- Joined
- Nov 10, 2023
- Messages
- 67
- Thread Author
- #1
அத்தியாயம் 8
" என்ன ட்ராமா இங்க நீ ஆரம்பிச்சிருக்க அமுதன்? அந்த குப்பைக் கூட சிரிச்சி பேசிட்டு இருக்க. ச்சை பார்க்கவே அருவருப்பா இருக்கு " வந்ததும் வராததுமாய் தன் மனைவிப் பற்றியே அசிங்கமாய் பேசும் மௌனியின் கழுத்தை நொடிப் பொழுதில் பற்றி காரில் தள்ளிருந்தான் வேந்தன்.
கழுத்து நரம்புகளும் புடைத்து நிற்க, பல்லைக் கடித்தவன் " இன்னும் ஒரு வார்த்தை. இன்னும் ஒரு வார்த்தை என் பொண்டாட்டி பத்தி நீ பேசுனாலும் வெட்டி புதைச்சிருவேன். ஜாக்கிரதை " சீற்றமடக்கி துப்பியவன் பிடியை இருக்க முகம் சுருக்கினாள் மௌனி.
" அமுதன். என்ன பண்ணுற? எனக்கு வலிக்குது விடு... விடு அமுதன் " விடாது கெஞ்சியவளை அற்பமாய் பார்த்து விலகியவன்
" கல்யாணம் ஆகிடுச்சுனு தெரிஞ்சும் விடாம வர உன்னை பார்க்க உனக்கே அசிங்கமா இல்லை. அதான் நான் தெளிவா சொல்லிட்டேன்ல. அப்றம் எதுக்கு இங்க வந்த? "
" அசிங்கமா?!! என் காதல் உனக்கு அசிங்கமா தெரியுதா அமுதா " பாவமாய் கேட்க வேந்தன் முகத்தில் துளி இரக்கம் எட்டி பார்க்கவில்லை.
" டோன்ட் வேஸ்ட் மை டைம். முதல்ல இங்கிருந்து கிளம்பு. இனி இந்த மாதிரி வர்ற வேலை வச்சிக்காத " வெறுப்பாய் சொல்லிவிட்டு திரும்பியவன் முதுகை ஓடிப்போய் கட்டிக் கொண்டாள் மௌனி.
" இப்படிலாம் பண்ணாத அமுதன். ஐம் இன் லவ் வித் யூ அமுதன். எல்லாம் ட்ராமா தான்னு சொல்லிரு ப்ளீஸ் " அவள்பாட்டிற்கு கெஞ்ச பலம் கொண்டு அவளை விலக்கியவன் விட்டான் கன்னத்தில் பளீரேன.
" திஸ் இஸ் தே லாஸ்ட் வார்னிங். இனி என் கண் முன்னால கூட வந்துராத. இடியட் " அடிமட்ட வெறுப்பைக் கொட்டிவிட்டு அவன் மறைந்து விட வழியும் கண்ணீரைத் துடைத்தவள் தீர்க்கமான முடிவோடு அங்கிருந்து சென்று விட்டாள்.
மௌனி வந்து போன கடுப்பில் வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் கண்ணை மூடியவனின் மனக்கண்ணில் வந்து போனாள் கீதாஞ்சலி. ' முதல்ல வீட்டுக்கு வாங்க. அப்புறம் பேசிக்குலாம் ' என அவள் சொல்லிய வார்த்தையும் தேவாமிர்தமாய் இனிக்க ஜார்ஜ் ஏறியவன் போல் புத்துணர்ச்சியாய் தயாராகினான் கிளம்பிட.
கோட்டையும், போனையும் எடுத்துக் கொண்டு வெளியேறும் நேரம் " வேந்தன். இன்னைக்கு ஒரு UK கிளைன்ட் மீட்டிங். டீடெயில்ஸ் உனக்கு மெயில் பண்ணிருக்கேன் "
" சாரி தாத்தா. நீங்க அதை பார்த்துக்கோங்க. நான் கிளம்புறேன் "
" டேய் முக்கியமான மீட்டிங்டா "
" எனக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கு தாத்தா. உனக்கு வயசாகிருச்சு. நீங்களே பாருங்க. பாய் " டாட்டா காட்டி சிட்டாய் பறந்து விட இமைக்காது பார்த்தவர் அர்த்தமாய் சிரித்தார் பேரன் செய்கையை நினைத்து.
வயசானவர் தான். ஆனால் அனுபவசாளி ஆச்சே. அதான் பேரனின் துள்ளலை புரிந்தவரும் அவனுக்கும் சேர்த்து வேலையை பார்த்தார் பாவம்.
அந்திசாயும் பொழுது நெருப்பை பூசியது போல் வானம் சிவந்து காட்சியளிக்க, இரவு உணவையும் செய்யலாம் என்ற ஆசையில் கீழே இறங்கியவளை ஹேமாவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.
அதுவரை பொறுமையாக இருந்தவர் கீதா கிட்சனுள் நுழைய பார்க்க, பதறியவராய் அவளை தொடர்ந்து நுழைந்தவர் சுற்றி வேலையாட்கள் இருப்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் கத்த ஆரம்பித்து விட்டார்.
" உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா? இப்போ தான் இந்த இடத்தை கம்ப்ளீட்டா கிளீன் பண்ண சொல்லிருந்தேன். அதுக்குள்ளே திரும்ப வந்து அசிங்கப்படுத்துற? "
" இல்ல அத்த. அவங்களுக்கு சமைக்கலாம்னு " உடல் நடுங்க சொல்லியவளை எரிக்கும் பார்வை பார்த்தவர்
" ச்சீ வாயை மூடு. யாருக்கு யாரு அத்தை. இன்னொரு முறை என்னை அத்தைனு சொன்ன அவ்ளோ தான். அதான் சமைச்சி முடிச்சிட்டல்ல. அப்றம் எதுக்கு திரும்ப வர. பே. உன் ரூமோட இருந்துக்கோ " உச்சக்கட்ட வெறுப்பில் உமிழ, அழதுடிக்கும் உதட்டைக் கடித்து தலைக் குனிந்தவள் காதில் கேட்ட குரலிலே விழி அகல நிமிர்ந்தாள்.
" இல்லைனா என்ன பண்ணுவீங்க ம்மா " என்றது சாட்சாத் வேந்தனே. பேச்சுக் குரலில் மற்றவர்களும் ஹாலிர்க்கு வந்து விட யாரையும் கண்டு கொள்ளாதவன் பார்வை என்னவோ தாயை தான் எரித்தது.
" சொல்லுங்க. அவ இங்க வந்தா என்ன பண்ணுவீங்க? " மிரட்டலாய் அவன் குரல் எழ
" உனக்கு மண்டை அடிப்பட்டதுல எல்லாம் மறந்து பேசுற அமுதா. எங்களுக்கு அப்படி இல்லையே. இவளெல்லாம் நம்ப வீட்டுல இருக்கிறதே அசிங்கம் " கோவத்தில் ஹேமா வார்த்தை விட
" அம்மாஆஆஆஆஆஆ " வேந்தன் கர்ஜனையில் விக்கித்து போனார் ஹேமலதா.
இதுதான் முதல் முறை மகன் இந்தளவிற்கு கோவத்தை காட்டுவது. அதும் தாயிடம்.
" அமுதா " ஆசையாய் அருகில் நெருங்க விலகி நடந்த வேந்தன் கலங்கி நிற்கும் கீதாவை தோளோடு பற்றி நின்றான் கண்ணில் உறுதியோடு.
மகன் தீண்டக் கூடாததை தீண்டியது போல் முகம் சுளித்தார் ஹேமா. " அவ என்ன ஜா*? எங்கிருந்தவ? எப்படி வளர்ந்தவ? அவள்லாம் உன் பக்கம் நிற்க கூட தகுதி இல்லாதவ அமுதா. அம்மா உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுக்குறேன். புத்தி இல்லாம அவ பக்கத்துல நிற்கிறத நி " கோவமாய் கத்த சட்ட செய்யாமல் நின்ற வேந்தன் தன் பிடியில் இருந்து நழுவ பார்ப்பவளை தான் இறுக்கி பிடித்திருந்தான் உடும்பு பிடியாக.
அவள் அங்கு நிற்க நிற்க ஏச்சு பேச்சுகள் வந்துக் கொண்டே இருக்கும் என அறிந்தவள் நிமிர்ந்து கணவனை பார்த்திட உடைந்து போனான் வேந்தன். சிவந்து கலங்கிய அந்த விழிகளில் தெரியும் ரணத்தை உணர்ந்தவன்
" இப்போ உன்னை விட்டுட்டா புருஷனா நான் இருக்க தகுதியே இல்லாதவன் அஞ்சலி. இங்க யாருக்கு நீ எப்படியோ. ஆனா எனக்கு நீ தான்டி எல்லாமே " கன்னம் தாங்கி சொல்லியதை அவளும் நம்பித்தான் விழைந்தாள்.
துடிக்கும் உதட்டை இறுக்கி கெஞ்சுதலாய் பார்த்தவள் " நான் போகனும் விடுங்க. ப்ளீஸ் " அசிங்கத்தில் உடல் கூசி நிற்க
" என்ன பண்ணிட்டு இருக்க அமுதா? அவளை " விட்டு விலகு என கத்த வந்த வாய் அப்படியே உறைந்து போனது கண்ட காட்சியில்.
தொட்டால் அசிங்கம், பக்கத்தில் நின்றால் அசிங்கம் என்று சொல்லிய வாயை தன் செயலிலே மூட வைத்து விட்டான் வேந்தன்.
" டேய்ய்ய்ய் " என அதிர்ந்து கத்திய ஹேமாவை கருத்திலே கொள்ளாதவன் ருசித்த பெண்ணின் இதழை விடுவித்து மோவைப் பற்றி தன்னை பார்க்க செய்தான்.
" என் கூட வரியா? " கை நீட்டிட அவன் கண்களையே பார்த்தவள் சுற்றி இருப்பவர்களை மறந்தே போனாள் கீதாஞ்சலி.
தேங்கிய கண்ணீர் பனி நீர் போல் மின்னிட தலையை ஆட்டியவளின் கையை பற்றி அம்மாவை தாண்டி சென்றவன் ஹேமா அழைக்க அழைக்க காதில் வாங்கவில்லை.
" அமுதா நில்லு " என பின்னால் போக பார்த்தவரை இழுத்து நிறுத்தினார் தேவராயன்.
" என்ன பண்ணுற ஹேமா? எதுக்கு அவளோட இப்படி சண்டை போட்டுட்டு இருக்க? அதான் அவனுக்கு எதுவும் நியாபகம் இல்லாம ஆடிட்டு இருக்கான்னு தெரியுதுல. கொஞ்சம் பொறுமையா தான் இரேன். எல்லாம் நினைவு வந்ததும் அவனே அவன் வாழ்க்கையை பார்த்துப்பான் "
" அதுக்காக அவனை இப்படியா விட முடியும்!! எனக்கு நம்ப பையன் அவளோட ஒட்டி உரசுர எதுவுமே பிடிக்கல " வீட்டின் ராஜாவாய் வளம் வர வேண்டிய மகன் இப்படி போகிறானே என பெத்தவள் புலம்பிட நடக்கும் அனைத்தையும் மேல் நின்று மௌனமாய் தான் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜகுமாரி.
மருமகளை கண்டித்து பேச அவருக்கும் எண்ணம் தான். ஆனால் இவ்ளோ நாள் மாறாத புத்தி தன்னால் மட்டும் மாறி விடுமா என்ற எண்ணமே அவரையும் அலட்சியமாய் அங்கிருந்து நகர வைத்தது.
" விடுங்க அக்கா. எல்லாம் நம்ப அமுதன் குணமாகுற வரைக்கும் தானே " கல்பனா அவள் பங்கிற்கு ஆறுதல் சொல்ல வர கோவமாய் அறைக்குள் அடைந்துக் கொண்டார் ஹேமா.
" என்ன அண்ணா அண்ணி இப்படி கோச்சிட்டு போறாங்க "
" அவ கடக்குறா சிவா. நீ அந்த பிஸ்னஸ் ஐடியா என்னாச்சு. இந்த முறை தெளிவா பிளான் பண்ணி அப்பாகிட்ட இன்வெஸ்ட்மென்ட் கேட்போம் "
" அய்யோ மறந்தே போய்ட்டேன். அதுபத்தி தான் உங்ககிட்ட பேச வந்தேன் " ஆண்கள் தொழிலை பற்றி பேச ஆரம்பிக்க, தீவிர யோசனையிலே வாசலையே வெறித்தாள் கல்பனா.
அஞ்சலி வீட்டில் இல்லாததை யாரும் பெரிதாய் கருத்தில் கொள்ளவில்லை மாணிக்கமே கேட்கும் வரையில். " உங்க கிட்ட தான் கேட்டேன். கீதா எங்க? " என்பவர் கேள்வியில் மருமகள்கள் இருவரும் முழிக்க
" அவ அமுதானோடு வெளிய போகிருக்காங்க " குமாரி பதிலில் அர்த்தம் பொதிந்த சிரிப்பில் அமைதியாகி போனார் பெரியவர்.
கடலை ஒட்டியது போல் பிரைவேட் பீச் ஹவுஸ். மின்சாரமே இல்லாமல் நிலவின் வெளிச்சத்தில் அவ்விடம் ஆக்கிரம்மித்திருக்க பால்கனியில் அமர்ந்து சலனமிற்று வெறிப்பவள் முன் உணவோடு வந்தான் வேந்தன்.
" எனக்கு பசிக்கல " அவனை பார்க்காமல் சொல்லிவிட்டு உடலை குறுக்கி கொண்டாள் கீதாஞ்சலி.
அவ்ளோ எளிதாய் விட்டுவிடுபவனா அவன். " வாய்ப்பு கிடைக்கும் போதே சாப்ட்டிரு அஞ்சலி. அப்றம் ரொம்ப பசி எடுக்கும் " மிரட்டலாய் சொல்பவனை கேள்வியாய் அவள் பார்க்க
" நான் இருக்குற கொலை பசிக்கு உன்ன சாப்பிட ஆரம்பிச்சா நேரம் காலம்லாம் கிடையாது " அசராது அவள் கண்களை பார்த்து சொல்ல உடல் சிலிர்த்து போனாள் பாவை.
" நீங்க என்ன சொன்னாலும் எனக்கு இப்போ... ம்ம்ம்.. ஹ்ம்ம்.. நான் " முழுதாய் சொல்ல விடாமல் சப்பாத்தியை அவள் வாயிக்குள் திணித்திருந்தான் வேந்தன். அவளுக்கு ஊட்டிய மிச்சம் விரலில் ஒட்டிருக்க ருசித்தவன் தனக்கும் ஒரு வாய் வைத்துக்கொள்ள சோர்ந்து போனாள் அவனிடம் போராட முடியாமல்.
வேந்தன் ஊட்டி விட்டதை துப்ப முடியாமல் மென்று உள்ளே தள்ளியவளுக்கு மீண்டும் திணித்தவன் " எனக்கு புரியுது அவங்க சொன்ன வார்த்தை எல்லாம் உன் மனசை எவ்ளோ கஷ்ட படுத்திருக்கும்னு. ஆனா எனக்கு ஒன்னு மட்டும் சொல்லு அஞ்சலி. நான் என்ன பண்ணா உன்னால இந்த வலியை எல்லாம் மறக்க முடியும். தெரியலடி. நான் என்ன பண்ணா உன்னை சந்தோஷமா வச்சுக்க முடியும்னு. என்கிட்டிருந்து நீ மட்டும் தள்ளி இல்ல உன் விருப்பு வெறுப்பு எல்லாமே ரொம்ப தூரமா தள்ளி இருக்கு அஞ்சலி. நீ ஆசைப்படுறத எல்லாம் செய்ய எனக்கும் ஆசை இருக்கு. என்கிட்ட உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. என்மேல கோவம் இருக்கா? திட்டனுமா? அடிக்கனுமா? என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. ஆனா இறுதியா நீ என்கிட்ட தான் வந்திரனும். எனக்கு வெறும் வார்த்தையால சொல்ல தெரியலடி உன்னை எவ்ளோ பிடிக்கும்னு. உன் மனசுலயும் சரி உன் நினைவுலயும் சரி நான் மட்டும் தான். புரிஞ்சிதா? அவங்க பேசுன எதை பற்றியும் யோசிக்காத அஞ்சலி. நீயா வீட்டுக்கு போலாம்னு சொல்லுற வரைக்கும் நீயும் நானும் இங்க தான் " வார்த்தையாலே அவளை வசியம் செய்து விட, இமைகள் படபடத்து தன்னிலை மீண்ட கீதா
" நான் தனியா இங்க கொஞ்ச நாளைக்கு " தயங்கி கேட்டு முடிக்கும் முன்னே
" னோ " அவசரமாய் வந்தது வேந்தன் பதில்.
" விருப்பம் இருக்கோ இல்லையோ. உன் வாழ்நாள் முழுக்க என்கூட தான். அதுல கருத்து இல்லை " முறைப்பாய் சொல்லியவன் தண்ணீரை அவளுக்கு புகட்டி விட்டு எழுந்து செல்ல தன்னை மறந்து சிரித்தாள் அவன் செய்கையில்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 8
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.