Member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 37
- Thread Author
- #1
அத்தியாயம் 7
எப்போது விக்ரம் தன் வாயால் அவளை தன் மனைவி என்று கூறினானோ.. அந்த கணமே, மனதில் இருந்த பாரமெல்லாம் குறைந்து போய்.. இலவம் பஞ்சாய் காற்றில் மிதக்கலானாள் தேவா....!!
என்னதான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டாலும் வேறு ஒருவர் அவளின் கையை பற்றியதற்கே இத்தனை கோபம் வருகிறதே அவனுக்கு என்று நினைத்து மனதிற்குள் பூரித்துப் போனாள்...!!
அவனை அடித்து எச்சரிக்கை செய்த பின்பு அவளின் கையைப் பற்றி இழுத்து கொண்டு விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அவன்...
" கார்ல ஏறு..", என்று கூறி, காரின் கதவை திறந்து விட்டு அவளை உள்ளே இழுத்து போட்டான்...
அந்த தடியன், இவளின் கையைப் பிடித்ததற்காகவா?? அல்லது தான் ஏன் இப்படி நடந்து கொண்டோம் என்பதை அறிய முடியாத கோபமா, வருத்தமா??.. என்று சரியாக புரியவில்லை அவனுக்கு....
இவளின் கையை எவனோ ஒருத்தன் பிடித்தால் தனக்கு ஏன் கோபம் வர வேண்டும்??.. எதற்காக அவனை போட்டு அந்த அடி அடிக்க வேண்டும்??.. என்று பலவாறு சிந்தித்து, தன்னைத்தானே நொந்து கொண்டான்...
அந்த தடியன் மீது வந்த வெறுப்போ அல்லது தன் மீதே வந்த வெறுப்போ இன்னதென்று அறிய முடியாமல்.. தன் கோபம் முழுவதையும் கார் ஸ்டியரிங்கில் வெளிப்படுத்தினான்...
முன்னே போய் கொண்டிருந்த வாகனங்களை முந்திக்கொண்டு கண்மூடித்தனமாக, வேகமாக காரை ஒட்டி சென்றான்.. விக்ரம் சக்கரவர்த்தி..!!
ஏதோ கொலம்பஸ் ரைடு போனது போலானது அவளுக்கு..!!
பயத்தில் சீட்டைப் இறுக பிடித்துக் கொண்டவள்.. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் தாங்க முடியாது என்று நினைத்தவளாய் சீட் பெல்ட்டை போட்டுக் கொண்டாள்...
கண்மூடி கண் திறப்பதற்குள்... ஊரின் ஒதுக்கு புறமாக இருந்த அந்த பண்ணை வீட்டிற்குள் கார் நுழைந்தது....!!
காரை விட்டு இறங்கிய விக்ரம் அவளை தரதரவென்று இழுத்து கொண்டு மேலே உள்ள அறையில் நுழைந்து அவளைக் கட்டிலின் மீது தள்ளி விட்டு கதவை அடைத்தான்....!!
எதற்காக இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது??.. இத்தனை நேரமாக ஒழுங்காக தானே இருந்தான்.. மறுபடியும் என்னாயிற்று இவனுக்கு?? என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் கண்ணில் பயத்தை தேக்கிக்கொண்டு அவனை மிரட்சியுடன் பார்த்தாள்....
"வி.... விக்... விக்ரம்.. என்னாச்சு உங்களுக்கு?? நல்லா தானே இருந்தீங்க??", என்று கேட்டாள் திக்கி திணறி கொண்டே...
" ஏன் இப்பவும் நான் நல்லாத்தான் இருக்கேன்.. அதில் உனக்கு என்ன சந்தேகம்??", என்று கத்தினான் ஒற்றைப் பருவத்தை உயர்த்தி..
"இல் .. இல்ல... இது.. கொஞ்ச நேரம்... முன்னாடி நல்லாத்தான் என்கிட்ட பேசிட்டு வந்தீங்க.. இப்போ மறுபடியும் கோபமா இருக்கீங்க.. அதான் கேட்டேன்.."
அடுத்த நொடி அவளின் கழுத்தை இறுக பிடித்து சுவரோடு சுவராக அவளை நிப்பாட்டி வைத்தான்...!!
"ஏய்... அப்போ இப்போ எல்லாம் இல்லை.. எப்பவுமே எனக்கு உன் மீது கோபமும் வெறுப்பும் இருந்துகிட்டே தான் இருக்கும்..", என்று கர்ஜித்தான் அவன்..
" விடுங்க விக்ரம் வலிக்குது.. எதுக்காக இப்ப மறுபடியும் காட்டுமிராண்டித்தனமா நடந்துக்கறீங்க ??.. நீங்களா தானே விருப்பப்பட்டு என்னை ஷாப்பிங் பண்ண கூட்டிட்டு போனீங்க.. இப்ப ஏன் நீங்க இந்த மாதிரி நடந்துக்கிறீங்க..?? நானா உங்கள கூட்டிட்டு போக சொன்னேன்.. நீங்களே கூட்டிட்டு போயிட்டு, இப்படி வரும்போது என் மேல எரிந்து விழுந்தா அதுக்கு என்ன அர்த்தம்??", என்றாள் அவளும் சற்று கோபமாக..
" போதும் நிப்பாட்டு உன்னோட நாடகத்தை.. நான் விருப்பப்பட்டு உன்கூட ஊர் சுத்தினேனா?? இம்பாசிபள்.. நான் ஷாப்பிங் பண்ண கூட்டிட்டு போனது.. ஏதோ , துணி இல்லாம போட்ட துணியவே போட்டுட்டு இருக்கியே என்ற ஒரு அனுதாபத்தில் தான்.. அதுக்காக என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கலாம் என்று மட்டும் நினைக்காதே..", என எச்சரித்தான் அவளை..
"உங்க கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்.. அதுவும் இல்லாம உங்ககிட்ட நாடகம் போட வேண்டிய அவசியம் எனக்கில்லை.."
"ஆமாமா நீ ரொம்ப தான் நல்லவள்.. போடி, உன்னை பற்றி எனக்கு தெரியாது.. உன்னுடைய சாமர்த்தியத்தை என்கிட்ட காட்டாத.. இந்த பாவமா மூஞ்சியை வச்சுக்கிட்டு பாவ்லா காட்டுற வேலையெல்லாம் இங்க வேணாம்.. உன்னை முழுசா அறிந்தவன் நான்.. எந்தந்த நேரத்தில் எப்படி எப்படி.. டைப் டைப்பா.. நடந்துக்குவன்னு எனக்கு நல்லாவே தெரியும்..", என்றான் சீற்றத்துடன்..
"போதும் நிறுத்துங்க.. என்ன தெரியும்.. என்ன தெரியும் என்னை பற்றி?? என்னவோ என்னை முழுசா தெரியும்னு சொல்றீங்க.. நீங்க சொல்ற மாதிரி என்னை பத்தி உங்களுக்கு முழுசா தெரிஞ்சிருந்தா இப்படி என்கிட்ட பேசவும் மாட்டீங்க.. மண்டபத்தில் இருந்து வலுக்கட்டாயமா தாலி கட்டி என்னை இழுத்துட்டும் வந்திருக்கவும் மாட்டீங்க மிஸ்டர் விக்ரம் சக்கரவர்த்தி.. இவ்ளோ பேச்சு பேசுறீங்களே.. அந்த கடையில எவனோ ஒருத்தன் என் கையை பிடித்து இழுத்ததற்கு உங்களுக்கு ஏன் அத்தனை கோபம் வரணும்??.. அவள் என் மனைவி அவள் மீது கை வைத்தால் எனக்கு கோவம் வரத்தான் செய்யும்னு எந்த உரிமையில அவன் கிட்ட சொன்னீங்க ?? சொல்லுங்க..", அவனுக்கு அவள் சற்றும் சளைத்தவள் அல்ல என்பது போல கண்களில் அனல் பறக்க பேசினாள்..
அவள் கேட்ட கேள்வியில் எந்த பதிலும் உடனே சொல்ல முடியாமல் போய்விட்டது அவனுக்கு..!!
எப்படி சொல்லுவான்?? .. அவனுக்கே அவனுடைய நிலை என்னவென்று அறியாத போது.. அவன் எப்படி விளக்கம் கொடுப்பான்??..
"இங்க பாரு.. அந்த இடத்துல நீ என்று இல்ல வேற எந்த பொண்ணா இருந்தாலும் நான் அப்படித்தான் பண்ணிருப்பேன்.. அதனால நீ ரொம்ப ஓவரா கற்பனை பண்ணிக்காத.. இந்த தாலியை உன் கழுத்தில எதுக்கு கட்டினேன் என்று நினைச்ச?? உன்னைய மனைவியா ஏத்துக்கிட்டு உன்கூட ஒன்னு மண்ணா வாழ்வேன் என்று கனவு கண்டியா?? அப்படி ஒரு விஷயம் ஒரு நாளும் நடக்கவே நடக்காது.. உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தது உன் கூட வாழறதுக்கு இல்ல.. வாழ்க்கையே வெறுத்து போற அளவுக்கு உன் மனசை நோகடிக்க..", எனக் கூறி இளக்காரமாக சிரித்தான்..
அவன் குரூர புன்னகையுடன் ஒவ்வொன்றையும் கூறுவதை கேட்டவளுக்கு மனமெல்லாம் சுக்குநூறாக உடைந்து போனது...!!
இதற்காகத்தான் இவனை விழுந்து விழுந்து காதலித்தேனா?? இதற்காகத்தான் அவனை நிழல் போல் சுற்றி வந்தேனா?? என பெண்ணவளின் மனம் நொந்து போனது..!!
அடிபட்ட வேதனை அவளின் கண்களில் தென்பட... கலங்கிய விழிகளோடு தலை கவிழ்ந்து நின்றாள், இனி அவனிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பது போல்..!!
தன்னால் முடிந்த அளவு, எவ்வளவு காயப்படுத்த முடியுமோ அத்தனை காயப்படுத்தி ஆயிற்று அவள் மனதை.. என்பது உறுதியாகி விடவும்.. சற்று நிம்மதியாக அங்கிருந்து விரைந்து சென்றான் அவன்...!!
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
வீட்டிற்கு வந்த கணம் முதல் டென்ஷன் தலைக்கு ஏறி போய் அமர்ந்திருந்தார் சங்கவி...!!
வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நிமிடமே கையில் இருந்த ஹேண்ட்பேக்கை சோபா மீது வீசி எரிந்து விட்டு.. தங்கள் அறைக்குள் சென்று கதவை அறைந்து சாற்றினார்..
என்னைக்கும் இல்லாத திருநாளாக இன்றைக்கு தங்கள் எஜமானி கடுங்கோபத்தில் இருப்பதை அங்கு வேலை பார்க்கும் வேலையாட்கள் உணர்ந்ததும் , ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துகொண்டு வாய்க்குள் ஏதோ முணுமுணுத்து கொண்டனர்!!
அப்படி ஒரு பொது இடத்தில் வைத்து அவளை கையை பிடித்து தன் மகன் தரதரவென்று இழுத்து கொண்டு போனதை கண்டதும் சங்கவிக்கு நெஞ்சமெல்லாம் பதறியது..!!
" அத்தனை பேரு முன்னாடியும் அவள் கையை பிடித்து எத்தனை உரிமையாக இழுத்துட்டு போறான்... போதாகுறைக்கு இவள் என்னோட மனைவி யாராவது இவளை சீண்டினால் எனக்கு கோபம் வரத்தான் செய்யும் அப்படின்னு டயலாக் வேற பேசுறான்.. அப்படின்னா அவளை அவன் திருமணம் செய்து விட்டானா?? பெற்ற தாய் தகப்பனுக்கு கூட தெரியாமல் எவளோ ஒரு அன்னாடங்காய்ச்சியை கல்யாணம் செய்திருக்கானே.. அப்போ அதுக்காகத்தான் அந்த ரெண்டு நாளும் அவன் வீட்டுக்கு வரலையா?? ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய் சொன்னான் என்கிட்ட.. நமக்கு இருக்கிற வசதிக்கும் அந்தஸ்துக்கும் எத்தனையோ பணக்கார வீட்டு பெண்கள் க்யூவில் வந்து நிற்பாங்க இவனை கட்டிக்க.. அப்படி இருக்கும் போது எவ்ளோ ஒருத்தியை இழுத்துட்டு வந்து கல்யாணம் பண்ணி இருக்கான்.. அதுவும் எங்களுக்கு தெரியாமல்.. என்ன ஒரு தைரியம் இவனுக்கு?? ஒரே மகனாயிற்றே என்று செல்லம் கொடுத்து வளர்த்தது ரொம்ப தப்பா போச்சு.. வரட்டும் அவன் இன்னைக்கு.. அவனுக்கு இருக்கு!!", மனதிற்குள் எரிமலை என குமுறி கொண்டிருந்தார் சங்கவி..!!
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
தேவசேனாவிடம் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு வேகமாக காரை எடுத்துக் கொண்டு நேராக வீட்டிற்கு கிளம்பி வந்தான் விக்ரம் சக்கரவர்த்தி..!!
காரை பார்க் செய்துவிட்டு.. வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுது...
" அங்கேயே நில்லுடா..", என்று கர்ஜித்தார் சங்கவி..
ஏற்கனவே உடலும் மனமும் சோர்ந்து போய் வந்திருந்தவன்.. இப்பொழுது தன் தாய் கண்களில் அனல் பறக்க.. ருத்ரதாண்டவம் ஆடுவதற்காக தயாராக காத்திருப்பது போன்ற நிலையில் கோபத்துடன் அவர் நின்றிருப்பதை காணவும்..
" என்னம்மா ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி இருக்கீங்க??
" அதை நான் தான்டா கேட்கணும்.. உனக்கு என்ன கேடு வந்துச்சு??, எதற்காக இப்படி பண்ண??"
" நான் என்னம்மா பண்ணேன்??"
" அய்யய்யோ அப்படியே நீ ஒன்னும் தெரியாத குழந்தை பாரு.. என்னமா பண்ணினேன் என்று கேட்கிறாய்.. அதான் பார்த்தேனே.. அந்த கண்கொள்ளா காட்சியை..", ஏதோ அருவருப்பான ஒரு விஷயத்தை கண்டது போல முகபாவனையுடன் கூறினார்...
" என்னமா பேசிட்டு இருக்க எனக்கு ஒன்னும் புரியல"
" இப்ப கூட நீ என்கிட்ட உண்மைய சொல்ல மாட்ட இல்ல விக்ரம்?? இன்னமும் என்கிட்ட பொய் தான் பேசிட்டு இருக்க!!"
" ஐயோ அம்மா ப்ளீஸ் என்ன ஏதுன்னு தயவு செஞ்சு சொல்லுங்க நானே ஆல்ரெடி டென்ஷன்ல வந்து இருக்கேன்"
" டென்ஷன்ல இருக்க வேண்டிய ஆள் நீ இல்லப்பா நாங்க தான்.. ஆமா, இப்ப நீ எதுக்காக டென்ஷன்ல இருக்க?? ஓ, உன் பொண்டாட்டிய வேற ஒருத்தன் கைய புடிச்சு இழுத்துட்டான் என்ற கோபமா??"
அவர் இந்த கேள்வியை கேட்டதும் வெடுக்கின்று தலையை நிமிர்ந்து பார்த்தான் அதிர்ச்சியுடன் விக்ரம்..!!
- தொடரும்...

Author: praba novels
Article Title: அத்தியாயம் 7
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.