அத்தியாயம் - 7

New member
Joined
Aug 14, 2025
Messages
12
பணம் இருந்தால் என்னடி ? குணம் தான் முக்கியம். பாப்போம் நல்லவரா இருக்காரா இல்ல பணக்கார பசங்களுக்கு மட்டும்தான் favour ஆ இருக்காரா அப்படின்னு என்றாள் ஆராதனா.

ஆமா நீ பாட்டுக்கு காலைல ஒருத்தனை அடிச்ச மத்தியானம் ரெண்டு பேரும் அந்த மாதிரி வீடியோ எடுத்துட்டியே ஏதாவது பிரச்சனை வரணும் நீ கவலைப்படலையா என்று கேட்டாள் லாவண்யா.

அதுக்கு எதுக்குடி கவலைப்படணும் அவங்க தப்பு பண்ணாங்க அதனால நான் கண்டிச்சுவிட்டேன். என்கிட்ட வந்து அவங்க சொல்றப்போ என்ன பண்ண முடியும் staff கிட்ட போய் சொன்னா தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்கன்னு சொல்லுவாங்க அவங்க எல்லாம் வேற பணக்கார வீட்டு பசங்க என்றாள்.

அதனாலதான் நானும் பனிஷ்மென்ட் கொடுத்தேன். அவனுங்களுக்கு எல்லாம் திமிருடி ஒருத்தனுக்கு கூட அடுத்தவங்கள மதிக்கணும்னு தெரியவே இல்லை அதுவும் நம்மள மாதிரி மிடில் கிளாஸ் பீப்பிள் இல்ல லோவர் பீப்புல பார்த்தா அவ்வளவு இளக்காரமா இருக்கு இன்னும் எனக்கு மனசே ஆற மாட்டேங்குது என்று அவர்கள் பேசிக்கொண்டே எழுதி முடித்தனர்..

இரண்டு நாட்கள் அப்படியே செல்ல தற்பொழுது மாணவர்கள் எல்லாம் பெல் அடித்தவுடன் வகுப்பறைக்குள் செல்ல ஆரம்பித்தனர். இல்லையென்றால் சாகித்யாவின் பனிஷ்மென்ட் மிகவும் கண்டிப்பான ஒன்றாக இருந்ததால் யாரும் அவன் கோபத்தை அதிகப்படுத்த முயலவில்லை.

என்னதான் அவன் நடக்க முடியாமல் இருந்தாலும் அவனுடைய ஆளுமை அங்கே இருந்தவர்களை அடக்கியது.

வசுந்தரா நான்கு நாட்களுக்கு மேல் வீட்டில் இருக்க முடியாதவர் தன் உடல்நிலை நன்றாக இருப்பதை உணர்ந்து அன்று காலை கிளம்பி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருக்க அங்கே வந்த சாகித்யா வெளியே செல்ல தயாராக இருக்கும் தனது அம்மாவை கண்டவன்

அம்மா எங்கேயோ கிளம்பி இருக்கிற மாதிரி தெரியுது? வீட்ல ரெஸ்ட் எடுக்கலையா என்று கேட்டான்.

அதைக் கேட்டு தனது மகனை முறைத்து பார்த்தவர் எவ்வளவு நாளடா ரெஸ்ட் எடுக்க முடியும். இத்தனை நாள் உழைத்த கட்ட ஏதோ அன்னைக்கு நான் ஒரு டென்ஷன்ல அப்படி விழுந்துட்டேன் அதுக்காக இத்தனை நாள் வீட்டுல இருந்ததே போதும் சுத்தமா முடியலடா ரொம்ப போர் அடிக்குது இப்ப பாரு அம்மா ரொம்ப நல்லா இருக்கேன் எந்த பிரச்சனையும் இல்ல டேப்லெட் எல்லாம் கரெக்டா எடுத்துக்கிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டேன் போதும்டா கண்ணா ப்ளீஸ்டா அம்மாவும் உன் கூட வரேன் என்றார் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

அதைப் பார்த்து சிரித்தவன் தன் அம்மா கூறுவதும் உண்மைதான் இத்தனை ஆண்டுகள் தனியாக உழைத்தவர் கண்டிப்பாக வீட்டில் இருப்பது கஷ்டமாக இருக்கும் ஏன் தனக்கே இத்தனை நாட்கள் மிலிட்டரியில் வேலை செய்தது தற்பொழுது உட்கார முடியாமல் வீட்டில் இருந்த பொழுது எப்படி போரடித்தது என்பது அவனுக்கும் தெரியுமே அதனால் ஆமோதித்தான்.

ஆனா நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ண கூடாது ரொம்ப அலையக்கூடாது எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க நான் பாத்துக்குறேன் நம்ம ஆபீஸ் ரூம்ம விட்டு வெளியில் போகக்கூடாது என்றான்.

அவரும் அதற்கு ஆமோதித்து அவனுக்கும் பரிமாற அவனும் சாப்பிட முடித்தவன் மாத்திரை எல்லாம் எடுத்துக்கிட்டீங்களா என்று கேட்டான்.

எல்லாத்தையும் எடுத்துகிட்டேன் என்று அவனிடம் காட்டினார் சின்ன குழந்தை போல்.

சரி போலாம் என்றவன் தாயுடன் கல்லூரிக்கு விரைந்தான்.

வசுந்தராவை பார்த்தவுடன் அனைவரும் மரியாதையாக அவருக்கு விஷ் செய்துவிட்டு சென்றனர்.

வசுந்திரா உள்ளே நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுதே அங்கே இருக்கும் மாற்றங்களை கண்களால் பார்த்துக் கொண்டே வந்தவர் தனது மகன் இப்படியே தன்னுடன் இருக்க வேண்டும் மீண்டும் மில்டரிக்கு போகக்கூடாது என்ற உறுதி மனதிற்குள் எடுத்துக் கொண்டவர்

இவன் கால் சீக்கிரம் குணமாக வேண்டும் அதன் பின்பு தான் அவன் திருமணத்தை பற்றி பேச முடியும் என்பதையும் மனதிற்குள் குறித்துக் கொண்டார்.

அவர் அறையிலேயே அமர வைத்தவன் தான் இதுவரை செய்த அனைத்தையும் அவருக்கு விலகி விட்டு ரவுண்ட்ஸ் பார்த்துவிட்டு வருவதாக சொல்ல

எதுக்குடா அதெல்லாம் வீணா அலைஞ்சுட்டு இருக்க என்றார். நான் பாக்குற வேலையை நீங்க பாத்துட்டு இருக்கீங்க அப்ப எனக்கு வேலை வேண்டாமா அதே மாதிரி டெய்லியும் நான் ரவுண்ட்ஸ் போறதுனால தான் கொஞ்சம் எல்லாம் சரியா நடக்குற மாதிரி எனக்கு தோணுது. இங்கே இருக்கிற எல்லா பிரச்சனையும் சரியான தான் நம்ம மாணவர்களும் ஒழுங்கா இருப்பாங்க அதனால நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன் என்றவன் தன்னுடைய நாற்காலியில் சுத்தி பார்க்க ஆரம்பித்தான்.

அப்பொழுது ஒரு இடத்தில் அவன் மொபைல் போனை பார்த்துக் கொண்டே வந்தவன் இடித்து தடுமாற , இந்த இடத்தில் மாணவர்கள் அதிகமாக இல்லாததால் சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் அங்கே ஆராதனா தனது தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்து வந்தாள்.

வேறு புறத்தில் இருந்து வந்தவள் அப்பொழுதுதான் திரும்பிப் பார்க்க இவன் இருக்கும் நிலையை பார்த்து வேகமாக ஓடி வந்து அவனுக்கு உதவ முன் வந்தால்.

அதுவரை அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் அருகில் வந்தவுடன் அவனுக்கு உதவி செய்து சரியாக அமர வைத்து சார் எங்கேயாவது அடிபட்டுருச்சா என்று கேட்டுக் கொண்டே அவன் கைகளை பார்த்தால் அதில் லேசாக ரத்தம் வழிந்திருந்தது.

அதை தனது துப்பட்டாவால் துடைக்க முற்பட்டால்.

அதற்குள் அவளிடம் இருந்து தனது கைகளை உருவி கொண்டவன் அவளை கோபமாக பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் அந்த இடத்தில் இருந்து சென்றான். செல்லும் அவனையே அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தால் ஆராதனா.

இவள் நிற்கும் நிலையை கண்டு தோழிகள் அருகில் வந்து இருப்பதை கூட பார்க்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் அங்கே நின்று இருந்த ஒரு ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருக்க

இவள் அப்படியே நிற்பதை கண்டு என்னடி ஆச்சு எதனால் அந்த சாறை பாத்துட்டு இருக்கேன் என்றால் ரம்யா.

இல்லடி அவர் வந்தாரு தடுமாறிட்டாரு நான் ஹெல்ப் பண்ணேன் அவர் பாட்டுக்கு தட்டி விட்டுட்டு கோவமா போயிட்டாரு டி நான் ஒன்னுமே பண்ணல அதுதான் நான் என்ன பண்ணின அவரை ஏதாவது ஹர்ட் பண்ற மாதிரி நடந்துக்கிட்டம்மா என்னன்னு யோசிச்சிட்டு இருந்த வேற ஒன்னும் இல்ல என்றால் ஆராதனா தனது நண்பியின் முகம் பார்த்து.

என்னடி சொல்ற என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே அவனுக்கு பின்புறமாக லாவண்யா புலம்பிக்கொண்டே வந்து கொண்டு இருந்தாள்.

அதை பார்த்த தோழிகள் இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்ள அந்த ப்ரொபஷரிடம் பேசிவிட்டு திரும்பிய சாகித்ய இதை பார்த்துவிட்டு அவள் தன்னை வைத்து தான் பேசுகிறாள் என்று நினைத்துக் கொண்டவன் மிகவும் கோபம் அடைந்து தன்னரைக்கு சென்றான்.

அங்கே அவன் அம்மா சோபாவில் சற்று நேரம் இளைப்பாறினார்.

அதனால் அமைதியாக இருந்தவன் தனது கை முஷ்டியை அந்த சாரில் குத்தி கொண்டவன்

அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்ன பார்த்து அவ பிரண்டு கிட்ட பேசி சிரிச்சிட்டு இருக்கா இப்படி நடக்க முடியாம இருந்தா இப்படித்தான் இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் அடுத்தவங்கள இழிவா நடத்துவாங்க போல என்று கோபமாக நினைத்துக் கொண்டிருந்தவன் மணக்கண் முன்பு நெருக்கத்தில் பார்த்த அவள் வதனமே வந்தது.

அதை கண்கள் மூடி ரசித்துப் பார்த்தாலும் அவள் தன்னை கேவலப்படுத்தி இருக்கிறாள் அவள் நல்லவள் இல்லை என்று இவனாகவே யூகித்துக் கொண்டு அவள் மேல் இன்னும் வன்மத்தை வளர்த்துக் கொண்டான் நேரம் கிடைக்கும் பொழுது அவளை நன்கு பழிவாங்க வேண்டும் தக்க பாடம் எடுக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

அன்று மாலை வீட்டுக்கு வந்தவன் தனது அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உடைய மாற்றிக் கொண்டும் வெளியே வந்தவன் காதுகளில் விழுந்தது அவனுடைய கேர்ட்டேக்கராக இருக்கும் சுரேஷ் பேசும் சத்தம்.

ஆமா அந்த ஆளு என்னதான் மிலிட்டரில இருந்தாலும் பணக்காரனா இருந்தாலும் ஒரு பொண்ணு மனசு ஜெயிக்க தெரியல அடுத்தவங்கள புரிஞ்சுக்க தெரியல இந்த மாதிரியான ஆளுக்கு எல்லாம் எவ்வளவு பணம் இருந்தாலும் எவ்வளவு வரமாட்டா என்று பேசிக் கொண்டிருந்தது இவன் காதுகளில் விழுந்தது.

அது மட்டுமல்லாமல் எனக்கு தெரிஞ்ச அந்த ஆளுக்கு உணர்ச்சி அப்படிங்குற ஒன்று இருக்காதுன்னு தான் நினைக்கிறேன் காலேஜுக்கு போனாரு ஆனா அங்க ஒரு பொண்ணு கூட பார்த்த ஒரு சைட் அடிக்கல சரியான ஜடமா இருக்காரு என்று அவன் பாட்டுக்கு வாய்க்க வந்தபடி தனது காதலியிடம் நிலைமை புரியாமல் பேசிக் கொண்டிருக்க

அவனுக்கு பின்னால் வந்து நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டு கைகளை கட்டி அமர்ந்து கொண்டிருந்தான் சாகித்யா.

சுரேஷும் அனைத்தையும் பேசி முடித்து விட்டு திரும்ப அங்கே தன்னையும் முறைத்து பார்த்துக் கொண்டிருக்கும் சாகித்யாவை பார்த்தவன் ஜெர்க் ஆகி விட

சார் சார் என்று திணறியவனை கண்டவன் உன் மூட்டை முடிச்சு எடுத்துட்டு இந்த வீட்டை விட்டு கிளம்பு உன்னை மாதிரி மூளை கெட்டவன் எல்லாம் என்னை பாத்துக்கணும்னு அவசியம் இல்ல என்றான்.

சுரேஷ் மீண்டும் ஏதோ பேச வர வெளியே போனு சொன்னேன் என்று அந்த இடமே அதிரும் அளவு கத்தினான்.

அதில் பயந்த சுரேஷ் தன்னுடைய பேக்கை அவனுக்கென்று இருக்கும் அறையில் இருந்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன் முன்பு தனது வாலட்டிலிருந்த பணத்தை தூக்கி எறிந்தவன்

முதல்ல அடுத்தவங்க பத்தி பேசறத நிப்பாட்டிட்டு உன்னோட வேலைய பாரு அப்பதான் நீ உருப்படுவ இல்லன்னா இப்படி தான் ஒவ்வொரு இடத்திலும் அவமானப்பட வேண்டியது வரும். நான் எப்படி என்னன்னு எனக்கு தெரியும் யார்கிட்ட உணர்ச்சிகள் எப்ப வெளி காட்டணும்னு எனக்கு தெரியும் பாக்குறவ மேல எல்லாம் பாஞ்சுட்டு இருக்குறதுக்கு நான் ஒன்னும் பிளேபாய் கிடையாது இன்னொரு வாட்டி இது மாதிரி யாரையும் பேசி ஹர்ட் பண்ணாத இப்ப என் கண்ணு முன்னாடி நிக்காம ஒழுங்கா போயிரு இல்லன்னா என்னோட துப்பாக்கிக்கு வேலை வைக்காத என்று கத்தினான்.

அதற்கு மேல் அங்கே நிற்பானா யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடினான் சுரேஷ்.

அப்பொழுது அங்கே வந்த வசுந்தரா ஏன்டா இப்படி ஓடுறான் என்று கேட்க

இந்த விஷயத்தை அம்மாவிடம் சொன்னால் மனது வருத்தப்படுவார் என்று நினைத்து

இல்லம்மா அவன் அம்மா அப்பா ஊர்ல இருக்காங்களா உடம்பு சரி இல்லையா அதனால என்னால வேலையை தொடர முடியாது அப்படின்னு கிளம்பிட்டான் நானும் அவனுக்கு பணத்தை கொடுத்து அனுப்பிச்சிட்டேன் வேற ஒன்னும் பிரச்சனை இல்லம்மா அதனால தான் வேகமாக போறான் என்றான்.

என்னடா இப்படி சொல்லாம கொள்ளாம போறான் உன்னை யாருடா பாத்துக்குவா இரு நான் அதுக்கு கூடிய சீக்கிரம் ஏற்பாடு பண்றேன் என்றார்.

அப்பொழுது சாகித்யா ஏதோ பேச முயல

அவன் என்ன கூற வருவான் என்பதை முன்பே தெரிந்து கொண்டவர் ப்ளீஸ் டா எதுவும் சொல்லாத என்றார்.

அவனும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட மீண்டும் அதே மருத்துவமனையில் ஒரு ஆண் நர்ஸ் வேண்டும் என்று கேட்க

தற்பொழுது ஒரு பெண் நர்ஸ் அனுப்புகிறோம் ஆண்கள் யாரும் இல்லை என்று அவர்கள் சொல்லிவிட வேறு வழி இல்லாமல் அவர் அதற்கு சம்மதம் சொன்னார் தனது மகன் என்ன சொல்வான் என்று நினைத்தவர் சரி வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து அமைதியாகிவிட்டார்.

அடுத்து அந்தப் பெண் செய்த விஷயம் அவன் உச்சகட்ட கோபத்தை
கிளப்பியது...

அப்படி வந்த பெண் என்ன செய்தால் என்பதை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்....
 
Author: kadhaa
Article Title: அத்தியாயம் - 7
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
92

👿👿👿👿
 
Member
Joined
Nov 26, 2023
Messages
55
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top