அத்தியாயம் - 2

New member
Joined
Aug 14, 2025
Messages
4
ஆ...... என இயலாமையில் தனது அறையில் கத்திக் கொண்டு இருந்தான் சாகித்யா.

வீல் சேரில் அமர்ந்து இருப்பதால் அவனால் தானாக நடந்து எந்த வேலைகளையும் செய்ய முடியாததால் கழிவறை செல்ல வேண்டும் என்று கால்களை ஊன முயற்சி செய்தவன் வலி உயிர் போக அதனால் தடுமாறி கீழே விழுந்தவன் தான் இவ்வாறு கத்திக் கொண்டிருந்தான்.

அந்தக் சத்தம் கேட்டு அவனின் தாய் ஓடி வந்தவர் மகனின் நிலையை கண்டு துடித்து போனார்.

"டேய் ஏன்டா இப்படி கஷ்டப்படுற இதுக்காக தான் உனக்கு பாத்துக்குறதுக்காக ஆள் ஏற்பாடு பண்றேன்னு சொல்றேன் ஆனா நீ கேட்கவே மாட்டேங்குற? தயவு செஞ்சு காயத்தை இன்னும் பெருசு பண்ணிக்காத தேவ்!" என்று சொல்லிக் கொண்டே அவனைத் தூக்க முயன்று தோற்றுப் போனார்.

ஆஜானுபாபுவாக இருப்பவனை அந்த தாயால் எவ்வாறு தூக்க முடியும் அதனால் தோட்டக்காரனை அழைத்து மேலே அவர் உதவியுடன் மீண்டும் வீல் சேரல் அமர வைத்தனர்.

தனது தாயை கண்டு முரைத்தவன் "என்னால முடியும் அதுக்காக தான் நான் ட்ரை பண்றேன் எதுக்காக நீங்க இவ்வளவு சீன் கிரியேட் பண்றீங்க அமைதியா இருங்கம்மா? யாருடைய உதவியும் எனக்குத் தேவையில்லை. என்ன பாத்துக்க எனக்கு தெரியும்" என்று கத்தி கொண்டு ஹாலிற்கு விரைந்தான்.

"ஏண்டா பேச மாட்டே உன்னைய தான் டாக்டர் ஸ்டிரைன் பண்ணிக்க கூடாது இல்லனா இன்னும் வலி ஜாஸ்தி ஆகும். அதனால ஏற்படக்கூடிய விளைவுகள் மோசமாக இருக்கும்! என்று சொன்னாங்களே உனக்கு ஞாபகம் இல்லையா தேவ் நம்ம எல்லாம் மனுஷங்க தாண்டா நம்மளுக்கும் வாழ்க்கையில் பிறர் துணை தேவைப்படும் எப்பவும் எல்லாத்தையும் நம்மளால செய்ய முடியாது இந்த மாதிரி அடிபட்டு இருக்கிற நேரத்துல கண்டிப்பா உதவி தேவைப்படும். அதை ஏன் நீ ஏத்துக்க மாட்டேங்கற என்னதான் நீ பெரிய மெரிட்டரி ஆபிஸரா இருந்தாலும் என்ன பொறுத்த வரைக்கும் நீ என்னுடைய பையன் அவ்வளவு தான் எனக்கு. ஒழுங்கா அம்மா பேச்சைக் கேளு உனக்கு நான் கேர் டேக்கர் அப்பாயிண்ட்மெண்ட் பண்றேன் அவங்க உன்ன பாத்துப்பாங்க உனக்கு தேவையான எல்லா வேலையும் அவங்க உனக்கு செஞ்சு விடுவாங்க தயவு செஞ்சு கொஞ்சமாவது என் பேச்சைக் கேளுப்பா!" என்று கண்களில் கண்ணீருடன் தன்மையாக கூறவும்

முதலில் மறுத்தவன் பிறகு அவரை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று பல்லை கடித்துக் கொண்டு ஒப்புக்கொண்டான்.

ஆனால் ஆண்கள் தான் வேண்டும் என்று அவன் திட்டவட்டமாக கூறி விட அதற்கு ஒப்புக்கொண்டவர் அடுத்த இரண்டு நாளில் ஒரு ஆன் கேரட் டேக்கரையும் அப்பாயிண்ட்மெண்ட் செய்தார்.

30 வயது தக்க இளைஞன் ஒருவன் வந்திருக்க, அதை கண்டு தனது தாயைப் பார்த்த முறைத்தவன் அந்த இளைஞனை தன் அறையில் இருந்து அனுப்பி வைத்துவிட்டு" எதுக்காக சின்ன பையனை கூட்டிட்டு வந்தீங்க என்ன விட வயசுல கொஞ்சம் பெரியவங்களா இருந்தா பரவால்ல தானே ?" என்று கேட்க

"ஆம்பளைங்க கிடைக்கிறதே பெரிய விஷயம் நீ என்னடா நீ இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க வேற யாரும் இல்ல இதுவே ஆஸ்பத்திரியில் இருந்து வர வச்சிருக்கேன்! எல்லாத்துலையும் குத்தம் கண்டுபிடிக்காத சாகித்யா என்று கடிந்து கொண்டவர்

அந்த இளைஞனிடம் கொடுக்க வேண்டிய அனைத்து இன்ஸ்ட்ரக்ஷன்களையும் கொடுத்து விட்டு மருந்து மாத்திரை பற்றிய விவரங்களையும் கூறியவர் தனது வேலையை பார்க்க புறப்பட்டார்.

அவனும் அந்த இளைஞன் உடன் சேர்ந்து காலையில் குளித்து முடித்தவன் தளர்வான ஒரு உடை அணிந்து சாப்பிட்டு முடித்து இத்தனை நாட்கள் கழித்து தனது மொபைலை மேஜையின் மேல் இருப்பதை கண்டவன் அதை எடுத்து உயிர்ப்பித்துப் பார்க்க அதுவோ எப்பவோ உயிரை விட்டிருந்தது.

அதனால் சார்ஜ் போட்டுவிட்டு சிறிது நேரம் இருந்தவன் அதை ஆன் செய்து பார்க்க

அதில் அவன் காதலி சுகாசினி இடம் இருந்து ஒரு 100க்கும் மேற்பட்ட கால்களும் 50க்கும் மேற்பட்ட மெசேஜ்களும் வந்திருந்தது. அனைத்தும் அவன் நலமாக இருக்கிறானா தனக்கு மெசேஜை பார்த்தவுடன் கால் செய்யவும் மெசேஜ் அனுப்பவும் என்று வந்திருக்க இடை இடையே அழுகை எமோஜியும் இருந்தது.

செய்தியை பார்த்துவிட்டு அவனை தொடர்பு கொள்ள முயன்ற அவளால் அவன் சிகிச்சையில் இருந்ததால் பேச முடியவில்லை. அதனால் இத்தனை மெசேஜ்களும் மிஸ்டு கால்களும்.

தலையில் அடித்துக் கொண்டவன் இவளை எப்படி நான் மறந்தேன் என்று புலம்பியவன் உடனே அடித்தான் தனது காதலிக்கு.

( நல்ல நோட் பண்ணிக்கோங்க மக்களே தனக்கு ஒரு காதலி இருக்குங்குறதையே உலகத்துல மறந்த ஒரே ஆள் இவன்தான் 😂😂😂😂😂)

அவளோ அங்கே ஒருவனுடன் இரவெல்லாம் சல்லாபித்து விட்டு பாதி உறக்கத்தில் இருந்தவள் , அது முழுரிங் அடித்துக் கட்டாகும் வரை எடுக்கவில்லை.

இப்படியே மூன்று முறைக்கு மேல் கால் செய்தவன் அவள் ஏதாவது முக்கியமான வேலையில் இருப்பாள் என்று நினைத்துக் கொண்டு

சுகா சாரிடா எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்கேன் போன் ஆஃப்ல இருந்தது அதனால தான் உன்னை காண்டாக்ட் பண்ண முடியல இந்த மெசேஜ பார்த்தவுடன் எனக்கு கால் பண்ணு நம்ம மீட் பண்ணலாம் நான் சென்னை வந்து இருக்கேன் என வாய்ஸ் மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தான்.

ஒரு தனி வீட்டில் போன் சத்தம் அடித்ததில் பெண் அவள் துயில் கலையாமல் உறங்கிக் கொண்டிருக்க,

அவளை இரவெல்லாம் சுகம் கொடுத்தவன் தற்பொழுது மூன்று முறை அடித்து ஓய்ந்தும் வந்த மெசேஜையும் கண்டவன் அனைத்தையும் எள்ளலான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அபிஜித்.

இவன் அப்பாவின் காசு வெட்டியாக செலவு செய்து ஊர் சுற்றிக் கொண்டு இருக்கும் உத்தமபுத்திரன். சுகாசினிக்கு சாகித்திய தேவன் இல்லாத நேரத்தில் சுகம் கொடுக்கும் ஒரு பார்ட்னர். கேட்டால் பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் என்று சொல்லிக் கொள்வர்.

சுகாசினியின் அழைப்புக்காக கிட்டத்தட்ட மாலை வரை காத்திருந்த தேவ் தன்னவளிடமிருந்து எந்த மெசேஜும் வராததால் சோர்ந்து போனான்.

கண்டிப்பாக அவளை இப்பொழுதே பார்க்க வேண்டும் என்று நினைத்தவன் டிரைவரை அழைத்துக் கொண்டு தனது காரில் கிளம்பினான்.

இந்த நேரத்தில் நாம் ஹீரோ உடைய அறிமுகத்தை பற்றி பார்த்துவிடலாம்.

சாகித்திய தேவன் ரவிவர்மன் மற்றும் வசுந்தராவிற்கு அவர்கள் காதலின் சான்றாகப் பிறந்த ஒரே மகன்.

அவர் 20 வயதிலேயே தனது தந்தையின் வற்புறுத்தலில் திருமணம் செய்து கொண்டவர் நாளடைவில் வசுந்தராவின் அன்பில் கரைந்து அவர்களின் காதல் சாட்சியாக பிறந்தவன் தான் நமது ஹீரோ.


வருடத்திற்கு நான்கு மாதங்கள் மட்டுமே வீட்டில் இருப்பவர் தந்தை இறந்தவுடன் அவர் பார்த்துக் கொண்டிருந்த காலேஜை பொறுப்பு ஏற்று நடத்தாமல் தனது மனைவியிடம் ஒரு வருட காலம் கூட இருந்து அவரை பயிற்றுவித்து அவர் கையில் இதை ஒப்படைத்து விட்டு அவர் மீண்டும் பட்டாளம் சென்றுவிட

இவரும் தனது கணவன் சொல்லிக் கொடுத்ததை நன்கு பிடித்துக் கொண்டு கற்பூர புத்தியால் நன்றாக வழி நடத்திக் கொண்டு வந்தார்.

இப்படியே மூன்று வருடங்கள் செல்ல திருமணம் ஆகிய நான்காவது வருடம் இரண்டு வயது மட்டுமே நிரம்பிய சாகித்திய தேவன் தனது அம்மாவுடன் விளையாடிக் கொண்டிருக்க

தனது இரண்டாவது மகவை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தவர் அந்த செய்தியை தனது கணவரிடம் சொல்ல வேண்டும் என்று இவர் காத்திருக்க,

ஆனால் ரவிவர்மன் இறந்த செய்தி தான் இவர்களுக்கு வந்தது.

அந்த செய்தியில் அதிர்ந்தவர் மயங்கி விழுந்து விட மருத்துவமனையில் அவரை அட்மிட் செய்து ட்ரீட்மென்ட் பார்த்ததில் அதிர்ச்சியில் கருவில் இருந்த குழந்தை சிதைந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறி விட

ஒரே நேரத்தில் குழந்தையையும் கணவரையும் இறந்த துக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டு போனார் வசுந்தரா.

தங்களது இல்லம் தேடி வந்த கணவருக்கு இறுதி சடங்கு முடித்துவிட்டு யாரும் இல்லாமல் தனிமையில் இருந்தவர் வசுந்தராவின் பெரியப்பா மகன் சூரியன் நாராயணன் தான் தனது உடன் பிறவா தங்கைக்கு உறுதுணையாக இருந்தார். இந்த சூரியநாராயணன் கதாபாத்திரத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முக்கியமான கதாபாத்திரம்.

வசுந்தரா தங்கள் வீட்டின் ஒரே பெண் வாரிசு என்பதால் அவருடைய அப்பா அம்மாவும் சிறு வயதிலேயே தவறிவிட்டதால் சூரிய நாராயணன் வீட்டில் தான் வளர்ந்தார்.

அப்படி இருக்கையில் தனது தங்கைக்கு உதவுவதற்காக சூரியநாராயணன் கிட்டத்தட்ட அவர் உடல்நிலை மனநிலை தேறி அதிகாரத்தை நன்றாக கையில் எடுக்கும் வரை கூடவே இருந்து உதவி புரிந்துவிட்டு வெளிநாடு பயணம் கிளம்பிவிட்டார்.

வசுந்தராவும் தனது மகனுடன் இத்தனை ஆண்டுகள் இருந்தவர் அவன் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் அம்மாவுக்கே தெரியாமல் மிலிட்டரி பரீட்சை எழுதி பாஸ் செய்து பிசிகல் இன்டர்வியூவிலும் தேர்வாகிவிட

அந்த நற்செய்தியை வந்து தனது தாயிடம் சொன்ன மகனின் கன்னத்தில் முத்தத்திற்கு பதில் இடி என அறையைத் தான் இறக்கி இருந்தார் வசுந்தரா.

பிறந்ததிலிருந்து தன்னிடம் கடிந்து கொள்ளாத சத்தம் போட்டு பேசாத, இதுவரை ஒரு முறை கூட தன்னை அடிக்காத திட்டாத , தனது தாயாய் இவ்வாறு செய்தது என்று புரியாமல் பார்த்த மகனை கண்டு கோபமுற்றவர்

" அம்மா தனியா தவிச்சிட்டு இருக்கேன் நீயும் என்னை விட்டுட்டு போலாம்னு பாக்குறியா எதுக்காக என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம பட்டாலத்துக்கு போகறதுக்கு பரிட்சை எழுதிட்டு வந்திருக்க? உங்க அப்பா என்ன விட்டுட்டு போய் நான் இத்தனை ஆண்டு தவிச்சிட்டு இருக்கேன். இப்போ உன்னையும் அங்க அனுப்பிட்டு வயித்துல நெருப்பை கட்டிட்டு நான் இருக்கணும்னு நினைக்கிறியா ? என்று கேட்டவரை என்ன சொல்லி ஏற்றுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவன்

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தனது மாமன் சூரிய நாராயணனுக்கு அழைக்க அதுவும் அழைப்பு ஏற்படாமல் உபயோகத்தில் இல்லை என்று வர

அதற்கு மேல் அவன் தானே தனது தாயை ஒரு வழியாக சமாதானப்படுத்தி தனக்கு எதுவும் ஆகாது என்று வாக்குறுதி கொடுத்து தான் சேர்ந்தான்.

கிட்டத்தட்ட 5 வருடங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருக்க தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அடி அவருக்கு மீண்டும் பயத்தை ஏற்படுத்த தனது மகனை கட்டாயப்படுத்தி கொண்டு வந்து விட்டார் சென்னைக்கு.

அவ்வளவுதாங்க ஹீரோ ஓட இன்ட்ரொடக்ஷன்.

ஓகே இப்போ கதைக்கு வரலாம்.

தனது காதலியின் வீட்டின் முன்பு காரை நிறுத்த சொன்னவன்

டிரைவர் மற்றும் அந்த இளைஞன் உதவியுடன் வீல் சாரில் அமர்ந்திருந்தவன்

மீண்டும் காதலிக்கு போன் அடிக்க அதுவோ பிசி என்று வந்தது.

"சிறிது நேரம் வெயிட் பண்ணுவோம் அவள் மீண்டும் கூப்பிட்டால் விஷயத்தை சொல்லி உள்ளே செல்லலாம் இல்லையென்றால் பெண் மட்டும் குடியிருக்கும் வீட்டிற்குள் இந்த நேரத்தில் செல்வது சரி இருக்காது!" என்று சற்று ஓரமாக காத்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது தனது ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தவன் காதில் சுகாசினியின் சிரிப்பு சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தவன் கண்ட காட்சியில் மிகவும்
அதிர்ச்சி உற்றான்.


அடுத்த எபிசோடில் ஹீரோயின் introduction பற்றி காணலாம்.
 

Author: kadhaa
Article Title: அத்தியாயம் - 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Nov 26, 2023
Messages
47
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top