அத்தியாயம் 6

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
67
அத்தியாயம் 6


இரவு நேரம். இம்முறை உணவு அறைக்கு வராமல் அழைக்க ஆள் மட்டும் வந்து போக, தயங்கியே கீழே வந்தவள் வேந்தனை தவிர்த்து அங்கிருக்கும் மொத்த குடும்பத்தையும் ஒரே இடத்தில் கண்டு கொஞ்சம் பயந்து தான் போனாள்.



என்ன தான் தைரியம் இருந்தாலும் அத்தனை பேர் பார்வைக்கு முன் அவளால் நகர கூட முடியவில்லை. அசையாது அஞ்சலி நின்று விட " வாம்மா. உனக்காக தான் வைட்டிங். வந்து உக்காரு வா " தாத்தா பக்கத்து இருக்கையை காட்ட, தன்னையே முறைக்கும் பெரிய அத்தையை பார்த்தப் படியே பவ்வியமாய் அமர்ந்துக் கொண்டவள் பக்கத்திலே காலியாய் இருக்கும் இருக்கையை கவனித்தாள்.



" அது வேந்தனுக்கு. அவன் வந்துட்டு இருக்கான். நீ சாப்பிடு கீதா. அவனுக்காக வெயிட் பண்ணுறேன்னு உன் உடம்ப கெடுத்துக்காத. வேலை செய்யிறவன் வெளிய கூட சாப்பிட்டு வருவான். என் குமாரிக்கூட அத தான் சொல்லுவேன். ஆமா தானே " மாணிக்கத்தின் பேச்சில் பழைய நினைவில் லேசாய் மலர்ந்த ராஜகுமாரி ஆமோதிப்பது போல் தலையை அசைத்தார்.



வட இந்திய, தென் இந்திய உணவுகள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்க பேத்தியோடு சிரித்து உண்பவரை தவிர்த்து யாருக்கும் அந்த இரவு உணவு உள்ளே இறங்கவில்லை. அதற்கு முதல் காரணம் மாணிக்கம் மற்ற பிள்ளைகளை தவிர்த்து கீதாஞ்சலியிடம் ஓவர் ஒட்டல் வைப்பதே.



அவரை சொல்லி குத்தமில்லை. இதுநாள் வரை தாத்தா என்ற பாசத்தில் இவர்கள் யாரும் அவரை நாடியதில்லையே. பணத்தேவை இருக்கும் போதே மாணிக்கம் என்பவர் உயிரோடு இந்த வீட்டில் நடமாடுவதே அவர்கள் கண்ணிற்கு தெரியும்.


" நாக்கு செத்து போச்சு கீதா. என்ன தான் கோடி ரூபாய் கொடுத்தாலும் நம்ப ஊருல சமைக்கிற பக்குவம் இங்க யாருக்கும் வராது. பேசாம நம்ப ஊர் சமையல்க்காரர் ஒருத்தர் வைக்க போறேன் "



" எதுக்கு தாத்தா அந்தளவுக்கு போறீங்க? நானே சமைக்கிறேன். உங்களுக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க "


" உனக்கு சமைக்கலாம் தெரியுமா? " ஆச்சர்யமும் ஆர்வமும் கலந்து கேட்பவரை மெல்லிய புன்னகையில் பார்த்த கீதா சுற்றி இருக்கும் ஜீவன்களை மறந்தே போனாள்.


" என்ன கேள்வி தாத்தா? என் பாட்டி எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்திருக்காங்க. நாளைக்கு மதிய உணவு நான் உங்களுக்கு செய்யிறேன் " பெரிய புன்னகையில் அவள் சொல்ல



" நல்லாருக்கே இது. அப்போ நீ சமைச்சி ஆபீஸ்க்கு வந்துரு " சிரித்துக்கொண்டே சொல்லிட அதிர்ந்து போனாள் கீதா. இது அவள் எதிர்பாராதது.



" தாத்தா அங்க எதுக்கு நான்? இல்ல "


" உன் புருஷன் வேலை பார்க்குற இடம் தான் கீதா. அங்க வர என்ன தயக்கம்? நீ ரெண்டு பேருக்கும் சேர்த்தே எடுத்து வந்துரு " நைசாக கோர்த்து விட்டு கிளம்பி விட, தன்னை நினைத்தே நொந்துக் கொண்டாள் கீதாஞ்சலி.


' என் வாயை வச்சிட்டு சும்மா இருந்திருக்கனும். வீனா வாயை விட்டு வம்ப விலைக் கொடுத்து வாங்கிருக்கேன். இதுலாம் உனக்கு தேவையா கீதா? வேண்டாம்னு விட்டு போக வேண்டியவனை விடாமல் நெருங்கவே சதி நடக்குது ' புலம்பியவள் எதார்த்தமாய் நிமிர ஹேமாவின் உஷ்ண பார்வை உக்கிரமாய் எரித்தது அவளை.



ஆதரவான தாத்தா பாட்டியும் இல்லாமல் அந்த இடமே வேறு உலகமாய் அவளிற்கு தோன்ற பாதிலே எழ முயன்றவள் தோளை பற்றி ஒரு கரம் அழுத்தியதில் பின்னே திரும்பி பார்த்தவளின் கண்கள் அகல விரிந்தது வேந்தனைக் கண்டு.



' இவன் எப்போது வந்தான்? ' என்பவள் முழிப்பை கண்டும் காணாதவன்



" பிளேட்ல வச்ச சாப்பாடு அப்படியே இருக்கு அதோட எழுந்திரிக்கிற? முழுசா சாப்பிடு " இறுக்கமான அவன் இரும்புக் குரலில் தடுமாறிய கீதா


" நான் சாப்பிட்டேன். போதும் " குரலிலே கெஞ்சி எழ முயன்றவளுக்கு மற்றவர்கள் பார்வையை தாங்கி கடக்க முடியவில்லை என்பதே உண்மை.



" அதான் அவ போதும்ன்னு சொல்லுறாளே அமுதன். விடேன். நீ பிரெஷ்ஷப் பண்ணிட்டு வந்து சாப்பிடு ப்பா " பாசமான ஹேமா குரலில் பார்வையை மனைவியை விட்டு அகற்றாதவன்



" கிளைன்ட் கூட ஒரு டின்னெர் மீட்டிங் முடிச்சிட்டு தான் வரேன் ம்மா. அஞ்சலி உன்னை சாப்பிட சொன்னேன். எனக்கு தெரியும் நீ இன்னும் முழுசா சாப்பிடலனு. நீ சாப்பிடு அதுவரை நான் இங்கையே இருக்கேன் " உறுதியாய் சொல்லிய வேந்தன் அருகிலே இருக்கையை இழுத்துப் போட்டு அமர இன்னும் சங்கடமாகி போனாள் பாவை.



" நிஜமா நான் சாப்பிட்டேன். முதல்ல நீங்க கிளம்புங்க " காதில் கிசுகிசுக்க



" நீயா சாப்பிடுறியா? இல்ல நான் ஊட்டி விடவா? அப்றம் எனக்கு கையில சாப்பாடு எடுத்து ஊட்டி விடுறதுலாம் பிடிக்காது " அவளுக்கு மட்டும் கேட்க்கும் குரலில் கிசுகிசுத்த வேந்தன் கண்ணடிக்க விக்கித்தவள் விருப்பமே இல்லாமல் உணவை உள்ளே இறக்கி விட்டு யாரையும் பார்க்காது அறைக்கு திரும்பியவளை நிழல் போல் தொடரும் மகனை கடுப்பாய் பார்த்தார் ஹேமா.



" இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ!!" போற போக்கில் கல்பனா கொளுத்தி போட்டது வேலையை ஆரம்பித்தது ஹேமா மனதில்.



இங்கு அறைக்குள் ஓட்டமாய் நுழைந்த கீதா இழுத்து பிடித்திருந்த மூச்சை அவசரமாய் வெளியிட்டு பதட்டத்தை சீராக்க முயன்றாள். காதில் கணவன் கிசுகிசுத்த வார்த்தைகளே ரீங்காரம் போல் ஒலிக்க, எச்சில் விழுங்கினாள் பேதை. இப்போதெல்லாம் அவன் பார்வையே உடலில் கிளர்ச்சியை தூண்டுவதை உணர்கிறாள். இதில் அவன் இரட்டை அர்த்தம் பொதிந்த வார்த்தை கற்பனை உணர்ச்சிகளை கிளப்ப திக்கு முக்காடி தான் போகிறாள் கீதாஞ்சலி.



பருவக்காலம் போல் குறைந்த காலமே இந்த காதலும் காமமும். என்று அவன் நினைவு திரும்புகிறதே அன்றே உன் வாழ்க்கையும் மொத்தமாய் முடிந்து விடும்... என்றெல்லாம் மனசாட்சி மனநிலையை கெடுக்க முயல கதவு லாக் போடும் சத்தத்தில் திரும்பியவள் வேந்தனைக் கண்டாள்.



மந்தகாச புன்னகையில் நெருங்கும் வித்தக் காரனை கலவரமாக தான் பார்த்தாள் கீதாஞ்சலி. " என்னை ரொம்ப மிஸ் பண்ணியோ? " குதர்க்கமாய் கேட்டுக் கொண்டே அவளை நெருங்கிட விழித்து நின்ற கீதா



" அப்.. அப்படிலாம் எதும் இல்ல. எப்பவும் போல தான் " திக்கி திணறி சொல்லியவள் பார்வையை திருப்பிக் கொள்ள தாடைப் பற்றி மீண்டும் தன்னை பார்க்க செய்தான் வேந்தன்.




" ஆனா உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் ஜக்கரி. நீயும் என்னை மிஸ் பண்ணுறேன்னு தெரியும்டி. உதடு தான் சமாளிக்குது. ஆனா கண்ணு காட்டிக் கொடுக்குதே " அஸ்கி குரலில் சொல்லியவன் உறைந்து நிற்பவளின் உதட்டை விரல் கொண்டு வருடி விட தொண்டை வறண்டு நின்றாள் தவிப்பாய்.



கொஞ்சம் கொஞ்சமாக அவன் பால் இழந்தவள் " நான் பிரெஷ்ஷப் ஆகிட்டு வரேன் பொண்டாட்டி. வெயிட் பண்ணு " குறும்பாய் சொல்லிவிட்டு அவன் நகர்ந்த பின்பே தன்னிலை மீண்டவள் நீரில் மூழ்கி மூச்சி விட திணறுவது போல் திணறினாள் அவன் காதலில் மூழ்கி.



காதலா? அதையும் அத்தனை உறுதியாக சொல்லிடும் அளவிற்கு வேந்தன் வெளிப்படையாய் சொல்லிடவில்லை. அவள் தான் நடக்கும் அனைத்திற்கும் காதல் ஒரு காரணம் என பின்னி நினைத்துக்கொண்டிருக்கிறாள்.



அவள் க்ஷணச் சித்தம் க்ஷணப் பித்தம். ஒரு நொடி காதலாய் ஏற்க நினைப்பவளே மறு நொடி அபத்தம் என தப்பி விலகி ஓடவும் பார்க்கிறாள் வேந்தனை விட்டு. விபத்திற்கு முன்பு அமுதன் தன்னை நடத்திய விதம் இன்றும் வடுவாய் நெஞ்சில் இருக்க தானே செய்கிறது.



அவனை மறந்து இவனை ஏற்க நினைத்தாலும், காயம் கண்ட மனம் மீண்டும் வலியை தாங்க மறுக்கிறது.



பல்வேறு யோசனையில் தலை பாரம் கொள்ள மெத்தையில் அமர்ந்தவள் துவண்டு போனாள் மனதின் போராட்டத்தில். " நான் என்ன தான் பண்ணட்டும்? இப்படி உருகி காதலிக்கிற இவரை நம்பி ஏற்கனுமா? இல்லை வேண்டாம்னு விரட்டி ஒதுக்கணுமா? அதையும் தான் பண்ணேன். ஆனாலும் விடாமல் நெருங்கி வராரே. நானும் சராசரி பொண்ணு தான். ஆசை பாசம், கணவனோடு ஒரு இல்லறம்னு கனவு கண்டவள் தான். முதல் முறை அமையல. ஆனா இப்போ!!! அவரோட நெருக்கத்துல என்னையே மறந்து போனாலும் என் தோற்றம் மாறலையே. அவர் அழகுக்கு முன்னாடி நான் எம்மாத்திரம்?!! என்ன விட எத்தனையோ அழகிங்க அவருக்கு கிடைப்பாங்க. அவரோட தேவைக்கும். வீணா மனச பறிகொடுத்து வேதனையை உண்டாக்க வேண்டாம் கீதா. இனியும் எதையும் மறைக்காம வெளிப்படையா அவருக்கு உன்கிட்ட என்ன தான் வேணும்னு கேட்டு இங்கிருந்து ஓடிரு. இந்த நாடக வாழ்க்கை வேண்டாம். வேண்டவே வேண்டாம். எந்த உறவா இருந்தாலும் அதுல நிஜம்னு ஒன்னு இருக்கனும். இங்க உனக்கு அது இல்லை. இந்த மூஞ்சியெல்லாம் யாராச்சும் பார்ப்பாங்களா " தன்னை தானே இகழ்ந்துக் கொண்டு கண்ணீர் தேங்கி அமர்ந்திருந்த கீதா அவன் காலடியிலே சுயம் பெற்று நிமிர்ந்தாள்.



அவன் தான் உடலில் நீர்த் துளிகள் தெறித்திருக்க, மேல் சட்டையின்றி டவலை மட்டும் கட்டிக் கொண்டு காட்சிக் கொடுத்தான் சந்தன தேகக்காரன். பாலில் செய்த ரசகுலா நிறம் அவன். விபத்தில் ஏற்பட்ட காயம் கூட ஆடவனை இன்னும் கவர்ச்சியாய் தான் காட்டியதே தவிர அழகில் குறையில்லை.



உடற்பயிற்சியில் முறுக்கேறிய தேகமும், படிக்கட்டு வயிறும் கொண்ட வித்தகனுக்கு எப்படி தன் மேல் ஈர்ப்பு வந்தது என்று தான் புரியாத புதிர் கீதாஞ்சலிக்கு.



" ஏதாச்சும் என்கிட்டிருந்து எதிர்பார்க்கிறியா அஞ்சலி? " காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த ஆழமான குரலில் அதிர்ந்த கீதா


" இ... இல்ல இல்ல. எனக்கு தூக்கம் வருது தூங்க போறேன் " சமாளித்து ஓடியவள் அவனிடம் பேச நினைத்ததையே மறந்து போனாள்.


" ஒரு நிமிஷம். உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன் "


" என்ன? "


" இங்க வா. ம்ச் முழிக்காம எழுந்து வா டி " அழுத்தி அவன் சொல்லவே நம்பி போனவளை கண்ணாடி முன் நிற்க வைத்து ஒரு பொருளை அவள் கையில் கொடுத்தவன் இரு கைகளையும் அவள் இடுப்பை சுற்றி முகத்தை பெண்ணின் தாடையில் பதித்து " ஓபன் பண்ணி பாரு " கண்கள் மின்ன அவன் சொல்லிட ஸ்தம்பித்து போனாள் கீதாஞ்சலி.


வெறுமென அவன் பார்வையே பல வேதியல் மாற்றங்களை அவளுள் நிகழ்த்தும். இதில் அவன் இப்படி ஒட்டிக் கொண்டு நின்றாள் எப்படி மூச்சை விடுவாள்.



" என்ன இது? "


" பிரிச்சு பாரு. உனக்கு பிடிக்கும் " என்பவன் குரலில் தெரிந்த சந்தோஷத்தில் பிரித்து பார்த்தவளின் கண்கள் இடுங்கியது கேள்வியாய்.


" என்ன இது செயினா? " சந்தேகமாய் கேட்டவள் அப்பாவியாய் கழுத்தில் வைத்து பார்க்க பற்கள் தெரிய சிரித்தவன்


" செயின் தான். ஆனா கழுத்துல போடுறது இல்ல " என்றவன் அவள் கையை இறக்கி இடுப்பில் கொண்டு வர ரோமம் சிலிர்த்தவள் பதறி விலகி நின்றாள் வேந்தனை விட்டு.


*********

வேந்தன் காலையில் எங்கு விட்டு சென்றானோ அதே ஹோட்டல் அறையில் தான் பித்து பிடித்தவளாய் கிடந்தாள் மௌனி. பர்சனல் மேனேஜர் தேடி வந்தவன் " நடந்த விபத்துல அமுதன் சாருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போனதா அவரை பார்த்த டாக்டர் சொன்னாரு. ஆனா வெளிய விஷயம் லீக் ஆகாம highly confidential ஆஹ் வச்சிருக்காங்க " கிடைத்த தகவலை சொல்லிவிட்டு வெளியேறிட இருட்டிலே மூழ்கி இருந்தவள்



" மறந்துட்டு போகட்டும். ஆனா எப்படி என்னை மறந்தான்? நோ அமுதன். நீ என்னை இப்படி ஏமாத்த கூடாது. உனக்கு பழைய நினைவு திரும்பனும். இல்ல எனக்கு நீ கிடைக்கணும். அதுக்காகவே எந்த லிமிட்க்கும் போவேன். நான் உன்னை எவ்ளோ லவ் பண்ணுறேன்னு இனி நீ பார்ப்ப ".
 
Last edited:

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Nov 26, 2023
Messages
23
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
New member
Joined
Jan 1, 2025
Messages
6
Super super super super.👌👌👌👏👏👏🤩🤩🤩🤩😍😍🥰🥰😍
 
Top