- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 5
" சாரிடி காமினி ஒரு முக்கியமான விஷயமா வெளிய போக வேண்டிய நிலைமை..... நீ பத்திரமா தங்கிக்கோ ..... எதாச்சும் ஹெல்ப்னா கால் பன்னு.... டேக் கேர் காமினி " என்ற ஆத்மீ காமினியை தன் வீட்டில் விட்டுவிட்டு வெளியேற தெரு கடைசியில் நின்ற காரில் எறி கொண்டாள் ஆத்மி.
எழிலுக்கு ஒரு ஹாய் சொல்லியவள் பின்னால் திரும்பி பார்க்க சிரிப்பு வந்துவிட்டது ஆரவை கண்டு. நெற்றி முழுக்க பட்டையை போட்டிருந்தவனை பார்த்தவள் " என்ன ப்ரோ இது மொத்தமா மாறி வந்துருக்கீங்க " என்று கேட்க ஆரவ் பதில் கூறுமுன்
" அது ஒன்னும் இல்ல சிஸ்டர்.... ரொம்ப நாளா இவனுக்கும் பொண்ணுங்களுக்கும் செட்டாக இருந்துச்சு...... ஆனா நேத்து தான் தெரிஞ்சிக்கிட்டேன் இவனுக்கு அந்த தாய்க்கிழவி தான் ஜோடினு..... பயபுள்ள இவங்க ட்ரீம்ல வந்து டூயட் பாடிருக்கு " என்று சொல்லியதில் சத்தமாக சிரித்து விட்டாள் ஆத்மி.
" நல்லா சிரிங்க..... நேத்து அந்த பேய் கத்துனது இன்னும் என் கண் முன்னாலே இருக்கு " என்று பயந்து சொல்ல
" அண்ணா பயப்பிடாதிங்க..... உங்களுக்கு ஒன்னும் ஆகாது " என சொல்லிய ஆத்மியை வியந்து பார்த்த எழில்
" டேய் ஆத்மி ஆறுதல் சொல்றலவுக்கு மகா பயந்தாங்கோலியா இருக்கியே மச்சி " என்று கிண்டல் பண்ண கோவமாக சிணுங்கினாள் ஆத்மி.
********* ******** *********
கொல்லிமலை அடையவே இரவாகி போனது. அந்த முனிவர் பெயரை கூறி அவர் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டார்கள்.
ஆனால் அவரின் குடிசையோ காட்டிற்குள் இருக்கவே பயந்து போன ஆரவ்
" டேய் பாவிகளா..... நாளைக்கு உச்சி வெய்யில்ல போய் அவர பாத்துக்குலாம்..... இப்போ எதாவது ரூம்ல போய் தங்கிக்குலாம் " என சொல்ல யோசித்த எழிலிடம்
" ஆமா சார் காலைல போய் அவர பாத்துக்குலாம்.... இந்த இருட்டுல போறது நம்ம யாருக்கும் பாதுகாப்பு இல்ல " என்று ஆத்மி சொல்லவே அவளுக்காக ஒத்து கொண்டான் எழில்.
கார் ஒரு ரோட்டோரத்தில் நின்றது. சுற்றி முற்றி பார்த்த எழில் " டேய் கணா ஆரவ் ரெண்டு பேரும் கார்ல இருங்க நா பக்கத்துல எங்க ஹோட்டல் இருக்குனு கேட்டுட்டு வரேன் " என்றவன் ஆத்மியை அழைத்து கொண்டு சென்று விட இருவரும் காரில் அமர்ந்து பாட்டை போட்டு கேட்டுகொண்டிருந்தனர்.
ஆரவ் பாடியபடி எதர்ச்சையாக திரும்ப உருவம் ஒன்று கையில் குழந்தையுடன் இருப்பதை கண்டு பயந்து போய் கணபதி மடியில் பாய்ந்து கொண்டான்.
" அடேய் எத பார்த்தாலும் ஏன்டா பயந்து சாவுற.... அது ஒரு பொண்ணுடா " என்று கணபதி சொல்ல தள்ளி அமர்ந்த ஆரவ் " அது பிசாசு மாதிரில நிக்குது.... என்னானு கேளு அதுகிட்ட " என்று கடுப்பாக ஆரவ் சொல்ல தலையில் அடித்துக்கொண்ட கணபதி
" ம்மா யாருமா நீ.... இந்த நேரத்துல இங்க என்ன பன்றிங்க " என்று கேட்க அந்த பெண்ணோ
" சார் நா இந்த ஊருக்கு புதுசு...... பஸ்ஸ மிஸ் பண்ணிட்டேன்..... என்ன கொஞ்சம் பஸ்ஸ்டாண்ட்ல விட்டிங்கனா போதும் " என்று சொல்ல கை குழந்தை நினைத்து சம்மதம் சொன்னவன் பின்னால் அமர சொன்னான்.
அந்த பெண் பின்னால் அமர்ந்து கொள்ள மீண்டும் இருவரும் பாட்டை கேட்டு கொண்டிருந்தனர்.
ஏதோ வித்யாசமான சத்தத்தில் பாட்டின் சத்தம் குறைத்த ஆரவ் காது குடுத்து கேட்க மென்று திங்கும் ச்சவுக்கு என்ற சத்தம் தான். சத்தம் பின்னால் இருந்து வர திகிலானது இருவருக்கும்.
கண்ணாடி வழியாக அந்த பெண்மணியை பார்க்க அவளோ தூக்கி வந்த குழந்தையை கை காலென கடித்து கொதறி சாப்பிட்டு கொண்டிருபதை பார்த்தவர்கள் கதவை திறந்து எடுத்தார் பாருங்கள் ஓட்டம் எழில் ஆத்மி முன் போய் தான் நின்றனர்.
எழிலுக்கும் ஆத்மிக்கும் ஒன்று விளங்கவில்லை. " டேய் ஏன்டா இப்டி ஓடி வரீங்க " என்று கேட்டவனிடம் இருவரும் பார்த்ததை கூற ஆத்மி பயத்தில் எழிலின் கையை பிடித்து கொண்டாள். அவள் பயம் அறிந்தவனும் பிடித்த அவளின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு நண்பர்களிடம்
" டேய் கொல்லிமலைல ஆவிகள பார்க்களினா தான் ஆச்சர்யம்..... இது சாதாரணமா நடக்குறது தான் " என்று அசட்டையாக கூறியவனை கொலைவெறியோடு முறைத்து பார்த்தவர்கள்
" டேய் இதுங்க என்ன டூரிஸ்ட்டா.... சாதாரணமா சொல்ற ஒழுங்கா உன்ன நம்பி வந்த என்ன சேதாரம் இல்லாம என் வீட்டுக்கு அனுப்பிடு இல்ல " என்று வீரப்பாக ஆரவ் கேட்க
" இல்லனா என்னடா பண்ணுவ " என்றவனின் காலை பட்டென பிடித்தவன் " அழுதுருவேன் மச்சி..... என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போடா " என்றவனை இழுத்து கொண்டு கார் இருக்கும் இடத்திற்கு செல்ல அங்கு அப்டி ஒரு பெண் இருந்ததற்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது.
" இங்க எல்லாம் அப்டி தான்..... மொதல்ல இந்த எடத்துல இருந்து போவோம் " என்ற எழில் காரை எடுக்க எல்லாரும் ஹோட்டலுக்கு சென்றனர்.
*********** ********** **********
இரண்டு அறை புக் செய்தனர். எழில் நண்பர்களை ஒரு அறையில் தங்க சொல்லியவன் தான் ஆத்மியுடன் இருப்பதாக கூற அவர்களும் அதுவே சரி என்றனர்.
எழிலுக்கு ஆத்மியை தனியாக விட மனமில்லை. தன்னறைக்குள் எழில் வர மிரண்டு பார்க்க அவளின் பார்வை அர்த்தம் புரிந்தவன் " ஆத்மி எனக்கு உன்ன தனியா விட விருப்பம் இல்ல.... நீ பெட்ல படுத்துக்கோ.... நா இந்த சோபால படுத்துக்குறேன் ...... என்ன நீ நம்பி தூங்கலாம் " என்று சொல்லியதில் பதறியவள்
" ஐயோ சார் உங்க மேல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு.... இருந்தாலும் நீங்க சோபால தூங்குறது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு " என்றவளுக்கு தெரியாதா அவளின் எழிலின் குணம் பத்தி.
சிரித்தவன் " இட்ஸ் ஓகே ஆத்மி. எனக்கு எந்த பிரச்னையும் இல்ல " என்றவன் மெத்தையில் படுத்து கண்ணை மூடி கொள்ள அவன் முகத்தை பார்த்த படி தூங்கி போனாள் ஆத்மி.
அடுத்த நாள் காட்டில் எல்லாரும் நடந்து செல்ல வழி மாறி போனாள் ஆத்மி. ஒரு சகதிக்கு முன்னாள் ஆத்மி பார்வை சுழலவிட்டு பதட்டமாக வழியை பார்க்க அவளுக்கு பின்னால் இருந்த சகதியில் இருந்து ஒரு உருவம் ஆத்மியை நெருங்கி கால் கையால் ஊர்ந்து வந்தது.
சத்தம் கேட்டு பின்னால் திரும்பியவள் அந்த உருவத்தை கண்டு அரண்டு போனாள். தப்பிக்கலாம் என ஆத்மி காலை தூக்க அவளை அந்த சகதிக்குள் இழுத்து கொண்டு போனது.
- நீங்கா இரவுகள் 🖤

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 5
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.