எபிசோட் 16

New member
Joined
Aug 21, 2025
Messages
22
"அப்புறம் என்ன பண்றது? நான் தான் இப்போ பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன்ல?"

"நீங்க எல்லாரும் இப்போ வந்து கேட்டு, அப்பா ஏதாவது சொன்னா? உனக்கும் கஷ்டம். எனக்கும் கஷ்டம். இந்த நேரத்துல இதை பத்தி பேசுறது
சரியா இருக்காது. நானே அப்பா கிட்ட டைம் கிடைக்கும்போது பேசறேன். ஆனா அப்பா என்ன சொல்லுவாருன்னு தான் தெரியல. கொஞ்சம் பயமா இருக்கு"

என மலர்விழி பேசிக் கொண்டிருக்கும்போது அருள் அவள் கையைப் பிடித்து,

"இங்க பாரு மலர், எதுக்கும் பயப்படாத. உனக்கு எப்போ பேசணும்னு தோணுதோ? அப்போ பேசு. உடனே பேசணும்னு அவசியம் இல்ல"

"ஓகே அருள், நீயும் பிசினஸ் இன்னும் ரெண்டு, மூணு நாள்ல ஸ்டார்ட் பண்ண போறல்ல? அதனால அதுல கான்சன்ட்ரேட் பண்ணு"

"அப்புறம் மலர், அங்க நீயும் வந்தா நல்லா இருக்கும்"

"பார்க்கலாம் அருள், முடியுமான்னு தெரியல?"

"ஓகே மலர், நான் கிளம்புறேன்"

"சரி அருள், நானும் கிளம்புறேன்"

இரண்டு நாட்கள் கழித்து, அருள் பிசினஸ் தொடங்குவதற்கான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, அன்று காலை ஒரு பூஜைக்காக தயார் செய்து கொண்டிருந்தான். அப்போது மலர்விழி அங்கிருந்து நடந்து வந்தாள். அவளைப் பார்த்ததும் வேகமாக வெளியில் வந்தான் அருள்.

(மலர்வழி எப்படி வந்தாள்? வருவனான்னு தெரியலன்னு டவுட்டா சொன்னா? ஆனா வந்துட்டாலே?)

அவள் பக்கத்தில் சென்று அருள்,

"நம்பவே முடியல மலர், நீ வருவன்னு எதிர்பார்க்கவே இல்ல"

"நீ கூப்பிட்டு வராம இருப்பனா? உன் வாழ்க்கையில நீ அடி எடுத்து வைக்க போற. இதுல நான் உன்கூட இருக்கணும்ல? அப்போதான நீயும் சந்தோஷப்படுவ?"

"ஆமா மலர், எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அதுவும் உன்ன முதல் முறையா சேரில பார்க்குறேன். அழகா இருக்கு மலர்"

"அப்படியா அருள்? நீ ரொம்ப நேரமா என்ன மட்டும் தான் பார்த்துட்டு இருக்க. அது மட்டும் இல்ல, உங்க அம்மாவும் அங்க இருந்து நம்மளை தான் பார்த்துட்டு இருக்காங்க. இப்படியே பார்த்துட்டு இருந்தேன்னா, உங்க அம்மாவுக்கு நம்ம விஷயம் இப்பவே தெரிஞ்சிடும்"

என சொல்ல, அவன் பயந்து பின்னால் சென்றான். அருளின் அம்மா வெளியில் வர, அவன் பதட்டமாக அவன் அம்மாவை பார்த்து,

"அம்மா இது, இது........"

என அவன் தடுமாறிக் கொண்டிருக்க,

"ஆன்ட்டி, அருளும், நானும் ஒரே கம்பெனியில் தான் ஒர்க் பண்ணோம்"

"அப்படியாம்மா? உன் பெயர் என்ன?"

"மலர்விழி"

"சரி, உள்ள வாம்மா உன் கூட தான் ஒர்க் பண்றாங்களாடா? அதை சொல்ல வேண்டியது தான?"

"அம்மா அது தான் சொல்ல வந்தேன்"

"சரி உள்ள உட்காரும்மா, நான் டீ எடுத்துட்டு வந்துடுறேன்"

என அருளின் அம்மா உள்ளே சென்று டீயை கொண்டு வந்து கொடுக்க, அருள் அதை வாங்கி அவள் கையில் கொடுத்தான்.
மலர்வழி டீயை வாங்கி குடித்துவிட்டு, அவனைப் பார்த்து சிரித்தாள்.

"ஏன் சிரிக்கிற? "

"அது ஒன்னும் இல்ல, எல்லாமே தலைகீழா நடக்குது"

"என்ன சொல்ற?"

"பொண்ணு பார்க்க வந்திருந்தா நீ என் வீட்டுக்கு வந்துருப்ப. உன் அப்பா, அம்மா எல்லாம் உட்கார்ந்து இருப்பாங்க. நான் தான் டீ எடுத்துட்டு வந்து உன் கையில கொடுத்து இருப்பேன். ஆனா இங்க எல்லாம் தலைகீழா இருக்கே? நீ பொண்ணு பார்க்க வர்றதுக்கு முன்னாடி நான் மாப்பிள்ளை பார்க்க வந்துட்டேன்"

"ஏய்!!! என்ன கிண்டல் பண்றியா? அது சரி, என் அப்பா அம்மாவ உனக்கு புடிச்சிருக்கா?"

"எனக்கு உங்க அம்மா ஓகே தான் சமாளிச்சுக்குவேன். உங்க அப்பா தான் எப்படின்னு தெரியல?"

"அப்பா வெளிய இருக்காரு வா, கூட்டிட்டு போறேன்"

என வெளியில் கூட்டிக் கொண்டு சென்றான். வெளியில் அருளின் அப்பா உட்கார்ந்து கொண்டிருந்தார்.

"அப்பா, இது என் கூட வேலை பார்த்த பொண்ணு"

"அப்படியாப்பா?"

"சரிம்மா, உன் பெயர் என்ன?"

"மலர்விழிப்பா"

"பரவாயில்லடா, வேலை பார்த்த கொஞ்ச நாள்ல இந்த அளவுக்கு உனக்கு குளோஸ் பிரண்ட்ஸ் இருக்காங்களே?"

"அது வந்துப்பா......"

"ஆமா அங்கிள், இவரும், நானும் அவ்ளோ கிளோஸ்......"

என மலர்விழி சொல்ல,

"நீ கம்முனு இருடி, மாட்டி விட்றாத"

"என்னம்மா சொல்ற?"

"அது....... நானும், இவரும் தான் நல்ல க்ளோஸ் பிரண்ட்ஸ். மத்தவங்க எல்லாம் அந்த அளவுக்கு இல்ல அங்கிள்"

"அப்படியாம்மா, சரிடா ஐயர் வந்துட்டாரா? பூஜை எல்லாம் ஆரம்பிக்கலாமா?"

"ஆரம்பிக்கலாம் பா"

எல்லோரும் அங்கிருந்து கிளம்பினார்கள். பிறகு பூஜை ஆரம்பித்தது. அருள் கண்களை மூடி வேண்டிக் கொண்டிருக்க, அப்போது மலர்விழி அருளையை பார்த்துக் கொண்டிருந்தாள். அருள் கண் விழித்து மலர்விழியைப் பார்த்தான்‌.

"என்னாச்சு இவளுக்கு? ஏன் இப்படி என்னையவே பார்த்துட்டு இருக்கா? வேஷ்டி, ஷார்ட் போட்டது தப்பா போச்சு. இப்படி பார்க்குறாள்?"

என அவன் அவளை பார்த்து சிரித்து விட்டு, பூஜையை கவனித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் பூஜை முடிய எல்லோரும் வெளியில் வந்தார்கள். வெளியில் வந்த அருள் மலர்விழியிடம்,

"என்னாச்சு மலர் பூஜை நடக்கும் போது என்னையே பார்த்துட்டு இருந்த? என்ன சைட் அடிக்கிறியா? வேஷ்டி, ஷர்ட் ஒரு நாள் போட்டதுக்கே இப்படியா?"

"டேய் நீ அழகா தான் இருக்க. அதுக்குன்னு இப்படி எல்லாம் சீன் போடாதடா"

"அப்புறம் எதுக்கு என்னை பார்த்துட்டு இருந்த?"

"அது ஒன்னும் இல்ல அருள், இப்படித்தான ஐயர் மந்திரம் சொல்ல, பொண்ணு, மாப்பிள்ளளையா நம்ம கைய புடிச்சு அக்னிய சுத்தி வந்தா நம்ம கல்யாணமே முடிஞ்சிடுவோம்ல?"

"இதுதான் யோசிச்சிட்டு இருந்தியா?"

"ஆமா அருள், நீயும் நானும் மட்டும் அங்க உட்கார்ந்திருக்க மாதிரி, ரெண்டு பேரும் அவ்வளவு சந்தோஷமா பொண்ணு, மாப்பிள்ளை கோலத்துல இருந்த மாதிரி யோசிச்சு பார்த்தேன்"

"அதுக்கு என்ன சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டா போச்சு"

"என்ன சொல்ற?"

"கம்பெனி ஸ்டார்ட் பண்ணிட்டேன், இதுக்கு அப்புறம் அடுத்தடுத்து எல்லாமே பண்ணிடுவேன். அப்புறம் நம்ம கல்யாணம் தான? அப்புறம் இப்படி பொய் சொல்ல தேவையில்ல. அடிக்கடி யாருக்கும் தெரியாமல் சந்திக்க தேவையில்ல. நம்ம ரெண்டு பேரும் எப்பவும் ஒண்ணா இருக்கலாம்"

"ஆமா அருள், எப்பவும் உன்ன பார்த்துட்டு உன் கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்குடா"

"கொஞ்ச நாள் தான் செல்லக்குட்டி, சீக்கிரமா இந்த கைய நான் புடிக்க தான் போறேன். நம்ம ஆசைப்பட்ட மாதிரி அதுவும் எல்லாரோட சம்மதத்தோடவும், நான் என் கையால, தாலிய எடுத்து இந்த அழகான கழுத்துல கட்டுவேன். அதுக்கப்புறம் நம்மளோட இந்த பந்தம் அந்த மூணு முடிச்சுல இருந்து தொடங்கப்போகுது. நினைச்சு பார்க்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்குல்ல?"

"இவ்வளவு ஆசைய மனசுல வச்சிருக்கியாடா?"

"ஆமா மலர், உன் கூட வாழணும்னு ஆசையா இருக்குடி. நீ, நான், அம்மா, அப்பா, என் தம்பி இப்படி நம்ம எல்லாரும் ஒரு குடும்பமாக வாழணும்னு ஆசையா இருக்குடி. இதெல்லாம் நடக்க எவ்வளவு நாள் ஆகும்னு தெரியல? எனக்கு அவ்வளவு பொறுமையையும் இல்ல"

"அதுக்கு என்ன பண்றது அருள்?"

"வேணா இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா? நான் ரெடி தான். பொண்ணுக்கு தான் ஓகேவான்னு தெரியல?"

"பொண்ணுக்கு இப்பவே ஓகே தான். ஆனா பையனுக்கு தான் தைரியம் இருக்கான்னு தெரியல?"

"என்ன இப்படி சொல்ற? இப்பவே வா, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்"

"நீ பண்ணாலும் பண்ணுவ. ஃபர்ஸ்ட் நீ உன் பிசினஸ பாரு. அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம். நான் எங்கேயும் போக மாட்டேன். உனக்காக காத்திருப்பேன்"

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அருளின் தம்பி அங்கிருந்து வந்தான்.

"மலர் இது என் தம்பி ரவி"

"அண்ணா, இவங்க...... இவங்கதான் அவங்களா?"

"என்னடா சொல்ற?"

"ஒன்னும் இல்லண்ணா"

"நானும் இவரும் ஒரே கம்பெனியில் தான் ஒர்க் பண்ணோம்"

"ஓ!!! அப்படிங்களா?"

என சொல்லிவிட்டு அவன் சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.

"என்னடா உன் தம்பி சிரிக்கிறதே சரியில்ல. உன் தம்பிக்கு நம்ம விஷயம் தெரியுமா?"

"எனக்கே அவன் ஏன் அப்படி சிரிச்சிட்டு போனான்னு தெரியல? ஆனா நான் அவன்கிட்ட எதுவும் சொல்லல"

"அப்புறம் ஏன் இப்படி பார்த்துட்டு போறான்?"

"அப்புறமா என்னன்னு கேட்கிறேன்".

"சரி அருள், டைமாச்சு நான் கிளம்புறேன்"

"நான் வேணா உன்னை கூட்டிட்டு வந்து விடட்டுமா?"

என அவன் கேட்க அங்கிருந்து வந்த அவனுடைய அம்மா,

"என்னடா இப்படி கேட்குற? அந்த பொண்ணு உனக்காக தானே அவ்வளவு தூரம் வந்திருக்கு. கூட்டிட்டு போய் விடுடா"

"அது வந்து ஆன்ட்டி..... நானே போயிக்கிறேன்"

"நீ எப்பம்மா வேலைக்கு போறது? அவன் உன்ன கூட்டிட்டு போய் விடுவான். டேய் கூட்டிட்டு போய் விடுடா"

"அப்புறம் என்ன? என் அம்மாவே பர்மிஷன் கொடுத்துட்டாங்க"

"வா போலாம்"

"அது வந்து அருள்......."

"நான் உன்ன பைக்ல கூட்டிட்டு போகக் கூடாதா? எனக்கும் உன்ன பைக்ல கூட்டிட்டு போகணும்னு ஆசையா இருக்கு மலர்"

"சரி ஓகே அருள், வா போலாம்"

என அவள் பைக்கில் ஏறி உட்கார்ந்தாள்.

"என்ன மலர் இவ்வளவு டிஸ்டன்ஸ்ல உட்கார்ந்து இருக்க?"

"அட்லீஸ்ட் தோல்லயாவது கை போடலாம்ல? நீ கீழ விழாம இருப்ப அதுக்கு தான் சொன்னேன்"

எனச் சொல்ல, அவள் அவன் தோள் மீது சாய்ந்து அவனைப் பிடித்துக் கொண்டாள்.

"ஏய் என்ன ஆச்சுடி உனக்கு?"

"என்னமோ தெரியல, உன்ன மிஸ் பண்ணிடுவனோன்னு பயமாவே இருக்கு அருள்"

"கவலைப்படாத மலர், நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது. நம்ம சந்தோஷமா வாழத்தான் போறோம்"

எனச் சொல்லி அவன் அவள் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். அவர்கள் பேசிக் கொண்டே வர, பஸ் ஸ்டாப் வந்தது.

"அதுக்குள்ள பஸ் ஸ்டாப் வந்துருச்சு. இன்னும் கொஞ்ச தூரம் உன் கூட போகணும்னு ஆசையா இருக்கு"

"நான் வேணா இன்னும் கொஞ்ச தூரம் போகட்டுமா?"

"இல்ல வேணாம் அருள், நான் இங்கயே இறங்கிக்கிறேன்"

"மலர், உனக்கு பஸ் வந்துருச்சு. நீ பார்த்து போ"

"பாய் அருள்"

மலர்விழியை பஸ் ஸ்டாப்பில் விட்டு விட்டு, அருள் வீட்டிற்கு வந்தான். அங்கு அவனுக்காக ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

தொடரும்........

படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.
 

Author: Anu1997
Article Title: எபிசோட் 16
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top