அத்தியாயம் 4

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
67
அத்தியாயம் 4



நள்ளிரவு நேரம்...


அறையின் தனிமையில் தரையில் குத்த வைத்து அமர்ந்திருந்த கீதா மூளையின் சுவரையே மணிகணக்கின்றி வெறித்தாள் மௌனமாய்.


கழுத்தில் புதிய தாலி மின்னியது அந்த இருளிலும். ஆனாலும் அவள் முகத்தில் கலையில்லை. கணவன் கட்டிய தாலியில் சந்தோஷம் இல்லை. மாறாக வெறுமையும் வருத்தமும் மனதை அழுத்த விழியோரம் கசிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தரையில் விரித்த படுக்கையில் படுத்துக் கொண்டாள் வேந்தன் இல்லாத நிம்மதியில்.



கழுத்தில் தாலியை கட்டி அறையில் விட்டு சென்றவன் தான் எங்கு போனான் எதற்கு போனான் எப்போ வருவான் எதுவும் அவள் அறியா. அதை அறிந்து கொள்ளவும் அவள் முற்பட போவதில்லை என்பதும் மறுக்க முடியாத நிதர்சனமே.



" அவருக்கு நினைவு இல்லாதனால இதெல்லாம் பண்ணுறாரு. முதல்ல அவர்கிட்ட அந்த டிவோர்ஸ் பேப்பர் கொடுத்து உண்மையை சொல்லி இங்கிருந்து எவ்ளோ சீக்கிரம் போக முடியுமோ அவ்ளோ சீக்கிரம் போகிடணும் "



" நினைவு திரும்பி என்னை அசிங்கப்படுத்தி அனுப்புறதுக்கு. நானே போறது தான் நல்லது. அவரோட மறதியை நான் சாதகமா பயன்படுத்திக்கிறது பாவம் "


" அவர் வந்ததும் எல்லாத்தையும் பேசி கிளம்புறது தான் சரி " அதீத யோசனையில் லேசாக கண் சொருகி அவள் உறங்கி விட, யாரோ தன்னை தொட்டு தூக்கும் உணர்வில் கண் திறந்தவள் விக்கித்து போனாள் வேந்தனை கண்டு.



" என்னை இறக்கி விடுங்க " என்பவள் கத்தலை சட்ட செய்யாமல் மெத்தையில் கிடைத்திய வேந்தன் " இவ்ளோ பெரிய மெத்தை இருக்கும் போது, என் பொண்டாட்டி தரையில படுத்தா என் மனசு தாங்காதே " நமட்டு சிரிப்போடு சொல்பவனை மிரண்டு பார்த்தாள் அவள்.



" இல்லை நான் கீழயே படுத்துக்கிறேன். தயவு செஞ்சு என்னை போக விடுங்க "


" போ "


" ஆனா நீ எங்க படுக்குறியோ.. பக்கத்துலயே தான் நானும் இருப்பேன் " தோளை அவன் அலட்சியமாய் குலுக்கிட அயர்ந்து போனாள் கீதாஞ்சலி.



நினைவு மறந்து அவன். மறக்க முடியாமல் அவள். நரக வேதனையாய் உணர்ந்தவள் " உங்களுக்கு அடிபட்டு எல்லாம் மறந்து போய் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க? நான் இங்க வந்ததுல இருந்து ஒருநாளும் இந்த மெத்தையில படுத்தது இல்லை. இப்போ மட்டும் எதுக்கு? "


" ஏன்னா நீ என் பொண்டாட்டி. அந்த ஒன்னு போதாதா அஞ்சலி? " மாறாத பார்வை கொஞ்சம் அவளை தடுமாற தான் செய்தது.



" இல்ல. உங்க நினைவு திரும்புற வரை நான் உங்கள விட்டு தள்ளி இருக்குறது தான் சரி. நீங்களும் என்னை விட்டு விலகியே இருங்க. அது தான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது " உறுதியாய் சொல்லிய கீதாஞ்சலி அவனைக் கடந்து செல்ல முயல கரத்தை பற்றி தன்னோடு அவளை ஓட்டி நிறுத்தினான் வேந்தன்.



மையிடாத அவள் விழியிலே விரும்பி தொலைந்தவன் " இதுக்கு முன்னாடி நான் நீ எப்படி இருந்தோங்கிறது எனக்கு தேவையில்லை. இனி எப்படி இருக்க போறேங்கிறது தான் எனக்கு முக்கியம். கட்டின தாலிக்காகவாச்சும் கொஞ்சம் பொண்டாட்டி சேவை செய்ங்க மகாராணி " இடையை இறுக்கி குறும்பாய் கேட்டிட அர்த்தம் புரிந்து அதிர்ந்து பார்வையை விலக்கிக் கொண்டவள் வேக மூச்சை விட்டாள்.



" உ... உங்களுக்கு நான் சொல்லுறது புரியல. உங்களுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது "



" இப்போ பிடிக்கிதே... இந்த கருப்பு திராட்சை என்னை என்னவோ பண்ணுதுடி. திம்முனு இருக்குற இந்த உதட்டை கடிக்க சொல்லுது. என்னென்னமோ மண்டைக்குள்ள ப்ளூ படமா ஓடுது அஞ்சலி. மண்டையில அடிப்பட்ட பின்பு கிடைத்த ஞானம் இது " சொன்னதோடு நில்லாமல் அவள் அதரத்தை இரு விரலுக்கிடையில் நசுக்கிட தொண்டைக்குழி ஏறி இறங்கியது ஹார்மோன்களின் கிளர்ச்சியில்.



தீண்ட படாத பெண்மை உடல் அவன் தீண்டியதில் அதிவேகமாக மூளை ரசாயனத்தை சுரக்க மேல் மூச்சை வாங்கிய கீதாஞ்சலி " இது நிரந்திரம் இல்லை. என்ன நடந்தாலும் நான் உங்களுக்கு அதே அருவருப்பான " சொல்லி முடிக்கும் முன்னே ஆர்வ கோளாறாய் பொறுமை இழந்து அவள் இதழை கவ்விக் கொண்டான் வேந்தன்.



அதிர்ச்சியும், விவரிக்க முடியா உணர்ச்சியும் ஒருசேர தாக்கியதில் ஒரு கணம் உறைந்து நின்றவள் நொடியில் தன்னிலை பெற்று அவனை விலக்கிட, காந்தம் போல் மீண்டும் ஒட்டி கொண்டான் அசுர போதையில்.



மெத்தையில் அவளோடு சேர்ந்து சரிந்தவன் உடம்பின் நரம்புகள் முறுக்கேற அவளை விழுங்கிக் கொண்டிருந்த வேந்தன் விருட்டென விலகி மூச்சு வாங்குபவளை கேள்வியாய் பார்த்தான்.


பாவம் பாவை. கிடைக்கும் காதலை அள்ளி கொள்ளவும் முடியாமல் விட்டேறியவும் முடியாமல் முழித்திட


" இதுக்கு முன்னாடி நான் உன்னை கிஸ் பண்ணிருக்கேன்னா? " என்பவனை அப்பாவியாய் பார்த்தாள் கீதாஞ்சலி.



அவன் நெஞ்சை தன் மேல் உரசாமல் தடுத்திருந்த கீதா பார்வையை வேறெங்கோ திருப்பி " இல்லை. உங்க நிழல் கூட என்மேல பட நீங்க விரும்புனது இல்லை. அதுனால தான் சொல்லுறேன். என்னை விட்டுடுங்க. கானல் வாழ்க்கை வாழ விரும்பல நான் " என்றவள் தாடை பற்றி தன் முகம் பார்க்க செய்தான் ஆவேசமாய்.



" உன் முன்னாடி இருக்குற நான் நிஜம் தானே? "


".... "


" உன் கழுத்துல நான் கட்டிருக்குற தாலி நிஜம் தானடி? "



"...."


" என்னைப் பாரு அஞ்சலி. இதுக்கு முன்னாடி இந்த அமுதன் உன்கிட்ட எப்படி இருந்தான்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சிக்கவும் நான் விரும்பல. அந்த அமுதன் இனி இல்லை. இந்த வேந்தன் மட்டும் தான். உனக்கு புரியலையாடி இவ்ளோ நடந்தும் நான் ஏன் திரும்ப உன்கிட்ட வரணும்? உன்னை பார்த்ததும் ஏன் பிடிக்கனும்? பொண்டாட்டினு தெரிஞ்சதும் ஏன் சந்தோஷப்படணும்? திரும்ப நமக்கு ஏன் கல்யாணம் நடக்கணும்னு "



" எல்லாம் விதி அஞ்சலி. எனக்கு நீதான். உனக்கு நாதாங்கிற விதி. அது நீயே நினைச்சாலும் மாத்த முடியாது. எல்லாம் மறந்து புது மனுஷனா உனக்காக வந்துருக்கேன். என்னை வாட வைக்காத கண்மணி "


மனமுடைந்து அவள் மார்பில் அவன் முகத்தை புதைத்துக் கொள்ள, சிலையாய் உறைந்தவள் குரலை செருமினாள்.



" எ.. எனக்கு கொஞ்சம் நாள் அவகாசம் வேண்டும். என்னால ஒரே சமயத்துல எல்லா அதிர்ச்சியையும் தாங்கிக்க முடியல. கொஞ்சம் நிதானமாக நேரம் கொடுங்க. ப்ளீஸ் " இறஞ்சும் குரலில் தலை தூக்கி பார்த்த வேந்தன்



" தாராளமா... எவ்ளோ நாள் வேணாலும் எடுத்துக்கோ "


" அதுவரை நீங்க என் பக்கத்துல வர கூடாது "


" அது ரொம்ப கஷ்டம் பொண்டாட்டி " நகர்ந்து மெத்தையில் படுத்துக் கொள்ள நிம்மதி பெரு மூச்சை விட்டாள் அவன் நகர்ந்து விட்டதில்.



அவன் எல்லாத்தையும் மறந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்க தயாராகி விட்டான். ஆனால் திரும்ப அந்த நினைவு வந்தால் வேந்தனின் குணம் எப்படி மாறும் என்பதை தான் அவள் அறிவாளே.



அவனுக்கு முதுகை காட்டி தீயிலிட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருக்க வலிய கரம் இடையை சுற்றி இழுத்த வேகத்திலே அவன் மார்பில் மோதிருந்தாள் கீதாஞ்சலி.



திடுக்கிட்டு திரும்பியவளின் நெற்றியில் முத்தம் வைத்து இதழ் விரித்தவன் " கண்டதையும் போட்டு யோசிக்காத அஞ்சலி. நீ பயப்புடற மாதிரி நான் உன்னை விட்டிட மாட்டேன். என்னை நம்பு "
விழி பார்த்து சொல்லிட, கலங்கியவள்


" எல்லாம் மறந்து நீங்க பேசிட்டு இருக்கீங்க. உங்க நினைவு திரும்புனா இப்படி நான் உங்க பக்கத்... ம்ம்ம்...ஹ்ம்ம் " மீண்டும் இம்சை செய்யும் அவள் இதழை கவ்வி கடித்து தன் இதழுக்குள் ஈரம் செய்து விடுவித்தவன்



" நீ பேச பேச நானும் கிஸ் கொடுத்துட்டு தான் இருப்பேன். பேசலாமா? தூங்கலாமா? " குறும்பாய் அவன் கேட்க கருவிழி விரிய மிரண்டு பார்த்த அஞ்சலி மீண்டும் வேந்தன் நெருங்கியதில் கண்ணை மூடிக் கொள்ள பற்கள் தெரிய சிரித்தவனும் அவளை அணைத்தபடியே உறங்கி போனான்.



பஞ்சு மெத்தையின் சுகமோ. வழக்கமான நேரத்தை கடந்தே புரண்டு படுத்த கீதா லேசாக விழியை திறக்க பங்குனி வெயில் பல்லைக் காட்டியதில் திடுக்கிட்டு எழுந்தவள் அறையின் குளிருக்கு தன் மேல் பெட்ஷீட் போர்த்தப்பட்டிருப்பதையும் கவனித்தாள்.


இரவு போர்த்தியதாய் நினைவு இல்லை. நான் இல்லாமல் வேறு யாரு என்ற கேள்விக்கும் பதில் இருந்தும் முழுதாய் சந்தோஷம் கொள்ளாமல் குளியலறைக்குள் நுழைந்து தலைக்குளித்து அறைக்கு திரும்பினாள்.



ஈரம் சொட்டும் கூந்தலை உலர்த்த பால்கனி வந்தவள் தாத்தாவோடு தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் வேந்தனை கண்கள் சுருக்கி பார்த்தாள் யோசனையாய்.



உண்மையில் இவன் புதியவன் தான். அமுதன் இப்படியெல்லாம் அமைதியாய் அமர்ந்து பேசுபவனே கிடையாது. பதவி கொடுத்த பின்பும் கூட தாத்தாவிடம் அமர்ந்து கலந்துரையாடியாது கிடையாது. எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிரும் தலைக்கனமும் தலை தூக்கி நிற்கும் அவனிடம்.


ஆனால் இந்த வேந்தனமுதன் அமுதனுக்கு நேர்மாறு. தாத்தா பேச பேச நிதானமாய் காது கொடுத்து கேட்கும் இவனை பார்க்க வியப்பாக தான் இருக்கிறது கீதாஞ்சலிக்கு.


'இந்த விபத்து ஒரு விதத்துல இவருக்கு நல்ல புத்தி தான் கொடுத்திருக்கு ' உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள் சிரித்து விட, சரியாக தாத்தாவிடம் பேசிக் கொண்டிருந்த வேந்தனும் பார்வையை உயர்த்தி இவளை கண்டுவிட்டான்.



சுவிட்ச் போட்டது போல் சிரிப்பு மறைந்திட, கையும் களவுமாக சிக்கியத்தில் திருட்டு முழி முழித்த கீதா மறந்தும் அவனை பார்க்காது உள்ளே ஓடி விட இதழ் விரித்த கள்வனும் தாத்தாவின் மீது கவனம் செலுத்த போராடி தோற்றான்.



" அப்போ சரி ப்பா. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. முழுசா குணமானதும் ஆபீஸ் வா. அதுவரை நான் பார்த்துக்கிறேன் "



" இந்த வயசுல உங்களுக்கு எதுக்கு இவ்ளோ கஷ்டம். ஓய்வு எடுக்க நான் ஒன்னும் குழந்தை இல்லை. நானும் வரேன் " முறைப்பாய் அவன் சொல்ல



" இந்த பிடிவாதம் தான் உன்னை குழந்தைனு நிரூபிக்குது வேந்தா " பெரியவர் சிரிக்க தாத்தாவை முறைத்தவன்



" உங்க ரத்தமாச்சே தாத்தா. அது கூட இல்லைனா எப்படி? என்றான் நக்கலாய்.



" அடிப்பட்டதுல இருந்து ஒரு மார்க்கமா தான் இருக்க. நீ பிரேக்பாஸ்ட் முடிச்சிட்டு வா. நான் ஹெட் ஆபீஸ் போறேன். டிரைவர் உன்னை கொண்டு வந்து விடுவான். நீயா வராத " கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு பெரியவர் கிளம்பி விட வீட்டினுள் நுழைந்தவனை



" அமுதன் உன்னை எங்கெல்லாம் தேடுறது? வந்து முதல சாப்பிடு. நேரத்துக்கு சாப்பிட்டு மாத்திரையை எடுத்துக்கணும்ல " மகன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு இருக்கையில் அமர வைத்த ஹேமா உணவை அவரே பரிமாற கை வைக்கவில்லை அவன்.



" நீங்க சாப்பிட்டிங்களா? " அதிசயமாய் மகனின் அக்கறையில் அக மகிழ்ந்து ஆம் என்றிட அடுத்த அவன் கேட்ட கேள்வியில் முகம் இருண்டு இறுகி போய் நின்றார் தாயவள்.



" அஞ்சலி இன்னும் சாப்பிடலையா? "



" ம்ச் அவளுக்கு சாப்பாடு கொண்டு போய் வேலைக்காரங்க கொடுப்பாங்க. நீ சாப்பிடு ப்பா "



" ஏன் வேலைக்காரங்க? அவளுக்கு உடம்பு முடியலையா என்ன? " பதட்டமான அவன் கேள்வியில் பல்லைக் கடித்தவர்



" அவ நமக்கு சமமா உக்காந்து சாப்பிட்டா நம்ப தகுதி என்னாகிறது? அவளுக்கு இந்த வீட்டில இருக்க முதல்ல என்ன தகுதி இருக்கு? எல்லாம் மாமாவால வந்த தலைவலி" வெறுப்பை வார்த்தையில் கொட்டிட முகம் மாறியது அவனிற்கு.



தாயின் வார்த்தையில் ஆத்திரமடைந்தவன் " என்ன தகுதியா? அவ என் பொண்டாட்டிங்கிற ஒரு தகுதி போதும் இந்த வீட்டுல அவ இருக்க. நீங்க எப்படி இந்த வீட்டோட மருமகளோ அதே போல தான் அவளும் "



" அமுதா அவளும் நானும் ஒன்னா டா. எல்லாம் மறந்துட்டு இப்படி பேசாத. அவளை கண் முன்னாடி வரக்கூடாதுனு சொன்னதே நீ தான் "



" அத சொன்ன நான் தான் இதை சொல்லுறேன். இனி கீதாஞ்சலிக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் கிடைக்கணும் என் பொண்டாட்டிக்கான மரியாதையும் கிடைக்கணும். இல்லையா எனக்கும் இதெல்லாம் வேண்டாம் " ஹேமா பரிமாறிய உணவை உதறி தள்ளிவிட்டு அறை நோக்கி விரைந்திட நெருப்பை அள்ளி தலையில் வைத்தது போல் பற்றி எரிந்தார் கோவத்தில்.
 

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 4
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Jan 1, 2025
Messages
6
Super super super.👌👌👌👏👏👏🤩🤩🤩🥰🥰🥰🥰😍😍😍
 
Member
Joined
Nov 26, 2023
Messages
23
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Nov 16, 2023
Messages
6
வாவ்.. நல்லாருக்கே.. ஆனா.. இவன் வேந்தன் தானா.. இல்ல ஆவி ஏதும் புகுந்துறுச்சா 😌😌😂😂
 
Top