாள்.
அவள் மனமோ ' நீயும் என்ன ஏமாத்திட்டு பாதியில போய்டுவியா சித்தார்த்??... ' என்ற யோசனையிலே கரைந்தது.... அப்போது உறக்கத்தில் புரண்டு திரும்பிய சித்தார்த்தோ விழித்து இருக்கும் காவ்யாவை கண்டு என்னாச்சு கவி... தூங்கலையா??... என்றான்
அவளோ இல்ல சித்தார்த் தூக்கம் வரல மனசுக்கு ஒரு மாதிரி... இருக்கு... என்றாள்
சித்தார்த்தோ பெண் அவளை அவன் மார்பில் சாய்த்து கொண்டு ' எதையும் யோசிக்காம கண்ண மூடி படு கவி தூக்கம் வரும்... எதாவது சொல்லனும்னா... சொல்லு இப்படி எதையாவது மனசுல போட்டு கொழப்பி கொள்ளாத.... ' என்றான்
அவளோ ' அது எல்லாம் ஒன்னும் இல்ல சித்தார்த்.... தூக்கம் தான் வரல.... இப்படியே படுத்துக்கவா... ' என்றாள்
சித்தார்த்தோ ' ம்ம். படுத்துக்கோ... சரி பாட்டு கேக்குறிய.... ' என்றான் யோசனையாக
அவளோ நேரத்தை பார்க்க அது இரவு இரண்டு மணி என காட்டியது... பின் சித்தார்த்தை பார்த்து என்ன இந்த டைம்- ல பாட்டு எல்லாம்??... என்றாள்
அவனோ சும்மா ஒரு சேஞ்சுக்கு தான் உனக்கு தான் தூக்கம் வரலையே சோ எனக்கு கம்பெனி கொடு... என போனில் ப்ளூடூத் கனெக்ட் செய்து பெண் அவள் காதில் மாட்டி விட்டான்...
🎶வெண்ணிலவே
வெண்ணிலவே விண்ணை
தாண்டி வருவாயா விளையாட
ஜோடி தேவை இந்த பூலோகத்தில்
யாரும் பாா்க்கும் முன்னே உன்னை
அதிகாலை அனுப்பி வைப்போம்
இது இருளல்ல அது
ஒளியல்ல இது இரண்டோடும்
சேராத பொன் நேரம் இது
இருளல்ல அது ஒளியல்ல
இது இரண்டோடும் சேராத
பொன் நேரம்
தலை சாயாதே
விழி மூடாதே சில
மொட்டுக்கள் சட்டென்று
பூவாகும் பெண்ணே பெண்ணே
பூலோகம் எல்லாமே தூங்கிபோன
பின்னே புல்லோடு பூவிழும் ஓசை
கேட்கும் பெண்ணே நாம் இரவின்
மடியில் பிள்ளைகள் ஆவோம்
பாலுாட்ட நிலவுண்டு
வெண்ணிலவே
வெண்ணிலவே விண்ணை
தாண்டி வருவாயா விளையாட
ஜோடி தேவை இந்த பூலோகத்தில்
யாரும் பாா்க்கும் முன்னே உன்னை
அதிகாலை அனுப்பி வைப்போம்
எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை
வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி
இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை
வைத்தவன் யாரு
பெண்ணே பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவை
திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல்
தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க
வேண்டும் நான் உன் போன்ற
பெண்ணோடு
………………………………..
வெண்ணிலவே
வெண்ணிலவே விண்ணை
தாண்டி வருவாயா விளையாட
ஜோடி தேவை
இந்த பூலோகத்தில்
யாரும் பாா்க்கும் முன்னே உன்னை
அதிகாலை அனுப்பி வைப்போம்🎶🎶🎶
என இதமான பாடல் காதுகளில் தேன் போல பாய....
காதலியை அணைத்த படி அந்த இதமான இசையை அனுபவித்து கொண்டு இருந்தான் சித்தார்த்...
அவன் மனமோ லேசான நிலையில் பாடலின் வரிகளை எண்ணி கொண்டு இருந்தது.....
ஆஹா என்ன அற்புதமான வரிகள் அவை....
இது இரவும் அல்ல பகலும் அல்ல....
ஆனால் அருகில் நீ வேண்டும் எப்போதும்....
பூலோகம் தூங்கிய பின்னும்....
பூ போன்ற உன் முக தரிசனம் வேண்டுமே....
என் கோரிக்கை எல்லாம் கேக்கும் வெள்ளி நிலவே என் ஜோடி துணையை நீ அனுப்பி வாய்ப்பையா??? என்ற கேள்வியோடு பாடல் முடிய... காவ்யா நன்றாக உறங்கி இருந்தாள்.....
பெண் அவள் உறங்குவதை உறுதி செய்த சித்தார்த் அவன் மனதின் இன்பமான நினைவாக அவன் காதல் பக்கங்களில் இதை சேர்த்து கொண்டு அவனும் உறங்க ஆரம்பித்தான்....
சித்தார்த் காதலை ஏற்று கொள்வாளா காவ்யாஞ்சலி???... இவர்களை பிரிக்க புதிய சதியோடு வரும் கோதவரி... தடைகளை தாண்டி இருவரும் இணைவர்களா??
காதல் கூடுமா 💞...

Author: velvizhiyaal
Article Title: கனவு 14
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.