- Thread Author
- #1
"இவரு வந்ததும் கொஞ்சம் செய்யலாம்னு பார்த்தேன். அதனாலதான் கொஞ்சமா செஞ்சுட்டு வச்சுட்டேன். சரி இரு, உனக்கு வேணும் தானே? அப்போ ரெண்டு பேருமே சேர்ந்து செய்யலாம்"
"அது வந்து அண்ணி, எனக்கு......"
"உனக்கு எதுவும் வேலை இருக்கா?"
"இல்ல அண்ணி"
"அப்புறம் என்ன? என் கூட கொஞ்சம் ஹெல்ப் பண்ணுனா, நான் உனக்கு மசால் போண்டா செஞ்சு தரேன்"
"சரிங்க அண்ணி"
(இந்த மதன் பையன், என்ன தேவையில்லாத கிச்சனுக்குள்ள மாட்டி விட்டுட்டானே.....சரி, நம்மளும் வந்து மாட்டிக்கிட்டோம்)
என அவள் முணுமுணுத்துக் கொண்டே செய்து கொண்டிருந்தாள்.
"என்ன சாவித்திரி ஏதோ முணுமுணுக்குற?"
"ஒன்னும் இல்ல அண்ணி, என்ன செய்யணும்? சொல்லுங்க"
"அங்க இருக்க வெங்காயம் எல்லாம் கட் பண்ணி வச்சுட்டு, அப்புறம் உருளைக்கிழங்கு கட் பண்ணி வேக வெச்சிடு. நான் டீயை எல்லாருக்கும் குடுத்துட்டு வந்துடறேன். அப்புறமா நம்ம சூடு பண்ணி, போண்டாவோட சேர்த்து குடிக்கலாம். சரியா?"
"என்ன அண்ணி இத்தனை வேலை சொல்றீங்க?"
"என்ன சாவித்திரி சாப்பிடணும்னா வேலை செஞ்சு தானே ஆகணும்? வெங்காயத்தை கட் பண்ணிட்டு, உருளைக்கிழங்கு வேக வெச்சிடு. அவ்வளவுதான்"
"சரிங்க அண்ணி செய்யுறேன்"
சொல்லிவிட்டு வெளியில் வந்து எல்லோருக்கும் டீ கொடுத்தாள் மீனாட்சி.
"அம்மா அத்தை என்ன பண்றாங்க?"
"அத்தை தான்டா மசால் போண்டா போடுறாங்க"
"என்னம்மா சொல்றீங்க? அதிசயமா இருக்கே!!!"
"நீ பண்ண வேலை தானே இது?"
"ஆமாம்மா, எப்போ பார்த்தாலும் டீவி பார்த்துட்டு இருக்காங்க. எங்களயும் டீவி பார்க்கவே விடறதில்ல. ஏதாவது சொன்னாலும் எங்களை திட்டுறாங்க. அதனால தான் இப்படி பண்ணேன்"
"சரி விடு, எனக்கு இன்னைக்கு உன்னால கிச்சன்ல இருந்து விடுதலை கிடைச்சிருச்சு"
"ஆனால் அம்மா அத்தை அந்தளவுக்கு எல்லாம் வேலை செய்ய மாட்டாங்கம்மா"
"நீ கவலைப்படாத மதன், எப்படி உங்க அத்தைய வேலை செய்ய வைக்கிறேன்னு பாரு"
என அவர்கள் பேசிக் கொண்டிருக்க, உள்ளே இருந்து சாவித்திரி,
"அண்ணி, நான் எல்லாம் கட் பண்ணி வச்சுட்டேன். உருளைக்கிழங்கும் வேக போட்டுட்டேன்"
"அப்படியாம்மா? இன்னும் ரெண்டு, மூணு நிமிஷத்துல விசில் வந்துவிடும். ஆஃப் பண்ணிடு. ஆப் பண்ணிட்டு, உருளைக்கிழங்கு அப்படியே உறிச்சிடும்மா?"
"என்ன அண்ணி, நீங்க வந்து செய்றேன்னு சொன்னீங்க? நான் எல்லாமே உரிச்சு வச்சுட்டேன். வாங்க நீங்க வந்து செஞ்சு கொடுங்க"
"எல்லாமே உரிச்சிட்டன்னா வேலையே முடிஞ்சுதே. எண்ணெய் ஊத்திக்கோ, கடுகு போட்டுட்டு பொரிஞ்சதும் வெங்காயம், போடு, பச்சை மிளகாய் அங்க பக்கத்துல தான் இருக்கும். கழுவிட்டு கட் பண்ணி போட்டுக்கோ. அப்புறம் உருளைக்கிழங்கு, கொஞ்சம் மஞ்சள் தூள், லைட்டா உப்பு போட்டு வதக்குனா மசால் ரெடி. அதுக்கு அப்புறம் பக்கத்துல தான் கடலைமாவு வச்சிருக்கேன், கடலை மாவோட கொஞ்சம் அரிசி மாவு அதுக்கப்புறம் மிளகாய்த்தூள், உப்பு இதெல்லாம் கலந்து கொஞ்சம் தண்ணி ஊத்துனா மாவு ரெடி. அந்த மசாலா அப்படியே உருட்டி மாவுல முக்கி எண்ணையில போட்டா.....மசால் போண்டாவும் ரெடி. அப்படியே எனக்கும் சேர்த்து கொண்டு வந்துரும்மா. கொஞ்சம் இங்க வேலை இருக்கு. நான் முடிச்சிட்டு வரேன்"
எனச் சொல்ல, சாவித்திரிக்கு கோபம் வந்தது.
"என்ன அண்ணி இப்படி பண்றீங்க? சின்ன வேலை தான் சொல்றீங்கன்னு செஞ்சு கொடுத்தா, இவ்வளவு வேலை சொல்றீங்களே?"
"என்னம்மா, நீ தான மசால் போண்டா கேட்ட? அதான் அப்படியே உன்னையே செய்ய சொன்னேன். அது மட்டும் இல்ல சாவித்திரி, உன் துணி எல்லாம் துவைச்சு மடிக்காம அப்படியே கிடக்குது. அதனால உன் ரூம் தான் கச கசன்னு இருக்கு. நான் உன் ரூம்ல இருக்க துணி எல்லாம் மடிச்சு வச்சிடலாம்னு பார்த்தேன். சரி விடு, நீயே வந்து மடிச்சு வச்சுக்கோ. நான் உனக்கு போண்டா போட்டு தரேன்"
(ஐயோ!!! என்ன இது இப்படி சொல்றாங்க? இங்க போண்டா போடுறது இன்னும் ரெண்டு, மூணு வேலை செஞ்சா முடிஞ்சிடும். அங்க துணி அவ்ளோ கிடக்குது. யாரு மடிக்கிறது?)
"இல்ல அண்ணி, நானே போண்டா செஞ்சு கொண்டு வரேன். நீங்க துணிய மடிச்சுடுங்க"
"இப்போ உங்க அத்தை எப்படி வேலை செய்கிறான்னு பார்த்தியாடா? அதுவும் என்ன சொல்றா பார்த்தியா? இந்த வேலைக்கு அந்த வேலையே பரவால்லன்னு அந்த வேலைய செஞ்சுட்டு இருக்காள். எப்படியோ உங்க அத்தை வேலை செஞ்சா எனக்கு அதுவே போதும்"
என இவர்கள் பேசிக் கொண்டிருக்க, ராகவன் உள்ளே வந்தார்.
"என்னம்மா இங்க உட்காந்துட்டு இருக்க? கிச்சன்ல இருப்பேன்னு நினைச்சேன்"
"ஏங்க எப்பவுமே நான் கிச்சன்ல தான் வேலை பார்க்கணுமா? கொஞ்ச நேரம் நானும் டீவி பார்த்தா என்ன ஆயிடப் போகுது? உங்க தங்கச்சிக்கு மட்டும் தான் இந்த டீவி வாங்கி வச்சீங்களா? எங்களுக்கெல்லாம் இல்லயா?"
"என்னம்மா சும்மா கேட்டதுக்கு, சண்டைக்கு வர?"
"ஆமாங்க, எப்போ பார்த்தாலும் நான் கிச்சன்ல தான் இருக்கேன். நீங்களும் உங்க தங்கச்சிய ஒன்னும் கேட்கறது இல்ல. அதான் இன்னைக்கு உங்க தங்கச்சி கிச்சன்ல வேலை செய்யட்டும்னு விட்டுட்டேன்"
"என்ன சொல்ற என் தங்கச்சி சமைக்கிறாளா?!!!!"
"உங்க தங்கச்சி அப்படியெல்லாம் பெருசா ஒன்னும் சமைக்கல. மசால் போண்டா தான் செஞ்சிட்டு இருக்காங்க"
"அதுவே எனக்கு அதிசயமா இருக்கு!!!! இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட அவள் கிச்சன் பக்கம் போனதில்ல. எப்படிம்மா, அவளால இதெல்லாம் செய்ய முடியாதே?"
"அதுக்கு தான் மதன் ஒரு ஐடியா கொடுத்தான். அதை பிடிச்சு, நான் ஒரு ஐடியா பண்ணேன். இப்போ அவள்தான் செஞ்சிட்டு இருக்காள். சரி மலர், அவங்க ரூம்ல துணி இருக்கும். எடுத்துட்டு வாம்மா அப்படியே டீவி பார்த்துட்டே துணிய மடிச்சு வெச்சிடலாம். டீவி பார்த்து எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா? நான் கொஞ்ச நேரம் கூட டீவி பார்த்ததில்ல. வீட்டுல ஏதாவது வேலை இருந்துகிட்டே இருக்கும். அது போக கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க, இப்படியே நேரம் ஓடிடும். டீவி எல்லாம் எங்க பார்க்குறது?"
"சாரிம்மா மீனாட்சி, இவ்ளோ நாள் நீ எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்ப? டீவி பார்க்குற சாதாரணமான விஷயம் கூட உனக்கு கிடைக்குலன்னா உனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்?"
"பரவால்லங்க விடுங்க, எல்லாம் நம்ம குடும்பத்துக்காக தான? ஒன்னுக்கொன்னு பேசினா சண்டை தாங்க வரும். அப்புறம் நமக்கு தான கஷ்டம். சாவித்திரியும் ரொம்ப மோசமானவள் எல்லாம் இல்ல. கொஞ்சம் சோம்பேறித்தனம் அவளுக்கு. மத்தபடி நல்ல சமைப்பாங்க"
"என் தங்கச்சியை பத்தி இவ்ளோ நல்லதா சொல்றது நீ ஒருத்தி தான். இப்படி ஒரு அண்ணி கிடைக்க அவள் கொடுத்து வச்சிருக்கணும்"
என இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அங்கு சாவித்திரி,
"கொடுத்துதான் வச்சிருக்கேன். என்னையவே வேலை வாங்குறாங்க. இவ்ளோ நாள், நான் கிச்சன் பக்கம் வந்ததே இல்ல. எங்க அண்ணன் கூட வேலை சொன்னது இல்ல. சரி, என்ன பண்றது? அத்தனை துணிய யாரு மடிக்கிறது? ஒரு நாள் தானே செஞ்சு கொடுத்திடலாம்"
கொஞ்ச நேரத்தில் சாவித்திரி, எல்லாவற்றையும் செய்துவிட்டு, டீயும் போட்டுக் கொண்டு வெளியில் கொண்டு வந்தாள்.
"அண்ணி, மசால் போண்டா செஞ்சுட்டேன். இதாங்க, எல்லாரும் எடுத்துக்கோங்க"
"அத்தை உங்க கைப்புக்குமே தனி இவ்வளவு நாள்ல எங்க அம்மா கூட இவ்ளோ டேஸ்டா செஞ்சது இல்ல" (மலர்)
"என்னடி, நான் நல்லா செஞ்சது இல்லயா?"
"அம்மா நீ நல்லா செய்வ. ஆனா அத்தை இவ்வளவு டேஸ்டா செய்வாங்கன்னு எனக்கு தெரியாதுல்லம்மா?"
(உங்க அத்தை கிச்சன் பக்கம் போனா தானே?)
என மெதுவாக மீனாட்சி முணுமுணுக்க,
"என்ன அண்ணி என்னைய ஏதோ சொல்ற மாதிரி இருக்கு?"
"ஒன்னும் சொல்லம்மா, நீ நல்லா டேஸ்ட்டா செஞ்சிருக்கேன்னு தான் சொன்னேன்"
"பார்த்தீங்களா நான் எவ்ளோ டேஸ்டா செய்றேன்னு? உங்கள விட நான் நல்லா டேஸ்ட்டா செய்வேன். சின்ன வயசுல அண்ணா நான் சமைக்கிறது தான் பிடிக்கும்னு நல்ல சாப்பிடுவாரு. அப்படித்தானே அண்ணே?"
"ஆமாம்மா, சாவித்திரி சமைச்சா ரொம்பவே நல்லா இருக்கும்"
"அப்போ சாவித்திரி நீயே நாளையிலிருந்து குழம்பெல்லாம் வச்சுடு. நான் பொறியியல் மட்டும் செஞ்சுட்டு, சாப்பாடு வெச்சிடறேன். உங்க அண்ணனுக்கு நீ சமைச்சா தான் பிடிக்குமே?"
(ஐயோ!!!! தெரியாம வாய் கொடுத்து மாட்டிக்கிட்டனே?)
"அது வந்து அண்ணி......."
"ஆமா சாவித்திரி, உன் கையால சாப்பிட்டு எத்தனை வருஷம் ஆச்சு? நீ முட்டை குழம்பு செஞ்சா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். நாளைக்கு செஞ்சு கொடுக்கிறியாம்மா?"
"என்ன அண்ணே இப்படி கேட்டுட்ட? ஆசையா கேட்டிருக்க, கண்டிப்பா நான் செய்யறேன்"
(என்ன..... அண்ணனுக்காகவாவது நாளைக்கு சமையல் செய்யணும். ஆனா நாளைக்கு மட்டும் தான்)
என அவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க, கொஞ்ச நேரத்தில் ரேவதியும் வந்தாள்.
"என்னம்மா ரேவதி காலேஜ் போயிட்டு வந்துட்டியா?"
"ஆமா அத்தை, ரொம்ப டயர்டா இருக்கு"
"என்னம்மா காலேஜ் போகவே டயர்டா இருக்குன்னு சொல்ற?"
"அது வந்து அத்தை...... பஸ்ல போயிட்டு வருது ரொம்ப டயர்டா இருக்கு"
என சொல்ல, அதற்கு மதன்
"அப்போ கார் வாங்கிடலாம்மா? அதுவும் ஏசி கார். உனக்கு ஓகே தானே ரேவதி?"
"என்ன மாமா கிண்டல் பண்றீங்களா? போங்க மாமா உங்களுக்கு நான்தான் கிடைச்சன்னா? என்ன இது, போண்டாவா? ஆனா ஆயிலியா இருக்கே? யாரு இத செஞ்சது? இவ்ளோ எண்ணெய் சாப்பிட்டால் என் ஸ்கின்ல சீக்கிரம் பிம்பிள் வந்துடும். அதனால எனக்கு டீ மட்டும் போதும்"
என சொல்ல, அங்கிருந்தவாறே சாவித்திரி முறைத்தாள்.
"என்னாச்சும்மா? ஏன் என்ன பார்த்து முறைக்கிற?"
"உங்க அம்மா தான் செஞ்சது ரேவதி. ஆனா அது கூட தெரியாம இப்படி சொல்லிட்டியே?"
என மதன் நக்கலாக பேச,
(இவன் வேற, அவள் சாதாரணமா சொன்னத இப்படி திரிச்சு சொல்றானே?)
என மனதிற்குள் சாவித்திரி நினைக்க,
"அம்மா அது வந்து...... நல்லாதம்மா இருக்கு. ஆனா போண்டா கொஞ்சம் எண்ணெய் குடிச்சிருக்கு. அது சாப்பிட்டா பிம்பிள் வந்தும்மா. அதுக்கு தான் சொன்னேன். அப்புறம் என் முகத்துல இருக்க அழகு போயிடும்மா"
"சரிடி சமாளிக்காத, போ போய் முகம், கை, கால் எல்லாம் கழுவிட்டு வா"
உள்ளே சென்ற ரேவதி,
(நல்ல வேளை அம்மா கிட்ட இருந்து தப்பிச்சேன். இல்லன்னா அவ்வளவுதான்)
என அவள் முகம் எல்லாம் கழுவி விட்டு வெளியில் வந்து உட்கார்ந்தாள். அப்போது எல்லோரும் ஒன்றாக உட்காந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
தொடரும்........
படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.

Last edited:
Author: Anu1997
Article Title: எபிசோட் 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.