- Joined
- Nov 10, 2023
- Messages
- 67
- Thread Author
- #1
அத்தியாயம் 3
மும்பையில் பிரபலமான தனியார் மருத்துவமனையில் அமுதனுக்கான அவசர சிகிச்சை தீவிரமாய் நடந்துக் கொண்டிருந்தது.
மொத்த குடும்பமும் உள்ளே இருப்பவனுக்கு என்னவோ என பயந்து நிற்க, ஹேமலதா பார்வை மட்டும் அடிமட்ட வெறுப்பில் மாணிக்கத்தின் அருகில் நிற்பவள் மீது பதிந்திருந்தது.
" இவளை எதுக்கு மாமா இங்க கூட்டிட்டு வந்திங்க? இவ வந்ததுக்கு அப்புறம் தான் என் பையன் சந்தோஷமே காணாமல் போச்சு. இப்போ உசுருக்கு போராடிட்டு இருக்கான். எல்லாம் இவ கழுத்துல அவன் தாலி கட்டினதுக்கு அப்புறம் தான் " மகனை பெற்ற தாய் கண்ணீரோடு வார்த்தைகளை வீசிட குறுகி போனாள் கீதாஞ்சலி.
" ஆமா மாமா. நீங்க அவசரப்பட்டுட்டிங்க " அக்காவிற்கு ஒத்து ஊதினாள் இளைய மருமகள் கல்பனா.
ராஜகுமாரி கண்ணை காட்டியும் கண்டு கொள்ளாது வார்த்தைகளை இருவரும் மாறி மாறி கொட்டிட " வாயை மூடுங்க ரெண்டு பேரும் " என்பவர் கர்ஜனையில் அதிர்ந்து அடங்கி விட்டனர் இருவரும்.
" எந்த இடத்துல வந்து என்ன பேசிட்டு இருக்கீங்க? இங்க இதை இப்போ பேசுற நேரமா? உள்ள இருக்கிறவன் நல்ல படியா வந்தா போதும்னு நினைக்கிறத விட்டுட்டு உங்க வெறுப்பை கொட்டிட்டு இருக்கீங்க. இங்க உங்க யாருக்கும் கீதாவை பற்றி பேச உரிமை இல்லை. இதுக்கு மேல யாராச்சும் வாயை திறந்திங்க எல்லாரையும் விரட்டி விட வேண்டி வரும். ஜாக்கிரதை " அழுத்த திருத்தமாக அவர் சொல்லிய பின்பு வாயை திறக்கும் தைரியம் அங்கு யாருக்கும் இல்லை.
இப்படியே யார் கண்ணிலும் படாமல் ஓடி விடலாமா என்று பெண்ணவள் யோசிக்கும் போதே மாணிக்கம் பேத்தியின் கையை இறுக்கி பிடித்து நிறுத்த, மருத்துவர்களும் சிகிச்சை முடித்து வெளியே வந்தவனர்...
" அவர் உயிருக்கு ஆபத்து இல்லை " நல்ல வார்த்தையை சொல்லி ஹேமா வயிற்றில் பாலையும் கல்பனா வயிற்றில் நெருப்பையும் கொட்டிருந்தார் டாக்டர்.
எப்படியாவது அமுதன் இறந்து விடுவான். அதன் பின்பு கடைசி ஆண் வாரிசான தன் மகன் ஹரிஷ் மீது பொறுப்புகள் வருமென்று கனவில் இருந்தார். இப்போது டாக்டர் வார்த்தையில் கோட்டையாய் கட்டி வைத்த கனவெல்லாம் கானலாய் மாறிய சோகத்தை மறைத்து பொய்யாய் சந்தோஷம் கொள்ள
" ஆனா, தலையில பலத்த அடிப்பட்டதால ஹி மே லாஸ் ஹிஸ் மெமரி. அவர் நினைவு திரும்பி விழிச்சதும் தான் மேற்கொண்டு பரிசோதிக்கணும் " பெரிய அதிர்ச்சியை இறக்கி விட்டு அவர் சென்று விட மாணிக்கத்தை தவிர்த்து அனைவரின் முகமும் திகைப்பில் மூழ்கியது.
மருத்துவர்கள் ஊகித்தது போல் அமுதனின் நினைவுகள் விபத்தில் பறிப்போனது உறுதியாகியது. 'தன்னையே யாரென அவருக்கு நினைவு தெரியவில்லை. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக யோசிக்க வைத்து மூளைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்' இன்னும் சில அறிவுரைகளை சொல்லிவிட்டு மாணிக்கத்தோடு அவர்கள் தனியாக சென்று விட்டனர்.
மருத்துவமனையில் கீதா அமுதனை தனிமையாய் பார்ப்பதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. ஹேமா கொஞ்சம் நகர்ந்தால் தானே இவளால் பார்த்து பேசிட முடியும். மாணிக்கம் பொத்தம் பொதுவாக ஒவ்வொருவரையும் அமுதனுக்கு அறிமுகப்படுத்துகையில் " அவ தான் உன் மனைவி கீதாஞ்சலி " என்று அழுத்தி சொல்லிட கட்டுகளோடு படுத்திருந்தவன் கண்களால் அவளை தேடினான்.
குமாரி பாட்டிக்கு பின்னே ஒதுங்கி நின்றவள் பயந்து போனாள் எங்கு தன்னை திட்டி தீர்க்க போகிறானோ என. அவன் முன் வந்து நிற்பதற்கு கரித்து கொட்ட போகிறானோ என்றெல்லாம் யோசித்து ஒளிந்து கொள்பவளை கண்டு கொண்டவனின் கண்கள் கோவத்திற்கு மாறாக மின்னியதை பாவை கவனிக்க தவறிவிட்டாள்.
ஒன்றரை வாரங்கள் ஹாஸ்பிடல் வாசம் முடிந்து வீடு வந்து சேர்ந்தான் அமுதன். அவனுக்கென கேர் டேக்கரும் அனுமதிக்கப்பட்டிருக்க, கீதாவும் அருகே இருப்பது தான் ஹேமாவுக்கு எரிச்சலாய் புகைந்தது.
" என் பையனை நானே பார்த்துக்கிறேன் " என்ற ஹேமாவை சலிப்பாய் பார்த்த மாணிக்கம்
" அதான் அவன் பொண்டாட்டி கீதா இருக்காள்ல. அவ பார்த்துப்பா. தேவராயா உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போ முதல. அவன் ரெஸ்ட் எடுக்கட்டும். எல்லாம் அவங்க அவங்க அறைக்கு போங்க "
" இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல. திரும்ப அவளால என் பிள்ளைக்கு ஏதாச்சும் வரும் போது தான் என் நியாயம் உங்களுக்கு புரியும் " கண்ணை கசக்கிக் கொண்டு ஹேமா சென்று விட பின்னாலே ஒவ்வொருவராய் கிளம்பிய பின்பு பெரு மூச்சை விட்டு திரும்பிய மாணிக்கம் மனைவி பார்வையில் விழுந்தார்.
அந்த பார்வையில் திணறியவர் பார்வையை திருப்பிக் கொண்டு சென்று விட மௌனமாய் கணவனை தொடர்ந்தார் ராஜகுமாரி.
பெரிய போர்க்களமே நடந்து முடிந்த அமைதியான மனநிலையில் பால்கனியில் நின்று வெறுமையாய் எங்கோ வெறித்தான் வேந்தனமுன்.
எவ்ளோ நேரம் நின்றானோ. அடிபட்ட கால் வலியை கொடுக்கும் போதே உணர்ந்து வாக்கிங் ஸ்டிக் உதவி இல்லாமல் தடுமாறி வருபவனை குளியலறையை விட்டு வெளியே வந்தவள் தயங்கி பார்த்தாள்.
" நான் உதவி பண்ணவா? " தயக்கம் தாங்கிய கீச்சு குரலில் நிமிர்ந்தவன் கண்கள் சுவாரஸ்யமாகியது மங்கையின் தரிசனத்தில்.
" நான் சொன்னா தான் மேடம் பண்ணுவிங்களா? என்ன பார்க்குற? வந்து உதவி பண்ணுடி கால் வலிக்குது " வலியில் அவன் முகம் மாறவே பழைய பயத்தை ஓரம் வைத்து ஓடி வேந்தனமுதனின் கையை பிடித்துக் கொண்டாள் கீதா.
ஆறடி பெரிய உருவத்தை அந்த குட்டி முயல் தாங்கிடுமா என்ன?? என்னவோ அவள் கை கொடுத்த பின்பு தான் நடக்க முடிகிறது போல் மெத்தையை நோக்கி நடந்தவனுக்கு உண்மையில் வலியெல்லாம் இல்லை.
அவள் வராமல் போகிருந்தால் இவனே மெத்தையை அடைந்திருப்பான். ஆனால் அவளை பார்த்ததும் பாசாங்கு போட நம்பி உதவி செய்தவள் பாதையில் கவனம் செலுத்திட இவன் பார்வை அவள் மீது தான் அர்த்தமாய் பதிந்திருந்தது.
" நான் உயிரோட வந்ததுக்கான சந்தோஷமே உன் முகத்துல இல்லையே. கவலைப்படுறியா? " தீவிரமான பார்வையில் கேட்பவனை அதிர்ந்து பார்த்தாள் கீதாஞ்சலி.
" அய்யோ!!! அப்படியெல்லாம் இல்லை. நீங்க உயிரோட திரும்பி வந்ததுல நிம்மதி தான் "
" அப்போ சந்தோஷம் இல்லை. அப்படி தானே " அழுத்தமாய் கேட்டவன் மெத்தையில் அமர தயங்கி நின்றவள் பதில் சொல்ல தெரியாது முழித்தாள்.
ஆசிரியர் முன் நிற்கும் மாணவி போல் அவள் விழிக்க, லேசாய் இதழ் விரித்தவன் " நான் எதுவும் கேட்கல. போய் தூங்கு " என்று விட்டு சாய்ந்து அவன் அமர, தலையை ஆட்டியவள் வேக வேகமாய் தனக்கான படுக்கையை தரையில் விரிப்பவளை புருவம் இடுங்க பார்த்தான் அமுதன்.
" ஏய்!! கீழ எதுக்கு அதை விரிக்கிற? "
" படுக்க? "
" அது தெரியாதா எனக்கு? நீ எதுக்கு கீழ படுக்குற? வந்து மேல படு " அதிகாரமாய் சொல்லிய இவன் தானே வந்த முதல் நாளே நாயை போல் அவளை விரட்டிருந்தான்.
" இல்ல... நான் கீழ. நீங்க " விபத்தில் மறந்தவனிடம் வெளிப்படையாய் சொல்ல முடியாமல் திணறியவளை ஆழமாய் பார்த்தவன்
" உன்கிட்ட தான் சொல்லுறேன். வந்து மேல படு. இல்ல நானும் உன்கூட சேர்ந்து கீழயே படுத்துக்குறேன் " அமுதனும் இறங்க முயல
" இல்ல இல்ல வேண்டாம் " பதறி மெத்தையின் மறு பக்கத்தில் விருப்பமே இல்லாமல் படுத்துக் கொண்டாள் கீதா.
" நான் ஒன்னும் மொத்த மெத்தையையும் ஆக்கிரமிக்க போறது இல்லை. இன்னும் நீ தள்ளி படுக்கலாம் " நுனியில் படுத்திருப்பவளை இன்னும் சீண்ட, கடுப்பாய் உள்ளே நகர்ந்து அவனுக்கு முதுகை காட்டி நித்திரையை நாடும் முயற்சியில் இறங்கி விட்டாள்.
சீரான அவளின் மூச்சுக் காற்றிலே உறங்கியதை அறிந்து விளக்கை அணைத்த அமுதன் உறக்கமின்றி இரவை தொலைத்து போனான்.
வாக்கிங் ஸ்டிக் உதவியோடு நடந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக சுயமாக நடக்க ஆரம்பிக்க, " எல்லாரும் கொஞ்சம் உக்காருங்க. உங்க கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும் " பீடிகை போட கிழவன் இந்த முறை என்ன குண்டு வைக்க போறாரோ என்ற பீதியிலே வந்தமர்ந்தனர் குடும்பத்தார்கள். அதில் கீதாவும் அடக்கம்.
குரலை செருமி மகன் மருமகளின் முகத்தை பார்த்தவர் " நடந்த கெட்டது எல்லாம் ஒரு திருஷ்டியா போகட்டும். நம்ப குடும்ப குருஜி கிட்ட விஷயத்தை சொன்னேன். அதுக்கு அவர் சொன்ன ஒரு விஷயம் தான் உங்ககிட்ட சொல்ல போறேன் " சொல்லும் போதே தாத்தாவின் பார்வை பேரன் மீது தான் அழுத்தமாய் பதிந்திருந்தது.
" வேந்தனுக்கும் கீதாஞ்சலிக்கும் மீண்டும் ஒரு கல்யாணம். திருமணம் முடிந்து 3 வது மாதத்தில் தாலி கோர்த்தல் என்ற வைபவம் நடத்திருக்கனும். ஆனால் அதுக்குள்ளே இப்படி ஒரு அசம்பாவீதம் நடந்ததால இப்போ கீதா கழுத்துல இருக்குற திருமாங்கல்யத்தை ஏதாவது அம்மன் ஆலயத்தில் செலுத்திவிட்டு, புதிதாக மாங்கல்யம் செய்து வேந்தன் கையாள அணிவிக்க வேண்டும். இது என் முடிவு இல்லை. குருஜியோட வார்த்தை. இதை மீற எனக்கும் விருப்பம் இல்லை. உங்களுக்கும் இருக்காதுனு நம்புறேன் " காட்டமாய் சொல்ல வேண்டியதை அவர் சொல்லி விட எல்லாம் அந்த காந்தி படம் போட்ட காகிதத்திற்காக பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாகிவிட்டனர்.
ஆனால் பாவம். இம்முறையும் தன் விருப்பத்தை சொல்ல முடியாமல் தாத்தாவிற்காக மீண்டும் பாலியாடாய் மாறி நின்றாள் கீதாஞ்சலி. முதல் கல்யாணமே முரண்பாடு தான். இதில் மீண்டும் அவனோடு. அதும் நினைவு இழந்தவனிடம். மீண்டும் நியாபகம் வந்து பேச கூடாத வார்த்தைகளை கொட்டினால் என்ன ஆவேன். யாரவது ஒருத்தர் தன் விருப்பத்தை கேட்டு தனக்காய் யோசிக்க மாட்டார்களா என பெண் மனம் கதறினாலும் யாரும் நெருங்க கூட முனையவில்லை.
மாணிக்கம் சொன்னது போல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலியை அம்மனிடம் காணிக்கை செலுத்தி விட்டு அதே இடத்தில் அமுதன் கையால் மாங்கல்யத்தை அவள் பெற இம்முறை மூன்று ஜீவன்கள் தவிர்த்து யாருக்கும் அதில் பிடித்தமில்லை.
" என்ன அக்கா? போயும்போயும் அந்த கருவாச்சியை போய் உன் பையன் திரும்ப தாலி கட்டுறான். என்ன பாவம் பண்ணானோ நம்ப அமுதனுக்கு இப்படி ஒரு கொடுமை "
" ஆமாம் அம்மா. நான் எப்படி இவளை போய் அண்ணியா நினைப்பேன். என்னால அவளை பார்க்க கூட பிடிக்கல. அவளும் அவ மூஞ்சியும். எப்படிம்மா அண்ணன் எதுமே சொல்லாம தாலி கட்டுறான்? "
உடன் பிறந்த சகோதரி வர்ஷினி நடக்கும் நிகழ்வை முகம் சுளித்து பார்த்திட பல்லைக் கடித்த ஹேமா பார்வையாலே இருவரின் வாயையும் அடக்கி நிறுத்தினார்.
" உங்களுக்கு பேச அவ்ளோ தான் இருக்கா இல்லை இன்னும் பேசணுமா? என் பையன் ஒன்னும் இதை சும்மா பண்ணல. ராஜ் குடும்பத்தோட மூத்த வாரிசு. இப்போ நிறுவனத்துல CEO ஆஹ் இருக்கான். இன்னும் கொஞ்ச நாள்ல அவன் நினைவு திரும்பும். அதுவரை மட்டும் தான் இந்த கிழவன் அந்த கருப்பி ஆட்டம் எல்லாம். அதுக்கு அப்புறம் என் மகன் தான் ராஜா. சும்மா வாய்ப்பு கிடைக்குதுன்னு கண்டதையும் பேசி என்னை கோவமாக்காதீங்க " நறுக்கென குத்தி கல்பனா வாயை அடக்கி திமிராய் நிற்க உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தார் கல்பனா.
மூத்த வாரிசு என்று ஹேமா அழுத்தி சொன்னதின் நக்கல் அவருக்கும் புரியாமல் இல்லை. இப்போது வரை மாணிக்கம் தொழிலில் பங்கு கொடுத்திருப்பது அமுதனுக்கு மட்டுமே. தனக்கும் தன் குழந்தைக்கும் இது எதுவும் கிடைக்க வில்லையே என்ற ஆதங்கம் உள்ளுக்குள் இருந்தும் அடக்கி வாசித்தார் சமயம் எதிர்பார்த்து.
குடும்பம் சூழ அம்மன் சன்னதியில் கார்மேக காரியாய் பட்டு உடுத்தி மையிட்ட விழியில் தவிப்பாய் தன்னை பார்க்கும் பதுமையின் கழுத்தில் மூன்று முடிச்சை அவன் போட்டு விலக பொங்கிய கண்ணீர் கன்னம் தாண்டி விழுந்தது. இனி மீண்டும் தெரிந்தே நரகத்தில் வாழ போகிறேன் என கலங்கியவள் நெற்றியில் செந்தூரம் வைத்த அமுதன் " இதுக்கு முன்னாடி நமக்குள்ள எப்படியோ. இந்த நொடிக்கு அப்புறம் நீ என் பொண்டாட்டி. அதை உன் மனசுல ஆழமா பதிச்சிக்கோ " அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் திகைக்க செய்த அமுதன் கன்னத்தில் வழிந்த கண்ணீரையும் துடைத்து பேரதிர்ச்சில் அவளை தள்ளினான் .

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 3
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.