அத்தியாயம் 7

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
67
அத்தியாயம் 7


நூறு வாட்ஸ் மின்சாரம் உடலில் பாய்ந்தது போல் பதறி விலகியவளை பார்வை மாறாமலே பார்த்து நின்றவன் கையில் தவழும் மெல்லிய இடை செயினை கைக்குள் பொத்தி நிமிர்ந்தான்.


" புருஷன் ஆசையா கொடுத்தா இப்படி தான் ஓடுறதா? "


" பின்ன!! இதெல்லாம் யார் கேட்டது? எப்படி உங்களுக்கு இதை எனக்கு வாங்கணும்னு தோணுச்சு " ஏதோ செய்யக் கூடாத தவறை செய்தது போல் பொங்குபவளை அலட்டிக் கொள்ளாமல் பார்த்தான் வேந்தன்.


" உனக்கு வாங்கி தராம கண்டவளுக்கா டி வாங்கி கொடுக்க முடியும்?? எனக்கு சொந்தமானத இன்னும் ரசனையா மாற்றி பார்க்க நினைக்கிறது தப்பா? " குரலை உயர்த்தி கோவமாய் சொல்பவன் வார்த்தையிலே உடல் சிலிர்த்து நின்ற அஞ்சலிக்கு தான் அய்யோ என்றிருந்தது.


" ச்ச என்ன நீங்க இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க? எனக்கு இதெல்லாம் பிடிக்கல. யாருக்கு வேணும்னாலும் வாங்கிக் கொடுங்க. ஆனா எனக்கு இதெல்லாம் வேண்டாம் " முகத்தில் அடித்தார் போல் சொல்லிவிட்டு நகர போனவளை கைப் பற்றி இழுத்தவன், அதே வேகத்தில் இதழை கவ்விக் கடித்திட சிலையாய் உறைந்து நின்றாள் ஒரு நொடி.



சில நொடிகள் தான். விழிகள் அகல அவனை தள்ள முயன்றவளின் பிடரியை பற்றி இன்னும் அழுத்தமாய் நாவை நுழைத்து அவளின் நாவை உரச உடல் அதிர்ந்து போனாள் பேதை.



பொத்தி உறங்கும் பெண்மை அவன் உதடு உரசலில் உயிர்த்தெழும் முன்னே கடினப்பட்டு விலகியவள் எச்சில் நினைந்த அவன் இதழிலே தடுமாறி பார்வையை திருப்பிக் கொண்டாள் பதட்டமாய்.



கட்டை விரலால் தன் உதட்டை துடைத்த வேந்தன் " கொஞ்சம் கண்ணாடியை பாருடி " அவள் தோளை பற்றி திருப்பிட தன் பிம்பத்தை விருப்பமே இல்லாமல் பார்த்தவளின் விழிகள் அவனோடு தான் தன்னை ஒப்பிட்டது.


பௌர்ணமி போல் ஜொலிக்கும் வேந்தனை கண் கொட்டாமல் பார்த்தாள் கீதாஞ்சலி. முன்பை விட இப்போதெல்லாம் ரொம்பவே அழகாக தெரிகிறான். மாசு மருவற்ற முகம். அவன் அருகில் நிழல் போல் தெரியும் தன்னை பார்க்கவே சகிக்காமல் திரும்ப முயன்றவளை விடாமல் கண்ணாடி பார்க்க செய்த வேந்தன் அவளின் தாவை இறக்கி, ஒரு இடத்தை குறிப்பிட கண்கள் விரித்தாள் பேதை.


" இது எப்படி? " வேகமாய் இடுப்பை சுற்றிருக்கும் ஜெயினை பிடுங்க பார்த்தவளை நெருங்க விடாமல் கைகளை ஒற்றை கரத்திற்குள் சிறை செய்து சிரித்தான் கிறக்கமாய்.


" என் முன்னாடி உனக்கு என்ன அஞ்சலி கூச்சம்? "


" முதல்ல கையை விடுங்க " பாம்பாய் அவள் நெளிய தன் மற்றோரு கரத்தால் பெண்ணின் இடையை பின்னிருந்து முன்னே கொண்டு சதையை இறுக்கி அழுத்திய வேந்தன்



" உனக்குனே அளவேடுத்து செஞ்சது அஞ்சலி. அழகா இருக்கு உனக்கு "


" வாய் கூசாமா பொய் சொல்லாதீங்க. எல்லாம் ஒரு அளவுக்கு தான். எனக்கே தெரியும் நான் எப்படின்னு " மீண்டும் கண்ணாடியை பார்க்காமல் திருப்பிக் கொண்டவளை வம்படியாய் பார்க்க வைத்தவன்


" உனக்கு ஒரு மை**** தெரியாதுடி உன்னை பற்றி. நானும் பார்த்துட்டே இருக்கேன். ரொம்ப பண்ணுற ? என்னடி குறைச்சல் இந்த மூஞ்சிக்கு? தொட்டாலே என்னவோ ஆகுது. இந்த உதட்டை நாள் முழுக்க கடிச்சாலும் பைத்தியம் தெளிய மாட்டேங்குது அஞ்சலி. இன்னும் முழுசா ஆள துடிக்கிற என் தவிப்ப பார்த்துமாடி உனக்கு அப்படி தோணுது? என்னை நாள் முழுக்க உன்னை பார்க்க சொன்னாலும் கொஞ்சமும் என் கண்கள் அலுத்துப் போகாது. அதெல்லாம் உனக்கு புரியாதுடி. ஒரு வாய்ப்புக் கொடுடி. மொத்த காதலையும் கொட்டி உன்னை மூச்சி முட்ட வைக்கிறேன். இந்த காலடியிலே என் காலத்தை கடத்திடுறேன் " இதழ்களோடு கண்களும் பேசிட வாயடைத்து நின்றாள் அஞ்சலி.



தேநீர் நிறக்காரிக்கு மனம் பட்டாம்பூச்சியாய் பறக்க ஆரம்பித்து விட்டது கணவன் வார்த்தையில். போய்யோ மெய்யோ தன் மேல் ஒருவன் வைத்திருக்கும் நேசத்தை அவன் வாயால் கேட்டதில் பெண் மனம் மதி மயங்கி தான் போனது அவனிடம்.



மெல்ல பார்வையை கண்ணாடியில் பதித்தவள், முதல் முறையாய் தன்னையே ரசிக்கத் துவங்கினாள் அவன் வார்த்தை வழியே. ரத்தம் போல் சிவந்த இதழ் விரிய கன்னம் சிவந்தவள் " நிஜமா உங்களுக்கு என்னை பிடிக்குமா? " விழி அகல கேட்பவளை கோவம் அடக்கி முறைத்தான் வேந்தன்.



" ஊரைக் கூட்டி சொல்லவா? இல்ல இந்த வீட்டுல இருக்குற எல்லாரையும் இழுத்து வந்து அவங்க முன்னால சொல்லவா? ஒருத்தன் நொடிக் கூட விடாமல் உன் நிழலையே சுத்தி வந்துமா இந்த கேள்வி கேட்ப? " உச்சக் கட்ட கோவத்தில் வேந்தன் பல்லைக் கடிக்க, வெண்ணிற பற்கள் தெரிய சிரித்தவள்


" அதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் இந்த கண்ணாடி பாருங்க. நீங்க எவ்ளோ அழகா இருக்கீங்க. உங்க கலர் எங்க? நான் எங்க? நான் உங்க பக்கத்துல நிற்க கூட தகுதி " இல்லாதவள் என அஞ்சலி சொல்லி முடிக்கும் முன்னே புடவைக்குள் மறைந்திருக்கும் தாலியை தூக்கி வெளியே போட்டவன்


" இது ஒன்னு உனக்கு போதாதா? நீ கேட்குற தகுதிக்கு. ஒருவேளை உன் நிறத்துல நான் இருந்திருந்தால் என்னை நெருங்க மாட்டியா? "


" ஐயோ நான் அப்படி சொல்ல வரல? "


" பின்ன எந்த காலத்துல அஞ்சலி இருக்க? நாளைக்கே நமக்கு ஒரு குழந்தை பிறக்கும். உன்னை மாதிரியே இருந்தால் உன் பாசம் போகிடுமா " ஆழமான வார்த்தையில் கேட்க வேகமாய் மறுத்தாள் அஞ்சலி.



" அப்றம் என்னால மட்டும் எப்படிடி உன்னை வெறுக்க முடியும்? எனக்கு நீ ன்னா உசுரு அஞ்சலி. யாரு என்ன வேணாலும் நினைச்சிட்டு போகட்டும். ஆனா என் வாழ்க்கை உன்கூட தான். இந்த நினைப்பை எல்லாம் உன் மனசுல இருந்து எறிஞ்சிட்டு வா. வாழ்க்கையை நான் காட்டுறேன் " கண்ணோடு கண் பார்த்து சொல்லிய வேந்தன் விலகி சென்றிட அசைய மறந்து நின்றவள் கண்ணாடியில் தன்னையே வெறித்தாள்.


மறுநாள் காலை அவள் விழிக்கும் முன்னே கண்ணில் படாமல் கள்வன் ஓடிருக்க, தெளிவான முடிவோடு எழுந்த அஞ்சலி நேற்று தாத்தா ஆசையாய் கேட்டுக் கொண்டது போல் தாத்தா பேரன் இருவருக்குமாய் ஆசையாய் சமைத்தாள்.


" ச்சை. இந்த நாய கிட்சன் வரைக் கொண்டு வந்து நிறுத்திட்டாரு மாமா. அவ போனதும் ஆள விட்டு சுத்தம் செய்ய சொல்லணும் " முகத்தை சுளித்த ஹேமா பல்லைக் கடித்து நகர்ந்து விட்டார்.



" நீ வேணா குடு. நா ஹெல்ப் பண்ணுது " பணிவான குரலில் பக்கம் வந்து நின்ற ஹிந்திகார பெண்ணை முழித்து பார்க்க



" நான் காமினி. இங்கு தான் பல வருஷமா வேலை பார்க்குது. தமில் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். குடு நான் ஹெல்ப் பண்ணு " அரைகுறை தமிழில் அஞ்சலிக்கு உதவி செய்ய வர மெல்லிய புன்னகையோடு தயக்கம் தளர்ந்து சமைத்தாள்.



காமினி கொடுத்த ஹாட் பாக்சில் இருவருக்கும் ஏற்ப உணவுகள் அனைத்தையும் அடுக்கிருக்க, " மேடம் போலாம் மா " என்ற டிரைவர் குரலில் தலை அசைக்க டிரைவர் உணவு நிறைந்த பையை காரில் ஏற்றிவிட்டு அஞ்சலியும் ஏறிய பின்பு தலைமை அலுவலகம் நோக்கி வண்டியை விரட்டினார்.



வழக்கமாய் அலுவலகத்தில் தயாரிக்கப்படும் உணவு தான் இருவருக்கும் கொண்டு வரப்படும். இன்றும் அதே போல் என்று " சார் லன்ச் எடுத்துட்டு வர சொல்லவா " உதவியாளன் நேரம் கண்டு நினைவுப் படுத்த


" வேண்டாம். இன்னைக்கு எனக்கும் வேந்தனுக்கும் வீட்டுல இருந்து சாப்பாடு வரும். நீங்க போய் சாப்பிட்டு வாங்க " என்ற மாணிக்கம் மீண்டும் பார்வையை கோப்பையில் பதிக்க யோசித்த உதவியாளன் பின்னே கேட்ட குரலில் திரும்பிட சம்பந்தமே இல்லாமல் ஒருத்தி உள்ளே நுழைந்தாள் சங்கடமாய்.



" ஹெலோ யார் நீங்க? " வேகமாய் உதவியாளர் வழி மறிக்க போக நிமிர்ந்த மாணிக்கம் தன் பேத்தி என்று சொல்லும் முன்னே...


" என் வைஃப் மிஸ்டர் அன்வர் " என்ற கணீர் குரலில் திடுக்கிட்டு திரும்பிய கீதாஞ்சலி தன்னையே விழுங்கும் அவன் பார்வையில் செத்து பிழைத்தாள்.



பசிக்கு தானே ரசனையோடு சமைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் அவன் பார்வையில் தெரியும் பசிக்கு இந்த உணவே போதாது என்பது போல் பீதியாகிட, " வாம்மா கீதா. பரவால்ல சொன்ன மாதிரி கொண்டு வந்துட்டியே. நீ எனக்கானது இங்க வச்சிட்டு உன் புருஷனுக்கு போய் சாப்பாடு கொடு. கொலை பசியில இருக்கான் போல " மாணிக்கம் ஏதார்த்தமாய் சொல்ல வேந்தனின் கண்ணை சந்தித்தவளுக்கும் அதே சந்தேகம் தான் எழுந்தது.



" தாத்தா நானே உங்களுக்கு பரிமாறி விடுறேன்னே "


" அதுலாம் நான் பார்த்துக்கிறேன். வேந்தன் அவளை உன் கேப்பினுக்கு கூட்டிட்டு போ " தாத்தா கட்டளையில் அவளுக்காய் கதவை திறந்து விட்டு வேந்தன் நிற்க, அந்த தோரணையிலே எச்சிலை விழுங்கிய அஞ்சலி பயத்தோடே வெளியேறினாள்.



ஏற்கனவே மாணிக்கம் அஞ்சலி அலுவலகத்திற்கு வருவதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்ததால் உள்ளே வருவதற்கு அவளுக்கும் சுலபமாய் போனது. அதுவும் மாணிக்கத்தின் குடும்ப பெண்கள் கூட இதுவரை அலுவலகம் வந்ததில்லை. இதுவே முதல்முறை.



வேந்தன் கேபினைக் கடந்து பிரைவேட் ரூமுக்குள் அழைத்து சென்றவன் உணவை மேசையில் வைத்து திரும்பியவளை வாரி அணைத்துக் கொண்டான் மூச்சு முட்டும் அளவிற்கு.



" ஹ்ம்ம்... தூரத்துல உன்னைப் பார்த்ததும் என் கனவுன்னு என்னையே நொந்து போனேன் அஞ்சலி. பக்கம் வந்தது தான் தெரிஞ்சது நீ தான்னு. ஏன்டி என்கிட்ட சொல்லல நீ வரேன்னு?"



" தாத்தா சொல்லிருப்பாருன்னு நினைச்சேன் " என்றாள் உள்ளே போன குரலில் உடல் நெளிய.



" எனக்கு பசிக்குது அஞ்சலி "


" உக்காருங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன் " நழுவ பார்த்தவளை உடும்பு பிடியாக பிடித்திருந்த வேந்தன்


" இந்த பசிக்கு அதெல்லாம் போதாது. இது வேண்டும். நீ வேணும் " கழுத்தில் முகம் புதைத்து ஆழ மூச்சை இழுத்தவன் பல் தடம் பதிக்க கிறங்கியவள் உள்ளங்கையை நகத்தால் தாக்கி உணர்வுகளை அடக்கி நின்றாள்.



" இது வீடு இல்ல. யாராச்சும் பார்த்திட போறாங்க "


" இங்க என் அனுமதி இல்லாம யாரும் வர மாட்டாங்கடி. வீடா இருந்தா மட்டும் மேடம் கேட்டதை கொடுத்துருவீங்களா " குறும்பாய் சீண்ட வெட்கத்தில் முகம் தாழ்த்திய அஞ்சலி " முதல்ல வாங்க. அப்றம் பேசிக்குலாம். "வலையில் சிக்கிய மீன் போல் துள்ளி ஓட பார்க்க கண்கள் மின்ன அவளை நம்பாது பார்வை பார்த்தான் வேந்தன்.



" ஏய் என்ன சொன்ன? என்னை பார்த்து சொல்லுடி. அப்போ புருஷனா நான் எந்த உரிமையும் எடுத்துக்குலாம். அப்படி தானே!!"



" அச்சோ. என் கையை விடுங்க. நான் எதும் சொல்லுல " சிணுங்கியவள் கன்ன கதுப்பை மறைக்க போராட குஷியாகிய வேந்தனுக்கு உணவு உள்ளே இறங்காமலே வயிறு நிறைந்து போனது.



மதிய உணவை செல்ல சீண்டளோடு முடித்த வேந்தன் மனமே இல்லாமல் அவளை கார் பார்க்கிங் வரை வந்து வழி அனுப்பிட கண் விட்டு மறையும் வரை நின்று பார்த்தவன் முன் மற்றோரு கார் நிற்க முகம் இறுகியவன் முன்னால் காட்சி கொடுத்தாள் மௌனி.
 
Last edited:

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 7
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Jan 1, 2025
Messages
6
Super super super super.👌👏👌👏👏👏🥰🥰🥰🤩🤩🤩😍😍
 
Top