எபிசோட் 9

New member
Joined
Aug 21, 2025
Messages
22
"கரெக்டா நான் வரப்ப எப்படி நடந்து வர? என்கிட்ட பேசுறதுக்கு தான?"

"நீ மட்டும் எதுக்கு எனக்கு ஆப்போசிட்ல வர? என்ன பார்க்கதான?"

என அவளும் கேட்க,

"நான் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன். நம்ம தான் சண்டை போடக்கூடாதுன்னு பேசிருக்கோம்ல?ப்ரெண்ட்ஸா இருக்கலாம்னு சொல்லி இருக்கோம்ல? அப்புறம் ஏன் இப்படி பேசற?"

"நானும் சும்மா விளையாட்டுக்கு தான் பேசினேன். ஆமா, எப்போ பார்த்தாலும் பைக்ல சுத்திட்டு இருக்க? உனக்கு வேற வேலை எதுவும் இல்லயா?"

"அது வந்து மலர்.......நான் ஜாப் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்"

"நீயுமா?"

"ஏன் அப்படி கேட்குற?"

"எங்க அண்ணனும்,
ரொம்ப நாளா ஜாப் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கான். அவனுக்கும் வேலை எதுவும் செட் ஆகல"

"நான் ரொம்ப நாளால்லாம் வேலை தேடல. இப்போதான் கொஞ்ச நாளா...... பிஸ்னஸ் பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கு லோன் கூட சேன்ஷன் ஆயிடுச்சு. பிசினஸ் ஸ்டார்ட் பண்ண இன்னும் கொஞ்ச நாள் ஆயிடும். அதுவரைக்கும் வீட்ல இருந்து என்ன பண்றது? அதுக்காக தான் வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்"

"அப்படியா? நான் போற கம்பெனியில் கூட ஜாப் வேக்கன்ஸி இருக்குன்னு சொல்லிட்டு இருந்தாங்க"

"அப்படியா மலர்?!!!"

"நான் கேட்டுட்டு உனக்கு சொல்றேன். அதான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறல்ல? அதுக்குள்ள எதுக்கு வேலைக்கு போயிட்டு?"

"இல்ல மலர், என் ஃபேமிலி சூழ்நிலை வேற மாதிரி. அப்பா, அம்மா பாவம். ரொம்ப வருஷமா வேலைக்கு போய் கஷ்டப்பட்டு என்னை படிக்க வச்சாங்க.
இப்போ நான் அவங்களுக்காக ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். நாங்க எதுவும் பெருசா வசதியானவங்கல்லாம் இல்ல"

"அப்படியா?!!! என்ன மாதிரி தான் நீயும்"

"என்ன சொல்ற மலர்?"

"ஆமா அருள், என் ஃபேமிலியும் இந்த மாதிரி தான். இப்போ நானும், அப்பாவும் தான் வேலைக்கு போயிட்டு இருக்கோம். அப்பாக்கு சரியா வருமானம் இல்ல. அப்பா இதுக்கு முன்னாடி மில் வச்சிருந்தாரு. அதுல நல்ல வருமானம் வந்துட்டு இருந்துச்சு. அதை வச்சு தான் அண்ணனையும், என்னையும் படிக்க வச்சாரு. வீட்டையும் பார்த்துக்கிட்டாரு. இப்போ அந்த அளவுக்கு வருமானம் வரதில்ல. என் ஃபேமிலி கொஞ்சம் பெருசு. எங்களோட வருமானம் பெருசா பத்தரதில்ல. அண்ணாவும் வேலைக்கு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கான்"

"ஏன் உங்க அண்ணனுக்கு, உங்க கம்பெனியில் வேலை கிடைக்காதா?"

"எங்க அண்ணா, அந்த மாதிரி ஜாப் தேடல. அவன் கொஞ்சம் அவனோட படிப்புக்கேத்த மாதிரி தேடுறான். இன்னும் ரெண்டு, மூணு நாள்ல இன்டர்வியூ இருக்குன்னு சொல்லிருக்கான். அவனுக்கு கண்டிப்பா வேலை கிடைச்சிடும். நீயும் கவலைப்படாத. நான் வேலை செய்ற கம்பெனியில உனக்கு கேட்டு பார்க்குறேன்"

"அப்போ மலர், நம்ம ரெண்டு பேரும் ஒண்ணாவே ஒர்க் பண்ணலாம்னு சொல்லு"

"இங்க பாரு, நான் கேட்டு பார்க்கிறேன்னு தான் சொன்னேன்"

"அது இல்ல மலர், ரெண்டு பேரும் ஒண்ணா வேலை பார்த்தா ஒருத்தருக்கொருத்தர் ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்ல? அதுக்கு தான் சொன்னேன்"

"சரி, நான் கிளம்புறேன்"

"ஓகே மலர், பாய்......"

என அவர்கள் இருவரும் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். இப்படி ஒரு, ஒரு நாளும் அவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளி குறைய ஆரம்பித்தது. மலர்விழியின் கம்பெனியில் அருளுக்கு வேலை கிடைக்காததால், வேறு சில கம்பெனிகளில் அருள் வேலைக்கு முயற்சி செய்தான். இப்படி இருவரும் அவரவருடைய வேலையில் பிசியாக இருந்தாலும், தினமும் சந்தித்து பேசிக்கொள்வார்கள். இப்படி அவர்களுடைய சந்திப்பு அவர்களுக்கிடையில் நெருக்கத்தை உண்டாக்கியது. ஒரு நாள் எப்போதும் போல் மலர்விழி நடந்து வந்து கொண்டிருக்க,

(என்ன அருளை காணோம்? ஒருவேளை, பஸ் ஸ்டாப்ல எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கானோ? என்னன்னு தெரியலயே? ஆனா, இந்த டைம்கெல்லாம் வந்திருப்பானே? என்கிட்ட பேசாம போக மாட்டான். என்ன ஆச்சுன்னு தெரியலயே? சரி, இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் வருவான்......)

என அவள் சமாதானம் சொல்லிக் கொண்டாலும், அவன் அன்று வராதது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே வழி எங்கும் அவனை தேடிக்கொண்டே நடந்து வந்தாள்.

(ஒருவேளை பைக் எதுவும் ஃபாஸ்ட்டா ஓட்டிட்டு போய், அருளுக்கு ஏதாவது?........)

என ஒரு பக்கம் அவள் மனதுக்குள் ஏதோ ஒரு எண்ணம் தோன்ற,

(இல்ல, அப்படி எல்லாம் எதுவும் நடந்திருக்காது. தேவையில்லாத நான் தான் யோசிச்சு, கற்பனை பண்ணிக்கிறேன்)

இப்படி அவள் முன் கற்பனையாக பல காட்சிகள் வந்து செல்ல, அவள் அவனை தேடியவாறே சென்றாள். எப்படியாவது அருளைப் பார்த்தால் மட்டும் போதும், என்று யோசித்துக் கொண்டே நடந்து வந்தாள். அப்போது எதிரில் அருள் பைக்கை தள்ளிக் கொண்டு வந்தான். அருள் மலரை பார்த்ததும், பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு அவளிடம் பேச வந்தான். ஆனால் மலர் அவனை கவனிக்கவில்லை. அதையே யோசித்து கொண்டு வந்தாள். அவன் பக்கத்தில் வந்தவுடன் தான் அவனை கவனித்தாள். அவனைப் பார்த்ததும், வேகமாக அவனை கட்டி பிடிக்க, அவள் கைகள் செல்ல, சுதாரித்துக் கொண்டு, அவள் உணர்வுகளை சில நிமிடங்கள் கட்டிப்போட்டாள். பிறகு அவன் பக்கத்தில் சென்று, அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

"என்ன ஆச்சு உனக்கு? ஏன் இன்னைக்கு வரவே இல்ல? பைக் என்ன ஆச்சு?"

"அது ஒன்னும் இல்ல மலர், பைக்......"

என அவன் பேசிக்கொண்டே, அவள் கைகள் அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அந்த பிடிப்பில் இருந்த உணர்வுகளை புரிந்து கொண்டான். அந்த பிடிப்பு அவன் மனதிற்குள்ளும் இருந்த காதலை மெல்ல, மெல்ல வெளியில் கொண்டு வந்தது.

"அதைவிடு மலர், நீ ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க? இங்க பாரு மலர்........"

எனச் சொல்லி அவள் முகத்தை பார்க்க,

"இப்படி பண்ணாத மலர், எனக்கு கஷ்டமா இருக்கு. நீ எப்பவும் சிரிச்சுட்டு ஜாலியா இரு. உன்னோட இந்த சிரிச்ச முகம் தான் என் கண்ணு முன்னாடி எப்பவும் வரணும்னு நினைக்கிறேன். நீ இப்படி ஃபீல் பண்ணும் போது, உன் முகம் சோகமா இருக்கும்போது எனக்கு கஷ்டமா இருக்கு மலர்......"

"ஏன் அருள் இப்படி சொல்ற?"

"ஏன்னா எனக்கு........."

என அவன் சொல்ல வந்து, அவள் கண்களை பார்த்து, வார்த்தைகள் தடுமாற, வார்த்தைகளை அணை போட்டு தடுத்து,

"அது வந்து மலர்....... ஒன்னும் இல்ல, சரி நீ ஏன் டென்ஷன்னா இருக்க?"

என கேட்க, அவள் சுதாரித்துக் கொண்டு, அவன் கைகளை விட்டுவிட்டு தள்ளி நின்றாள்.

"ஒன்னும் இல்ல.......உன்ன காணோம்.....அதான்..... ரொம்ப நேரமா வெயிட் பண்ணேன்...... வேற.....ஒன்னும் இல்ல"

என அவள் திக்கி, திக்கி வார்த்தைகளை முழுங்கி, முழுங்கி எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வேக வேகமாக சென்றாள். அவளுடைய வேகமும், அந்த கண்களில் இருந்த பதட்டமும், அவளுடைய அந்த துடிப்பும், அவனுக்கு நன்றாக புரிந்தது. ஆனால் அது என்ன உணர்வு? என்று தான் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் கைகளை பிடித்தவுடன் அவனுக்குள்ளும் ஒரு உணர்வு தோன்றியது. அந்த உணர்வுக்கு கூட அவனால் உயிர் கொடுக்க முடியாமல் குழப்பத்தில் தவித்து போய் நின்றான். இருவரும் அங்கிருந்து சென்றார்கள். அவள் எதையும் யோசிக்காமல் அன்று எப்போதும் போல் வேலைக்கு சென்றாள். வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் அமைதியாக ரூமுக்கு சென்றாள். அன்று மலர்விழி வினோதமாக நடந்து கொண்டாள். எப்போதும் கலகலவென வரும்போது சிரித்த முகத்துடன், நேராக கிச்சனுக்கு சென்று அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும் மலர்விழி, இன்று நேராக ரூமுக்குள் சென்று, கதவை சாத்திக்கொண்டு அமைதியாக உட்கார்ந்துக்கொண்டிருந்தாள். அவள் வந்தது கூட அங்கு யாருக்கும் தெரியவில்லை. காலை நடந்ததை யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது கூட அவள் கண்களில் ஒரு பதட்டமும், கைகளில் ஒரு நடுக்கமும் இருந்தது. அது என்ன என்று அவளுக்கு தெரியவில்லை? நெஞ்சம் படப்படவென அடித்துக் கொண்டது.

"ஐயோ!!!!! என்னாச்சு எனக்கு? ஏன் என்னால நார்மலா இருக்க முடியல? நான் ஏன் காலையில அப்படி நடந்துக்கிட்டேன்? அவன் ஏன் என்னை தடுக்கல? அவன் என் கண்ணை பார்க்கும்போது, அவன் ஏதோ என்கிட்ட சொல்ல வர மாதிரி தோணுச்சு. அது என்னன்னு எனக்கு புரிஞ்சுது. ஆனா அது என்னன்னு சொல்ல தெரியலயே? இது என்ன இனம் புரியாத ஒரு உணர்வு? இதை எப்படி சொல்றது?"

என வார்த்தைகள் தடுமாறி, திக்கி திணறி அவளிடம் அவளே பேசிக் கொண்டிருந்தாள்.

"நாளைக்கு அருளை எப்படி நான் மீட் பண்ணுவேன்? நான் ஏன் இப்படி பண்ணேன்? அருள் ஏன் என்ன அப்படி பார்த்துட்டு இருந்தான்? அவன் என்ன எதுவுமே கேட்கலயே? நான் ஏன் அவனுக்கு எக்ஸ்பிளைன் பண்ணல? நான் ஏன் அந்த இடத்தை விட்டு சீக்கிரமா போகணும்னு நினைச்சேன்? இது எல்லாத்துக்கும் என்ன காரணம்?"

என தனக்கு தானே கேள்விகள் கேட்டுக் கொண்டு பெட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். கிச்சனில் மீனாட்சி மலருக்காக சமைத்துக் கொண்டிருந்தாள். வெகு நேரமாக மலர் வராததால் வெளியில் வந்து ராகவனிடம்,

"என்னங்க, இன்னும் மலர காணோம்? நீங்க கூட்டிட்டு வரலயா?"

"இல்லயேம்மா, மலர் இந்நேரம் வந்திருக்கணும்"

"என்னங்க இப்படி சொல்றீங்க? மலர் வந்தா நேரா கிச்சனுக்கு தான் வருவாள். நான் தான் சொல்றேன்ல?"

"இல்லம்மா, அவள் இந்நேரம் வந்திருக்கணும். நீ வேணா அவள் ரூம்ல போய் பாரு"

"அவள் ஏங்க ரூமுக்கு போகப் போறாள்?"

"எதுக்கும் பாரும்மா, அதுக்கப்புறம் வேணா நான் போய் பஸ் ஸ்டாப்ல பார்க்குறேன்"

"சரிங்க"

என சொல்லிவிட்டு மீனாட்சி மலர்விழியின் ரூமுக்கு சென்றாள்.

"என்ன கதவு உள் பக்கமா லாக் ஆயிருக்கு?"

கதவை தட்டினாள் மீனாட்சி. அப்போதும் மலர்விழிக்கு சத்தம் கேட்கவில்லை.

"மலர் வந்தா ரூமுக்கு போயிருக்க மாட்டாள். ஆனா, மலரோட ரூமுக்குள்ள யார் இருக்கா?"

என மீண்டும் கதவை தட்ட, சுதாரித்துக் கொண்ட மலர், வேகமாக வந்து கதவை திறந்தாள்.

"மலர் நீ எங்க ரூம்குள்ள இருக்க? நீ எப்பவோ வந்துட்டியா? நீ எப்பவும் அம்மா கூட கிச்சனுக்கு வந்து பேசிட்டு தான் இருப்ப? நீ எப்ப இங்க வந்த?"

என கேட்டுக் கொண்டிருக்க, அவளுக்கு எதுவும் புரியாமல், குழப்பத்தில் மீனாட்சியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்.........

படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.
 
Last edited:

Author: Anu1997
Article Title: எபிசோட் 9
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top