- Thread Author
- #1
"ஆர்டர் கிடைச்சிடுச்சும்னு இப்பதான நீ சொல்லிட்டு இருந்த? நீ எனக்கு எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா? நீ சொன்ன உடனே எனக்கு அப்படியே நடக்குது. அப்படியே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும்னு சொல்லு அதுவும் நடக்கும்ல?"
"போடா, என்ன வச்சு காமெடி பண்றியா?"
"ஏய் உண்மையா தான்டி சொல்றேன். ஒருமுறை சொல்லேன்"
"சரிடா, நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும். அதுவும் பெத்தவங்க சம்மதத்தோட. நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா கடைசி வரைக்கும் சந்தோஷமா வாழப்போறோம் போதுமா?"
"இது போதும் மலர்"
"சரி அருள், டைமாச்சு நான் கிளம்புறேன்"
"எனக்கும் டைம் ஆச்சு, நானும் கிளம்புறேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அது மட்டும் இல்லாம ரொம்ப ஹாப்பியா இருக்கேன்"
"அதெல்லாம் சரி, ஹாப்பியா இருக்கன்னு பைக்க பாஸ்ட்டா ஓட்டாதடா"
"அதெல்லாம் பைக்க வேகமா ஓட்ட மாட்டேன். சரி நீ கிளம்பு"
அவள் அங்கிருந்து கிளம்பினாள். அவள் கிளம்பியவுடன், சந்தோஷம் தாங்க முடியாமல் அருள் பைக்கை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றான்.
(இனிமேல் என் லைஃபே மாறப்போகுது. எனக்கு புடிச்ச மாதிரி எல்லாமே நடந்துட்டு இருக்கு. என்னால இந்த சந்தோஷத்தை தாங்க முடியல. ரொம்ப ஹேப்பியா இருக்கு)
என நினைத்துக் கொண்டு பைக்கை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றான்.
பஸ் ஸ்டாப்பில் இருந்து மலர்விழி அவனை பார்த்து முறைத்து கொண்டே இருந்தாள்.
(இவன் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டேங்குறான். கோபம் தான் வருது. சாயந்திரம் வரும்போது இருக்கு, இவனுக்கு)
என அவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க,
(என்னமோ பண்ணி தொலையட்டும்)
என அவள் முகத்தை திரும்பிக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டு எல்லோரும் ஓடினார்கள்.
(என்ன சத்தும் அது? என்னவா இருக்கும்?)
என மலர்விழியும் திரும்பி பார்த்தாள். அங்கு கூட்டம் கூடி இருந்தது. மலர்விழி குழப்பதிலும், ஒரு வித பயத்திலும் அங்கிருந்து சென்றாள்.
(அது அருளா இருக்காது. அவன் வேற எதுவோ வேலை இருக்கன்னு சொன்னான்ல? அங்கதான் போயிருப்பான். அவனா இருக்காது)
கால்கள் அங்கு நடக்க மறுத்தாலும், இன்னொரு பக்கம் அருளாக இருக்காது என்ற ஒரு நம்பிக்கையும் ஓடிக்கொண்டிருக்க, அந்த கூட்டத்தை விலக்கி விட்டு எட்டிப் பார்த்தாள். அங்கு இருந்தது அருள் தான். பைக்கிலிருந்து கீழே விழுந்து கிடந்தான். அந்த இடம் முழுவதும் ரத்தமாக இருந்தது. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை? அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே நின்றாள். கொஞ்ச நேரத்தில் அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸில் அருளுடன் அங்கிருந்து கிளம்பினாள். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மௌனமாக. கண்களில் கண்ணீர் மட்டும் கொட்டி தீர்த்தது. அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அவன் கைகளும் அவளை இறுக்கமாக பிடித்தது போன்று அவளுக்கு ஒரு உணர்வு ஏற்பட, அந்த பிடிப்பில்,
(என்னை விட்டு எங்கேயும் போயிடாத மலர். என் பக்கத்திலேயே இரு)
என்பது போல் இருந்தது.
அருள்...... என அவன் பெயரை மட்டும் கூறி, அழுதவாறு அவன் மேல் சாய்ந்தாள். அவள் கண்ணீர் பார்த்து அவன் கண்களிலும் நீர் தேக்கும் போல் கண்ணீர் தேங்கி நின்றது. அவன் கண்களை துடைத்தவாறு மலர்விழி,
"அருள் அழுகாத, உனக்கு ஒன்னும் ஆகாது. நான் தான் உன் பக்கத்துல இருக்கேன்ல?"
கொஞ்ச நேரத்தில் ஹாஸ்பிடல் வர, ஆம்புலன்ஸில் இருந்து இறங்கினாள். வேகமாக அருளை தூக்கிக் கொண்டு போனார்கள். எமர்ஜென்சி வார்டில் வைத்திருந்தார்கள். எவ்வளவு முயற்சி செய்தும், அருளைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் கடைசி இரண்டு, மூன்று நிமிடங்களில் அருள் மெதுவாக கண்விழித்து டாக்டரை பார்த்தான்.
"ஒரு நிமிஷம் இருங்க, அவங்கள கூப்பிடுறேன்"
"இல்ல டாக்டர், அவளை கூப்பிடாதீங்க.
அவளால கண்டிப்பா இதை தாங்கிக்க முடியாது. அவள் அழுகறதை என்னால பார்க்க முடியாது. அவள் எப்பவும் சிரிச்ச முகமா இருக்கணும்னு தான் ஆசைப்படுறேன். அவளுக்கு இந்த கஷ்டத்தை கூட நான் தரக்கூடாதுன்னு நினைக்கிறேன் டாக்டர்"
"என்ன சொல்றீங்க?!!!"
"டாக்டர், அவள்கிட்ட நான் சொல்றத மட்டும் சொல்றீங்களா?"
"சொல்லுங்க, நான் என்ன சொல்லணும்"
"நான் பிழைக்க மாட்டேன்னு எனக்கே தெரியும் டாக்டர். நான் போனதுக்கப்புறம் என்ன நினைச்சுட்டு இருப்பாள். அவள் ரொம்ப நல்ல பொண்ணு, நிறைய கஷ்டப்பட்டுட்டாள். என்ன மாதிரியே அவளுக்கும் வாழ்க்கையில எதுவுமே கிடைச்சதில்ல. அவள் நல்லா வாழணும்னு ஆசைப்படுறேன். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும். அவளுக்கு நல்ல வாழ்க்கைய நீங்க தான் அமைச்சு கொடுக்கணும் டாக்டர். அவள் எவ்வளவோ தடவ சொல்லி இருக்காள். நான் தான் அவள் சொல்றத கேட்காம, பைக்ல வேகமா போனேன். என்னால இதுக்கு மேல பேச முடியல டாக்டர்......."
என அவன் மூச்சு இழுத்துக் கொண்டிருக்க......அப்பா, அம்மாவ என் தம்பி பார்த்துக்குவான்னு சொல்லுங்க. இந்த ஜென்மத்துல அவங்களுக்கு எதுமே என்னால பண்ண முடியல. ஆனா அடுத்த ஜென்மத்துல அவங்களுக்கு நான் மகனா பிறந்து இப்போ பண்ண முடியாதது, எல்லாமே அப்போ பண்ணுவேன்னு சொல்லுங்க. அப்புறம் டாக்டர்....... முக்கியமான பைல்ஸ் எல்லாம் என் ரூம்ல தனியா ஒரு ட்ராவுல இருக்குன்னு சொல்லிடுங்க. அவங்களுக்காவது நான் ஏதாவது பண்ணிருக்கேன். ஆனா என் மலருக்கு நான் எதுவுமே பண்ணல. அவள் என்கிட்ட எதுவும் கேட்டதும் இல்ல. என் கூட சந்தோஷமா வாழணும்னு மட்டும் தான் ஆசைப்பட்டாள். அத கூட என்னால பண்ண முடியல. இப்படி எதுவுமே பண்ணாம அவளை விட்டுட்டு போறேன். அவள் எனக்கு அப்புறம் ஒரு வாழ்க்கைய பத்தி கண்டிப்பா யோசிக்க மாட்டாள். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணைய தேடிக்கிட்டு, அவள் சந்தோஷமா வாழ்றதுதான் என்னோட கடைசி ஆசை. அவளை நான் சந்தோஷமா பார்க்கணும். என்னோட மலர்விழி எப்பவும் சிரிச்சுட்டு சந்தோஷமா இருக்கணும். அவள் சந்தோஷமா வாழணும் டாக்டர். அதுதான் என்னோட கடைசி ஆசைன்னு அவள் கிட்ட சொல்லிடுங்க"
எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அருளின் மூச்சு மேலும், கீழுமாக இழுத்துக்கொண்டிருக்க, ஓரிரு நிமிடங்களில் அருளின் உயிர் பிரிந்தது. டாக்டர் வேகமாக சென்று வெளியில் இருந்த மலர்விழியை கூப்பிட்டார்.
"நீங்க தானே அவர்கூட வந்தது? அவர் இறந்துட்டாரு மா"
"என்ன சொல்றீங்க?"
என அவள் உள்ளே சென்று அருளைப் பார்த்தாள். அருள் பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தான்.
"அருள்........"
என அவன் மேல் விழுந்து அழுதாள்.
"ஏன்டா இப்படி பண்ண? எல்லாருக்கும் எல்லாம் பண்ணுன. எனக்கு மட்டும் எதுவுமே பண்ணலயேடா? உன் கூட வாழணும்னு மட்டும் தாண்டா ஆசைப்பட்டேன். அது கூட உன்னால நிறைவேத்த முடியலல்ல? எப்படிடா என்ன விட்டு போகணும்னு உனக்கு தோணுச்சு? உனக்காகவே வாழ்ந்துட்டு இருக்க என்ன பத்தி யோசிச்சியாடா அருள்?"
என அவன் கையை பிடித்து கொண்டு அழுதுகொண்டே இருந்தாள்.
"ப்ளீஸ் அருள், என்கிட்ட விளையாடாத எழுந்திரி. அருள் வா, நம்ம வீட்டுக்கு போலாம். அருள் அப்பா கிட்ட நான் இன்னைக்கே பேசுறேன். நம்ம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்பா கண்டிப்பா நம்மள புரிஞ்சுக்குவாரு. நீயும் இதுதான ஆசைப்பட்ட? ப்ளீஸ் அருள், எழுந்திரி, உங்க அம்மாவ பத்தி யோசிச்சு பார்த்தியாடா? உங்க அப்பா, உன் தம்பிய பத்தி யோசிச்சு பார்த்தியாடா? அவங்கள பத்தி யோசிச்சி பார்த்தாவது எழுந்திரிடா, எழுந்திரி டா ப்ளீஸ் டா, எழுந்திரி அருள்........ என்னை விட்டு போயிடாத டா. எல்லாமே நீ தாண்டா. உனக்கு ஞாபகம் இருக்கா பர்ஸ்ட் டைம் பஸ் ஸ்டாப்ல நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கிட்டோமே? நீ கூட என்கிட்ட அடிக்கடி சொல்லுவியே? அந்த மழையில அந்த கொடையில இருந்து ஒரு அழகான பூ மாதிரி உன் முகத்தை பார்க்கும்போது, நீ தான் எனக்கானவள்னு தோணுச்சுன்னு சொன்னல்லடா? எப்படிடா என்ன விட்டு போக உனக்கு மனசு வந்துச்சு? உனக்கானவள் உன் பக்கத்துல இருக்கேன்டா. ஆனா நீ என்னை விட்டு இப்போ போயிட்டியேடா?"
என அருள் மேல் விழுந்து அழுது கொண்டிருந்தாள் மலர்விழி. அங்கிருந்து வந்த டாக்டர்,
"அவர் இறந்துட்டாரு, புரிஞ்சுக்கோங்க. அவங்க வீட்ல சொல்லணும். அவங்களோட கான்டக்ட் நம்பர் ஏதாவது இருக்கா?"
"அது எதுவும் இல்ல டாக்டர்"
"உன் கூட இன்னொருத்தர் வந்தாரே?"
"ஆமா டாக்டர், அவரு வெளிய இருப்பாரு.
"சரி, நான் அவர்கிட்ட கேட்டு வாங்கிக்கறேன்"
" டாக்டர் அதுக்கு முன்னாடி அருளை எழுந்திரிக்க சொல்லுங்க. அருளுக்கு ஒன்னும் ஆகல தான?"
"அது வந்தும்மா, அவர் இறந்துட்டாரு"
"டாக்டர், என்ன சொல்றீங்க? இங்க பாருங்க, நல்லா தான் இருக்கான். வரும்போது வண்டில கூட என் கையை இறுக்கமா பிடிச்சிட்டு இருந்தான். ஒரு நிமிஷம் இருங்க"
என சொல்லி விட்டு அவன் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.
"இங்க பாருங்க, இப்ப கூட என் கைய புடிச்சிட்டு தான் இருக்கான். அப்படித்தான அருள்?"
என சொல்லிவிட்ட, அவள் கைகளை எடுக்க, அவன் கைகள் அவள் கைகளில் இருந்து சரிந்து கீழே விழுந்தது.
அதை பார்த்து அழுது கொண்டே அவள்,
"என்னை விட்டு எப்பவும் போக மாட்டேன்னு சொன்னல்லடா. என் கையை எப்பவுமே இப்படி இறுக்குமா புடிச்சுட்டு இருக்கணும்னு சொன்னியேடா? ப்ளீஸ்டா அருள் என் கைய விட்டுறாதடா"
என சொல்லி அவன் கையை மீண்டும் பிடித்துக் கொள்ள, அதை பார்த்த டாக்டர்,
"புரிஞ்சுக்கோங்க, அவர் இறந்துட்டாரு"
"டாக்டர் அவன் அப்படி எல்லாம் என்னை விட்டுட்டு போக மாட்டான். அவனுக்கு நிறைய கடமை இருக்கு. அதை எல்லாம் முடிச்சுட்டு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிருக்கான். அதுக்குள்ள எப்படி என்ன விட்டுப் போவான்? அருள் நல்லா தான இருக்கான்? ப்ளீஸ் உண்மையா சொல்லுங்க"
"உண்மையா அருள் இறந்துட்டாரு. இங்க பாருங்க, பல்ஸ் கூட நின்றுச்சு. அவ்வளவுதான் நீங்க இங்க கூட்டிட்டு வரும்போது அவர் ரொம்ப சீரியஸா தான் இருந்தாரு. எங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு ட்ரை பண்ணோம். ஹெவி பிளட் லாஸ். அவரை எங்களால காப்பாத்த முடியல"
"இதை என்னால நம்ப முடியாது"
"புரிஞ்சுக்கோங்கம்மா"
என சொல்லிவிட்டு அவளை அங்கிருந்து வெளியில் கூட்டி கொண்டு வந்தார்.
"என்கிட்ட பொய் சொல்லிட்டல்லடா? இந்த கைய எப்போவும் விட மாட்டேன்னு சொன்ன?"
தொடரும்..........
படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.

Author: Anu1997
Article Title: எபிசோட் 18
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.