- Thread Author
- #1
"ஏம்மா நீ மட்டும் இப்படி இருக்க?" (ரேவதி)
"உனக்கு சொன்னா புரியாதுடி" (சாவித்திரி)
"சரி ரேவதி, நீ வேலைக்கு போகும்போது நானும் பணம் சேர்த்து வைக்கிறேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து கார் வாங்கலாம்" (மலர்விழி)
"என்ன ரெண்டு பேரும் என்ன விட்டுட்டீங்க? நான் வேலைக்கு போக மாட்டேன்னு நினைச்சீங்களா?" (மதன்)
"ஆமாம் மாமா, நீ எங்க வேலைக்கு போக போற?"
"ஏய் ரேவதி கிண்டல் பண்ணாத. நானும் வேலைக்கு போவேன். நானும் இதுக்காக பணம் சேர்த்து வைக்கிறேன். நம்ம மூணு பேரும் சேர்ந்து நம்ம வீட்டுக்காக கார் வாங்கலாம். ஓகே தான?"
என அவர்கள் பேசிக் கொண்டிருக்க, முன் சீட்டில் உட்கார்ந்திருந்த மீனாட்சியும், ராகவனும்
"நம்ம பசங்க எப்படி இருக்காங்க பாரு? மீனாட்சி. அவுங்களுக்குன்னு எதையும் யோசிக்காம, நம்ம குடும்பத்துக்காக நினைக்கிறாங்க"
"ஆமாங்க, நம்ம வளர்ப்பு அப்படி"
இப்படி காரில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக பேசிக் கொண்டு வர, அப்போது ஒரு பைக் வேகமாக அவர்களுடைய காரை கடந்து சென்றது.
"எப்படி போறான் பாரு மீனாட்சி? இந்த வயசு பசங்க ரொம்ப மோசம். இவங்களுக்கு பைக் ஒன்னு வச்சுட்டு வானத்துல பறக்கறதா நினைப்பு. பெத்தவங்கள பத்தி யோசிக்கிறதே இல்ல. ஒரு நிமிஷம் ஏமாந்துபோன என்ன ஆகுறது? பெத்தவங்களுக்கு தான் காலத்துக்கும் வேதனை"
என இவர்கள் பேசிக் கொண்டிருக்க, மலருக்கு அந்த பைக் சத்தம் கேட்டதும், அருள் ஞாபகம் தான் வந்தது.
(நம்ம இன்னைக்கு பஸ் ஸ்டாப் போயிருந்தா, கண்டிப்பா வம்பு இழுக்க வந்திருப்பான். அவன் ஏன் இவ்வளவு ஃபாஸ்டா பைக் ஓட்டணும்? ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது?)
என அவள் யோசித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம்,
(அவனை பத்தி நம்ம ஏன் கவலைப்படணும்? இவனால மத்தவங்களுக்கு எதுவும் ஆகாம இருந்தா சரி. இவன பத்தி தேவையில்லாத நான் ஏன் யோசிச்சிட்டு இருக்கேன்?)
என அவள் அவளையே திட்டிக் கொண்டாள். இரண்டு நாட்கள் மலர் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் வெளியூர் சென்று கோவில், பார்க் என்று சந்தோஷமாக நாட்களை கழித்தார்கள். பிறகு பயணம் முடிந்து வீடு திரும்பினார்கள். அடுத்த நாள் காலை எப்போதும் போல் மலர்விழி, வேலைக்கு கிளம்பினாள். அன்று அவளுடைய அப்பா ஏதோ வேலை இருக்கிறது என்று வெளியில் சென்று விட்டார். அதனால் சீக்கிரமாக எழுந்து கிளம்பினாள்.
"அம்மா டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்"
"சாப்பிட்டயாடி?"
"அம்மா, இப்போதான் உன் கண்ணு முன்னாடி சாப்பிட்டேன்"
"சரி, உங்க அப்பாக்கு ஃபோன் பண்ணி வர சொல்றேன். கூட்டிட்டு போகட்டும்"
"அம்மா, அதெல்லாம் வேணாம். அப்பாவுக்கு வேலை இருக்கும் விடுங்க. நான் நடந்தே போயிக்கிறேன்"
"சரிடி பார்த்து போ"
வெளியில் வேலையாக சென்ற அருள். எப்போதும் போல் அந்த பஸ் ஸ்டாப்பையே வெறிக்க, வெறிக்க பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
"என்னன்னே தெரியல? இவளை பார்க்காம என்னமோ மாதிரியா இருக்கு. இவள பார்த்தாலும் புடிக்க மாட்டேங்குது. பார்க்காமலும் ஒரு மாதிரி இருக்கு"
என புலம்பிக் கொண்டே வரும் வேளையில், எதிரில் மலர்விழி நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும், அவனுடைய பைக் தானாக வேகத்தை குறைத்துக் கொண்டது. மலர்விழி நிமிர்ந்து அருளைப் பார்த்தாள்.
(எங்கடா இவன காணமேன்னு நினைச்சேன். எப்படி வந்து நிற்கிறான் பாரு? என்ன இவன் பைக் வர சத்தம் கூட கேட்காத அளவுக்கு இப்படி ஊறிட்டு வரான். எல்லாம் நம்ம போட்ட போடு அப்படி)
என அவள் அவனை திமிராக ஒரு பார்வை பார்க்க, அவன் வேகமாக வந்து அவள் முன் பைக்கை நிறுத்தினான். அவன் அப்படி வந்ததை பார்த்து அவள்,
"உனக்கு அறிவே இல்லயா? எப்போ பார்த்தாலும் இப்படித்தான் பைக்க வேகமா ஓட்டுற? ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணுவ?"
"யாருக்கு சொல்ற? எனக்கா?"
"உன்ன பத்தி யாரு சொன்னா? ஆப்போசிட்ல வரவங்களுக்கு"
"ரொம்ப தான் அக்கறை. சரி, எதுக்கு எப்போ பார்த்தாலும் என்னை பார்த்தா முறைச்சிட்டே இருக்க?"
"என்னன்னே தெரியல? உன்னை பார்த்தாலே எனக்கு கோவமா வருது"
"எனக்கும் உன்ன பார்த்தா அப்படித்தான் இருக்கு. இவ்வளவு நேரம் ஸ்லோவா தான் வந்தேன். உன்னை பார்த்தாலே வேகமா ஓட்டணும் போல தோணுது"
"அப்போ நீ வேகமாக ஓட்டறதுக்கு நான் தான் காரணம்னு சொல்றியா?"
"நீயும் ஒரு காரணம் தான்"
"சரி, எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்"
"ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் அடிக்கடி சண்டை போட்டுகிறோம். நீ யாருன்னு கூட தெரியாம சண்டை போடுறேன். என் பெயர் என்னன்னு அன்னைக்கே சொல்லிட்டேன். ஆனா உன் பேர் என்னன்னு சொல்லவே இல்ல? உன் பெயர் என்ன?"
"என் பெயர் கேட்டு என்ன பண்ண போற?"
"ஒரு நிமிஷம் நில்லு, நம்ம ஏன் இப்படி அடிக்கடி சண்டை போட்டுக்கணும்? நமக்குள்ள என்ன பிரச்சனை? பைக்ல வேகமா போறது உனக்கு புடிக்கலன்னு சொல்ற. ஓகே, மத்தவங்க மேல இருக்க கன்சர்ன்ல தான் சொல்றேன்னு புரியுது. நான் பண்றது தப்பு தான். நான் ஒத்துக்குறேன். இப்போ ஓகே தான உனக்கு?"
"சரி, எனக்கு இப்போ டைம் ஆச்சு. என்ன விடு"
"நான் தான் நான் பண்ணது தப்புன்னு ஒத்துக்கிட்டனே? அதுக்கப்புறம் ஏன் இப்படி சிடுசிடுன்னு இருக்க?"
"இப்போ அதுக்கு என்ன பண்ண சொல்ற?"
"நம்ம ப்ரெண்ட்ஸ் ஆயிட்டா என்ன?"
"நம்ம ஏன் ப்ரெண்ட்ஸ் ஆகணும்?"
"இப்படி அடிக்கடி இரண்டு பேரும் சண்டை போட்டுக்க வேண்டாம்ல? அதுக்கு தான். கொஞ்சம் யோசிச்சு பாரு, ஒரே ஊர்ல இருக்க ரெண்டு பேரு எதுக்கு அடிக்கடி இப்படி சண்டை போட்டுக்கணும்?"
என அவன் கேட்க, அவளும் யோசித்துப் பார்த்தாள். அவர்களுக்கு இடையில் வரும் சண்டைக்கு காரணமே கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் பைக் வேகமாக ஓட்டுவது தப்புதான் என்று ஒத்துக் கொண்டபின், அவளால் எந்த காரணமும் சொல்லி தப்பிக்க முடியவில்லை.
"இப்போ சொல்லு, நம்ம ப்ரெண்ட்ஸா இருக்கலாமா?" (அருள்)
"அது......அது வந்து......."
"அப்படி இல்லன்னா, நம்ம இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்குறதுக்கு ஒரு காரணமாவது சொல்லு" (அருள்)
என கேட்க, அவள் திருத்திருவென முழித்துக் கொண்டே அவனைப் பார்த்தாள்.
"உனக்கு எந்த காரணமும் தெரியலல்ல, அப்போ நம்ம ப்ரெண்ட்ஸா இருக்கலாம்" (அருள்)
"சரி ஓகே"
"இனிமேல் நம்ம பிரண்ட்ஸா இருக்கலாம்னு சொல்லிட்டு, உன் பெயரை கூட சொல்ல மாட்டேங்குற?" (அருள்)
"ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்க? என் பேரு தெரிஞ்சுகிறதுல்ல?"
"ரெண்டு பேர் ப்ரெண்ஸ்ஸா இருக்கப் போறோம். பெயர் கூட தெரியாம இருந்தா எப்படி?" (அருள்)
"என் பெயர் மலர்விழி."
"அதான் பூ மாதிரி அழகா இருக்கியா?"
"இங்க பாரு, பிரண்ட்ஸா இருக்கலாம்னு சொன்னதுக்காக தான் உன் கூட பேசுறேன். அதுக்காக தேவை இல்லாம எதுவும் பேசினா எனக்கு பிடிக்காது"
"சரி ஓகே மலர்விழி, நான் உன்கிட்ட இனிமேல் வம்பு இழுக்க மாட்டேன். நீயும் என்கிட்ட கோபப்படக்கூடாது. டீல?"
"ஓகே டீல், சரி கிளம்பு. அப்புறம் நீ பைக்க வேகமா ஓட்டக்கூடாது"
"சரி, இப்போதான் நம்ம ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோமே? அதனால நீ சொல்றத கேட்குறேன். ஓகே பாய் மலர்விழி"
என சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து கிளம்பினான். அன்று ஏனோ அருளின் மனதிற்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம்.
"என்ன இது அவள் கூட சண்டை போட்டுட்டு இருந்தப்ப கூட இவ்வளவு சந்தோஷப்படல. அவளை இப்போ பார்த்ததுக்காக நான் சந்தோஷப்பட்டேனா? இல்ல, அவள் கூட ப்ரெண்டா இருக்கறதுக்காக சந்தோஷப்படுறனா? ஐயோ!!! அருள் தேவை இல்லாத யோசிக்காத. எப்பவுமே சண்டை போட்டுட்டு இருக்கோம். சோ, அவள் கூட ப்ரெண்டா இருக்கிறது, இனிமேல் ஸ்மூத்தா போகணும்னு நினைச்சு, சந்தோஷப்படுறேன்னு நினைச்சுக்கோ. வேற எதையும் யோசிச்சு வைக்காத அருள்"
என அவன் அவனுக்கு அறிவுரை கூறிக் கொண்டு கிளம்பினான். மலர்விழியோ, யோசித்துக் கொண்டே சென்றாள்.
"ப்ரெண்டா இருக்கலாம்னு ஒத்துக்கிட்டேன். ஆனா, எதுக்கு ஒத்துக்கிட்டேன்? சரி, சண்டை போடறதுக்கு காரணமே இல்ல. அவன் இனிமேல் பைக்க பாஸ்ட்டா ஓட்ட மாட்டேன்னு சொல்லிட்டான். சோ எதுக்கு சண்டை போடணும்? ஐயோ!!! எனக்கு ஒண்ணுமே புரியல. இது எல்லாம் எதுக்கு நடக்குதுன்னு கூட தெரியல? ஆனா........."
என அவள் உதடுகள் மெதுவாக புன்னகைக்க,
"அதெல்லாம் ஒன்னும் இல்ல"
என அவள் சிரிப்புக்கு தடை போட்டுவிட்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். ஒரு வழியாக பஸ் ஸ்டாப்பிற்கு வந்து சேர்ந்தாள். இவளுக்கு முன்னதாகவே ரேவதி அங்கு வந்திருந்தாள். ரேவதி எதையோ முணுமுணுத்து கொண்டிருக்க, அங்கிருந்தவாறே மலர்விழி பார்த்துக் கொண்டே அவளிடம் பேசுவதற்காக பக்கத்தில் வந்தாள். ரேவதியோ,
"ப்பா......ஒரு வழியா, இன்னைக்கு அவனை பார்த்துட்டேன். இப்போதான் இந்த டே ஹேப்பியா ஸ்டார்ட் ஆன மாதிரி இருக்கு. பைக் ஓட்டும் போது எவ்ளோ அழகா இருக்கான்?"
என அவள் தனக்கு தானே பேசிக் கொண்டிருக்க, அதை கவனித்த மலர்விழி பக்கத்தில் வந்து,
"என்ன ரேவதி? ஏதோ தனியா பேசிட்டு இருக்க மாதிரி இருக்கு"
"ஒன்னும் இல்லக்கா, பஸ் இன்னும் வரல. டைம் ஆச்சு அப்படின்னு டென்ஷனா இருக்கேன்"
"உன் முகத்துல டென்ஷன் தெரியலயே?"
"அது வந்து......பேஸ்ல டென்ஷன் காட்டிக்கிட்டா முகம் அழகா தெரியாதுல்ல? அதனாலதான்"
"என்னமோ சொல்ற, எனக்கு ஒன்னும் புரியல"
என இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அவர்களுக்கு பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தான் ரவி. அவனுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது தான் திரும்பிப் பார்த்தான்.
(ஒரு வழியா இன்னைக்கு அவள பார்த்துட்டேன். அவள பார்த்து ரெண்டு, மூணு நாள் ஆகுது. எங்க போனானே தெரியல? இப்போ, அவள பார்க்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கு. எவ்ளோ அழகா இருக்கா? பூ மாதிரி, அதனாலதானோ என்னமோ.....)
என அவன் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவனுடைய கல்லூரி பேருந்து வர அவன் அங்கிருந்து கிளம்பினான். ரேவதியும், மலர்விழியும் பேசிக்கொண்டிருக்கும்போதே மலர்விழிக்கு பஸ் வர, மலர்விழியும் பஸ்ஸில் ஏறி கிளம்பினாள். எப்போதும் போல் வேலைக்கு சென்றாள்.
இங்கு அருள், ஒரு பக்கம் வேலைக்காக தேடிக் கொண்டிருந்தாலும், கம்பெனி வேலையிலும் மும்மரமாக இருந்தான். அடுத்த நாளும், இதே போல் மலர்விழி நடந்து வர, மலர்விழி வருவாளா? என்பது போல் யோசித்துக் கொண்டே அருளும் எதிரில் வர, இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.
தொடரும்.........
படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.

Author: Anu1997
Article Title: எபிசோட் 8
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.