எபிசோட் 3

New member
Joined
Aug 21, 2025
Messages
8
5295c53a5b7a26af77b1c4d6208bf7b1.jpg

அப்போது அந்த பைக், மீண்டும் அவள் பக்கத்தில் வந்து நின்றது.

"என்ன பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருக்கியா?"

என அவன் கேட்க,

"ஆமா உனக்கு என்ன பிரச்சனை?"

என மலர்விழி கேட்க,

"ஒன்னும் இல்லயே, என் பைக் போகும்போது நீ திமிரா சிரிச்ச மாதிரி இருந்துச்சு"

"அது என் விருப்பம், நான் எப்படி வேணா சிரிப்பேன். உனக்கு என்ன பிரச்சனை?"

"நீ என்ன பார்த்து தானே சிரிச்ச?"

"பஸ்ட் நீ யாரு? எதுக்கு அடிக்கடி என்னை கிராஸ் பண்ற? உன்கிட்ட பேசுற அளவுக்கு எனக்கு டைம் இல்ல. நான் ரொம்ப பிஸி, புரியுதா?"

"நான் யாருன்னு தான கேட்ட? நான் அருள், நானும் இந்த ஊரு தான். நான் கொஞ்சம் திமிரானவன். அதே சமயம் ஸ்டைலாவும் இருப்பேன். அட்வென்சர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் என்ன மாதிரியே திமிரான ஒருத்தர இந்த ஊரிலயே இருக்க முடியாதுன்னு நினைச்சேன். ஆனா அப்படியும் ஒருத்தர் இருக்காங்கன்னு உன்ன பார்த்ததும் தெரிஞ்சுக்கிட்டேன்"

"யார நீ சொல்ற? "

"வேற யாரு நீதான். உன்ன விட திமிரான பொண்ணு வேற யாருமே இல்ல. அதை சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்"

"ஏய், என்ன சொல்ற? நீ தேவையில்லாத என்ன வம்பு இழுத்துட்டே இருக்க? உனக்கும், எனக்கும் என்ன பிரச்சனை? எதுக்கு என்கிட்ட வந்து வம்பிழுக்கற?"

"இனிமேல் எந்த பிரச்சினையும் வெச்சுகாதன்னுதான் சொல்ல வந்தேன். நான் எப்படி வேணா பைக் ஓட்டுவேன். அது என் விருப்பம். நான் வண்டி ஓட்டறத பாத்து நீ சிரிக்கணும்னு அவசியமே இல்ல. புரியுதா?"

"இது என்ன, சிரிச்சது தப்பா?"

"தப்புதான், சரி நான் போறேன்"

"பயந்து போற மாதிரி தெரியுது"

"நான் ஏன் பயந்து போகணும்? நான் இங்கயே நிற்கிறேன்"

"சரி நின்னு, என்னால உனக்காக டைம் வேஸ்ட் பண்ண முடியாது. எனக்கு வேலைக்கு போகணும். பஸ் வந்துருச்சு. பாய்......"

என சொல்லிவிட்டு அவனை கோமாளி போல் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றாள்.

"நான் ஏன் இவள் சொன்னதுக்காக இங்க வெட்டியா நின்னுட்டு இருக்கேன்? அடச்சே....... இன்னைக்கும் நம்மள முட்டாளாக்கிட்டாலே? சரியான அருந்த வாலு இவ"

எனச் சொல்லிவிட்டு அவன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். இங்கு மலர்விழியின் வீட்டில் மலர்விழி கிளம்பி கொஞ்ச நேரத்திலேயே ரேவதியும் வீட்டில் இருந்து கிளம்பினாள்.

"ரேவதி சாப்பிட்டியாடி?"

"அம்மா அதெல்லாம் நான் சாப்பிட்டேன். அக்கா மாதிரி நானெல்லாம் சாப்பிடாம போக மாட்டேன். நேரமா எழுந்திரிச்சு, குளிச்சு, அழகா ரெடி ஆயிட்டு, மேக்கப் எல்லாம் போட்டுட்டு, சாப்பிட்டு பொறுமையா போவேன். அக்கா மாதிரி அவசர, அவசரமா ஓடுனா, என் மேக்கப் எல்லாம் களைஞ்சிடும்மா"

"என் அழகு, செல்லம். எவ்ளோ அறிவா பேசுற?"

என சொல்லி சாவித்திரி ரேவதியின் கன்னத்தை கிள்ளினாள்.

"அம்மா கன்னத்தில் இருந்து கைய எடும்மா. ப்ளஷ் எல்லாம் போகுது"

"இங்க பாருடி, நீயும் நல்லா படிச்சு, நல்ல வேலைக்கு எல்லாம் போகணும். அதுக்கப்புறம் நல்ல பையனா பார்த்து நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். நீயாவது நல்ல வாழணும் டி. எனக்கு தான் ஆடம்பரமான, சொகுசான வாழ்க்கை கிடைக்கல. நீயாவது நல்ல பணக்கார வீட்ல வாழணும் டி. அம்மாவோட ஒரே ஆசை இது தான்"

"அம்மா நீ கவலையே படாத, நான் நல்லா படிச்சு, நல்ல வேலைக்கு போய், உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி தருவேன். அதுக்கப்புறம் நீ பார்க்குற பையன தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஓகேவா?"

என ரேவதி பேசிக் கொண்டிருக்கும்போதே, மீனாட்சி வந்தாள்‌.

"என்ன ரேவதி கிளம்பிட்டியா? டிபன் பாக்ஸ் எல்லாம் எடுத்துட்டியா?"

"அத்தை, அதெல்லாம் எடுத்துட்டேன்"

"மதன் எங்க போனான்னு தெரியலயே? இரும்மா, அவன வர சொல்றேன். பஸ் ஸ்டாப்ல கொண்டு போய் விட்டுட்டு வரட்டும்"

"அத்தை மாமா எதுக்கு? நானே தனியா போயிக்கிறேன்"

"என்னம்மா எவ்வளவு தூரம் நடந்து போகணும். அதுக்கு தான் சொல்றேன். இவர் வேற எங்கேயோ வெளிய வேலை இருக்குன்னு போயிட்டாரு"

"அத்தை பரவால்ல விடுங்க, நான் இங்கிருந்து நடந்து போயிக்கிறேன். நான் பைக்ல போனா முடியெல்லாம் களைஞ்சு போயிடும். அதனால நான் நடந்து போறேன்னு சொல்றேன்"

"நல்ல பொண்ணுமா நீ. சரி, பார்த்து போ"

"சரிங்க அத்தை, பாய்"

என சொல்லிவிட்டு வெளியில் வந்தாள்.

"பாட்டி, நான் காலேஜ்கு போயிட்டு வரேன்"

"என்னடி ஒரு வழியா கிளம்பிட்ட போல?"

"அதெல்லாம் கிளம்பிட்டேன் பாட்டி"

"என்னடி முகத்துல வெள்ளை அடிச்ச மாதிரி இருக்குது"

"பாட்டி, அது மேக்கப் பாட்டி"

"என்ன மேக்கப்போ? நாங்க எல்லாம் எங்க காலத்துல பவுடர் ஒன்னு தான் அடிச்சோம்"

"பாட்டி உங்க காலம் வேற, எங்க காலம் வேற. உங்கள மாதிரியே நானும் இருக்க முடியுமா?"

"என்னமோ, பார்த்து போயிட்டு வா"

என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். நடந்து பஸ் ஸ்டாப்பிற்கு வந்து சேர்ந்தாள்.

"நல்ல வேளை பஸ் வரதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே வந்தாச்சு. நமக்கு இந்த மாதிரி பரபரப்பா கிளம்பி பஸ்சுக்கு வரது, வேகமாக பஸ் ஏறுது, இதெல்லாம் செட் ஆகாது. காலைல நேரமா எழுந்திரிச்சு, பொறுமையா ரெடி ஆகி, பொறுமையா காலேஜ் போகணும். அப்போதான் அந்த நாளே நல்லா இருக்கும்"

என அவள் நினைத்துக் கொண்டே பஸ் வருகிறதா? என்று எட்டிப் பார்த்தாள்.

"காலேஜ் பஸ் வரவே இல்லை. காலேஜ் பஸ் தான் வரலைன்னு பார்த்தா, இவனையும் காணோமே? இன்னைக்கு எப்படியாவது அவனை பார்த்துடணும். கடவுளே!!! எப்படியாவது நான் அவனை பார்த்துடணும்"

என அவள் வேண்டிக் கொண்டிருக்க, ஒரு பைக் அவளை கடந்து சென்றது. அதை பார்த்த அவள் மனதிற்குள் ஏதோ ஒரு பட்டாம்பூச்சியை போல் பறந்தாள்.

"ஐயோ ஒரு வழியா நான் அவன பாத்துட்டேன். இப்போதான் இந்த டே ப்ரெஷ்ஷா ஸ்டார்ட் ஆன மாதிரி இருக்கு. இந்த டே இன்னைக்கு ஃபுல்லா ஹாப்பியா இருக்கப் போகுது"

என அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, பஸ் வந்தது‌. கல்லூரி பேருந்தில் ஏறி சென்றாள். அருள் அப்போது தான் வீட்டிற்கு வந்தான்.
உள்ளே வந்ததும்,

"டேய் ரவி, என்னடா பண்ற? அந்த ஃபைலை எடுத்து குடுடா"

"ஏண்ணா கிளம்பி எங்கேயோ போறேன்னு போன? போகலயா?"

அருள் வீட்டிற்கு மூத்த மகன். அருளின் அப்பா பிரகாஷ். அம்மா லதா. இருவரும் கூலி வேலை செய்பவர்கள் தான். ஆனால் அருளை நன்றாக படிக்க வைத்திருக்கிறார்கள். இப்போது அருள் புது பிஸினஸ் தொடங்குவதற்கான முயற்சியில் இருக்கிறான். ரவி அருளின் தம்பி. அவன் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறான்.

"எங்கடா போறது? அவளை பார்த்தா அந்த நாளே விளங்காது"

என அவன் முணுமுணுக்க,

"யாரை பார்த்த? என்ன ஆச்சு?"

"அது ஒன்னும் இல்லடா, ஃபைல் எடுத்து குடு. இதுக்கு அப்புறம் அந்த மேனேஜர் ஓகே சொல்லிட்டு தான்......"

என புலம்பிக் கொண்டே, அந்த ஃபைலை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவனுடைய ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு சென்றான். அந்த ஊரில் இருக்கும் பேங்கில் தான் லோன் கேட்டிருந்தான். அருள் மேனேஜர் அறைக்கு சென்றான்.

"வாங்க அருள்"

"சார் இன்னைக்காவது என்னோட லோன் சேன்சன் பண்ணுங்க சார். எவ்வளவு நாளா அலைஞ்சிட்டு இருக்கேன். இன்னைக்கு லோன் கிடைக்குமா சார்?"

"என்ன அருள் இப்படி கேட்குறீங்க? கண்டிப்பா இன்னைக்கு லோன் உங்களுக்கு கிடைச்சிடும். நான் உங்களுக்கு லோன் வாங்கி கொடுத்துடறேன். சந்தோஷமா அருள்"

"என்ன சார் சொல்றீங்க!!!?? இவ்வளவு நாளா கிடைக்கறது சந்தேகம் தான்னு சொன்னீங்க? இப்ப என்ன?"

"அதெல்லாம் எதுவும் இல்ல அருள், இவ்வளவு நாளா உங்களுக்கு லோன் கொடுக்கலாமா? வேண்டாமான்னு? உங்க பேமிலி பேக்ரவுண்ட்லாம் செக் பண்ணி பார்த்துட்டு இருந்தோம். ஆனா இன்னைக்கு தான் தோணுச்சு. உங்களுக்கு லோன் கொடுத்தா, நீங்க நிறைய பேருக்கு வேலை கொடுப்பீங்க. அவங்களோட வாழ்வாதாரமும் இதுல அடங்கிருக்குன்னு புரிஞ்சது. அதுனால நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். அதனால அவங்க குடும்பமும் நல்ல நிலைமைக்கு வரும். அது மட்டும் இல்ல உங்கள மாதிரி வயசு பசங்க படிச்சு முடிச்சுட்டு வேலை கிடைக்கிறப்போ கிடைக்கட்டும்னு இல்லாம பிசினஸ் தொடங்கணும்னு ஆர்வமா முன்வரத நான் பாராட்டுறேன். அதனாலதான் இந்த முடிவு எடுத்தேன். ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவி உங்களுக்கு"

(என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு? நேத்து வரைக்கும், லோன் கிடைக்கறது டவுட்டுதான், திரும்ப இந்த பேங்க்கே வராதீங்கன்னு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளாத குறையா சொன்னாரு. இன்னைக்கு என்னமோ லோன் கிடைச்சுரும்னு வாய் நிறைய பல்லோட சொல்றாரு)

என அவன் யோசித்துக் கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன அருள் இன்னும் சந்தேகமா? இங்க பாருங்க, உங்களோட லோன் டாக்குமெண்ட்ஸ் எல்லாமே அப்ரூவல் ஆயிடுச்சு. இன்னும் ரெண்டு, மூணு நாள்ல உங்களுக்கு அமௌன்ட் கைக்கு வந்துடும். ஓகே தானே?"

"தேங்க்யூ சார், தேங்க்யூ சோ மச். இதுக்காக நான் ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இது என்னோட ட்ரீம் சார்"

என சொல்லி அருள் மேனேஜரை கட்டிப்பிடித்தான்.

"என்ன அருள் இப்படி சொல்றீங்க? என்னால முடிஞ்ச சின்ன உதவி எத்தனையோ பேரு வேலை இல்லாம படிச்ச வேலைக்கு தான் போவேன்னு சுத்திட்டு இருக்காங்க. ஆனா நீங்க பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு ஆரம்பிக்கப் போறீங்க. படிச்சு முடிச்சுட்டு வீட்ல இல்லாம, லோன் வாங்கியாவது, பிசினஸ் பண்ணனும்னு வாழ்க்கையில முன்னேறனும்னு நினைக்கிறீங்க. அது மட்டும் இல்லாம உங்கள படிக்க வெச்ச பெத்தவங்களுக்காக ஏதாவது செய்யணும்னு முயற்சி பண்ற உங்களோட முயற்சியும், தன்னம்பிக்கையும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. அதனாலதான் உங்களுக்கு சீக்கிரமா லோன் சேன்சன் பண்றதுக்கு ஹெல்ப் பண்ணேன்"

(நீங்க எங்க சீக்கிரமா பண்ணீங்க? என்ன மூணு மாசம் அலையவிட்டு தானே இப்போ கொடுக்கிறீங்க?)

என அருள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்க,

"சரி, இன்னும் ரெண்டு, மூணு நாள்ல உங்களுக்கு ஃபோன் பண்றேன்"

என அவர் சொல்ல,

"சரிங்க சார், நான் கிளம்புறேன்"

என சொல்லிவிட்டு அருள் வெளியில் வந்தான்.

"என்ன இது? ஒரே அதிசயமா இருக்கே? காலையில எழுந்திரிச்சதும் யார் முகத்துல முழிச்சேன்? ஒன்னுமே ஞாபகத்துல வரலயே? ஞாபகம் வந்துருச்சு. வேக, வேகமா குளிச்சு, கிளம்பிட்டு பேங்க்கு கிளம்புனேன். அப்போதான் இவளை பார்த்தேன். இவள் கூட பேசி டென்ஷனாகி ஃபைல விட்டுட்டு வந்தது அப்போதான் ஞாபகம் வந்து, வீட்டுக்கு போய் எடுத்துட்டு வந்தேன். ஓ!!!! அப்போ இவள் முகத்துல தான் முழிச்சிட்டு பேங்க்கு போனேனா? கோவக்காரியா இருந்தாலும், இவள் முகத்துல முழிச்சதனால நமக்கு நல்லது தான் நடந்திருக்கு. ராசியானவளா தான் இருக்கா. பரவாயில்லயே? ஆனா அவளுக்கு வாய் தான் கொஞ்சம் நீளம். இன்னொரு முறை அவள் பைக்க பாத்து சிரிக்கட்டும். அவள் முன்னாடி வேகமா போய் காட்றானா? இல்லையா பாரு? என்ன பாத்து எப்படி கிண்டல் பண்றா? எப்படி சிரிக்கிறா? பொண்ணா அவ? இருந்தாலும் அவளால தான் இன்னைக்கு நமக்கு நல்லது நடந்திருக்கு. அவள் கிட்ட நான் சண்டை போடலன்னா எனக்கு அந்த ஃபைலை விட்டுட்டு போனதே ஞாபகம் வந்திருக்காது. ஃபைல விட்டுட்டு போனதுக்கு அந்த பேங்க் மேனேஜர் கண்டபடி திட்டிருப்பாரு. எல்லாமே பாஸிட்டீவா நடந்த
மாதிரி இருக்கு. சரி பார்ப்போம்"

என சொல்லிவிட்டு அருள் அங்கிருந்து கிளம்பினான். போகும் வழியில் ஒரு ஸ்வீட் கடையில், ஸ்வீட் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

தொடரும்........

படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.
 
Last edited:

Author: Anu1997
Article Title: எபிசோட் 3
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top