உன்னில் என்னை மீட்டபாயாக! 1

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
67
அத்தியாயம் – 1

மிக பெரிய பேலஸ் அது. அர்த்த ராத்திரியில் அடைமழை வெளுத்து வாங்க மின்னல் வெளிச்சம் சாளரத்தை கிழித்தும் அசராமல் வெறித்து பார்த்தவனின் கண்கள் ரத்தமாய் சிவந்து இருந்தது. முகத்தில் எதையோ இழந்த சோகம் இழையோட கையில் இருக்கும் மதுவை நெட்டினான் அவன்.

சடாரென கதவை திறந்து உள்ளே வந்த உருவம் ராவண அஜெயன் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி சுவரில் எறிய கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறியது.

“ மிதுன் நீ இங்க என்ன பன்ற வீட்டுக்கு போ “ என்று முகம் பார்க்காமல் கூறியவனை தீயாய் முறைத்தவன் “ உனக்கென்ன பைத்தியமா..... எதுக்கு இப்டி குடிச்சிட்டு இருக்க “ என்ற மிதுனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை ராவணன்.

“ அதுலாம் ஒன்னும் இல்ல..... நீ வீட்டுக்கு கிளம்பு..... அன் டைம் “ என்று தரையை பார்த்து பேசிய ராவணனை நக்கலாக பார்த்த மிதுன்

“ அத என் மூஞ்ச பார்த்து சொல்லு நா இப்போவே போறேன் “ என்றதில் விழி உருட்டிய ராவணன் மிதுனை மட்டும் பார்க்கவில்லை.

“ நீ இவ்ளோ நேரம் ஆகியும் சாப்பிட வரலன்னு செஃப் கேசவ் எனக்கு கால் பண்ணி சொன்னதால என்னாச்சோன்னு பதறி வந்தா நீ இப்டி குடிச்சிட்டு இருக்க..... இத்தனையும் ஒரே நேரத்துல குடிச்சா போய் மேல சேர வேண்டியது தான்...... அப்டி உனக்கு என்ன பிரச்சனை.... மனசு விட்டு சொல்லேன் “ என்றவன் ராவணனின் அருகில் அமர அவனின் கண்ணில் இருந்து சொட்டிய கண்ணீர் துளி மிதுனின் கையில் பட்டது.

அதிர்ந்து போனவன் விடாப்பிடியாக ராவணனின் முகத்தை பார்க்க அவனின் கலங்கி கண்கள் மிதுனை கலங்க செய்தது.

மிதுனுக்கு ராவணன் உறவுக்காரனோ உயிர் தோழனோ இல்லை. ராவணனின் உதவியாளன். மிதுனும் ராவணன் போல் ஆதரவற்றவன் தான் இருவர் நிலையும் ஒன்று தான். வேலையில் சரியாக இருப்பவன் ராவணனின் அக்கறையிலும் கவனமாக இருப்பான் மிதுன். ராவணன் மிதுனிடம் கோவமோ இல்லை மறுத்து பேசுவது போன்ற எதையும் செய்ய மாட்டான்.

ராவணனுக்கும் மிதுனை பிடிக்கும். ஆனால் முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் மிதுனுக்கு தேவையானதை அவன் சொல்லாமலே செய்து விடுவான் இந்த ராவணன். எல்லாம் செய்து எதுவும் செய்யாது போல் இருக்கும் ராவணன் மிதுனின் உயிர் என்று கூட சொல்லலாம்.

அப்டி இருக்கையில் இன்று ராவணனின் கலங்கிய முகம் மிதுனை பதற வைத்தது. அவனின் இத்தனை வருடங்களில் ராவணன் சிரித்தோ அழுதோ மிதுன் பார்த்ததில்லை.

ஆனால் இன்று ராவணன் கண்ணீர் விடவும் “ என்னாச்சி அஜெய்”.... இப்டி தான் தனியாக இருக்கும் பொழுது ராவணனின் கட்டளையில் மிதுன் அழைக்க ஆரம்பித்தான்.... என்னதான் முதலாளியை இப்டி மரியாதை இல்லாமல் அழைப்பது முதலில் வருத்தம் தந்தாலும் ராவணனின் மனம் அறிந்து அவ்வாறு அழைக்க பழகி கொண்டான் மிதுன் ....

“ஏன் அழற..... என்னாச்சுன்னு மனச திறந்து சொல்லு அஜெய் “..... என்றவனின் முகம் பார்க்க இம்முறையும் மிதுனால் ராவணனின் முகத்தில் எதையும் கண்டறிய முடியவில்லை.

“ இப்போ நீ சொல்லுறியா இல்லையா..... இப்போ நீ எதையும் சொல்லுல.... நா இனி உன் முன்னால வரவே மாட்டேன் “ என்றவனின் கன்னத்தில் பளாரென ஒரு அறை. ராவணன் தான் விட்டான். அவனுக்கு இப்டி பேசினால் கோவம் வரும்.. தெரிந்தே தான் மிதுனும் சொன்னான்.

அடிவாங்கியவனுக்கு வலித்ததோ அடி குடுத்தவனுக்கு வலிக்க செய்தது மனம். மிதுன் கன்னத்தை வருடியவன் “ சாரி மிதுன்.... நீ என்ன பார்க்க வர மாட்டேன்னு சொன்னதால கோவத்துல அடிச்சிட்டேன்..... சாரி .... என்ன விட்டு போகாத.... இனி இப்டி பண்ண மாட்டேன் “ என்றவனை பார்க்கவே பாவமாக இருந்தது மிதுனுக்கு.

வலியை மறைத்து “ அதுலாம் ஒன்னும் வலிக்கில..... காது மட்டும் லைட்டா கேக்குல..... அதுக்கு மெஷின் போட்டுக்குலாம்.... நீ என்ன பிரச்சனைனு சொல்லு “ என மீண்டும் மிதுன் கேட்க சொல்ல தொடங்கினான் தன்னை பற்றி.

“ இவ்ளோ பணம் பங்களா பிசினெஸ் கார்னு எல்லாம் இருந்தும் சந்தோசம் மட்டும் இல்ல மிதுன். என் அப்பா அம்மா எப்டி செத்தாங்கனு தெரியாது. அனாதை ஆசிரமத்துல இருந்த என்ன ஒரு வெளிநாட்ல வாழுற தம்பதி தத்தெடுத்துகிட்டாங்க...... ஒரு அஞ்சு வருஷம் அம்மானா என்ன அவங்க பாசம் எப்டி இருக்கும்.... அப்பா பாசம் எப்டி இருக்கும்னு எல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன்..... ஆனா அதுவும் நிரந்தரமா கெடைக்குல மிதுன்.... அவங்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததும் என்ன தூக்கி போட்டுட்டாங்க..... அவங்க சொல்ற வேலையை செய்ற அடிமை மாதிரி என்ன நடத்த ஆரம்பிச்சாங்க..... அதுலயும் நா அப்பான்னு நெனச்சவன் ஒரு சைக்கோ...... அவனுக்கு எதாவது கோவம்னா என்ன அடிப்பான்.... என் உடம்புல அவனால பல காயங்கள் ஏற்பட்டிருக்கு...... ஒரு வாய் சாப்பாட்டுக்கு ஏங்கி தவிச்சிருக்க மிதுன்..... அவங்க என்ன தத்தெடுத்த கடமைக்காக கூட வச்சிருந்தாங்க..... என்ன அம்மானு சொல்லுன்னு ஆசையா கேட்டவங்க நா அம்மானு சொன்ன என்ன அடிக்க ஆரம்பிச்சாங்க..... என்னால அதுக்கும் மேல அவங்க கிட்ட இருக்க முடியாம அந்த நாட்டு போலீஸ்கிட்ட போய் நடந்தது எல்லாம் சொன்னேன். அவங்களும் என் உடம்புல இருக்குற காயத்தை பார்த்து என்ன அவங்க கிட்ட விடாம ஒரு கேர் டேக்ஹோம்ல விட்டாங்க...... என் வாழ்க்கை எங்க ஆரம்பிச்சதோ திரும்ப அங்கையே முடிஞ்சிது...... அங்கையே இருந்து வேலைக்கு போய் படிப்ப முடிச்சேன்....என்ன தத்தெடுத்தவங்க என் பேர்ல கொஞ்சம் சொத்து குடுத்தாங்க ....... அது எனக்கு வாங்க துளியும் விருப்பம் இல்ல..... அதையும் என்ன பாத்துகிட்ட ஹோம்க்கு குடுத்தேன்.....

அஞ்சு வருஷம் முழுசா வேலையை மட்டுமே நெனச்சி வாழ்ந்தேன்..... நல்ல வெற்றி அதுக்கும் மேல எனக்கு அங்க இருக்க விருப்பம் இல்லாமல் இந்தியா வந்தேன். இங்கயும் என் தொழிலை ஸ்டார்ட் பண்ணேன். எதுவும் மாறாமல் இருந்த என் வாழ்க்கையில அவ வந்தா.

மைதிலி தாரிகா “ என்று அந்த பெயரை சொல்லும் போதே ராவணனின் இதழில் சிறு புன்னகை.

மிதுன் வியந்து போய் பார்த்தான் ராவணனின் சிரிப்பை. உண்மையில் மொத்த உலகத்தை வித்து குடுத்தாலும் ராவணனின் இந்த சிரிப்பு கிடைத்திருக்காது. அப்பேர்ப்பட்டவனை சிரிக்க வைத்த அந்த தெய்வத்தை காண வேண்டும் என மிதுனின் மனம் துடித்தது.

இருந்தும் ராவணன் முழுவதும் கூறுவதை கேட்க காத்திருந்தான். ராவணன் மீண்டும் பேச தொடங்கினான். “நான் வளர்ந்த என்னோட ஆசிரமத்தை பார்த்து அவங்களுக்கு தேவையான உதவிகளை இனி நானே செய்து தருகிறேன்னு சொல்வதற்காக போனேன்...... என்ன தான் இருந்தாலும் என்ன தூக்கி வளர்த்த இடம்ல அப்டியே அந்த ஆசிரமம் சுத்தி வரும் போது தான் கேட்டேன் அவளோட சிரிப்ப.

அந்த சிரிப்பு அந்த சிரிப்பு அது கேட்கும் போது எனக்குள்ள அப்டி ஒரு உணர்வு. அந்த சிரிப்பு சத்தம் கேட்ட திசைக்கு போனேன். மஞ்சள் வர்ண சுடியில அங்க இருக்குற குழந்தைகளோட குழந்தைகளா விளையாடிட்டு இருந்தா. அவளை பாக்குற வரைக்கும் நா நம்புல மிதுன் இப்டி ஒருத்தி என் மனசுல இடம்பிடிப்பானு. அவள விட்டு விலக என் மனசு கொஞ்சமும் விரும்பல. பார்த்துட்டே இருந்தேன்..... இல்ல ரசிச்சிட்டு இருந்தேன்..... அவளோட ஒவ்வொரு அசைவுகளையும் என் மனசுல ஆழமா பதிச்சிகிட்டேன்.

அவ குழந்தைங்க கிட்ட காட்டுற அன்பு பெரியவங்க கிட்ட காட்டுற அக்கறை. இதையும் தாண்டி அவ கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு மிதுன். அவளை பத்தி தெரிஞ்சிக்க ஆசை பட்டேன்..... உனக்கே தெரியாம விசாரிக்க சொன்னேன்.

அம்மா இல்ல அவளுக்கு. அப்பா தான். ரெண்டு பொண்ணுங்க. வேலைக்கு போயிட்டே ஆசிரமத்துல இருக்குற குழந்தைகளுக்கு பாடமும் சொல்லித்தரா.

அவங்க அப்பா நம்ப கம்பெனில தான் வேலை செய்றாரு “ என்று ராவணன் சொல்ல ஆனந்தமான மிதுன்

“ அப்றம் என்ன அவர் கிட்ட போய் பொண்ண கேட்டு கல்யாணம் பண்ணிக்கோ...... உனக்கு குடுக்க மாட்டேன்னு அவர் சொல்லவும் மாட்டாரு “ என பேசி கொண்டே போனவன் ராவணனின் வாடிய முகத்தை கண்டு குழம்பி போனான்.

“ என்னாச்சு அஜெய்” என்று மிதுன் கேட்க ராவணன் கூறியதில் அதிர்ந்து போனான். “ என்ன சொல்ற “ என்று அதிர்ச்சி குறையாமல் மிதுன் கேட்க

“ ஆமா மிதுன். விடிஞ்சா அவளுக்கு கல்யாணம்...... என்னால இத ஏத்துக்க முடியல . வலிக்குது ரொம்ப கஷ்டமா இருக்குடா..... ஒவ்வொருமுறையும் பார்க்கும் போது அவ கிட்ட பேசணும்னு ரொம்ப துடிச்சிருக்கேன் “ என்ற ராவணன் மிதுனுக்கு அதிர்ச்சியை தந்தது.

எத்தனை தொழிலதிபர்கள் இவனை காண முடியாதா என ஏங்கி இருக்கார்கள். எத்தனை பேர் இவனிடம் பேச முடியுமா என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதுக்கு எல்லாம் சொந்தமான இந்த ராவணன் ஒரு பெண்ணிடம் பேச தவித்துள்ளான்.

“ எங்க அவளுக்கு என்ன பிடிக்காமல் போகிடுமோ.....என்மேல கோவ படுவாளோனு பயம்...... அதனாலேயே அவளை தூரமா நின்று பார்ப்பேன்...... ஆனா நானே எதிர்பார்க்கல அவளுக்கு கல்யாணம்னு...... என்னால இத ஏத்துக்க முடியல மிதுன்...... அவளை பார்த்து மட்டுமே சந்தோச பட்ட எனக்கு.... அதுவும் இல்லாம போகிருச்சி..... நாளைக்கு அவ “ என்று சொல்லும் போதே தொண்டை வலித்தது ராவணனுக்கு.....தழுதழுத்த குரலில் பேசியவனை அனைத்து கொண்ட மிதுன்

“ நா இருக்குற வரைக்கும் உனக்கு எந்த கஷ்டமும் வர விட மாட்டேன்.... அஜெய்...... முதல்ல தூங்கு..... எல்லாம் சரி ஆகும் “ என்ற மிதுன் போதையில் இருந்தவனை மெத்தையில் படுக்க வைக்க ராவணனின் இதழ் அவனின் மனம் கவர்ந்தவளின் நாமத்தை உச்சரித்து.
 
New member
Joined
Apr 18, 2024
Messages
1

Super new story ah
 
Member
Joined
Aug 7, 2024
Messages
11
"!!!!!!!!!!!ஆரம்பமே அமர்க்களமா இருக்கே!!!!!!!!!!!!!!" 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕
 
Member
Joined
Nov 26, 2023
Messages
23
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top