எபிசோட் 4

New member
Joined
Aug 21, 2025
Messages
8
வீட்டில் அவனுடைய அப்பா,

"என்ன அருள் பேங்க் வரைக்கும் வேலையா போனேன்னு சொன்னியே என்ன ஆச்சு?"

"அப்பா அத சொல்ல தான் வந்தேன். ஃபர்ஸ்ட் நீங்க ஸ்வீட் சாப்பிடுங்க"

"எதுக்குப்பா ஸ்வீட் எல்லாம்? அப்பா லோன் சேன்சன் ஆயிடுச்சுப்பா. நான் இனிமேல் என் கம்பெனிய ஆரம்பிக்கிறதுக்கான வேலை எல்லாம் செய்யலாம்"

"என்னப்பா சொல்ற அருள்?? உண்மையாவா?!!!"

"ஆமாம்பா, என்ன நடந்துச்சுன்னே தெரியல அந்த மேனேஜருக்கு? இவ்வளவு நாளா இழுத்தடிச்சுட்டே இருந்தாரு. இன்னைக்கு திடீர்னு லோன் ஓகே ஆயிடுச்சுன்னு சொல்றாரு. எனக்கே இது சர்ப்ரைஸா இருந்துச்சுப்பா"

"சந்தோஷமா இருக்கு அருள். வேலை கிடைக்கிற வரைக்கும் நான் வீட்லதான் இருப்பேன்னு வீட்ல இருக்காம, உன்னால இந்த வீட்டுக்கு ஏதாவது பண்ணனும்னு முயற்சி பண்ற பாரு, அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு"

"என்னப்பா இப்படி சொல்றீங்க? நீங்க என்ன படிக்க வைக்க முடியாதுன்னு விட்டுருந்தீங்கன்னா நான் இந்த நிலமைக்கு ஆளாயிருக்க முடியாது. இந்நேரம் எங்கேயாவது கஷ்டப்பட்டுட்டு இருந்திருப்பேன். என்ன படிக்க வச்சதனாலதான்பா நான் நல்லா படிச்சு, என்ன படிக்க வச்ச உங்களுக்காக நான் ஏதாவது பண்ணனும்னு முயற்சி பண்றேன். இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். நீங்க படிக்க வச்சது தான் காரணம்"

"அம்மா, எங்கப்பா?"

"அம்மா உள்ள தான் இருக்கா"

"இன்னும் ரெண்டு, மூணு நாள்ல வந்து பணம் வாங்கிக்க சொல்லிருக்காங்க. சீக்கிரமா நான் பிசினஸ்ஸ ஆரம்பிச்சிடுவேன்மா. அதுக்கு அப்புறம் பாருங்க, நம்ம வீட்டோட நிலமையே மாறிடும்"

"ரொம்ப சந்தோஷம் அருள், நீ நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும்"

"டேய் ரவி லோன் சேன்சன் ஆயிடுச்சுடா"

"அண்ணா சூப்பர்!!! இப்போ தான் கத்திட்டு போன? அடுத்த அஞ்சாவது நிமிஷம் இப்படி சிரிச்சிட்டு சந்தோசமா வர?"

"எனக்கே ஒன்னும் புரியலடா ரவி. திடீர்னு லோன் சேன்சன் ஆயிடுச்சுன்னு சொல்றாங்க. என்னால நம்பவே முடியல. இன்னும் மூணு நாள்ல வந்து வாங்கிக்க சொல்லிருக்காங்கடா"

"சூப்பர் அண்ணே!!!!"

"சரி, இன்னும் ஏன் காலேஜ் போகாம இருக்க?"

"ஆமா அண்ணே, லேட்டாயிடுச்சு. நான் போகணும்"

"வா, உன்ன கொண்டு போய் பஸ் ஸ்டாப்ல இறக்கிவிடறேன்"

என அவனை கூட்டிக் கொண்டு போனான்.

"அண்ணே உனக்கு லோன் கிடைச்சது, எனக்கு ரொம்பவே ஹாப்பியா இருக்கு. சீக்கிரமாவே நானும் படிச்சு முடிச்சிட்டு, உன் பிசினஸ்ல ஒரு பார்ட்னரா வந்துடறேன்"

"அதுக்கு என்னடா? பார்ட்னர் என்ன? நீயே முதலாளியா கூட இரு"

"இல்லண்ணே உழைப்பு உன்னோடது. ஐடியாவும் உன்னோடது. உன்னோட உழைப்பையும், ஐடியாவையும் நான் திருடக்கூடாது அண்ணே"

"உனக்கு இல்லாததாடா? நீ வந்து ராஜா மாதிரி உட்கார்ந்து, கம்பெனிய பாத்துக்கோ"

"என்ன அண்ணே, இப்படி சொல்ற? நானும் உன் கூட வேலை செய்வேன். ரெண்டு பேரும் நல்லா வேலை செஞ்சு, நம்ம கம்பெனிய பெருசா டெவலப் பண்ணலாம்"

"டேய் அதுக்கு முன்னாடி நம்ம ஃபர்ஸ்ட் லோன் பணத்த வாங்கணும்டா"

"சரி அண்ணே, ஆமா...... காலையில டென்ஷனா வந்த? என்னன்னு கேட்டதுக்கு, ஏதோ சொன்ன"

"அது ஒன்னும் இல்லடா, இந்த பொண்ணுங்கன்னாலே பிரச்சினைதான் போல? பொண்ணுங்கள பார்த்தாலே கோவம் தான் வருது"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லண்ணா, பொண்ணுங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க. ரொம்ப ஸ்வீட்டானவங்க"

"என்ன உன் பேச்சு எல்லாம் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு?!!!"

"நான் இது சொன்னதும் நீ ஏன் சந்தேகமா பார்க்குற? அம்மாவும் பொண்ணு தானே? அம்மா எவ்வளவு நல்லா நம்மள பாத்துக்கிறாங்க? எவ்வளவு பாசமா இருக்காங்க? அதனால தான் பொண்ணுங்க மேல கொஞ்சமாவது பாசமும், மரியாதையும் இருக்கு. அத வச்சு தான் சொன்னேன்"

பேசிக் கொண்டே இருவரும் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து சேர்ந்தார்கள். பஸ் ஸ்டாப்பில் ரவி இறங்கியதும்,

"அய்யய்யோ!!! அந்த பஸ் போயிடுச்சு"

"என்னடா உன் காலேஜ் பஸ் போயிடுச்சா?"

"இல்லண்ணே"

"அப்புறம் எதுக்கு இப்படி ஃபீல் பண்ற?"

"அது ஒன்னும் இல்லண்ணா, நீ கிளம்பு"

(நல்ல வேளை அண்ணா கிட்ட மாட்டியிருப்பேன். இன்னைக்காவது பார்க்கலாம்னு நினைச்சேன். இன்னைக்கும் போயிட்டாளே?)

என அவன் நினைத்துக் கொண்டே அங்கு நின்று கொண்டிருந்தான். அருள் அங்கிருந்து கிளம்பினான்.

கொஞ்ச நேரத்திலேயே ரவியின் கல்லூரி பேருந்து வந்தது. ரவி கல்லூரிக்கு கிளம்பினான்.

இங்கு அருளின் வீட்டில் அருளின் அம்மா,

"ஏங்க நம்ம பையன் சொல்ற மாதிரி லோன் கிடைச்சுருச்சுன்னா........ நம்ம வாழ்க்கையே மாறிடுல்லங்க?"

"ஆமா லதா, நம்ம இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு, அவனை படிக்க வச்சதுக்கு நம்ம இனிமேல் சந்தோஷமா வாழலாம்"

"ஏங்க கம்பெனி எல்லாம் ஆரம்பிக்க எவ்வளவு நாள் ஆகும்?"

"அதுக்கு மூணு, நாலு மாசத்துக்கு மேல ஆகும்மா. நம்ம பையன் அருள் நல்ல திறமைசாலி. அதனால மூணு மாசத்துக்கு முன்னாடியே எல்லா வேலையும் முடிச்சு, கம்பெனிய ஆரம்பிச்சுடுவான்"

"ஆமாங்க, வேற பசங்களா இருந்தா காலேஜ் போகாம ஊர் சுத்திட்டு, படிக்காம, எல்லா எக்ஸாம்லயும் ஃபெயில் ஆகி, வேலை கிடைக்கலனு பொய் சொல்லிட்டு சுத்திட்டு இருந்திருப்பாங்க. ஆனா நம்ம பையன், நம்ம கஷ்டத்த புரிஞ்சுகிட்டு, நல்லா படிச்சு, நல்ல மார்க் எடுத்திருக்கான்"

"ஆனாலும் கூட வெளி உலகத்துல அவனுக்கு வேலையே கிடைக்கலயேம்மா? நான் கூட வேலை கிடைக்கல்லன்னு வீட்டில் உட்கார்ந்து கிடப்பான்னு நெனச்சேன். ஆனா பரவால்ல, ஏதாவது முயற்சி பண்ணனும்னு பண்றானே? ரவியும் இவன மாதிரியே வரணும்"

"நீங்க கவலைப்படாதீங்க, அதுக்கு தான் அருள் இருக்கானே? அவனே நம்ம ரவியையும் பார்த்துக்குவான்"

"இல்லம்மா, ரவியையும் அவனோட சுமையா மாத்திட கூடாது. அவன் எவ்வளவுதான் கஷ்டப்படுவான்? ரவிக்கு நம்ம ஏதாவது பார்த்து பண்ணனும்மா"

"என்ன சொல்றீங்க?"

"அவனுக்கு ஏதாவது இவன மாதிரியே தொழில் எதுவும் வச்சுக் கொடுத்திடலாம். தொழில் எதுவும் அமைச்சு கொடுத்துட்டா..... அவனும் தனியா அவன் வேலையை பார்த்துக்குவாலம்மா? நாளைக்கு ரெண்டு பேத்துக்குள்ள எந்த சண்டையும் வந்துடக்கூடாது. அதுவும்இல்லாத, இவனையும் சேர்த்து சுமக்க சொல்றது தப்புமா"

"சரியா சொன்னீங்க, எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கல்லங்க?"

என இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அருள் கேட்டான்.

"என்னம்மா இப்படி பேசுறீங்க? அவன் என் தம்பிம்மா, அவனே என்கிட்ட சண்டை போட்டாலும் நான் அவன்கிட்ட சண்டை போட மாட்டேன். நான் அவன நல்லா பாத்துக்குவேன். என்ன இப்படி நினைச்சுட்டீங்களே?"

"இல்லடா, நீ வீட்டு கஷ்டத்தை எல்லாம் தாண்டி, இவ்வளவு தூரம் படிச்சு, தொழில் தொடங்குற. அவனை நாங்க பார்த்துக்கிறோம்"

"என்னப்பா இப்படி சொல்றீங்க? நான் யாருக்காக எல்லாமே பண்றேன்? நம்ம குடும்பத்துக்காக தானே? கம்பெனி ஆரம்பிச்சதுக்கப்புறம் தம்பி படிப்ப முடிச்சுட்டு என்கூடவே வரட்டும். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்த கம்பெனியை நல்லபடியாக நடத்துறோம். அது மட்டும் இல்லப்பா, கம்பெனில நல்ல லாபம் வந்ததுக்கப்புறம் நம்ம வீடு ஒன்னு கட்டப் போறோம். நம்ம கிட்ட சொந்த வீடு கூட இல்லப்பா. சொந்த வீடாவது இருக்கணும்ல? இவ்வளவு நாள் வாடகை வீட்டுல இருந்து கஷ்டப்பட்டுட்டீங்க? இனிமேலாவது சொந்த வீட்டில இருக்கணும் பா"

"அதெல்லாம் இப்ப எதுக்கு அருள்? நீ உன் வேலையை பாரு. நீ ஏன் இதெல்லாம் நினைச்சு கஷ்டப்பட்டுக்குற? அத நான் பாத்துக்குறேன்"

"என்னப்பா சொல்றீங்க? சின்ன வயசுல இருந்து மூட்டை தூக்கி என்ன படிக்க வச்சீங்க? இன்னமும் அதே வேலை தான் செஞ்சிட்டு இருக்கீங்க. ரெஸ்ட் எடுக்குறதே இல்ல. அம்மா வீட்டு வேலைக்கு போயிடறாங்க. பாவம் பா அம்மா, ஒரு ஒரு நாள் நைட் தூங்கும்போது சரியா தூக்கம் வராமல் கை, கால் வலியில சிரமப்படுறாங்க. டெய்லியும் தண்ணியில வேலை செஞ்சு, செஞ்சு கால் எல்லாம் பாருங்க. எப்படி இருக்குன்னு? நீங்களும் பாவம் பா, உடம்பு இளைச்சு போயிட்டீங்க. இனிமேலாவது நான் பார்த்துக்கிறேன் அப்பா. இன்னும் ஒரு மூணு மாசம் தான் பா. அதுக்கு அப்புறம் நான் கம்பெனி ஆரம்பிச்சு, நல்ல நிலமைக்கு வரன்னா, இல்லையான்னு பாருங்க"

"சரிப்பா அருள். உன்னோட கடின உழைப்பும் முயற்சியும் கண்டிப்பா உனக்கு வெற்றியை தேடி தரும் பா. நீ நல்ல நிலமைக்கு வருவ"

என அருளின் அப்பா, அம்மா இருவரும் அருளை வாழ்த்தினர்.

மலர்விழியின் வீட்டில், சாவித்திரி டிவி பார்த்துக் கொண்டிருக்க, அப்போது ராகவன் உள்ளே வந்தார்.

"என்ன அண்ணே வெளிய போயிட்டு இப்பதான் வர போல?"

"ஆமாம்மா, கொஞ்சம் வேலை இருந்துச்சு, முடிச்சுட்டு இப்பதான் வரேன்"

"அண்ணே நான் ஒன்னு சொல்லணும். நீங்களாவது கவனிப்பீங்கன்னு பார்த்தேன். நீங்க கவனிக்கிற மாதிரியே தெரியல. அதான்"

"என்ன சாவித்திரி சொல்லு"

"இல்லண்ணே, மலர் படிச்சு ரொம்ப நாள் ஆகுது. எதுக்குண்ணே வேலைக்கு எல்லாம் அனுப்பிட்டு, கல்யாணம் பண்ணி கொடுத்திடலாம்ல? உங்களுக்கும் வருமானம் சரியா வரதில்ல. அண்ணிக்கும், உங்களுக்கும் வயசாயிட்டேப் போகுது. இப்பவே பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்துட்டீங்கன்னா, அவளும் குழந்தை குட்டின்னு நல்லா இருக்கிறத நீங்களும் பார்க்கலாம்ல?"

"என்ன சாவித்திரி சொல்ற? அதெல்லாம் சரியா வராது. அவள் இப்பதான் படிச்சு முடிச்சு, வேலைக்கு போயிட்டு இருக்காள். அவள் வேலைக்கு போய் நல்ல நிலமைக்கு வரணும். கொஞ்ச நாள் போகட்டும். அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்"

"என்ன அண்ணே இப்படி சொல்றீங்க? இந்த காலத்துல யாரு பொண்ணுங்கள படிக்க வைக்குறாங்க? நான் எல்லாம் பாருங்க, எத்தனை வயசுல கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க? இப்போ எனக்கே கல்யாணம் பண்ற வயசுல ஒரு பொண்ணு இருக்கா? அதான் படிக்க வச்சாச்சுல்லண்ணே? அப்புறம் என்ன யோசிக்கிறீங்க?"

"இல்லம்மா, அவள் இன்னமும் சின்ன பொண்ணு தான். அவளுக்கு புடிச்ச மாதிரி எதுவுமே கிடைக்கல. அவளுக்கு கிடைக்காதா அட்ஜஸ்ட் பண்ணிட்டு அவர் இருக்கிறாள். அந்த வேலை கூட அவளுக்கு செட் பிடிச்சு தான் போறாளான்னு கூட தெரியல. இப்படியாவா கல்யாண வாழ்க்கையும் ஆகிட கூடாது. பொறுமையா பார்த்து, விசாரிச்சு கல்யாணம் பண்ணனும். அது மட்டும் இல்ல, அவளுக்கு பிடிச்சுதான்னு அவள் சம்மதம் கேட்டு தான் கல்யாணம் பண்ணனும். அது மட்டும் இல்லம்மா அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு போற வீட்ல எல்லாத்தையும் சமாளிக்க தெரியணும். அந்த அளவுக்கு அவளுக்கு சாமர்த்தியம் வேண்டும். அவள் ஒரு நல்ல வேலைக்கு போயிட்டு அதுக்கப்புறம் அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சா, வாழ போற வீட்ல இப்ப மரியாதையா வாழுவாள். இல்லன்னா அவளும் கஷ்டப்பட்டு, நம்மளும் அவள் கஷ்டப்படுறத பார்த்து கஷ்டப்பட்டு எதுக்கும்மா?"

"சரிண்ணே, நான் சொல்றத சொல்லிட்ட அதுக்கப்புறம் உங்க விருப்பம்"

அப்போது வெளியில் வந்தாள் மீனாட்சி.

"என்னங்க உங்க தங்கச்சிக்கு இன்னைக்கு பொழுது போகல போல?"

"ஏன் மீனாட்சி இப்படி கேட்குற? என்னமோ புதுசா நம்ம பொண்ணு மேல அக்கறை படுறாளே? அதான் கேட்டேன். இவள் அக்கறை படுறத பார்த்தா சந்தேகமா இருக்கு"

"அப்படி எல்லாம் எதுவும்
இருக்காது மீனாட்சி. சின்ன வயசுல இருந்து தூக்கி வளர்த்த பொண்ணு மலர். அவளுக்கே போய் தப்பா எதுவும் நினைப்பாளா?"

"நீங்க வேணா அப்படி சொல்லிக்கோங்க, பாவம் நம்ம பொண்ணு. வேலைக்கு போயிட்டு, வீட்லயும் வந்து வேலை செஞ்சு கொடுக்கிறாள். அவ்ளோ நல்லவளா இருந்தா, வீட்ல எனக்கு கொஞ்சமாவது வேலை செஞ்சு கொடுக்கலாம்ல? அவள் வந்தா அஞ்சு நிமிஷம் கூட ரெஸ்ட் எடுக்க முடியறதில்ல. வேலை செய்ய சொல்லி உங்க தங்கச்சிய எதுவும் சொல்லவும் முடியல. அவளாவது ஏதாவது புரிஞ்சுகிட்டு கிச்சன் பக்கம் வருவாளான்னு? பார்த்தா அதுவும் இல்ல"

தொடரும்.........


படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.
 

Author: Anu1997
Article Title: எபிசோட் 4
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top