அத்தியாயம் 6

Joined
Aug 19, 2025
Messages
13
அத்தியாயம் 6:

அதிகாலையே சிவன் கோவிலை நோக்கி சென்ற ஈஸ்வர், ரிதி இருவரும் நடக்க துவங்கி சிறிது தூரம் கடந்த நேரத்தில்,
" நிக்கு ரிதி.." என சட்டென தன் அருகே கேட்ட அந்த குரலில் அதிர்ந்தவள், பயத்தில் உறைந்து நிற்க,

அவள் நடுக்கத்தை கண்ட ஈஸ்வர், அவளை தோளோடு அணைத்துக் கொண்டு, " நான் இருக்கேன் சம்ரு பயப்படாத.. யார் இவன்??" என எதிரே நிற்பவனை கேள்வியாய் பார்த்துக் கொண்டு நின்றான்..

ரிதியின் தோளில் இருக்கும் ஈஸ்வரின் கையை கோபமாய் பார்த்துக் கொண்டே வந்தவனோ, அருகே சென்று பட்டென அவன் கைகளை தட்டி விட்டு, " ஆரானடா நீ கள்ளா.. நினக்கு ஈ பெண்குட்டியோடு ஏது ஜோலியானு இவிட??? அவ ஞான் பிரேமிக்கிண்ட பெண்ணானு... நின்ட கையை எடுத்து கொள்ளு... அல்லங்கில் ஞான் நின்ன கொன்னு களையும்..." என கண்கள் சிவக்க கோபத்தில் திட்டிக் கொண்டே அவள் மீதிருந்த கைகளை எடுக்க செல்ல,

ஈஸ்வரோ அவன் பேச்சில் சினந்து அவளை இன்னும் இறுக்கிக் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு, " நீ யாரா வேணா இருந்துட்டு போ.. ஆனா இவளை தொடவோ பயப்படுத்தவோ நினைச்ச.. அப்புறம் உன் உயிரு உன் கிட்ட இருக்காது..." என விரல் நீட்டி கர்ஜனையாய் கூறியவன் அவள் கைப்பிடித்து கொண்டு முன்னே நடக்க துவங்கினான்...

அதுவரை பயத்தில் கண்களை மூடி நின்றிருந்த ரிதி, அவன் குரலில் சற்றே நிமிர்ந்து ஈஸ்வரின் முகம் பார்க்க, அதீத நெருக்கத்தில் அவன் முகத்தை கண்டவள் ஒரு நொடி அவன் கண்களையே இமைக்காமல் பார்த்து விட்டு பின் விலகி செல்ல,

அவள் விரல்களை தன் விரல்களோடு பிணைத்து கொண்ட ஈஸ்வர் அவளை தன் அருகே நிறுத்திக் கொண்டு, " யாரு அவன்?? எதுக்கு இப்படி அவனை பார்த்து பயப்படுற??" என அவளை கேட்டான்...

அதில் சற்றே பயத்தில் இருந்தவள் திக்கி திணறி, " ஆ.. ஆயால்.. ஷி.. ஷிபி குட்டன்.. மேனேஜர் இண்ட..."என அவனை பற்றி கூறும் முன்னே,

பின்னிருந்த அவனோ," ரிதி" என கோபமாய் கத்திக் கொண்டே அவள் கைப்பிடித்து தன் புறம் இழுத்தான்...

அவள் கைப்பிடித்த கோபத்தில் அவனை ஓங்கி உதைத்த ஈஸ்வர், " டோண்ட் டச் ஹெர்.. ஷீ இஸ் மை...." என தன்னை மறந்து கூற வந்தவன் சட்டென சுதாரித்து அமைதியாகி அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே நிற்க,

நடந்த கலவரத்தில் பயந்த ரிதி, ஷிபி எழுவதற்குள் அவனிடம் தமிழில் பேசி புரிய வைக்க திணறியவள் அவனை இழுத்துக் கொண்டு வேகமாய் ஓட துவங்கினாள்...

ஈஸ்வர் ஓட மறுத்து," ஹே.. எதுக்கு ஓடுற?? ஸ்டாப்..." என அங்கேயே நிற்க,

அவளோ அவனை இறைஞ்சும் பார்வையால் அழைத்துக் கொண்டு அவன் கைகளை இறுக்கமாய் பற்றிக் கொண்டு ஓடினாள்...

புதுவித அனுபவமும், அவள் கைப்பிடித்த நொடி தோன்றிய பரவசமும் அவனை ஏதோ செய்ய, அவள் விழி பார்வையில் சிக்குண்டவன் அவளின் கைகளுக்குள் தன்னை ஒப்படைத்துக் கொண்டு அவளை பார்த்தவாறே நடந்தானா?? இல்லை இல்லை அவளின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ஓடினான்...

ஷிபி வயிற்றை பிடித்துக் கொண்டு கீழே விழுந்ததில் உதடு தார் சாலையில் உரசி லேசான காயத்தோடு ரத்தம் வழிய, அதை துடைத்துக் கொண்டவன், " போய்க்கோ டி.. திரிச்சி நீ அங்கன தன்னே வரான் பெட்டு.. அப்போல் ஞான் நின்னை வலிதாயிட்டு நோக்கி கொள்ளாம்..." (போ டி போ.. நீ திரும்ப அங்க தானே வரணும்.. அப்போ பெருசா உனக்கு இருக்கு பிரச்சனை..)என கோபமாய் கூறிக் கொண்டு தன் காரை ஓங்கி உதைத்து கார் கதவை வேகமாய் திறந்தவன் அங்கிருந்து அதீத வன்மத்தோடு சென்றான்...

இங்கோ தன் கைகளை இறுக பற்றிக் கொண்டு ஓடி வரும் அவள் முக பாவனையை கண்டவன் எண்ணம், தன் படத்தில் வரக்கூடிய இப்படியான ஒரு நிகழ்வினை ஒரு முறை சிந்தித்து கொண்டிருக்க, அதில் வரும் அவள் முக பாவனையை இவளையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே வந்தான் ஈஸ்வர்...

சற்று தூரத்தில் அவன் கைகளை விடுவித்து முழங்காலில் கையை ஊன்றி மூச்சு வாங்க நின்ற ரிதி, " அதானு அம்பலம்... " என விரல் நீட்டி கோவிலை காட்டிட,

அவளையும் அவள் விரல் போன இடத்தையும் கண்டவன் விழி விரித்து நின்றான்...

எனில் அங்கு வில்வ மரத்தின் கீழ் ஒரு சிறிய சிவன் சிலையும் நந்தி சிலையும் இருக்க, அதன் கீழே சற்று தள்ளி தாமரை மலர்களை கொண்ட ஒரு ஏரி இருந்தது...

கிட்டதட்ட ஒரு நூறு கிலோ மீட்டர் வரை அந்த ஏரி மட்டுமே இருக்க, அதனை சுற்றி ஆகாயத்தாமரை இலைகள் பச்சையாகவும், பூக்கள் கத்தரிப்பூ நிறத்திலும், வேர்கள் ஆழமாகவும் இருக்க, அங்கங்கே சிவந்து விரிந்திருந்த தாமரை பூக்கள் அவ்விடத்தை அழகாய் தோற்றமளித்த படி இருந்தது...

அவ்விடத்தின் அழகை கண்டு பிரமித்து போன ருத்ரேஷ்வர் " வாவ்..." என மனதுக்குள் கூறிக் கொண்டே அவ்விடத்தின் அழகை தன் கழுத்தில் இருந்த கேமராவை கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்தான்..

எப்போதும் ஈஸ்வர் தான் ஜெயிக்க வேண்டும் என்பதை விட, தன் படம் ஒவ்வொரு அசைவிலும் மக்கள் மனதில் நிலைபெற வேண்டும்.. அதன் பின்பே வெற்றி அடைய வேண்டும் என்பதிலேயே உறுதியாய் இருப்பவன்...

அதனால் அங்குள்ள ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்த பின் அதை மனதில் குறித்துக் கொண்டு நின்றான்...

இங்கு ரிதியோ அவனை ஷிபின் கண்களில் சிக்காமல் காப்பாற்றுவது எப்படி என சிந்தித்து தான் கழுத்தில் இருந்த முத்து மாலையை கடித்துக் கொண்டே, பயந்த விழிகளோடு அவனையும் அவ்விடத்தையும் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே இருந்தாள்...

எதேர்ச்சையாக அவள் புறம் திரும்பிய ஈஸ்வர், அவள் இதழ்கள் மாலையில் குவிந்து நிற்கும் அழகையும், வெண்ணிற பற்களின் அழகையும், உருண்டு சூழலும் அவளின் கருவிழிகளையும் கேமராவில் மட்டுமன்றி தன் ஆழ்மனம் வரை படம் பிடித்துக் கொண்டான்..

கண்களை சிமிட்ட மறந்து அவளையே பார்த்தும் கொண்டு நின்றவன் முன் சொடக்கிட்டு அழைத்த ரிதி, " கழிஞ்சோ?? பெட்டன வெரு பூவாம்.( முடிஞ்சுதா.. வாங்க சீக்கிரம் போகலாம்.. ).." என பதட்டமாய் அவனை அழைக்க,

அவள் ஓசையில் சுயம் வந்தவன், " இல்ல மிஸ். சம்ரு... இன்னும் நான் சாமி கும்பிடல.. வெயிட் பண்ணு.... ஏன் இவ்வளவு அவசர படுற?? .." எனக் கூறிக் கொண்டே தன் சட்டையை கழட்டி அவள் கையில் கொடுத்தவன், ஏரியின் அருகே இருக்கும் சிறிய குளத்தில் மூழ்கி எழுந்தான்...

அவனை வெகுவாய் முறைத்தவள் விழிகளோ அவன் ஏறி வந்த கோலத்தில் அதிர்ந்து விழிகள் அவன் மீதே வெறித்து நிலைத்திருந்தது...

இருக்காதா பின்னே?? படிக்கட்டு தேகத்தில் மார்பின் முடிகள் திருத்தி இருக்க, அதன் நடுவே இரு இதயங்கள் சேர்ந்திருக்க, அதன் நடுவே ஈஸ்வர் பெயர் எழுதி அதன் மேல் ராஜ கிரீடம் அத்தனை நேர்த்தியாய் பச்சை குத்தப்பட்டு இருக்க,

அடர்ந்த கேசம் ஒன்றாய் சேர்ந்து இருப்பதை அவன் கோதிக் கொண்டு எழுந்து வர, அவன் முகத்தில் வழிந்த நீர் அவன் மேனியில் ஊடுருவி செல்வதை கண்டவள், எச்சில் கூட்டி விழுங்கி கண்கள் அகல விரிய அனைத்து நின்றிருந்தாள்...

அத்தனை குளிரிலும் அவன் தேகம் குளிர்ந்த நீரில் குளித்தாலும் சிறு நடுக்கமும் ஒன்றி பாறை போல இறுகி இருப்பதை கண்டவள், " செரியான வலிதானா ஆளானு..." என இதழ்கள் முணுமுணுக்க கூறிக் கொண்டவள் அவன் சட்டையால் முகத்தை மூடிக் கொண்டு திரும்பி நின்றாள்...

அவள் செயலில் சிரித்தவனோ, மெதுவாய் அவள் காதருகே குனிந்து, " என் டிரஸ்ஸ கொடுக்கலனா உன் புடவையை தான் எடுத்து போர்த்திக்கணும்... கோவிலுக்குள்ள துண்டு இல்லாம போக முடியாது மிஸ் சம்ருதா..." என கூறிட,

அவன் பேசும் வார்த்தைகள் புரியவில்லை எனினும் அவனின் கிசுகிசுப்பான குரலில் தேகம் சிலிர்த்தவள் அவன் சட்டையை கையில் கொடுத்து விட்டு, தன் பாவாடையை இரு கைகளால் பிடித்து தூக்கிக் கொண்டு ஓடி கோவிலுக்குள் நுழைந்து கொண்டாள்....

அதில் தன்னிலை மறந்து சிரித்தவன், அவளிடம் கிடைக்கும் புதிரான உணர்வுகளை எண்ணி கொண்டே தன் சிவனை தரிசிக்க சென்றான்...

உள்ளே சிவன் வில்வ மாலையோடு அழகாய் காட்சியளிக்க, மனம் நிறைந்த பக்தியோடு சிவனை கண்டு விழிகளை சிமிட்டாமல் கைகளை கூப்பிக் கொண்டிருந்த ஈஸ்வர், " ஓம் நமசிவாயா.. " என மூச்சை இழுத்து விட்டு சத்தமாய் மூன்று முறை கூறியவன், " என் வெற்றிக்கான முதல் படியை எனக்கு காட்டினதுக்கு நன்றி... ஆனா இவ கிட்ட என்னால ஏன் இயல்பா இருக்க முடியல.. கோபப்பட முடியல.. அவ கண்களை பார்த்தாலே என் மனசு படபடக்குதுன்னு தெரியல... ஆனா நிச்சயம் இது காதல் இல்ல.. காதலா இருக்கவும் வேண்டாம்.. ஒரு முறை பட்ட வலியே என் மனதுக்குள் ஆறாம ரணமா இருக்கு... இவளை வெறும் ஒரு ப்ராஜெக்டா மட்டும் பார்த்து, இவளை நடிக்க வச்சு படம் ஜெயிச்ச பின்னாடி இவளுக்குன்னு பணத்தை கொடுத்து இங்கேயே அனுப்பி வச்சிடுவேன்... அதுவரைக்கும் எல்லாம் நல்லபடியா அமையனும்..." என வேண்டிக் கொண்டவன் அறியவில்லை காலம் முழுதும் அவள் பின்னால் அவளின் கடைக்கண் பார்வைக்காக அவள் சுற்றப் போகிறான் என....

அதை அறிந்த சிவனோ காற்றில் பறந்த அவள் தாவணியின் தலைப்பை அவன் கையில் படற செய்து, தன் லீலையை அவனுக்கு எளிதாக புரிய வைத்துக் கொண்டு அவனை ஆசிர்வதித்தார்...

அதை அறியாதவன் கண்களை மூடிக் கொண்டு தன் கையில் விழுந்த தாவணியோடு சேர்த்து சிவனை மேலே கை தூக்கி கும்பிட்டு வணங்கிட,

அவளோ அவன் தாவணியை இழுத்த வேகத்தில் அவன் மார்பிலேயே மோதி இதழ்கள் உரச அவன் வெற்று மார்பில் மோதி நின்றாள்...

இருவருமே ஒரு கணம் நடந்ததில் திகைத்து நிற்க,

யாரோ வரும் அரவம் கேட்கவும் சட்டென விலகி நின்றனர்...

ரிதி நாணத்தில் அங்கிருந்து ஓடி வெளிய சென்று நிற்க,

அங்கு கோபத்தில் நின்றிருந்த ஷிபி அவளை வேகமாய் இழுத்து தன் காருக்குள் தள்ளி கதவை அறைந்து சாற்றி விட்டு புயல் வேகத்தில் காரை கிளப்பி இருந்தான்...

அவளை தேடி காரின் பின்னே வேகமாய் ஓடிய ஈஸ்வர் காரை தொடும் நொடி சட்டென ப்ரேக் அடித்து நிற்க,

அதில் வேகமாய் காரின் மீது ஏறியவனோ காரின் முன் கண்ணாடியை கையால் ஓங்கி குத்தி உடைத்தான்...

ஷிபி அதனை கண்டு கொள்ளாமல் காரில் இருந்து ரிதியை இறக்கி இழுத்துக் கொண்டு தங்களின் வைத்தியசாலைக்குள் நுழைய,

அவள் பின்னே வேகமாய் ஓடிய ஈஸ்வர் அவளை இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டான்...

ஷிபி அவனை தாக்க, அவனின் அத்தனை தாக்குதல்களையும் எதிர்கொண்டு அவனுக்கே திருப்பி கொடுத்த ஈஸ்வர்,
" நீ யாரா வேணா இருந்துட்டு போ... இனி இவ மேல உன் நிழல் கூட விழ கூடாது அண்டெர்ஸ்டாண்ட்??" என கர்ஜித்தவன் அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு நடக்க,

அவன் செயலில் அதிர்ந்த கனி நெஞ்சில் கை வைத்து அங்கேயே மயங்கி சரிய,
ரிதியோ அவன் செயலில் பயமும் அதிர்ச்சியும் கலந்து ஷிபியை கலவரமாக திரும்பி பார்த்தாள்...

எனில் அவனோ தன் பாக்கெட்டில் இருந்த சிகாரை பற்ற வைத்து புகையை குப்பென உள்ளே இழுத்தவன் சொடக்கிட்டு ஈஸ்வரை அழைத்தான்...

ஷிபி ரிதியை ஈஸ்வருக்கு விட்டுக் கொடுப்பானா???

ஈஸ்வர் தன் ப்ராஜக்டாக எண்ணிக் கொண்டிருக்கும் ரிதியை அவனிடம் இருந்து மீட்பானா???
 
Author: நீல தூரிகை
Article Title: அத்தியாயம் 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
96

ஆக ரெண்டு பயலும் அந்த புள்ளையோட மனச புரிஞ்சிக்கல 🤦🏻🤦🏻🤦🏻
 
Top