- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 5
" டேய்ய் இன்னும் யாருக்கு வெயிட்? நேரமாச்சு காரை எடு " சத்தியா குரலில் சந்தித்த கண்கள் விலகிக் கொள்ள விழிகளை அலைய விட்ட தேனிசை வெளிப்பக்கம் பார்வையை பதித்துக் கொண்டாள்.
ஏற்கனவே அவனை டிரைவர் என நினைத்தவளுக்கு சத்தியா ஏவி விடும் வார்த்தைகள் இன்னும் ஆழமாய் பதித்து விட்டன.
வெளியே வேடிக்கை பார்ப்பவளை கண்ணாடி வழியே பார்த்த சத்தியா " என்னம்மா பக்திலாம் பலமா இருக்கு? நெற்றி முழுக்க திருநீரா இருக்கு!" கேலியாய் கேட்க கண்களை உருட்டிய தேனிசை
" அது சொன்னா நீங்களா பயந்துருவிங்கன்னா. நேத்து ராத்திரி நான் வீட்டுக்கு வரயில பேய் ஒன்ன பார்த்தேன். நல்லா உசரம். எப்படியோ வீட்டுக்கு வந்தும் தூக்கமே இல்லை. அதான் காலையிலே கோவிலுக்கு போய் ஒரு கையிறு ஒன்னு கட்டிட்டு வந்தேன் " மனதில் எழுந்த நம்பிக்கையோடு கையை காட்டியவளை சிரிப்பை அடக்கி பார்த்தான் சத்தியா.
ஆனால் இருவரும் கவனிக்கவில்லை அங்கே இன்னொருவனின் இறுகிய இதழும் சிரிப்பை மறைக்க முயலுவதை. இம்முறை சத்தியா முழுதாக அவள் பக்கம் திரும்பிக் கொண்டவன்
" ஹேய் லூசு!! யாராச்சும் அந்த நேரத்துல போகிருப்பாங்க. அவங்க நிழல பார்த்துட்டு பேய்னு உளறிட்டு இருக்க. பேய்லாம் இல்லை "
" இல்லைண்ணா. உங்களுக்கு தெரியாது. நான் அந்த பேய் மேல மோதி விழுந்தேன். கண்ண திறந்தால் அங்க யாருமே இல்லை. அதுக்குள்ள பேய் தானே காணாமல் போக முடியும். நீங்களும் ராத்திரி நேரத்துல வெளிய தனியா போகாதீங்க "
" இன்னைக்கே போறேன். அப்படி எந்த பேய் உன்னை மிரட்டிருக்குன்னு நானும் பார்க்குறேன் " சீரியஸ்ஸாய் சொல்ல அரண்டு போனாள் தேனிசை.
" என்ன இதுலலாம் விளையாடுறீங்க. நான் உங்களுக்கும் கையிறு வாங்கி தரேன். அப்றம் போங்க " தீவிரமாக சொல்ல இன்னும் சிரிப்பு தான் கூடியது காரை ஓட்டுபவனுக்கு.
" அந்த சின்ன கயிறு காப்பாத்திருமா?? ஆமா உனக்கு ராத்திரி நேரத்துல வெளிய என்ன வேலை "
" பழைய வீட்டுக்கு பொய்ட்டு வந்தேன் "
" இனி ராத்திரி நேரத்துல தனியா போகாத. அப்படியே போகணும்னா இனி என்னை கூப்பிடு. புரிஞ்சிதா தேனிசை " என்றவன் அழைப்பில் ஒரு நொடி மின்னல் வெட்டியது போல் கருவிழி விரித்த விஷ்ணு காரின் முன் கண்ணாடியில் பெண்ணை பார்க்க அவளின் பார்வை மீண்டும் அவனோடு கலந்ததில் பதட்டமாகி போனாள்...
அதிர்ச்சியும், நம்ப முடியாத வியப்பிலும் ஒளிர்ந்த அடர் கண்களை சில வினாடி பார்த்தவள் சட்டென பார்வையை மீட்டு திரும்பிக் கொள்ள மெல்ல தானும் திரும்பிக் கொண்டவன் இதழ் ஓரம் சிறு முறுவலோடு கோவிலை நோக்கி காரை இயக்கிருந்தான்.
அரைமணி நேர பயணத்தில் கார் கோவிலை அடைந்தது. இனி நடந்து கொஞ்ச தூரம் செல்ல வேண்டும்.
" நீ காரை நிறுத்திட்டு வா. நான் முன்ன போறேன். தேன் அவனுக்கு கோவில் வழி சரியா நியாபகம் இருக்காது. கூட கூப்பிட்டு வா " என்ற சத்தியா அவசரமாக கிளம்பி சென்று விட காரை ஓரம் நிறுத்தி இறங்கியவனோடு தானும் இறங்கிய தேனிசை முறைப்பாகவே அவனை பார்த்தாள்.
இன்னும் காரை இடிப்பது போல் நிறுத்திய கோவம் போல. ஆனாலும் சத்தியா சொன்ன வார்த்தைக்காக காத்திருந்தவளின் பொறுமையை சோதிப்பது போல் இருந்தது விஷ்ணு செயல்கள்.
பொறுமையாக தாகம் தீர்த்து முடித்த விஷ்ணு, போனையும் கருப்பு கூலர் ஒன்றையும் எடுத்துக் கொண்டு காரை லாக் செய்ய அதற்குள் உச்சுக் கொட்டினாள் தேனிசை.
" எவ்ளோ நேரம்?? கொஞ்சம் சீக்கிரம் வரீங்களா? "
" ஏன் மேடம் நீங்க போனா தான் அங்க வேலையே நடக்குமா " காந்த குரலில் நக்கலாய் கேட்பவனை விழி விரித்து பார்த்தாள் தேனிசை.
குரல் கூட கொஞ்சம் ஆறுமுகத்தினை ஒத்திருந்தது. சாயல் கூட சந்தேகம் தந்தும் பெரிதாய் யோசிக்காத தேனிசை
" இந்த நக்கல் பேச்சுலாம் என்கிட்ட வச்சிக்காதீங்க. காரை ஓட்ட சொன்ன ஆள இடிக்கிற மாதிரி ஓட்டுறது. இந்நேரம் இடிச்சிருந்தா முடமாகிருப்பேன். ஒரு பொண்ணு நல்லாருந்தாலே கல்யாணமாகுறது கஷ்டம். அடிப்பட்டு நடக்க முடியாமல் போகிருந்தா யாரு கட்டிப்பா? " ஆதங்கம் தாளாமல் பேசியவளை கூலர் வழியே ஆழமாய் பார்த்த விஷ்ணு மதுராந்தகன் அவளை நோக்கி நடந்தான்.
பகலன் நடு வானை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்க, அவரின் வெப்பத்தில் துளிர்ந்த வேர்வையில் நிற்பவளின் முகத்தை பார்த்த விஷ்ணு " நான் கட்டிக்கிறேன் " அசால்ட்டாக சொல்லிவிட்டு கடந்து செல்பவனை வாயடைத்து பார்த்த தேனிசைக்கு சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டன தன்னிலை மீள.
'பொறுக்கி' டிரைவரை திட்டி விட்டு வேகமாய் நடந்த தேனிசை வேண்டுமென விஷ்ணுவை கடந்து ஓட்டமாய் நடக்க, நின்று அவளின் செய்கையை பார்த்தவனும் பின்னே சென்றான்.
தேனுவை பார்த்ததும் மீண்டும் லதாவிற்கு பற்றி எரிந்தது தேகம். பொங்கல் வைக்க வேலை பார்த்த லதா இவளை பார்த்ததும் " ஏய் தேன். இந்த விறகை பொறுக்கி கல் அடுக்கி பொங்கல் வைக்க ஏற்பாடு பண்ணு. வந்ததுக்கு இந்த வேலையாச்சும் செய் " கால் நெடுக்க வந்தவளை கொஞ்சம் அமர்ந்து மூச்சு வாங்க விடாமல் கட்டளை கொடுக்க தலையை ஆட்டிய பாவை சோர்வை காட்டாமல் வேலை பார்க்க சென்று விட தாமதமாகவே வந்த மதுரா தேனிசை எங்கே என தேடினான் பார்வையால்.
அவள் விறகை பொறுக்க சென்று விட, தேடி நிற்பவனை சத்தியாவின் அழைப்பு கவனத்தை மீட்டது.
கண்மணி துளசி பூஜைக்கு வேண்டியவைகளை எடுத்து வைக்க, லைலா போனில் போட்டோவாக எடுத்து தள்ளியவள் கிடைத்த கேப்பில் விஷ்ணுவையும் எடுத்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
" எல்லாம் ரெடி அண்ணா. பொங்கல் வச்சதும் பூஜையை ஆரம்பிச்சிடுலாம் "
" அப்போ சரி. நீங்க அதை ஆரம்பிங்க "
" வாங்க அண்ணி. அதை போய் பார்ப்போம். ஹேய் லைலா வந்து கேட்குற பொருளை எடுத்துக் கொடு " மகளிடம் வேலை ஏவ கடுப்பாய் சலித்த லைலா
" அதான் அந்த வேலைக்காரி வந்துருக்காளே. அவ செய்வா. என்னை தொந்தரவு பண்ணாதீங்க " எரிச்சலாய் சொல்லி போனில் மீண்டும் பார்வை பதிக்க
" இவளுக்கு ஒரு பொறுப்பு வர மாட்டேங்குது. எப்போதான் மாறப் போறாளோ " புலம்பிய லதா அண்ணியை அழைத்துக் கொண்டு பொங்கல் வைக்க செல்ல அங்கு ஏற்கனவே அனைத்தையும் தயாராய் வைத்து விட்டாள் தேனிசை.
அதிலே பாதி உடல் வேர்வையில் குளித்து விட்டன பெண்ணிற்கு. பற்ற வைப்பது மட்டும் தான் பாக்கி.
" எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன். வேற எதும்? " மேல் மூச்சு வாங்க கேட்பவளிடம் தண்ணீரை நீட்டினாள் கண்மணி.
தேனிசைக்கே கண்கள் விரிந்தன பெண்ணின் செய்கையில்.
" இல்ல... வேணாம் " தயங்கி மறுக்க அப்போதும் நீட்டியவள்
" இந்த வெயில்ல இவ்ளோ வேலை பார்த்துருக்கீங்க. முதல்ல இந்த தண்ணீரை குடிங்க. நாங்க இனி பார்த்துக்கிறோம் "
" ஆமாம் ம்மா. நீ போய் கொஞ்சம் உக்காரு. பாரு எப்படி வேர்த்திருக்கு "
" இல்லை. நான் ஏதாச்சும் உதவி "
" நீ போய் ஓய்வு எடுக்குறதே உதவி தான். லதா நீயே சொல்லு அந்த பொண்ணுக்கிட்ட" துளசி சொல்லியதில் தன் வெறுப்பை வெளிக்காட்டாத லதா
" அதான் சொல்லுறாங்களே. கிளம்பு " பல்லிடுக்கில் கடித்து துப்ப அமைதியாய் நகர்ந்து விட்டாள் தேனிசை.
லதாவின் கண்ணை விட்டு மறைந்த தேனிசை மரத்தின் நிழல் கீழே அமர்ந்து நிம்மதி பெருமூச்சை கூட விடவில்லை " உனக்கு இங்க என்ன வேலை? " கணீர் குரலில் தூக்கி வாரிப்போட கடுப்பாய் திரும்பி விஷ்ணுவை பார்த்தாள் தேனிசை.
யாருக்கும் இவர்கள் பேசும் இடம் தெரிய வாய்ப்பில்லை. அதை கவனிக்கும் மனநிலையிலும் அவர்கள் இல்லை. ஆறுமுகமும் குணசீலனும் சாமியாரிடம் பிள்ளைகளின் ஜாதகத்தை கொடுத்து பூஜை விஷயங்களை சத்தியாவோடு கவனிக்க பெண்களோ பொங்கல் வைப்பதில் கருத்தாய் நிற்க ஒருத்தி இன்ஸ்டாவில் அடுத்து என்ன ரீல் போடலாம் என்ற குழப்பத்தில் ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தாள்.
இதில் எங்கே இவர்கள் தேனுவை கவனிக்க???
தன்னை உரிமையாய் கேள்வி கேட்கும் விஷ்ணுவை கடுப்பாய் பார்த்தவள் " நான் இங்க என்ன வேலை செஞ்சா உங்களுக்கு என்ன? நீங்க வந்த வேலையை பாருங்க. " எரிந்து விழ முகம் மாறாதவன்
" நான் என்ன வேலை பார்க்க வந்தேன்னு தெரியுமா? " மீண்டும் கேட்டதில்
" டிரைவர் வேலை தானே. ஒழுங்கா அதை பாருங்க. தேவை இல்லாமல் என்கிட்ட பேசுற வேலை வசிக்காதீங்க. நான் ஐயா கிட்ட சொன்னா அவ்ளோ தான் " எச்சரித்தாள் எதிரில் இருப்பவன் தான் அய்யாவின் மகன் என்பதை அறியாது.
" உன் அய்யாகிட்ட சொன்னா என்ன பண்ணிடுவாராம்? உங்க ஐயா என்ன ஐய்யனாரா? "
" ரொம்ப பேசுற நீ... என் ஐயாகிட்ட இதை சொன்னேன். உன் வேலை போகிரும் ஜாக்கிரதை. பொறுக்கி " இறுதி வார்த்தையை முனுமுனுத்து அங்கிருந்து செல்ல எத்தனித்தவள் அசைய மறுத்து நின்றாள் அவன் வார்த்தையில்..
நம்ப முடியா பார்வையில் திரும்பியவள் " என்னை எப்படிக் கூப்பிட்டிங்க " குரல் நடுங்க கேட்பவளின் முன்னே வந்து நின்றவன்
" கண்ணம்மா!.. என் கண்ணம்மா " அழுத்தி சொல்லியவனை கண்கள் கலங்க பார்த்தவள் எதுவும் பேசாது சென்று விட போறவளை பார்வை எடுக்காமல் பார்த்தவனின் தோளை தொட்டான் சத்தியா.
" இங்க என்னடா நிற்கிற? உன்னை எங்கெல்லாம் தேடுறது? பூஜை ஆரம்பிக்க போகுது வா "
" நான் வரல நீங்க போய் பாருங்க. நான் இவ்ளோ தூரம் வந்ததே உன் வார்த்தைக்கு மட்டும் தான் " முடிவாய் மறுக்க கெஞ்சாத குறையாக விஷ்ணுவை அழைத்து சென்றான் சத்தியா.
குடும்பமே கோவிலில் கூடியது.மூன்று பொங்கலும் கடவுள் முன் எடுத்து வைக்க அய்யரும் பூஜையை ஆரம்பித்தார். குடும்ப
ஜோசியம் பார்ப்பவரும் இவர்கள் பூஜையில் கலந்து கொண்டார்.
பூஜை சிறப்பாய் முடிய ஜோதிடர் முதலில் கல்யாணமாக போகும் தம்பதிகளின் ஜாதகத்தை தான் முதலில் பார்த்தார். ஆறுமுகத்திற்கு நெஞ்சு திக்திக் என அடித்துக் கொண்டது பயத்தில். எங்கே ஜாதகம் ஒத்து போகாமல் போய் விடுமோ என்ற பயத்திற்கு மாறாய்
" இவங்களுக்கு நீங்க யோசிக்காமல் கல்யாணம் பண்ணி வைக்கலாம். அத்தனை பொருத்தம் இவர்களுக்குள்ள. வர முகூர்த்தத்துலயே நிச்சயம் பண்ணலாம். அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணலாம். பிரச்சனைகள் வரும். அதை இருவருமே கடந்து சேர்ந்து வாழுவார்கள். எல்லாரையும் தாங்கி பிடிக்கிற தூண் இந்த உறவையும் தாங்கி பிடிக்கும் " அழுத்தமாய் சொல்லிய ஜோதிடர் சத்தியாவை அர்த்தமாய் பார்த்து சிரித்தார்.
" அப்போ ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்குலாம் தானே. என் பொண்ணு சந்தோஷமா இருப்பாளா? "
"நூறு சதவீதம் ஐயா. அந்த பையனாலே உங்க பொண்ணு சந்தோஷமா இருப்பாள். கவலைப்படாம கல்யாணம் பண்ணி வைங்க " நம்பிக்கையாய் சொல்ல சத்தியாவின் முகமே மாறியது.
அவனே இந்த திருமணத்தை செய்துகொள்ள ஒரு காரணம் இருக்கும் பட்சத்தில் அவனால் எப்படி அவள் சந்தோஷமாக இருப்பாள்? உண்மையில் கண்மணிக்குமே சத்தியாவின் எண்ணம் தெரிந்தால் இந்த கல்யாணம் நடக்குமா என்ற சந்தேகத்தில் இது எல்லாம் பொய் என்றே சத்தியா நினைத்தான்.
" அப்படியே என் பெரிய பையனோடதும் பார்த்திடுங்க " என்ற துளசி விஷ்ணுவுடையதை நீட்ட வாங்கி பார்த்து சில கணக்குகளை போட்டவர்
" இந்த ஜாதகத்துக்கு சீக்கிரமே திருமண யோகம் கூடி வருது " என்றதில் எல்லாரின் முகமும் சந்தோஷத்திலும் ஆச்சர்யத்திலும் மலர்ந்தன. ஆனால் அது நீடிக்கவில்லை அடுத்து அவர் சொன்ன வார்த்தையில்.
- தொடரும்...

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 5
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.