Member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 37
- Thread Author
- #1
அத்தியாயம் 2
" நிறுத்துங்க.. இந்த கல்யாணம் நடக்கவே கூடாது..", என்று கர்ஜித்த வண்ணம் அங்கு கம்பீரமாக வந்து நின்றான் விக்ரம் சக்கரவர்த்தி !!
அவன் போட்ட கூச்சலில் மொத்த மண்டபமும் ஸ்தம்பித்து போக.. நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தவர்களும் வாசிப்பதை நிறுத்தி விட்டனர்...
தாலி கட்ட போகும் மணமகன் முதல் அட்சதை தூவி வாழ்த்த வந்திருந்த சொந்தங்கள் வரை அனைவருமே அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தனர், அவன் போட்ட கூச்சலில்..!!
" விக்ரம்.. நீங்களா??.. நீங்க எப்படி இங்க??", என்று புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் தேவசேனா !!
அனல் கக்கும் பார்வையோடு அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, பின் அனைவரையும் பார்த்து எச்சரித்தான் விக்ரம்..
" இங்க பாருங்க நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க இந்த கல்யாணம் நிச்சயமா நடக்கவே கூடாது.. ஏண்டி....எனக்கு துரோகம் பண்ணிட்டு.. என் வாழ்க்கையை அழிச்சிட்டு.. வேற ஒருத்தனோட சந்தோஷமா கல்யாணம் பண்ணிட்டு வாழலாம்னு கனவு கண்டாயா?? அது மட்டும் இந்த ஜென்மத்துல நடக்காது.. உன்னை இப்ப மட்டும் இல்ல.. எப்பவுமே சந்தோஷமா இருக்க விட மாட்டேன்..", என்று வார்த்தைகளில் வன்மத்தை கக்கினான் அவன்...
" ஹலோ மிஸ்டர் என்ன இப்படி கல்யாணம் நடக்கப் போற நேரத்துல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க?? நீங்க எப்பேர்பட்ட பணக்காரரா வேணாலும் இருக்கலாம்.. எப்பேர்பட்ட தொழிலதிபரா வேணாலும் இருக்கலாம்.. ஆனால் அதுக்காக உங்க திமிரை எல்லாம் இங்கு வந்து காட்டாதீங்க.. சம்மதமே இல்லாம நான் கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணை வந்து நீங்க எதுக்கு மிரட்டணும்??", என்று கோபத்தில் கத்தினான் கௌதம்..
" ஹலோ மாப்பிள்ளை சார்.. உங்களுக்கு என்ன காது செவிடா??.. சம்பந்தம் இல்லைன்னு யார் சொன்னா?? சம்பந்தம் இருக்கு.... இத்தனை நேரமா நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்.. அவ என் வாழ்க்கையை அழிச்சிட்டு.. இங்க வந்து ஒண்ணுமே நடக்காத மாதிரி.. நல்ல பச்ச பிள்ளையாட்டம் வந்து, கல்யாணம் பண்ணிக்க பாக்குறா.. அதையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு அட்சதை தூவி எங்கிருந்தாலும் வாழ்க பூவும் பொட்டோடும் வாழ்க என்று வாழ்த்த சொல்றீங்களா?? அப்படி என்னவோ ஆகட்டும் என்று வேடிக்கை பார்த்துட்டு போறதுக்கு நான் ஒன்னும் தயிர் சாதம் கிடையாது.. என் வாழ்க்கையை அழிச்ச இவளோட வாழ்க்கையை நிச்சயமா நான் அழிக்காமல் விடமாட்டேன்", என்றான் ஊரே அதிரும்படி...
" என்ன பேசிட்டு இருக்காரு இவரு?? இவரோட வாழ்க்கையை நான் அழிச்சேனா?? ஒரு நாளும் இவர் நல்லா இருக்க கூடாதுன்னு நான் கனவில் கூட நினைத்தது கிடையாது.. அப்படி இருக்கும் போது இவரோட வாழ்க்கையை நான் அழிச்சதா சொல்றாரு.. ஒண்ணுமே புரியலையே கடவுளே..இந்த லட்சணத்தில் என்னை பழிவாங்கியே தீருவேன் என்று வேறு சொல்கிறாரே", என மனசுக்குள் குழம்பியபடி ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள் தேவசேனா....
" இங்க பாருப்பா நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு வந்து என்னென்னவோ பேசிட்டு இருக்க என் பொண்ணு ஒன்னும் அடுத்தவங்க வாழ்க்கையை அழிக்கிற அளவுக்கு கெட்டவள் கிடையாது.. ஏதோ தெரிஞ்சவங்களாச்சேன்னு அமைதியா நின்னுட்டு இருந்தேன்.. அதுக்காக விட்டா ஓவரா பேசிட்டு போறீங்க.. இருந்திருந்து என் பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போது இந்த நேரம் பார்த்து அவ வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி பேசிட்டு இருக்கீங்க.. தயவு செஞ்சு போயிடுங்க தம்பி இங்கிருந்து..", என்று கெஞ்சி கேட்டுக்கொண்டார் தேவசேனாவின் அம்மா விமலா..
" இங்க பாருங்க தம்பி உங்களை கை எடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறோம் தயவு செஞ்சு இந்த மண்டபத்தை விட்டு போயிடுங்க.. எதுவா இருந்தாலும் கல்யாணம் முடிந்த பிறகு பேசிக்கலாம்", என்று அவனிடம் கெஞ்சினார் தேவசேனாவின் அப்பா ரகுபதி..
" என்ன சம்மந்தி நீங்க பேசறது பார்த்தா இவரை ஏற்கனவே உங்களுக்கு தெரியும் போல இருக்கு?? அப்போ இவர் சொல்றதெல்லாம் உண்மையா?? ஏற்கனவே இவருக்கும் உங்க மகளுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா?? அதையெல்லாம் மறைச்சு தான் எங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்களா உங்க மகளை.. நல்லவேளை தாலி கட்டுறதுக்கு முன்னாடி இந்த குட்டு தெரிஞ்சது.. இல்லன்னா என் மகன் வாழ்க்கை என்ன ஆகிறது??", என்று கோபத்தில் வெடித்தார் கற்பகம்..
" ஐயோ சம்மந்தி.. நீங்க பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி பேசாதீங்க.. என் பொண்ணு அப்படிப்பட்டவள் கிடையாது.. அவ ரொம்ப நல்லவள்.. தயவு செஞ்சு முதல்ல மாப்பிள்ளையை தாலி கட்ட சொல்லுங்க.. நல்ல நேரம் முடிய போகுது", என்றார் விமலா கெஞ்சுதலாக..
" தாலி கட்டுறதா??.. அத பத்தி அப்புறம் பேசிக்கலாம்.. முதல்ல நீங்க அமைதியா இருங்க.. அம்மாடி தேவசேனா.. இப்பவாவது கொஞ்சம் உன் திருவாயை திறந்து பேசு.. இங்க என்ன நடந்துட்டு இருக்கு?? இதோ, இங்க நிக்கிறாரே.. இவர் உனக்கு யார்?? இந்த பையனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?? ஏதோ அவரு வாழ்க்கையை நீ அழிச்சிட்டதா பேசுறாங்க.. துரோகம் பண்ணிட்டதா சொல்றாங்க.. உண்மையை சொல்லு இவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா??.. இவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்??", என்று கண்களை உருட்டி உருட்டி மிரட்டியவாறு கேட்டார் கற்பகம் ..
என்ன பதில் கூறுவது என்றே புரியாமல் கலங்கிய விழிகளுடன் நின்று கொண்டிருந்தாள் தேவா..
இவளின் இந்த நிலையைக் கண்டு, மனதிற்குள் மகிழ்ந்து போனான் விக்ரம்...
இப்ப பதில் சொல்லுடி.. இப்ப வாயை திறந்து பேசு.. என்பது போல் அவளை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தான் நக்கலாக சிரித்தபடியே..
" இந்தாமா, இத்தனை நேரமா பேசிட்டு இருக்ககோம்.. நீ ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குற.. உன் வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க??.. வாயை திறந்து பேசுமா", என்று கூறினார் கற்பகம் சற்றே அதட்டலாக..
" அம்மா என்னம்மா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க.. நிச்சயமா தேவசேனா மேல எந்த தப்பும் இருக்காது ", என்றான் மணமகன் கௌதம்..
" அடேங்கப்பா இன்னும் அவள் கழுத்துல தாலி கூட கட்டல.. அதுக்குள்ள அவளுக்கு வக்காலத்து வாங்க வந்துட்டியோ??.. வாய மூடிட்டு பேசாம நில்லுடா..", என்று அவனுக்கும் சேர்த்து ஒரு டோஸ் விட்டு விட்டு அவளை பார்த்து கோபமாக திரும்பினார் கற்பகம்..
" இப்ப வாயை திறந்து உண்மையை சொல்ல போறியா இல்லையா?? இவர் உனக்கு யாரு?? இவரை ஏற்கனவே உனக்கு தெரியுமா?? உனக்கும் இவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கா??", என்று அவர் கேள்விகளை அடுக்கி கொண்டே போக..
" ஆமா எனக்கு இவரை ஏற்கனவே தெரியும்.. ரொம்ப நல்லாவே தெரியும்", என்று ஆழமாக அவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கலங்கிய விழிகளுடன் பதில் அளித்தாள் தேவா...
" அதான் அவளே சொல்லிட்டாளே.. என்னை அவளுக்கு நல்லாவே தெரியும்.. ஏற்கனவே எனக்கும் அவளுக்கும் பழக்கம் இருக்குன்னு.. இன்னும் என்ன அவகிட்ட கேள்வி கேட்டுகிட்டு..", என்று கூறிய விக்ரம்.. அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கடைசியாக மணமகன் கௌதம் கையில் இருந்த மாங்கல்யத்தை பார்த்தான்...........
"எனக்கு கெடுதல் நினைச்ச உன் வாழ்க்கையில இனிமேல் நல்லதுக்கே இடம் இல்லடி.. கெட்டது மட்டும்தான் நடக்கும்.. அதை நடுத்தரவனும் நானா தான் இருப்பேன்..", என மனதிற்குள் கருவிக்கொண்டே..
கௌதம் கையில் இருந்த மாங்கல்யத்தை வெடுக்கென்று புடுங்கி தேவசேனாவின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சுட்டான் விக்ரம் சக்கரவர்த்தி...!!
எதிர்பாராத நேரத்தில் தன் கழுத்தில் விக்ரம் தாலியை கட்டவும் அதிர்ச்சி அடைந்தாள் தேவசேனா...
அதிர்ச்சியுடன் விழியகல அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தாள் தேவா..
எப்படி நடக்க வேண்டிய திருமணம் இது?? கண்களில் வன்மத்தை கக்கி கொண்டு.. ஏதோ விரோதியை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டே தாலி கட்டுகிறானே இவன்.. எதற்காக என் மீது இத்தனை கோபம்?? இத்தனை துவேஷம்?? என்று கண்களில் வழியும் கண்ணீருடன் அவனை வலியோடு பார்த்துக் கொண்டே இருந்தாள் தேவா....!!
அவன் செய்த செயலால் மொத்த மண்டபமே அதிர்ச்சிக்கு உள்ளானது...
அந்த நேரம் பார்த்து, சொல்லுங்க மாமா குட்டி.. சொல்லுங்க மாமா குட்டி.. என்று கௌதமின் நண்பன் கணேஷ் மொபைல் சினுங்கவும் அனைவரும் அவனை கோபத்தோடு திரும்பி பார்த்தனர்.....
அடுத்த கணமே டக்கென்று அவன் ஃபோனை அணைத்து விட்டான்.....
" நல்ல வேளை.. நல்ல நேரம் முடிவதற்குள் தாலியை கட்டிட்டாரு.. கெட்டி மேளம்..கெட்டி மேளம்.. ", என்று தவறான நேரத்தில், சரியான டயலாக்கை சொன்னார் ஐயர்.....!!
உடனே கடும் கோபத்துடன் அவரை திரும்பி பார்த்த கற்பகம்..
" என்ன ஐயரே... காசு கொடுத்து உங்களை நாங்க அழைச்சிட்டு வந்தா.. இப்ப வேற ஒருத்தனுடன் அவளுக்கு கல்யாணம் நடக்குது.. இப்ப போய் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று சொல்லி ஆசீர்வாதம் பண்றீங்களா?? என்ன நெனச்சிட்டு இருக்கீங்க??", என்றார்..
" இங்க பாருங்கோ.. என்னோட வேலை யாகம் வளர்த்து, மந்திரம் சொல்லி.. மாங்கல்யத்தை எடுத்துக் கொடுப்பதுதான்.. அதை பேஷா செஞ்சிட்டேன்.. என்னோட வேலை முடிஞ்சது.. நான் கிளம்புறேன்..", என்று கூறிவிட்டு அருகே இருந்த மஞ்சப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார் ஐயர்...
" இங்க பாருங்க எனக்கும் இவளுக்கும் கல்யாணம் நடந்துடுச்சு.. இனிமே , மகள் என்று சொந்தம் கொண்டாடிட்டு நீங்களோ, இல்லை உங்க வீட்டிலிருந்து வேறு யாராவது வந்தீங்கன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன்.. இத்தோட இவளுக்கும் உங்களுக்குமான பந்தம் முடிந்தது.. இனி இவள் என் மனைவி.. எனக்கு மட்டுமே சொந்தமானவள்.. இவள் விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமையும் இனி எனக்கு மட்டும்தான் இருக்கிறது..", என்று சொல்லியவன்.. அவளைப் பார்த்து திரும்பினான்..
" உனக்கும் சேர்த்துதான் சொல்றேன் நல்லா கேட்டுக்க.. இனி நீயும் அம்மா அப்பா என்று அவங்களை தேடி போக கூடாது சொல்லிட்டேன்.. என்னோட மனைவியா எனக்கு கட்டுப்பட்டு தான் இனி நீ இருக்கணும்.. புரிஞ்சுதா??", என்று அழுத்தமாக கூறிவிட்டு..
பின் , தேவசேனாவின் கையை இறுக பற்றி அங்கிருந்து இழுத்து சென்றான் விக்ரம் சக்கரவர்த்தி....!!
அனைவரின் பார்வையும் நிலை குத்தி இருக்க.. பிளந்த வாய் பிளந்தபடியே அதிர்ச்சியில் இருக்க..
யாரையும் கண்டு கொள்ளாமல் அவளை இழுத்துச் சென்று நேராக தன் காருக்குள் தள்ளி, கார் கதவை அடைத்தான்.....!!
மருண்ட விழிகளுடன் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்துடன் அமைதியாக இருந்தாள் தேவசேனா......
அவளின் முகம் மாற்றத்தை கண்டும் காணாதவனாய்.. அவன் பாட்டுக்கு காரை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்....
போகும் வழி எங்கும் ஒரு வார்த்தை கூட பேசாது அமைதியாக... அழுத்தமாக மூடிய இதழ்களுடன்... ரோட்டில் கண்ணை பதித்து காரை ஒட்டு சென்றான் அவன்...
" விக்ரம் எதுக்காக நீங்க இப்படி பண்ணீங்க..?? என் மேல அப்....", என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளை இடைமறித்து...
" வாயை மூடிட்டு பேசாம வா", என்றான் அவன், கடுமையாக.....!!
- தொடரும்.....

Author: praba novels
Article Title: அத்தியாயம் 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.