- Thread Author
- #1
அங்கிருந்து வந்த ராகவன்,
"விடு மீனாட்சி, புள்ள டயர்டா இருக்குன்னு ரூமுக்கு வந்தா அப்படியே படுத்திருப்பாள்"
"இல்லங்க, இவள் எப்பவுமே இப்படி சைலண்டா வரவ இல்ல. வரும்போதே அம்மான்னு கூப்பிட்டே வருவாள். நேரா, கிச்சனுக்குள்ள வந்து ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமான்னு என்கூட பேசிட்டு இருப்பாள். நீங்களே பார்த்திருக்கீங்களா? கலகலன்னு இருப்பாள். இன்னைக்கு என்னமோ ஆயிடுச்சுங்க இவளுக்கு"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல மீனாட்சி, அவளுக்கு ஏதாவது டயர்டா இருந்திருக்கும். இல்ல, வேலை செய்ற இடத்துல ஏதாவது வொர்க் டென்ஷனா இருக்கும். அதான் புள்ள வந்து அப்படியே படுத்துட்டாள். என்ன ஆச்சும்மா மலர்?"
"அது வந்துப்பா........."
என அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க,
"சரி விடும்மா, உனக்கு டயர்டா இருக்கும்னு நினைக்கிறேன். நீ இன்னும் கொஞ்ச நேரம் ரூம்லயே ரெஸ்ட் எடு. அப்புறமா வெளியே வந்துக்கலாம். சரியா?"
என சொல்ல, அவள் மீண்டும் எதுவும் பேசாமல் அமைதியாக ரூமுக்குள் சென்றாள்.
"பார்த்தீங்களாங்க? நீங்க கேட்டதுக்கு கூட எதுவும் சொல்லாம ரூம்குள்ள போயிட்டாள்"
"விடு மீனாட்சி, அவளுக்கு என்ன டென்ஷனோ? அவளை எதுவும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்"
"நான் ஏங்க டிஸ்டர்ப் பண்ணப் போறேன்? டயர்டா வந்துருப்பாள், ஏதாவது சாப்பிட கொடுக்கலாம்னு பார்த்தேன்"
"வேணாம் மீனாட்சி, அப்புறமா ஏதாவது கொடுத்துக்கலாம்"
கொஞ்ச நேரத்தில் மதன் வந்தான்.
"அம்மா எங்க மலர்?"
"அவள் ரூம்குள்ள இருக்காடா?"
"என்னம்மா சொல்றீங்க? ரூம்குள்ள இருக்காளா? ரூம்ல ரெஸ்ட் எடுக்க சொன்னாக்கூட வேணாம்னு சொல்லுவாள். அவள் என்ன பண்றா ரூமுக்குள்ள?"
"தெரியலடா, வந்ததும் ரூமுக்கு நேரா போயிட்டாள்"
"சரிம்மா, நான் போய் அவள கூட்டிட்டு வரேன்"
"டேய் அவள டிஸ்டர்ப் பண்ணாதடா"
என சொல்ல, சொல்ல காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினான்.
"மலர் என்ன பண்ற ரூம்குள்ள?"
என அவன் கதவை தட்ட, அவள் கதவை திறந்தாள்.
"என்ன ஆச்சு மலர் உனக்கு? ஏன் ரூம்குள்ள இருக்க? நம்ம டிவி பார்க்கலாம் வா"
என கூப்பிட, அவள் அமைதியாகவே நின்றாள்.
"மலர் என்ன ஆச்சு? நீ எப்பவும் இப்படி அமைதியா இருக்க மாட்டியே?"
என அவள் கன்னத்தை தட்ட, அவள் சுதாரித்துக் கொண்டு,
(என்ன ஆச்சு எனக்கு? நான் ஏன் இப்படி அமைதியா இருக்கேன்? ஐயோ!!! இப்படி எல்லாம் நான் ஏன் பண்ணனும்? எப்பவும் போல இருக்கலாம். இத பத்தி யோசிக்கவே வேணாம்)
என அவளுக்குள் சொல்லிக் கொண்டு,
"ஒன்னும் இல்ல அண்ணா, கொஞ்சம் டயர்டா இருந்துச்சு. அதான் படுத்துட்டேன். சரி இரு, நான் ஃபேஸ்வாஷ் பண்ணிட்டு வந்துடுறேன்"
"சரி வா மலர், நான் அத்தை கிட்ட பேசி டீவி ரிமோட்ட வாங்கி வச்சிருக்கேன். நம்ம ரெண்டு பேரும் டீவி பார்க்கலாம்"
"சரிண்ணே"
என அவள் சிரித்துக் கொண்டே உள்ளே சென்று, முகத்தை கழுவி விட்டு வெளியில் வந்தாள். அங்கிருந்து வந்த மீனாட்சி,
"ஏன்டா அவள கூட்டிட்டு வந்த? அவளே டையர்டா இருக்காள். அவள ரூம்லயே விட வேண்டியது தானே?"
"இல்லம்மா, அவள் எப்பவும் இப்படி எல்லாம் இருக்க மாட்டாள். ஜாலியா இருப்பாள். ரூம்குள்ள இருந்தா ஃபோர் அடிக்கும் அவளுக்கு. டீவி பார்க்கலாம்னு தான் கூட்டிட்டு வந்தேன்"
"சரி, நான் டீ கொண்டு வந்துடறேன்"
"அம்மா, அத்தை எங்க காணோம்? எப்பவும் டீவி பார்த்துட்டு தான இருப்பாங்க?"
"அது என்னமோ தெரியலடா? உங்க அத்தை டூர் போயிட்டு வந்ததுல இருந்து, வீட்டு வேலை எல்லாம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. என்னாலயே நம்ப முடியல"
"உண்மையாவாம்மா சொல்றீங்க?!!!"
"ஆமாம்டா"
"அப்படி என்னம்மா வேலை செய்றாங்க?"
"அதுவா...... வீட்டை கூட்டி சுத்தம் பண்ணிட்டு இருக்காள். அவள் ரூம்ல இருந்து சுத்தம் பண்ணிட்டு வரேன்னு சொன்னாள்"
"அதானே பார்த்தேன்? அத்தை அவங்க ரூம்ப மட்டும்தான் சுத்தம் பண்ணுவாங்க"
"அப்படி எல்லாம் இல்லடா, வீடு ஃபுல்லா சுத்தம் பண்ணுவாள். நீ கம்முனு இரு"
என சொல்லிவிட்டு மீனாட்சி கிச்சனுக்குள் சென்று டீ கொண்டுவந்து அவர்களுக்கு கொடுத்தாள்.
இங்கு அருளின் வீட்டில், அருளும் மலரை போலவே இதையே யோசித்து கொண்டிருந்தான். கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்த ரவி,
"அண்ணே, இன்னைக்கு எங்கயாவது வேலை தேடுனியா? ஏதாவது வேலை கிடைச்சுசா? அப்புறம் அண்ணே, இந்த வாரத்துல இருந்து நம்ம கம்பெனி ஸ்டார்ட் பண்ற வேலை எல்லாம் ஆரம்பிச்சிடலாம். அப்போ தான் அண்ணே சீக்கிரம் முடிக்க முடியும். நீ ஏன் யார்கிட்டயோ வேலை பார்க்கணும்? கம்பெனி வேலை சீக்கிரமா முடிஞ்சிட்டா......இங்கயே நம்ம எல்லாருக்கும் வேலை கொடுக்கலாம்ல?"
என அவன் மட்டும் பேசிக் கொண்டிருக்க, அருள் அமைதியாகவே இருந்தான்.
(அவள் என் கைய புடிச்சிட்டு இருக்கும்போது நான் ஏன் அவள் கைய தட்டி விடல? அவளை விட்டு விலகி நிற்கல? நான் ஏன் அவள் கண்களையே பார்த்துட்டு இருந்தேன்? அவளோட கண்கள்ல இருந்த அந்த தவிப்பு....... அவள்கிட்ட நான் என்னமோ சொல்ல போன......என்னன்னு கூட எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா என்னமோ ஒன்னு இருக்குன்னு மட்டும் புரியுது. இது என்ன மாதிரியான உணர்வுன்னு புரியல. இது ஏன் இப்படி எல்லாம் நடக்குது? இவ்வளவு நாளா மலர்கிட்ட ஜாலியா பேசிட்டு இருந்தேன். இன்னைக்கு ஏன் எதுவும் பேசாம அமைதியா வந்துட்டேன்? என்ன ஆச்சு எனக்கு? அவள் கண்களை நான் ஏன் அப்படி பார்த்துட்டு இருந்தேன்? ஐயோ!!! நான் ஏன் இப்படி பண்ணன்னு எனக்கு தெரியலயே? நாளைக்கு அவள எப்படி நான் மீட் பண்றது?)
என அவனுக்குள்ளே அவன் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த ரவி அவன் தோளில் கை வைத்து அவனை தட்டினான்.
"என்ன ஆச்சு உனக்கு? பகல்லயே கனவு கண்டுட்டு இருக்கியா அண்ணே? என்ன கம்பெனி ஆரம்பிச்சு, முதலாளியாகப்போற கனவா?"
எனக் கேட்க,
"என்னடா கேட்ட?"
"சுத்தம், போ அண்ணே இவ்வளவு நேரம் சொன்ன எதுவுமே உன் காதுல விழுகலயா? திரும்ப எத்தனை தடவை சொல்றது?"
என அவன் கோபித்துக் கொண்டு உள்ளே சென்றான்.
"ஐயோ!!!! தேவையில்லாத இவள நினைச்சுட்டு, இப்போ ரவி கோவிச்சிக்கிட்டானே?"
என பின்னாடியே அருள் சென்று அவனை சமாதானப்படுத்தினான்.
"சாரிடா ரவி, அது வந்து....... இன்னைக்கு ரெண்டு, மூணு வேலைக்கு போய் ட்ரை பண்ணேன். பட் எதுவும் கிடைக்கல. நாளைக்கு கண்டிப்பா கிடைச்சிரும்டா. இன்னும் ரெண்டு, மூணு இடத்துல பார்த்து வச்சிருக்கேன். இதான கேட்டுட்டு இருந்த?"
"அது மட்டும் தான் கேட்டுட்டு இருந்தனா?"
"வேற என்ன?"
"கம்பெனி வேலையெல்லாம் இந்த வாரத்துல இருந்தே ஸ்டார்ட் பண்ணிடலாம்னு சொன்னேன்"
"சரிடா, இந்த வாரத்துல இருந்தே ஸ்டார்ட் பண்ணிடலாம்"
"சரி....... அப்படி என்ன யோசிச்சிட்டு இருந்த?"
"அது வந்துடா....... இன்னைக்கும் வேலை கிடைக்கல. நாளைக்காவது வேலை கிடைக்குமான்னு தெரியல? அப்பா, அம்மாவை நினைச்சு தான்டா........"
"உண்மையாவா அண்ணே?"
"ஆமாம்டா, வேற என்ன?"
"இல்லயே, நீ சொல்ற எதுவும் நம்பற மாதிரி இல்ல. அது மட்டும் இல்ல, இன்னைக்கு நீ ரொம்ப வினோதமா நடந்துக்கற"
"அப்படி எல்லாம் எதுவும் இல்லடா ரவி, சரி எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு. நான் கிளம்புறேன்"
என சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து கிளம்பினான்.
"என்ன....... அண்ணே இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்குதே? எப்பவுமே என்கிட்ட பேசும், எனக்கு ஏதாவது அட்வைஸ் பண்ணும். ஆனா இன்னைக்கு நான் பேசறது கூட கண்டுக்கல. நான் கேட்ட எதுக்குமே பதில் சொல்லல. சரியா பேச கூட இல்ல. ஏதோ என்கிட்ட இருந்த தப்பிச்சு போற மாதிரி போகுது. என்ன ஆச்சுன்னு தெரியலயே?"
இங்கு மலர்விழியின் வீட்டில், மதன் சொன்னவாறு சாவித்திரி அவளுடைய ரூம்பை மட்டும் சுத்தம் செய்துவிட்டு வெளியில் வந்து உட்கார்ந்தாள்.
"என்ன அத்தை அதுக்குள்ள வேலையெல்லாம் முடிச்சிட்டீங்களா?"
"ஆமாம் மதன், இதுக்கே என்னால முடியல. எவ்ளோ வேலை தெரியுமா?"
"அது உங்க ரூம் தான?"
"ஆமாம்....இருந்தாலும், நான் வேலையே செஞ்சது இல்ல. என்னால எப்படி இவ்வளவு வேலை செய்ய முடியும்?"
"என்ன அத்தை வேலை செஞ்சீங்க? அங்கங்க இருந்த பொருளை எடுத்து அந்தந்த இடத்தில வச்சிருப்பீங்க. அப்புறம் கூட்டிவிட்டு சுத்தம் பண்ணிருப்பீங்க. இது ஒரு வேலையா?"
"என்னடா இப்படி சொல்ற? எவ்ளோ வேலை செஞ்சிருக்கேன் தெரியுமா? இங்க பாரு, எப்படி வேர்த்து கொட்டுது"
"ஆமா அத்தை, இது வேணா அதிசயமா இருக்குன்னு சொல்லலாம்!!!!"
"என்னடா சொல்ற?"
"ஆமா அத்தை, நான் உங்களுக்கு வேர்வை வந்து பார்த்ததே இல்ல"
"ஆமாம் மதன், எனக்கும் வேர்வை சிந்தி பழக்கம் இல்ல"
என சொல்லிக் கொண்டிருக்க, மலர்விழி
"அத்தை அவன் உங்களை கிண்டல் பண்றான். இவ்ளோ நாளா நீங்க வேலை செய்யாம சும்மா இருந்தீங்கன்னு சொல்றான்"
"என்னடா மதன் அப்படியா சொன்ன? உனக்கு ரொம்ப கொழுப்பு தான்"
"ஐயோ மலர்!!!! எதுக்கு அத்தை கிட்ட சொன்ன? இப்ப பாரு திட்டுறாங்க"
"விடு அண்ணே, நம்ம அத்தை தானே?"
என சொல்லி இருவரும் சிரித்து கொண்டிருந்தார்கள். மீனாட்சி வந்தவுடன், மீனாட்சியிடம் மதன்,
"அம்மா, நான் சொன்னேன்ல? அத்தை அவங்க ரூம் மட்டும் தான் சுத்தம் பண்ணுவாங்கன்னு, பார்த்தீங்களா?"
என சொல்ல,
"நான் என்ன அண்ணி பண்ணட்டும்? நான் இப்பதான் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கிறேன். என்னால எப்படி எல்லா வேலையும் செய்ய முடியும்? சொல்லுங்க"
"பரவால்ல விடு சாவித்திரி, இது ஒன்னும் தப்பு இல்ல. நீ வேலை செய்யறியே அதுவே போதும்"
"என்ன அண்ணி நீங்களும் மதன் மாதிரி கிண்டல் பண்றீங்களா?"
"அப்படி எல்லாம் எதுவும் இல்ல சாவித்திரி, நீ வேலை செய்யறது எனக்கு சந்தோஷம்னு தான் சொல்ல வந்தேன்"
"அப்புறம் அண்ணி, அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் எதுவும் செய்யலைன்னு சொல்லி என்னையவே செய்ய சொல்லிடமாட்டீங்கல்ல?"
"அதெல்லாம் சொல்ல மாட்டேன் சாவித்திரி, நீ தான் இன்னைக்கு எவ்ளோ வேலை செஞ்சிருக்கல்ல? உனக்காக புடிச்ச மசால் போண்டா செஞ்சு கொண்டு வந்திருக்கேன். அப்புறம் உனக்கு புடிச்ச சீரியல் கூட போட்டுருக்காங்க"
"அம்மா அதை ஏன் ஞாபகப்படுத்தினீங்க?" (மதன்)
"டேய் உனக்கு இன்டர்வியூ இருக்குன்னு சொன்னல்ல? நீ போய் இன்டர்வியூக்கு படி, போ. அப்புறம் மலர், உனக்கு டயர்டா இருக்கும். நீ போய் ரெஸ்ட் எடு"
தொடரும்.........
படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.

Author: Anu1997
Article Title: எபிசோட் 10
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.