எபிசோட் 12

New member
Joined
Aug 21, 2025
Messages
22
f22ddff9139874a530c1c2478a9a4a10.jpg

"ஏன்னா....... என்னால கூட உன்னை பார்த்து எதுவும் பேச முடியல டா. ஏன்னா நான் உன்ன லவ் பண்றேன்டா புரிஞ்சுக்கோ......"

எனச் சொல்ல, அருளின் உதடுகள் மெதுவாக புன்னகைக்க,

"இங்கே பாரு மலர், ஓகே மலர் எனக்கு புரியுது"

என சிரித்துக் கொண்டே அவளைப் பார்க்க, அவள் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளோ அவனிடம்,

"ஐ லவ் யூ அருள்......."

என சொல்ல, அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"அருள் எனக்குள்ளேயும் உன் மேல லவ் இருந்துச்சு. ஆனா என்னால சொல்ல முடியல. அது ஏன்னு தெரியல. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டா. உன் கூட பேசும் போது நீயும் என்னை மாதிரி இருக்குன்னு ஃபீல் ஆச்சு. என்னோட ஃபீலிங்ஸ் எல்லாம் பெருசா யார்கிட்டயும் சொன்னது இல்ல. எனக்கும் கஷ்டம் இருக்கும்ல? ஆனா எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிற ஒருத்தனா நீ இருந்த. நீயும் உன் வீட்டை பத்தியும், உன் சூழ்நிலைய பத்தியும் ஓப்பனா என்கிட்ட பேசின. என்னதான் பிரண்ட்ஸ், அப்பா, அம்மான்னு எல்லாரும் இருந்தாலும் என்னால எல்லார்கிட்டயும் என் கஷ்டத்தை ஷேர் பண்ணிக்க முடியல. நான் இப்படித்தான் இருக்கேன். எனக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்ல முடியல. சொன்னதும் இல்ல. ஆனா உன்கிட்ட எல்லாமே ஷேர் பண்ணிக்க முடியுது. ரொம்ப கம்பேர்டபுலா இருக்கேன். ஏன்னா உன் மேல ஒரு டிரஸ்ட் இருக்குடா"

"எனக்கு புரியுது மலர், நீ கவலைப்படாத. எப்பவும் அந்த டிரஸ்ட்ட நான் காப்பாத்துவேன். உனக்கு என்ன பிராப்ளம்னாலும், உனக்கு என்ன என்கிட்ட சொல்லுனாலும் சொல்லலாம். நானும் அதே மாதிரி தான் எனக்கு வீட்ல கஷ்டம்னாலும், என்னோட வேலை கஷ்டமா இருந்தாலும், இல்ல பிசினஸ் பண்ணும் போது ப்ராப்ளம் வந்தாலும், உன்கிட்ட நான் ஷேர் பண்ணிக்குவேன். என் கவலை எல்லாம் சொல்லி சாஞ்சிக்க ஒரு தோள் இருக்குன்னு உன்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கும்போது தான் தோணுச்சு. சரி நானே உன்னை கூட்டிட்டு போய் பஸ் ஸ்டாப்ல இருக்கு விடுடா?"

"இல்ல அருள், அது வேணாம். நானே போயிக்கிறனே?"

"நீ எது நினைச்சுக்காத, நான் சும்மா தான் கேட்டேன். சரி நான் கிளம்புறேன்"

என சொல்லிவிட்டு அவன் கிளம்பினான். மலர்விழி திரும்பி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினாள். எப்போதும் போல் வேலைக்கு சென்றாள். இங்கு அருள் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வேலைக்கு கூப்பிட இருப்பதால் அன்று பிசினஸ் சம்பந்தமான வேலைகளை செய்து கொண்டிருந்தான். அதற்கு என்னென்ன வேலைகள் தொடங்க வேண்டுமோ? எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். பொழுது சாய்ந்தது. ரவி வீட்டிற்கு வந்தான்.

"என்ன அண்ணே பிசினஸ் வேலைய இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணிட்டு போல?"

"ஆமாண்டா, லோன் பணம் கூட சீக்கிரம் வந்துடும்னு சொல்லிருக்காங்க. கையில கொஞ்சம் பணம் வச்சிருக்கேன்ல? அதை வச்சு வேலைய ஸ்டார்ட் பண்ணேன்"

"கையில இருக்கிறது ஏன் செலவு பண்ண அண்ணே? உன் கை செலவுக்கு பணம் வேணாமா? இன்னும் ரெண்டு நாள்ல லோன் வந்துடும் வந்துடும். அதுக்குள்ள ஏன் அண்ணே செலவு பண்ண?

"அதான் ரெண்டு, மூணு நாள்ல வந்துரும்ல? அதுக்குள்ள கொஞ்சம் வேலைய முடிச்சு வச்சேன்னா பணம் வந்துடும். சீக்கிரமா வேலை முடியும்ல?"

"சரி, இரு நானும் வரேன்"

"உனக்கு எழுதறது, படிக்கிறதே ஏதாவது இருந்தா போய் பாருடா"

"இல்ல அண்ணே, கொஞ்ச நேரம் உன் கூட இருக்கேன். அதுக்கப்புறம் நான் போயிக்கிறேன்"

"சரி வா"

என அருள் அவனை கூட்டிக்கொண்டு போனான்.

"இங்க பாருடா, இங்க ரூம் மாதிரி எடுத்திடலாம். அதுக்கப்புறம் இங்க சின்ன, சின்னதா இந்த பெசிலிடிஸ் எல்லாம் இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்"

என அவன் அடுத்தடுத்து சொல்லிக் கொண்டிருக்க, ரவி அதை ஒரு நோட்டில் எழுதிக் கொண்டிருந்தான்.

"அண்ணே நீ சொன்னதெல்லாம் கரெக்டா எழுதிருக்குன்னான்னு பாரு"

"கரெக்ட்டா இருக்குடா ரவி, அப்புறம் எல்லா வேலைகளையும் நீயும் தெரிஞ்சுக்கோடா. ஏன்னா எல்லாரும் எப்பவுமே கூட இருந்து சொல்லிக் கொடுத்துட்டே இருக்க மாட்டாங்க. எல்லாரும் கூட இருக்கணும்னு நம்ம எதிர்பார்க்கவும் கூடாதுடா. நான் இருந்தாலும், இல்லனாலும் அப்பா, அம்மாவை நீ நல்லா பார்த்துக்கணும். அது மட்டும் இல்லாம, இந்த பிசினஸ் மேலே மேலே வளர்த்து நீ நல்ல நிலமைக்கு வரணும்"

"ஏன்னா இப்படி எல்லாம் பேசுற? நீ இருக்குன்னு தான் நான் தைரியமா இருக்கேன். நீ இல்லன்னு நான் என்ன பண்ணுவேன்? நீ தானே எங்களுக்கு எல்லாமே. உனக்கு ஒன்னும் ஆகாது. நான் கரெக்டா வேலைய கத்துக்குறேன். அதுக்காக இப்படி எல்லாம் பேசாதே சரியா?"

"இல்லடா, நான் ஒரு வார்த்தைக்கு தான் சொன்னேன். நான் உன்ன, அப்பா, அம்மா விட்டுட்டு எப்படி போவ? அப்புறம்........"

என அவன் சொல்ல வர,

"அப்புறம் என்ன?"

"என்ன அப்புறம்? ஒன்னும் இல்லடா, அப்புறம் பிசினஸ் பண்ணனும்ல, அது என்னோட கனவு. அது எப்படி விடுவேன்? அது தான் சொல்ல வந்தேன்"

"அப்படியா அண்ணே? இப்பயெல்லாம் நீ கொஞ்சம் சரியில்ல. நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன்"

"டேய் அதெல்லாம் ஒன்னும் இல்ல, கம்முனு இரு. இங்க பாருடா, நான் சொல்ல, சொல்ல என்னென்ன பண்றேன்னு எல்லா வேலையும் நான் சொல்லிக் கொடுக்கிறது வைச்சு மட்டும் கத்துக்காம, முழுசா நீ தனியா இருந்தாலும் இது எல்லாமே கவனிச்சுக்கற அளவுக்கு கத்துக்கோ. உனக்கு ஏதாவது டவுட் இருந்தாலும், என்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோடா. அதே சமயம் படிப்பை விட்டுறாத. படிச்சு முடிச்சுட்டு எனக்கு ஹெல்ப் பண்ணனும்னா வா. படிப்பும் ரொம்ப முக்கியம் டா. நீ என்ன பண்ணாலும் படிப்பு முடிச்சிட்டு தான் பண்ணனும். புரியுதா?"

இங்கு மலர்விழி, வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றாள். வீட்டிற்குள் வந்ததும்,

"அம்மா........"

என சத்தம் போட்டுக் கொண்டே, நேராக கிச்சனுக்கு சென்றாள்

"என்னடி, இன்னைக்கு ஒரே குஷியா இருக்க போல? என்ன ஆச்சு?"

"என்னம்மா, நேத்து அப்படி இருந்ததுக்கும் என்னன்னு கேட்குற? இப்படி இருந்தாலும் என்னனு கேட்குற?"

"நான் என்னடி பண்றது? பெத்தவதான் நான். ஆனா நீ என்ன பண்ற? என்ன மனநிலைல இருக்கன்னு புரிஞ்சுக்க முடியல. திடீர்னு அமைதியாகுற, திடீர்னு ரொம்ப ஜாலியா இருக்க, என்ன காரணம்ன்னு தெரியல"

"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, நேத்து டயர்டா இருந்துச்சு. அதான் அப்படி இருந்தேன். இன்னைக்கு எனக்கு டயர்ட் எல்லாம் எதுவும் இல்ல. ஒர்க் கம்மிதான்"

"ஏன்டி, ரொம்ப கஷ்டப்படுறல்ல இந்த வீட்டுக்காக?"

"அம்மா, ஏம்மா இப்படி பேசுற? நம்ம வீடுன்னு சொல்லு, நமக்காக தான கஷ்டப்படுறேன்?"

"நீ என்னதான் சிரிச்சு, ஜாலியா இருந்தாலும் உனக்கு வேலை கஷ்டமா இருக்குதாண்டி. எனக்கு தெரியும். அம்மாகிட்ட கூட எதையும் சொல்ல மாட்டேங்குற?"

"இல்ல அம்மா, கஷ்டமா இருந்தா தானே சொல்றதுக்கு? இப்படி எல்லாம் எதுவும் இல்லம்மா"

"நீ அப்படித்தான் சின்ன வயசுல இருந்து, உனக்கு கஷ்டமா இருந்தா கூட எதையும் யார்கிட்டயும் சொல்லிக்க மாட்ட. உன் சந்தோஷத்த மட்டும் தான் நாங்கள் பார்த்திருக்கோம்"

"அம்மா நான் கஷ்டப்பட்டா தானே என் கஷ்டத்த ஷேர் பண்ணிக்க? நான் சந்தோஷமா இருக்கேன்"

"சரிடி, எப்பவும் போல நான் சொல்லணுமா?"

"சரிம்மா, கோவிச்சுக்காத நான் போய் கை, கால், முகம் கழுவிட்டு கிச்சனுக்கு வரேன்"

"கிச்சனுக்கு வர வேண்டாம். நீ ஹால்லயே உட்கார்ந்திரு நான் வரேன்"

மலர்விழி எப்போதும் போல் சந்தோஷமாக அவளுடைய அறைக்குச் சென்று கை, கால், முகம் எல்லாம் கழுவி விட்டு வெளியில் வந்தாள். அவளுடைய அத்தை எப்போதும் போல் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன மலர்விழி எப்பவும் இருக்க மாதிரி மாறிட்ட போல?"

"ஆமா அத்தை, இன்னைக்கு வேலை பெருசா எதுவும் இல்ல. சீக்கிரமே வந்துட்டேன்"

"பரவாயில்லயே? ஆனா நீ இப்படி இருக்கறது தான் நல்லா இருக்கு. எப்பவும் சிரிச்ச மாதிரியே இரு"

"ஆமா அத்தை, எப்பவுமே அப்படித்தானே இருக்கேன்?"

"நேத்து இருந்திருந்தியே அந்த மாதிரி இருக்காதுன்னு சொல்ல வந்தேன்"

"சரிங்க அத்தை"

"உனக்கு டயர்டா இருந்தா ரெஸ்ட் எடு, அப்புறம் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு, ஏதாவது குடிச்சுடி, கொஞ்ச நேரம் இங்க கூட யார் கிட்டயாவது பேசு. மைண்ட் அப்படியே சரியாயிடும்மா. இந்த வயசிலேயே கவலைப்பட்டு உட்கார்ந்தா என்ன பண்றது? சொல்லு, இன்னும் என் வயசு வரைக்கும் நீங்க பார்க்குறதுக்கு நிறைய இருக்கு. மலர்விழி அதுக்கு தான் சொல்றேன், எதுக்கும் சோர்ந்து போய் உட்கார்ந்துற கூடாதும்மா. தைரியமா இருக்கணும், எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண கத்துக்கணும்"

"சரியா அத்தை, நீங்க எப்பவுமே ஏன் நாடகமே பார்க்குறீங்க?"

"அது என்னமோ தெரியல? எனக்கு இந்த சீரியல் எல்லாம் பார்க்க புடிச்சிருக்கு. இது பார்க்கும்போது நேரம் ஓடுறதே தெரியல. நீயும் வா,
உட்கார்ந்து பார்க்கலாம்"

"போங்க அத்தை, சீரியல் எல்லாம் பார்க்க போர் அடிக்கும்"

"ஏய், இந்த சீரியல் நல்லா இருக்கும்டி. உங்க அம்மா டீ போட்டு வர என்ன பண்ண போற? வா டீவி பார்க்கலாம்"

"நேத்து அம்மா, இன்னைக்கு நானா?"

"சரி பிடிக்கலன்னா, போ"

"இல்ல அத்தை, நான் அப்படி சொல்லல. சரி இருங்க, வரேன்"

என சொல்லி அவளும் நாற்காலியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது சீரியலில் கதாநாயகி, கதாநாயகனிடம்

"டேய் உன்ன என்னால மறக்க முடியாதுடா. ஏன்னா நான் உன்னை அந்த அளவுக்கு லவ் பண்றேன். நான் உன்னை விட்டுட்டு போக மாட்டேன்டா. ஆனா, கொஞ்ச நாளைக்கு நம்ம லைஃப் பத்தி யோசிக்கலாம். அதுக்கப்புறம் நம்ம கல்யாணத்தை பத்தி பேசலாமே? எனக்கும் உன்னை பிரிஞ்சு இருக்கிறது கஷ்டமா தான் இருக்கு. ஆனா என்ன பண்றது? உனக்கும் உன்னோட வேலை ரொம்ப முக்கியம்ல?"

என அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அதை பார்த்துவிட்டு சாவித்திரி,

"இப்போ எல்லாம் காலமே கெட்டுக் கிடக்குது. நாங்க எல்லாம் அந்த காலத்துல என்னத்த லவ் பண்ணனோம்? பொண்ணு பார்க்க வரும்போது மாப்பிள்ளை முகத்தை கூட பார்த்ததில்ல. புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ஆனா இந்த காலத்து புள்ளைங்க வேலைக்கு போகுதுங்க, புடிச்ச பையன் லவ் பண்ணுதுங்க, கல்யாணம் கூட பண்ணிக்கிதுங்க. காலமே மாறிடுச்சு"

என பேசிக்கொண்டிருக்க ராகவன் அங்கு வந்தார்.

"ஏன் அண்ணே இதெல்லாம் பத்தி நீ என்ன நினைக்கிற?"

எனக் கேட்க, மலர்விழி அவளுடைய அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(அப்பா என்ன சொல்ல போறாரு? இதெல்லாம் தப்பு புடிக்கலன்னு சொல்லுவாரா? இல்ல, இந்த காலத்துல இது சகஜம்னு சொல்லுவாரா?)

என அவள் குழப்பத்தில் அவளுடைய அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்..........

படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.
 
Last edited:

Author: Anu1997
Article Title: எபிசோட் 12
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top