- Joined
- Nov 10, 2023
- Messages
- 67
- Thread Author
- #1
அத்தியாயம் 5
அம்மா சொல்லிய வார்த்தையெல்லாம் என்னவோ புதிதாய் கேட்பது போல் பற்றி எரிய செய்தது வேந்தனை. எப்படி என் மனைவியை ஒதுக்குவார்கள் என்ற ஆதங்கம் அவனுள். அதே வேகத்தில் தடலாடியாக அறையில் நுழைந்தவன் " உனக்கு வாய் இல்லையா? இல்லை பேச தெரியாதா? உன்னை எல்லாரும் ஒதுக்கி வைக்கிறத ஏன் என்கிட்ட சொல்லுல? உனக்கும் இந்த வீட்டுல முழு உரிமை இருக்கிங்கிறது நியாபகம் இருக்கா இல்லையா அஞ்சலி? என் அம்மா எப்படி இந்த வீட்டு மருமகளோ அதே அங்கீகாரம் தான் உனக்கும் " மூச்சே விடாமல் பேசிக் கொண்டே நெருங்கியவனை மூச்சடைத்து போய் பார்த்தாள் கீதாஞ்சலி.
திடீரென வந்து கத்த காரணம் தெரியாமல் அவள் விழிக்க, ஆழ மூச்சை விட்டு தலையை தட்டி தணிந்த வேந்தன் அலைபாயும் அந்த திராட்சை விழிகளை உற்று நோக்கினான். அவளிடமே கிறங்கியும் நின்றவன்
" இனிமேல் இங்க இருக்குறவங்க யாராச்சும் உன்னை எதாவது சொன்னா பதிலுக்கு பேசுடி "
" என்ன பேசனும்? எனக்கு புரியல. என்னை எல்லார் கூடவும் சமமா அமர்ந்து சாப்பிடக் கூடாதுனு சொன்னதே நீங்க தான். உங்களுக்கு பிடிக்காதத நான் செய்யல. இப்போ நான் என்ன செய்யணும்? " நேர்கொண்டு கேட்டதில் மௌனமாய் நின்றவன்
" இப்போவும் நானே தான் சொல்லுறேன். உனக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கு அஞ்சலி. வீட்டுல மட்டுமில்ல " நெருங்கி அவள் இடையை வளைத்து தன்னோடு அணைத்துக் கொள்ள பல்லைக் கடித்தாள் கீதாஞ்சலி.
" யாருக்கு வேணும் இந்த உரிமை? என்னை நிம்மதியா நீங்க விட்டாலே போதும். முதல்ல என்னை விடுங்க "
" அது என்னடி பக்கத்துல வந்தா எத்தி தள்ளுற, தூரம் போனா நின்னு ரசிக்கிற! கூச்சமா? வெட்கமா? " தலை சாய்த்து கேட்பவனை விக்கித்து பார்த்தவள் போராடினாள் அவனிடமிருந்து விலகிட.
" யா.... யார் ரசிச்சா? சும்மா பார்க்குறத வச்சி நீங்களா நினைச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது "
" ஹா... ஆமா ஆமா பார்க்குற எனக்கு தான் அப்படி தெரிஞ்சது போல " தோளை குலுக்கியவன் அவளின் தாடை பற்றி தன் முகம் அருகே இழுத்தான் வேந்தன்.
உடல் உறைந்திட மூச்சு முட்டும் நெருக்கத்தில் பிரம்மை பிடித்து வேக மூச்சை அவள் விட, தடுமாறியவன் " வாய் மட்டும் தான்டி பொய் சொல்லுது. இந்த முழி ரெண்டும் என்னவோ சொல்ல துடிக்கிதே அஞ்சலி!" என்பவன் கையை தட்டி விட்டவளின் முகம் அந்தி வானம் போல் சிவந்திருக்க
" சும்மா கண்டதையும் பேசிட்டு இருக்காதீங்க. முதல்ல என்னை விட்டு தள்ளி போங்க " நெஞ்சில் கை வைத்து தள்ள முயன்றவளின் கைகள் இரண்டையும் அவளின் இடைக்கு பின்பு சிறை செய்த வேந்தன் மற்றோரு கரத்தால் கழுத்தை பற்றி இதழை கவ்விட அதிர்ந்து போய் நின்றாள் கீதாஞ்சலி.
" தள்ளி போ போ ன்னு சொல்ல சொல்ல தான்டி, விடவே கூடாதுனு வெறி பிடிக்குது "
வேக குரலில் கிசுகிசுத்த வேந்தன் கழுத்தை பற்றிய கரத்தை மெல்ல சறுக்கி கொண்டு இடையை பற்றி இறுக்கிட, எதிர்வினையாற்ற வேண்டியவள் இசைய ஆரம்பித்தாள் அவளே அறியாது.
நீரை தேடும் வேரை போல் அவன் உயரத்திற்கு எக்கிய பெண்ணின் தவிப்பை புரிந்தவனாய் அஞ்சலியை கையில் ஏந்தி மெத்தையில் கிடைத்த போதையில் மயங்கி கிடந்தவளாய் மேல் மூச்சை வாங்கினாள்.
மஞ்சளில் இழைத்த கருப்பட்டியை இதழ் கொண்டு ஒரு இடம் விடாமல் சுவைக்க, உயிரற்ற செல்களும் உயிர்த்தெழுந்த உணர்வில் கண் சொக்கி போனவள், வேந்தனின் கரம் வெற்றிடையை வருடவே சிலிர்ப்போடு அவனை தடுத்து நிறுத்தினாள் கவலையாய்.
" இ... இல்ல இது தப்பு "
" எது பொண்டாட்டி பகல்லயே பண்றதா? " ஒன்றும் தெரியாத அப்பாவி குரலில் கேட்பவனை சங்கடமாய் பார்த்தவள்
" உங்களுக்கு என் கவலை புரியல. எனக்கு பயமா இருக்கு. நீங்க எப்படியும் என்னை விட்டு " முழுதாய் சொல்ல விடாமல் உதட்டைக் கவ்வி ஈரம் செய்து விட்ட வேந்தன்
" முழுசா உன்னை அடைய நினைக்கிறது வெறும் உடம்புக்காக மட்டுமல்ல அஞ்சலி. காதலோ காமமோ மொத்தமா உன்கிட்ட இருந்து வேண்டும். என் கடைசி மூச்சு வரை. எந்த உறுதியோடு உன்னை கல்யாணம் பண்ணேன்னோ அதே உறுதியோட சொல்லுறேன். இந்த வேந்தன் மூச்சு நிற்குற வரைக்கும் உன்னை விட்டுட மாட்டேன் அஞ்சலி. இப்பவும் உனக்கு என்மேல நம்பிக்கை இல்லையா? இந்த கண்ணுல நிஜம் தெரியலையாடி " விழியோடு விழி கலந்து ஏக்கம் தாங்கி கேட்பவனை ஆழ பார்த்தவள் மௌனமாகி போனாள்.
தன் மார்பை அழுத்திருக்கும் அவன் நெஞ்சை தடுத்திருந்த கரத்தை மென்மையாய் பற்றிக் கொண்டவள் " நம்புறேன் " என்றாள் கண்கள் மூடி.
இதழ் விரித்த வேந்தன் " நம்புறேன் வேந்தன்னு சொல்லுடி " வேண்டுமென சீண்ட கீழ் உதட்டைக் கடித்தவள்
" நம்புறேன் வேந்தன் " வெட்கம் கலந்து சொல்லியவளின் கரத்தை தன் கழுத்தின் பின்னே மாலையாய் போட்டுக் கொண்ட வேந்தன் அசுர வேகத்தில் அவளின் உதட்டைக் கவ்வ திணறினாள் ஈடு செய்ய முடியாமல்.
அள்ள அள்ள அமிர்தம் போல் பருகி கழுத்தில் முகம் புதைத்து அவள் உயிரை உறிஞ்ச துடித்தவள் இறுக்கிக் கட்டிக் கொண்டாள் வேந்தன் கழுத்தை.
" ஆஹ்... ஹ்ம்ம்... போதும் விடுங்க " காற்று நிறைந்த குரலில் முனகியவளின் சிணுங்களில் இன்னும் கிறுக்கனாய் கழுத்தை விட்டு இதழை கீழிறக்க பதறி கத்தும் முன்னே அலறிய அலைபேசி இருவரின் மோன நிலையை பெரிதாகவே தொல்லை செய்திருந்தது.
வேந்தன் நீண்ட நேரமாக அலறும் போனை அலட்சியம் செய்து அவளின் உணர்ச்சிக் கொண்ட இடங்களை ஆள மீண்டும் போன் சிணுங்கவே, வேகம் குறையாமல் இயங்கும் வேந்தனை கீதாஞ்சலி தான் வலு கொண்டு விலக்கினாள்.
" இப்போ என்னடி??!!!! மனுஷன கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடு அஞ்சலி. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்குலாம் " விட்ட இடத்தில் தொடர போனவனை பதறி தடுத்த அஞ்சலி
" உங்க போன் விடாமல் அடிக்கிது " அப்பாவியாக சொல்ல இமைக்காது அவளையே பார்த்தவன்
" அது இப்போ முக்கியமில்லை எனக்கு. இப்போ நீ மட்டும் தான் " அழுத்தமாய் சொல்லியவன் மேலும் பேச முயன்ற அவள் இதழையே கவ்வி சப்பி அடக்கிட, மீண்டும் போன் விடாமல் அலறியதில் உச்சக் கட்ட கடுப்பில் எடுத்தவன் திரையில் தெரிந்த எண்ணில் கண்களை சுருக்கினான் வேந்தன்.
ஓட்டுண்ணி போல் முழு உடலையும் அவள் போட்டு மெத்தையோடு நசுக்கிருந்தவன் விருட்டென விலகி தலையை சரி செய்ய மலங்க விழித்தாள் அவன் செய்கைக்கான காரணம் புரியாமல்.
" தாத்தா தான் கால் பண்ணிருக்காரு. அடிப்பட்டதுல நிறைய வேலை பெண்டிங்ல இருக்கு. நான் ஆபீஸ் போயிட்டு ஈவினிங் வரேன் " அவள் கேட்கும் முன்னே அவனாக சொல்ல காலை குறுக்கிக் கொண்டு மெத்தையில் அமர்ந்தவள் முகமே மாறியது அவன் மாற்றத்தில்.
ஒருவித இறுக்கமும், கடுமையும் அந்த சந்தன நிற முகத்தில் மறைந்திருப்பதை அவளும் உணராமல் இல்லையே. " ஒருவேளை பழையதில் சில நினைவு வந்து விட்டதோ " என்றெல்லாம் அவள் நினைத்து குழம்பிருக்க, கண்ணாடியில் தன் சட்டையை சரி செய்து போனை எடுத்துக் கொண்ட வேந்தன் கிளம்பிய வேகத்திலே அழுத்தமான எச்சில் முத்தம் உதட்டிலே கொடுத்துவிட்டு பெண்ணின் முட்டாள் யோசனைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தான் அவன்..
" டேய் அமுதா சாப்பிட்டு போ ப்பா " என்ற தாயின் குரலை காதில் கூட வாங்காது வெளியேறிய வேந்தன் தனக்கான காரில் ஏறிட, கார் வளாகம் விட்டு வெளியேறியது.
" **** ஹோட்டல்க்கு போங்க " என ட்ரைவரிடம் கணீர் குரலில் சொல்லிய வேந்தன் போனில் வந்திருக்கும் செய்தியையே வெறித்தான்.
மௌனியின் பெயர் பொறிந்து வந்த குறுஞ்செய்தி அது. அவள் தங்கிருக்கும் ஹோட்டல் பெயரும் தனி அறையின் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்ததோடு ' நீ வரலைனா நானே உன் வீட்டுக்கு வந்துருவேன் அமுதன். என்னால உன்னை பார்க்காமல் இருக்க முடியாது. அடிபட்ட உன்னை எப்படி இருக்கேன்னு கூட பார்க்க முடியல என்னால. என்ன நடந்தாலும் பரவால்லன்னு நான் உன்னை பார்க்க வந்துருவேன் நீ இங்க வரலைனா ' செல்லமாய் மிரட்டல் செய்தியும் சேர்த்து அனுப்பிருக்க பல்லைக் கடித்தான் கோவத்தில்.
யார் இந்த மௌனி என்ற கேள்விக்கு பழைய செய்திகளை பார்த்து படித்ததில் புரிந்து போனவனுக்கு, அவள் மீது காதல் பொங்கி வழிவதற்கு மாறாக கோவம் தான் பொங்கி வருகிறது அவனிற்கு. அவன் மீதும்.
இப்படி ஒரு பெண்ணை ஏமாற்றி எப்படி ஒரு வாழ்க்கை வாந்திருக்கிறேன் என்ற கோவமோ. காட்டுக்கடங்கா ஆத்திரத்தில் அமர்ந்திருக்க
" சார் ஹோட்டல் " டிரைவர் குரலில் தன்னிலை பெற்றவன்
" நான் வந்துருவேன். பார்க்கிங்லையே வெயிட் பண்ணு " கட்டளையிட்ட வேந்தன் வேக நடையில் உள்ளே நுழைந்தவன் லிப்ட்டில் தளத்தின் எண்ணை அழுத்தி விரைந்தான்.
மௌனி குறிப்பிட்ட அறையின் கதவை வேந்தன் தட்டிட, சில நிமிடங்களில் திறந்தவள் பாறையாய் நிற்பவனை உள்ளே இழுத்து கட்டி அணைக்க நெருங்கிட விலகி நின்றவன் செய்கையில் புருவம் இடுங்கினாள் மாடல் அழகி.
" என்ன அமுதன்? உன்னை எப்போ பார்ப்பேன்! எப்போ உன் குரலை கேட்பேன்னு தவிச்சு போய் வந்துருக்கேன் ஏன் யாரோ மாதிரி விலகி போற? என் மேல கோவமா இருப்பேன்னு தெரியும். ஒரு ஷூட்டிங்கு பாரின் போய்ட்டேன். என்னால உன்னை காண்டாக்ட் பண்ணவும் முடியல. உன்னை பற்றிய செய்தியும் எனக்கு கிடைக்கல. அதான் அமுதன். இந்தியா வந்ததுமே முதல் வேலையா உன்னை பார்க்கணும்னு நினைச்சப்போ தான் விபத்து நடந்தது தெரியும். உனக்கு ஒன்னும் ஆகல தானே அமுதன்? " அக்கறையாய் கேட்டாள் அவன் மீதான காதலில்.
" சீக்கிரம் அந்த பட்டிக்காட்ட கொன்னுடு அமுது. நாம கல்யாணம் பண்ணிக்குலாம். என்னால இதுக்கு மேலையும் உங்கள பிரிஞ்சு இருக்க முடியாது " அருகே நெருங்கியவளை பார்வையால் தள்ளி நிறுத்திய வேந்தன்
" இங்க நான் உன்கூட பேட்சப் பண்ண வரல. இனி இந்த ரகசிய உறவு வேண்டாம்னு சொல்ல தான் வந்தேன். இதுக்கு முன்னாடி நாம எப்படி இருந்தோம்னு எனக்கு நினைவு இல்லை. நினைவுபடுத்தவும் விரும்பல. என் வாழ்க்கையில இனி ஒரே ஒருத்திக்கு தான் இடம் " என்ற வேந்தன் உறைந்த அவள் முகம் நோக்கி
" அது என் மனைவி கீதாஞ்சலிக்கு மட்டும் தான். இந்த நிமிஷத்தோட உனக்கும் எனக்குமான தொடர்பு முறியுது. இனி எனக்கு மெசேஜ் கால் பண்ணி மனுஷத்தன்மையோட பேசுற என்னை மிருகமாக்காத " எச்சரித்து விட்டு அவன்பாட்டிற்கு கிளம்ப அசைய மறுத்து ஸ்தம்பித்து போனாள் மௌனி.
- தொடரும்...

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 5
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.