அத்தியாயம் 6

Member
Joined
Aug 20, 2025
Messages
37
அத்தியாயம் 6

விக்ரம் தேவசேனாவை வலுக்கட்டாயமாக தாலி கட்டி இழுத்து வந்து இந்த பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, இதோடு ஒரு வார காலம் ஆகி விட்டது ...!!

இந்த ஒரு வாரத்தில்.. அவ்வப்போது அவன் வருவதும்.. இவள் சாப்பிட்டாளா என்று கண்காணிப்பதும் அவனின் வழக்கம் ஆகியிருந்தது.. பிறகு , மாலை 6 மணி ஆனதும் வீட்டிற்கு கிளம்பி சென்று விடுவான்..

அவனை மீறி அந்த வீட்டை விட்டு அவள் வெளியே செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை, என்று உறுதியான பிறகு தான் அந்த அறையின் பூட்டை விடுவித்தான்.. அதன் பிறகு அந்த அறையை யாரும் பூட்டுவதே இல்லை..

அன்றும் , அதே போல் காலை 9 மணி அளவில் அந்த பண்ணை வீட்டிற்கு வந்தவன்.. அவள் சாப்பிட்டாளா என்று ராஜப்பாவிடம் ஒரு முறை விசாரித்துவிட்டு நேராக அவள் இருக்கும் அறையை நோக்கி சென்றான்..

அங்கே...

இளமஞ்சள் நிறத்தில் சேலை உடுத்தி.. தளர்வாக ஜடை பின்னியிருந்தாள்.. எந்தவித ஒப்பனையும் இல்லாதபோதும்.. அவளின் முகம் கண்ணாடி போல் பளபளத்து பிரகாசித்தது..!!

நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது மதிப்பெண்கள் எடுத்தது போல்... அத்தனை அழகு கொட்டிக்கிடந்தும் , அவள் முகத்தில் அப்பி கிடந்த சோகம் அந்த அழகை மறைத்து வைத்திருந்தது என்னவோ.. குறையாக காணப்பட்டது..!!

ஜன்னல் வழியே தெரியும் வெளியுலகை வேடிக்கை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த அவளை பார்த்ததும் அவனுக்கு என்னவோ போலானது..

"பாவம் ஒரு வாரமாக உள்ளேயே அடைந்து கிடக்கிறாளே வெளியுலகை பார்க்க முடியாமல்.. ", என்று அவனின் மனசாட்சி அவளுக்காக பரிந்து பேச..

உடனே அவனது மூளை, " டேய் அறிவு கெட்ட முட்டாள்.. உன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமே அவதான்.. உன்னோட சந்தோஷத்தை அழித்தவளோட சந்தோஷத்தை பத்தி நீ ஏன் யோசிக்கிற??.. எந்த விதத்தில் அவளை டார்ச்சர் செய்யலாம்?? எப்படி அவள் மனதை நோகடிக்கலாம்?? என்று மட்டும் யோசி.. நீ கொடுக்கிற டார்ச்சர்ல அவ உனக்கு செஞ்ச துரோகத்தை நினைத்து நினைத்து வருத்தப்படணும்.. ஏண்டா உன்னோட வாழ்க்கையில குறுக்க வந்தோம்னு , அவ நெனச்சு நெனச்சு ஃபீல் பண்ணனும்..!!", என்று அவனுக்கு சுட்டி காட்டியது....

அடுத்த கணமே தலையை லேசாக உலுக்கி கொண்டவன் தன் நினைவுகளில் இருந்து மீண்டு வந்தான்..

" ஒழுங்கா கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டியா??", என்று கேட்டான் உணர்ச்சி துடைத்த குரலில்..

காதருகே அவனின் குரல் ஒலிக்கவும்.. மெல்ல திரும்பி பார்த்தாள்..

இதுபோல் அவன் வருவதும் , கேள்வி கேட்பதும் அவளுக்கு பழகி போயிருந்தது.. அதனால் எந்தவித அதிர்ச்சியோ ஆச்சரியமோ இன்றி எதார்த்தமாக திரும்பிப் பார்த்து அவனுக்கு பதில் கூறினாள் ஒற்றை வார்த்தையில்...

"ம்ம்"

"ஏன் சாப்பிட்டேன் என்று வாய் திறந்து சொன்னா அம்மணிக்கு வாயிலிருந்து முத்து உதிர்ந்து விடுமோ??", என்றான் எகத்தாளமாக..

" சாப்பிட்டேன்"

"ம்ம்.. ஏற்கனவே குளிச்சு முடிச்சு ரெடியா தான் இருக்க போல.. அப்போ ஓகே..வா கிளம்பலாம்", என்றான் அவளின் கண்களை பார்த்த வண்ணம்..

"வெளியேவா??..எங்க??", என்றாள் புரியாமல்..

" ஏன்?? எங்க, எப்போ, எப்படின்னு சொன்னா தான் மேடம் கிளம்பி வருவீங்களா??"

" இல்ல அப்படி இல்ல இத்தனை நாள் இல்லாமல் இப்ப திடீர்னு வெளியே கூப்பிடுறீங்களே.. அதான் கேட்டேன்.."

முகத்தில் இருந்த சோகத்தையும் மீறி அவனைப் பார்க்கும் பொழுது அவள் கண்களில் மின்னும் பிரகாசம், வித்தியாசமாக தென்பட்டது.. அதை விக்ரமின் விழிகள் படம்பிடித்து.. மனதில் குறித்துக் வைத்து கொண்டது...!!

"எதுக்காக நம்மள பாக்கும்போது இவளுக்கு அம்புட்டு சந்தோசம் வருது?? வலுக்கட்டாயமா தூக்கிட்டு வந்து தாலி கட்டி.. இங்க இழுத்துட்டு வந்து அடைச்சு வச்சிருக்கேன்.. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் என் மீது வெறுப்பை தானே காட்டி இருக்கணும்??, ஆனால் இவள் என்ன, என்னை இப்படி ஆசையாக... விழிகள் பிரகாசிக்க பார்க்கிறா??", எனக் காரணம் புரியாமல் குழம்பி கொண்டிருந்தது அவனின் மனம்..

" விக்ரம்.. விக்ரம்.. உங்ககிட்ட தான் பேசுறேன்", என்று கூறி அவன் முகத்தின் முன்பாக கையை அசைத்து பேசினாள் தேவசேனா..

அதன் பிறகு தான் சுய நினைவுக்கு மீண்டு வந்தான் அவன்..

"ஆ.... என்ன..??"

"இல்ல.. இந்த ஒரு வாரமா இல்லாம இப்ப வந்து அதிசயமா வெளிய போலாமான்னு கேக்குறீங்க.. அதான் பார்த்தேன்.."

"ஓ.....", என்றவன்,

அடுத்த கணமே..

"ஏய்.. இப்ப எதுக்கு உனக்கு இந்த கேள்வி எல்லாம்?? ஒழுங்கா நான் சொன்னது மட்டும் செய்.. புரிஞ்சுதா?? இன்னொரு முறை இந்த மாதிரி கேள்வி எல்லாம் என்கிட்ட கேட்டுட்டு இருக்க கூடாது.. நான் சொன்னதை செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும்.. வா கிளம்பலாம்", முகம் சிடுசிடுக்க கூறிவிட்டு.. அங்கிருந்து வெளியேறினான் அவன்..

என்ன செய்வது?? குரங்குக்கு வாக்கப்பட்டால் மரத்துக்கு மரம் தாவி தான் ஆகணும்.. கழுதைக்கு வாக்கப்பட்டால் உதை வாங்கி தானே ஆகணும்.. அதுபோல இப்போது அவன் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழி இல்லை அவளுக்கு.. ஆகையால் மெதுவாக நடந்து அவனை பின் தொடர்ந்தாள் தேவா...

வாசலில் ரெடியாக இருந்த காரில் ஏறி அமர்ந்து கொண்டவன்.. இவள் மெதுவாக பின் தொடர்ந்து வருவதை கண்டதும் எரிச்சலுற்றான்..!!

" ஹலோ, இங்க என்ன உலக அழகி போட்டியா நடக்குது??, இப்படி அன்ன நடை போட்டு கேட் வாக்கில் நடந்து வந்துட்டு இருக்க??", என்றான் கோபம் கொண்டு..

அவன் போட்ட கூச்சலில் சற்று வேகமாக வந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் தேவா...

போகும் வழியெங்கும் ஒரு வார்த்தை கூட பேசாது அமைதியாக வண்டியை ஒட்டி சென்றான் அவன்...

ஒரு வாரத்திற்கு பிறகு வெளியுலகை காண்பதால், வெகு சந்தோஷமாக காணப்பட்டாள் அவள்...

சுற்றி தெரியும் பச்சை பசேல் என்ற மரம் செடி கொடிகள்.. ஆங்காங்கே தெரியும் வீடுகள்.. விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த ஜனங்கள்.. என்று எல்லாவற்றையும் அதிசயமாக பார்த்து வந்தாள் சிறு புன்னகையுடன்...

வண்டி ஓட்டிக்கொண்டே ஓர கண்ணால் அவளின் முகமாற்றங்களை கவனித்தான் அவன்..

இந்த ஒரு வார காலமும் எதையோ பறிகொடுத்தது போல அமைதியாக இருந்த போதிலும், அவ்வப்போது அவனை காண்கையில்.. அவள் கண்களில் மிளிரும் ஒளியைத் தவிர வேறெந்த வித சந்தோஷத்தையும் அவன் கண்டதில்லை அவள் முகத்தில்...!!

ஆனால் இப்போது என்னவென்றால் ,வெளி உலகத்தை கண்டவுடன் குதூகலிக்கும் குழந்தையாய் மாறி இருந்த தேவசேனாவை கண்டதும் அவனுக்கு சிறு ஆச்சரியமே...

இவையெல்லாம் கண்டதும் அவனின் இதழ் கடையோரத்தில் உதித்த சிறு புன்னகை.. அவனது கம்பீரமான தோற்றத்தை மேலும் அழகாக காட்டியது...!!

கார் நேராக சிட்டிக்குள் நுழைந்து அங்கிருந்த பிரபல ஜவுளி கடைக்கு முன்பாக வந்து நின்றது...

அதைக் கண்டதும் இவளுக்கு ஒரே ஆச்சரியம்?? எதற்காக ஜவுளிக்கடைக்கு அழைத்து வந்திருக்கிறான்.. ஒருவேளை நமக்கு துணி எடுத்துக் கொடுப்பானோ??,

ஒருவார காலமாக போட்ட உடையவே மாற்றி மாற்றி போட்டு கொண்டிருந்தாள்.. அவளே வாய் விட்டு கேட்கலாம் என்று தான் இருந்தாள்.. உடுத்துவதற்கு மாற்று உடை வேண்டும் என்று..ஆனால் சொல்லாமலே அவன் அவளை.. இங்கு அழைத்து வந்ததும் அவளுக்கு மிகவும் ஆச்சரியம் உண்டானது..!!

இருந்தாலும் இன்னொரு புறம் .. "ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத.. நிச்சயம் விக்ரம் உனக்கு துணி எடுத்து கொடுப்பதற்காக இங்க கூட்டிட்டு வந்திருக்க மாட்டான்.. வேறு ஏதாவது விஷயமா இருக்கும்" , என்று அவளின் மூளை அவளை எச்சரித்தது...!!

"விக்ரம் இங்க.. எதுக்கு??"

" ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. ஏன் எதுக்குன்னு என்கிட்ட கேள்வி கேட்காம.. நான் சொல்றத மட்டும் செய் என்று.. இப்போ முதல்ல காரில் இருந்து இறங்கி வா..", என்றான் அழுத்தமாக..

கதவை திறந்து கொண்டு இறங்கியவள் அவனை பின் தொடர்ந்து சென்றாள்...

விறு விறு என்று நிற்காமல் நேராக சென்றவன்.. இரண்டாவது தளத்திற்கு வந்து நின்றான்...

அங்கு சில.. புது மாடல் சுடிதார்கள், சல்வார்கள், ஷிபான் சேலைகள் என குவிந்து கிடந்தது...!!

அங்கிருக்கும் ஊழியரிடம் புதிதாக வந்திருக்கும் அனைத்து சுடிதார் மாடல்களையும் எடுத்துப் போட சொன்னான்...

இள ரோஜா வண்ணத்தில் ஒரு சுடிதார் , இளமஞ்சள் நிறத்தில் ஒரு சல்வார், மயில் கழுத்து நிறத்தில் ஒரு ஷிபான் சேலை.. என்று வண்ண வண்ண நிறத்தில் பல வகை துணிமணிகளை தேர்வு செய்தவன் பிறகு அதை அவள் மீது வைத்து அழகு பார்த்தான்..

அவன் தேர்வு செய்த அனைத்து நிறங்களுமே அவளுக்கு கணக்கச்சிதமாக பொருந்தியது..

என்னுடைய அளவு இவனுக்கு எப்படி தெரியும்??.. சரியாக எடுத்துக் கொடுக்கிறான்.. இது எப்படி சாத்தியம்??, என மனசுக்குள் எண்ணங்களை ஓட விட்டவள்.. அவனைக் கேள்வி குறியோடு நோக்கினாள்....!!

" இதெல்லாம் உனக்கு புடிச்சிருக்கா??", என்று கேட்டான் மரத்த குரலில்..

"ம்ம்"

" அப்போ ஓகே.. இது எல்லாத்தையும் பேக் பண்ணிடுங்க", என்று அந்த ஊழியருக்கு உத்தரவிட்டு விட்டு.. பில் செக்சன் நோக்கி நகர்ந்தான் அவன்..

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உடைகளுக்கும் தன் போனிலிருந்து பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்தான்..

அதே நேரம் இவர்கள் நின்று கொண்டிருந்த இன்னொரு வரிசையில் நின்றிருந்த ஒரு தடியன் இவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்....

பணத்தைக் கட்டிய அடுத்த நிமிடமே, விக்ரம் நகர்ந்து விட.. அவனை பின்தொடர்ந்து தேவசேனாவும் வந்தாள்..

அந்த தடியனை கடந்து மெல்ல நகர்ந்தவளின் கையை சட்டென்று பிடித்து இழுத்தான் அந்த கயவன்..!!

" ஏய்.. யார் நீ முதலில் என் கையை விடு..", என்று அவள் திமிர..

அந்த கயவனின் பிடி மேலும் இறுகியது..!!

அவளின் தோள் மீது கை போட்டு அவளை அணைக்க முயன்ற போது... அவன் முகவாய் கட்டையில் ஓங்கி ஒரு குத்து விழுந்தது....!!

உங்களின் யூகம் சரி தான்..!!

அவன் முக வாய் கட்டையை பதம் பார்த்தது வேறு யாரும் அல்ல.. நம் விக்ரம் சக்கரவர்த்தி தான்..!!

" என்ன தைரியம் இருந்தா பொது இடம் என்று கூட பார்க்காம ஒரு பொண்ணு கிட்ட வம்பு இழுப்ப??", என்று கேட்டுக் கொண்டே அவனை சரமாரியாக வெளுத்து வாங்கினான் விக்ரம்...

அதற்குள் அங்கு பொதுஜனம் கூடி விட்டது வேடிக்கை பார்க்க....

ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதை பார்த்ததும் தேவசேனாவிற்கு பயத்தில் உடல் நடுங்கியது..!!

" இந்த கைதானடா அவளை பிடிச்சது..??, இரு இந்த கையை என்ன பண்றேன் பாரு..", என சொல்லிக் கொண்டே அவனின் கையை முறுக்கினான் அவன்...

வலி தாங்காமல் அவன் அம்மா என்று அலறவும்..

" ப்ளீஸ் விக்ரம் விட்டுடுங்க.. எல்லாரும் நம்மளையே வேடிக்கை பாக்குறாங்க . வாங்க நம்ம இங்கிருந்து போயிடலாம்..", என்று அவனின் கைகளை இறுகப்பற்றி கொண்டு இழுத்தாள் ..

" இந்த பொண்ண கைய புடிச்சு இழுத்தா உனக்கு என்னடா வந்துச்சு..??", என்று அந்த தடியன் கேக்கவும் இவனுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது...!!

" அவள தொட்டா எனக்கு கோபம் வரும் டா.. ஏன்னா... அவள் என்னோட மனைவி.. எனக்கு சொந்தமானவள்.. அவ மேல யார் கையை வைத்தாலும் எனக்கு கோபம் வரும்.. இன்னொரு முறை நீ அவகிட்ட வம்பு இழுக்கிறதை பார்த்தேன்.. கொன்னுடுவேன் உன்னை..", என்று மிரட்டி வைத்தான்..

போன நிமிடம் வரை இப்படி அடித்துக் கொள்கிறார்களே என்ற பயத்தில் நின்று இருந்த தேவசேனா..

எப்போது அவன் தன் வாயால் அவளை தன் மனைவி என்று கூறினானோ.. அந்த கணமே, மனதில் இருந்த பாரமெல்லாம் குறைந்து போய்.. இலவம் பஞ்சாய் காற்றில் மிதக்கலானாள்....!!

ஒரு சாரல் மழையாலே என்னை நனைய வைத்தான்..
என்னை நனைய வைத்தான்
புயலாக உருமாறி
என்னை வேரோடு
சாய்த்து விட்டான்….ஆன்….
He stole my heart..
He stole my heart..
He stole my little little heart..💕💕

இங்கு காட்சிகள் அழகாய் அரங்கேற.. அங்கு இன்னொரு பக்கம்......

ஒரு ஜோடி விழிகள் வன்மத்துடன் இவர்களை கண்காணித்த வண்ணம் இருந்தது..!!

- தொடரும்...
 
Author: praba novels
Article Title: அத்தியாயம் 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
90

Expected
 
Top